Friday, March 26, 2021

வெளிமாநில தொழிலாளர்களுக்கு இங்கே குடியிருப்பு கட்டித் தரப்படும்

பத்து கோடி ரூபாய் முதலீடு போட்டு, மாதம் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்று?

தமிழ்ப்பிள்ளைகள் இப்போது ஒன்றை ஆயுதமாக எடுத்து விளாசித் தள்ளிக் கொண்டு இருக்கின்றனர்.

"வெளிமாநில தொழிலாளர்களுக்கு இங்கே குடியிருப்பு கட்டித் தரப்படும்" என்பது பாஜகவின் தேர்தல் அறிக்கை.

எதார்த்த உலகைப் பார்ப்போம்.

1. ஞாயிறு என்பது ஓய்வெடுக்க உருவான நாள். ஆனால் சனி, ஞாயிறு அத்துடன் திங்கள் வரைக்கும் குடித்த மது மயக்கம் தள்ளாட வைக்கும் போது வாரத்தில் மூன்று நாட்கள் ஒரு தொழிலாளி விடுமுறை எடுத்தால் முதலாளி என்ன முடிவெடுக்க வேண்டும்??

2. 12 மணிக்கு மதுக்கடைகள் திறக்கின்றார்கள். ஆனால் காலை ஐந்து மணி முதல் அருந்தும் அளவிற்கு மனம் மற்றும் உடல்நிலை இருப்பதை எந்தத் தேர்தல் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களுக்கு ஆரோக்கியம் இருந்தால் தானே 2026 வரைக்கும் உடம்பு தாங்கும். ஓட்டளிக்க முடியும்??

3. காரைக்குடி அருகே உள்ள நவீன ரக அரசி ஆலைகளில் வட மாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவு பணிபுரிகின்றனர்.  இந்த ஊரைச் சுட்டிக்காட்ட முக்கிய காரணம் திருப்பூர், சிவகாசி, நாமக்கல் போன்ற தொழில் நகரங்களை விடத் தமிழ்நாட்டின் உள் கிராமங்கள் வரைக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் தான் பணிபுரிகின்றார்கள் என்றால் அங்கே பணிபுரிந்தவர்களுக்கு என்ன பிரச்சனை?  1. சம்பளம் குறைவு. 2. வேலை பிடிக்கவில்லை. 3. கௌரவமான வேலை அல்ல. 4. உடல் உழைப்பை விரும்பவில்லை.5 கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன். இதில் எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்??.

4. கோடிக்கணக்கில் முதலீடு போட்டவர் தன் முதலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமா? ரத்த டெஸ்ட் எடுத்து வேலைக்குச் சேர்க்க வேண்டுமா??

5. 1989 முதல் 2000 வரைக்கும் திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. எத்தனை தொழிலாளர் குடியிருப்பு இங்கே தாய்த்தமிழ் உறவுகளுக்கு இங்கே கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது??

6. முதல் இருபது வருடங்களின் பணிபுரிந்து, தொழில் திறமை உள்ள தமிழ்ப்பிள்ளைகள் இங்கே இருக்கும்பட்சத்தில் ஏன் வட மாநிலப்பிள்ளைகள் அந்த இடத்தில் எப்படி நுழைந்திருக்க முடியும்?  தமிழ்ப்பிள்ளைகள் இருந்த தொழிலை விட்டு வெளியேறியதற்கு யார் காரணம்? என்ன காரணிகள்??

7. தமிழ்நாட்டில் எந்த இடத்திலாவது நாங்கள் இருக்கின்றோம். நாங்கள் வேலைக்கு வரத் தயாராக இருக்கின்றோம். எங்களை ஏன் புறக்கணிக்கின்றீர்கள்? ஏன் அவர்களை அழைத்து வந்தீர்கள்? என்று தமிழ்ப்பிள்ளைகள் போராட்டம் நடத்திய செய்திகளை எங்கேயாவது வாசித்ததுண்டா? தமிழராக இருக்கும் முதலாளி தமிழ்ப்பிள்ளைகளுக்கு துரோகம் இழைக்கின்றார் என்று உங்களால் சொல்ல முடியுமெனில் நீங்கள் தொழிலுக்குத் தொடர்பில்லாத வேறொரு உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

தொழில் ரீதியாக அனுபவசாலியாக இருப்பவர்கள் கூட தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி ரீதியான கொள்கைக்காக எழுதும் வார்த்தைகள் எனக்கு வியப்பளிக்கவில்லை. 😏காரணம் தமிழ்ப்பிள்ளைகளின் மூளைத்திறன் நான் அறிந்ததே.


4 comments:

Agni rama said...

"தமிழ்ப்பிள்ளைகளின் மூளைத்திறன் நான் அறிந்ததே."
தாங்கள் யாரோ?
😁 😆 🤣

திண்டுக்கல் தனபாலன் said...

முதலாளி அண்ணே... வளத்துடன் வாழ்க...

ஜோதிஜி said...

உங்கள் உடல் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களை நம்பி நிச்சயம் குடும்பம் இருக்கும்.

ஜோதிஜி said...

நல்ல மனதுடன், தெளிவான சிந்தனைகளுடன் இருந்த, சமீப காலமாக நட்புக்கும் கொள்கைகளுக்கும் வித்தியாசத்தை உணர மறுக்கும் பெரிய முதலாளிகளின் வாழ்த்துகளை அன்புடன் பெற்றுக் கொண்டேன். நன்றி.