Sunday, November 07, 2021

வணிகர்கள் - உலகத்தை ஆட்சி செய்கின்றார்கள்.

நான் விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடிப் பொழுதிலும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில், நான் பார்க்கும் படிக்கும் உணரும் விசயங்களில் என்ன மாதிரியான வணிகம் இருக்கின்றது என்பதனை கூர்மையாக கவனிப்பேன். இங்கு வணிகம் என்பது உடனடி லாபம் என்பதாக புரிந்துள்ளனர். இதன் காரணமாக எளிதில் சோர்வுக்கு வந்து சேர்ந்து விடுகின்றனர்.


நான் அப்படியல்ல. வணிகம் என்பது என் அடுத்த தலைமுறைக்குக் கடத்த நான் தொடங்கி வைக்கும் ஒரு தொடர் ஓட்டத்தின் முதல் புள்ளி என்று நம்புகிறேன். என் மகள்கள் ஏதோவொரு தருணத்தில் வணிகம் பக்கம் வந்து விட வேண்டும் என்ற உளமார விரும்புகின்றேன். காரணம் வணிகம் தான் இந்த உலகை இயக்குகின்றது. வணிகர்கள் தான் இந்த உலகத்தை ஆட்சி செய்கின்றார்கள். 

இந்த வணிக மூலக்கூற்றில் தற்போது விளம்பரம் என்பது எந்த அளவுக்கு மாயஜாலம் செய்து வருகின்றது என்பதனை கட்சி, கொள்கை, சித்தாந்தம் என்ற பாரபட்சமின்றி கவனிப்பதுண்டு.

இது தவிர தாங்கள் நம்பும் ஒரு கொள்கை (அது தவறு அல்லது பொய் என்று இருந்தாலும்) என்பதற்காகக் குறிப்பிட்ட கூட்டம் எந்த அளவுக்கு உணர்வுப் பூர்வமாக, உணர்ச்சிப் பெருக்கோடு, உண்மையான உழைப்பை ஒவ்வொரு இடத்திலும் பாரபட்சமின்றி கொடுக்கின்றார்கள் என்பதனை கடந்த சில தினங்களாக பார்த்து வருகின்றேன்.

கொங்கு மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைத் தன் கைப்பிடியில் வைத்திருக்கும் திருப்பூர் சுப்ரமணியன் அவர்கள் சூர்யா ரசிகர்கள் பொது இடங்களில் படத்தை வெளியிடக்கூடாது என்று சொல்லி இருந்ததைப் படித்தேன்.  

ஆனால் நேற்று முதல் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்துவக் கல்லூரிகளிலும் இந்தப் படத்தை அந்தந்த கல்லூரிகளின் கலையரங்க மேடைகளில் பெரிய திரை உருவாக்கி அதன் வழியே படத்தை ஒலிபரப்பி மாணவர்கள் மாணவிகள் அனைவரையும் பார்க்க வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

தொழில் நுட்பம் ஆழமாக ஊடுருவக்கூடியது. எல்லையில்லாதது. கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகும்.

நாம் தான் அதில் உள்ள நல்லதைத் தேர்ந்தெடுத்துக்  கொள்ள கற்று இருக்க வேண்டும். நம் தலைமுறைக்கு வணிகத்தின் சூட்சமத்தோடு இது போன்ற விசயங்களை கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும்.

கண்களைத் திறந்து வையுங்கள்.

சரி ஏன் இதனைக் கிறிஸ்துவ அமைப்புகள் இந்தப் படத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதனை உங்களால் உணர முடிகின்றதா?

பழங்குடியினர் மக்களுக்குக் கிறிஸ்துவம் தான் வாழ்க்கை அளித்தது என்பதனை தற்போதைய இளைஞர்களுக்கு உணர வைக்க?

உணர்ந்தால் போதும். எளிதில் எங்கும் அவர்களால் ஊடுருவ முடியும். இறுதியில் பங்குத் தந்தை சொல்லும் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட்டு இந்திய ஜனநாயகத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் இடத்திற்கு வந்து நிற்பார்கள்.

கோத்ரா கலவரம் போலத் தமிழகம் மீண்டும் ஒன்று பார்த்துவிடக்கூடாது என்று நண்பர் நேற்று அழைத்துச் சொன்னார். ஆனால் உண்மையான கிறிஸ்துவர்கள் அமைதியாக இருக்க திருமா போன்றவர்கள் அவரைச் சார்ந்துள்ள கூட்டம் தற்போது வேக வேகமாக செய்து கொண்டு இருக்கும் பலவிதமான செயல்கள் அச்சமூட்டுவதாக உள்ளது. சமூக சம ஒழுங்கை குலைப்பதில் அவசரப்படுவதாகவும் தெரிகின்றது.


2 comments:

Yaathoramani.blogspot.com said...

உண்மைதான்...திரும்பவும் திருவள்ளுவர் கூட..

மாறன் said...

கோத்ரா கலவரம் பற்றி விளக்கவும்