Tuesday, November 09, 2021

திராவிட கூலிப்படை

 முல்லைப் பெரியாறு விசயத்தில் அப்பா செய்த தவறுகளை இப்போது மகனும் செய்து கொண்டு இருக்கின்றார். அப்பாவுக்கு எல்லாமே தெரியும். ஆனால் மகனுக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது? எதனை எப்படிப் பிரதிபலிக்க வேண்டும் என்பது தெரியாது. 



நிஜமான நிர்வாகம் தெரிந்த,   

தமிழக மக்களைப் பற்றித் தெரிந்த,  மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற,  

எந்த முதல்வரும் பேருந்தில் ஏறிச் சோதிப்பதில்லை. மக்களிடம் கேட்பது இல்லை. ஒரு பரிசோதகர் செய்ய வேண்டிய வேலையது. போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் சொன்னால் போதும்.

கடந்த 1992 முதல் 2005 வரை திருப்பூரிலிருந்து காரைக்குடிக்குப் பொங்கல் தீபாவளிக்கு ஊருக்குச் செல்லும் போது நான் பட்ட அவஸ்தைகளை இன்னமும் மனதில் வைத்து இருக்கின்றேன். 

பேருந்து வாசல்படியில் உட்கார்ந்தபடி பாதித் தூக்கத்தில் அதிகாலையில் ஊருக்குச் சென்று சேர்வதுண்டு. 

அவ்வளவு கூட்டம்.  

இந்த தீபாவளிக்கு முந்திய இரண்டு நாட்கள் அதே காட்சியைப் பார்த்தேன்.

புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் என்று இரண்டு பகுதிகள் உண்டு. இவர்களின் தனிப்பட்ட சுயநலத்திற்காக பத்து கிலோமீட்டர் கடந்து மற்றொரு இடத்தை உருவாக்கி வைத்து இருந்தார்கள். மக்கள் யாரும் செல்லவில்லை.

திருப்பூர் முழுக்க அங்கங்கே அனைத்துச் சாலைகளிலும் குடும்பத்துடன், கை குழந்தைகளுடன் பல ஆயிரம் மக்கள் நின்று கொண்டு இருந்ததைப் பார்த்தேன். வலித்தது.

மகளிடம் காட்டி விரிவாக சொன்னேன். இவையெல்லாம் திமுக அரசுக்குத் தெரியுமா? தெரியாதா?

திருமா போன்றவர்கள் கம்யு கட்சிக்காரர்கள் இதைப் பற்றி தானே பேச வேண்டும்.   

100 நாள் வேலைத் திட்டம் அவசியம் என்பதனை ப சிதம்பரம் முதல் உள்ளூர் கம்யு மக்கள் வரை பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். 

ஆனால் அண்ணாமலை ஒருவர் தான் அதில் உள்ள ஊழலை வெளியே கொண்டு வந்து உள்ளார். வேறு எவரும் வாயைத் திறக்கவே இல்லையே?

வீடு கட்ட காசு கொடுத்தால் அதில் திருடுவது.  பயிர் காப்பீடு என்றாலும் திருடுவது.  மத்திய அரசு தரும் பணம் என்பது தங்களுக்கு உரியது என்பது போலவே இந்த இரண்டு பங்காளிகளும் நினைப்பது தான் வருத்தமாக உள்ளது.

திருமா  நினைத்தால் இவற்றைப் பற்றி பேசி மாற்றலாமே?

பாஜக பேசியதும் திருமா வந்து கிறிஸ்தவ வள்ளுவர் எனப் பேசுவது தற்செயல் என்போர் திராவிட அரசியலின் அரிச்சுவடி அறியாத அப்பாவிகள் என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.



ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைக்க வேண்டிய திருமா அவர்கள் இப்படித் திராவிட கூலிப்படையாக ஆவது வருத்தத்துக்குரிய விஷயம்...


எங்குத் திரும்பினாலும் காசு. எதைத் தொட்டாலும் காசு


No comments: