Monday, March 15, 2021

நிலையான கோடீஸ்வர சூட்சும ரகசியத்தின் உண்மைக்கதை

நாம் எல்லோரும் கோடீஸ்வரராக வாழ ஆசைப்படுகின்றோம். சிலர் அடைந்தும் விடுகின்றார்கள். ஆனால் எத்தனை பேர்கள் அதனை தக்க வைத்துக் கொள்கின்றார்கள். அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றார்கள்? 


இதுவொரு உண்மைக்கதை. #JothiG​ #JoPechu​ #JoPechuU​

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நிம்மதியான வாழ்(ந்)/(த்)தான் என்று தானே கேள்விப்பட்டுள்ளேன்...! ஆனாலும் உண்மைக் கதையைக் கேட்கிறேன்...

அப்புறம்...

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்

ஜோதிஜி said...

பொழிப்பு: முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

ஜோதிஜி said...



நீங்கள் செய்த காரியத்தால் நான் எழுதும் எதையும் இங்கே கொண்டு வந்து விடக்கூடாது என்பதாக என் மனதில் வைராக்கியத்தை உருவாக்கி விட்டீர்கள். ஒரு பதிவை 300 பேர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அனைவரும் வெவ்வேறு கருத்துக்கள் கொண்டவர்கள். ஏன் வந்து படிக்கின்றார்கள்? ஏன் என்னுடன் சண்டையிடுவதில்லை? ஏன் கட்டாயப்படுத்துவதில்லை?
நாம் யாரையும் மாற்ற முயலக்கூடாது. வாழ்க்கை மாற்றும். அவரவர் அனுபவங்கள் அவர் அவருக்கு சொந்தமானது.
அரசியல் ரீதியான புரிதல் உங்களுக்கு பத்து சதவிகிதம்கூட இல்லை. இத்தனைக்கும் குறள் பித்தராக இருந்து உள்வாங்கி ஆச்சரியப்படுத்தும் நீங்கள் ஒரு செயலுக்குப் பின்னால் இருக்கும் நுணுக்கமான விசயத்தை உணர மறுப்பது ஏன்?
உங்களுக்கு நான் இப்படிச் செயல்படுகின்றேன் என்பது இன்னும் சில மாதங்களில் புரியும். அதுவரையிலும் அமைதியாக இருங்கள். நண்பர்கள் நீங்கள் எழுதுவதை இங்கே கொண்டு வந்து எங்கள் பார்வைக்கும் தாருங்கள் என்று கோரிக்கை மனு அளித்தால், விமர்சனம் வழியாகத் தெரிவித்தால் இங்கே கொண்டு வந்து சேர்ப்பேன்.
நான் பேஸ்புக்கில் ப்ளாக் செய்துள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட மின் அஞ்சல் வழியாக அண்ணே தயவு செய்து நீங்கள் எழுதுவதை நாங்கள் படிக்க வேண்டும். எடுத்து விடுங்கள் என்கிற அளவிற்கு மாற்றுக் கருத்தையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் செயல்படுகிறேன் தன்பாலன். கீழே ஒருவர் நேற்று மின் அஞ்சல் வழியாகக் கொடுத்துள்ள தகவலையும் தந்துள்ளேன்.

ஜோதிஜி said...

வணக்கம் அண்ணே,

நலம். நலம் அறிய ஆவல்.

கொஞ்ச நாளா உங்க பதிவு என் கண்ணுக்கு படவில்லை. ஒருவேளை, தேர்தல் முடியிற வரைக்கும் நீங்க பேஸ்புக் விட்டு போயிட்டீங்களோன்னு நினைச்சேன்.

ஆனால், மற்ற நண்பர்கள் உங்கள, உங்க பதிவு குறிப்பிட்டு பேசும் போது தான் நீங்க இங்க தான் இருக்கீங்க என்பதைத் தெரிந்து கொண்டேன்.

ஒரு வேள என்னை ப்ளாக் செஞ்சிருக்கீங்களோ... ஏதேனும் தவறிருப்பின் மன்னித்து, என்னை அன்ப்ளாக் செய்யுங்க.

நன்றி.

தங்கள் அன்புள்ள,
சிவா

திண்டுக்கல் தனபாலன் said...

ஓ... பொழுது போக்கிற்காக முகநூல் செல்லும் போதே, இரண்டு மூன்று நாளாக உங்களின் பதிவு எதுவும் காணாமே என்று... வாக்கு சேகரிப்புக்கு உங்கள் ஊருக்குச் சென்று விட்டீர்களா என்று கூட நினைத்தேன்...! இப்போது நிலவரத்தை அறிந்தேன்... இந்த வைராக்கியம் எல்லாம் வேண்டாம்... முன்பு போல் விளையாடுங்கள்...!

வலைப்பூ பிரச்சனை அல்லது மாற்றம் செய்யும் நண்பர்களிடம், அவர்கள் விருப்பப்படியே செய்து கொடுத்துள்ளேன்... "இப்படித்தான் இருக்க வேண்டும்... இது தான் இருக்க வேண்டும்..." என்று கூடச் சொன்னதில்லை... அப்படியிருக்கும் போது...

// நாம் யாரையும் மாற்ற முயலக்கூடாது. வாழ்க்கை மாற்றும்.//

என்னை நானே மாற்ற முயன்று கொண்டிருக்கிறேன்... ஹா... ஹா...

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் பொழிப்பு செய்த குறளின் குரல், பண மதிப்பிழப்பு (demonstration) நடந்து நாட்டின் சீரழிவு ஆரம்பித்த பின் எழுதிய 5 பதிவுகளில் ஒன்று...! அவைகளில் அன்றைக்கு நடந்த பல அநியாயங்கள் உண்டு; பெண்களைக் கீழ்த்தரமாகப் பேசின 2000-ல் சிப்பு வைத்ததாகச் சொன்னவனின் தலைமறைவு உட்பட... ஒவ்வொரு பதிவில் ஆரம்பத்தில் "முக்கிய குறிப்பு" என்பதைத் தவறாமல் கொடுத்துள்ளதற்கும் காரணம் உண்டு...

இவறல் ← பதிவைக் கண்டு பிரமித்தீர்கள்... வலையுலகம் வந்து ஒரே ஒரு குறளுக்காக, குறளின் ஒவ்வொரு சொல்லையும் பிரித்து விளக்கி எழுதிய முதல் பதிவு... எதற்காக எழுதப்பட்டது என்று அதில் குறிப்பிடவில்லை... அந்த சமயத்தில் என்ன நடந்தது முதற்கொண்டு இன்று வரையிலும் என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்... அறிக... அறிந்து தெரிந்து புரியவில்லை என்பவர்களுக்கு, அந்த பதிவில் முடிவில் உள்ள பாட்டு புரிய வைக்கலாம்... பல பதிவுகளில் பாடல் அவ்வாறே...

// அரசியல் ரீதியான புரிதல் உங்களுக்கு பத்து சதவிகிதம்கூட இல்லை. //

ஆம்... இல்லை...

நன்றி...