Friday, March 19, 2021

பாஜக அரசு எளிய தமிழ்ப்பிள்ளைகளின் விவசாயத்திற்காக ஏதேனும் செய்து உள்ளார்களா?

பாரதப்பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு எளிய தமிழ்ப்பிள்ளைகளின் விவசாயத்திற்காக ஏதேனும் செய்து உள்ளார்களா?




ஆம். அந்தத் திட்டத்தின் பெயர். பிரதான் மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா. (Pradhan Mantri Krishi Sinchayee Yojana) பிரதம மந்திரி விவசாயிகள் சொட்டு நீர் பாசனத் திட்டம்.

சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் தண்ணீரைச் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் 2015ஆம் ஆண்டு பாஜக அரசால் தொடங்கப்பட்டது. இதன் குறிக்கோள் ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் என்பதாகும். 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1621560

இன்னமும் வெளியுலகம் தெரியாமல் வெள்ளந்தியாக வாழும் தமிழ்ப்பிள்ளைகளை பல பூச்சாண்டிகள் ஒன்று சேர்ந்து #பாஜக #வந்துரும் என்று பயமுறுத்திக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  பாஜக என்ற கட்சியைப் பிடிக்கிறதோ இல்லையோ பாஜக தமிழ்ப்பிள்ளைகள், மலையாளப் பிள்ளைகள் என்று வேறுபாடு பார்ப்பதில்லை. இவர் தாமரைக்கு ஓட்டுப் போடுவார் என்று ஓட்டரசியல் செய்வதும் இல்லை. 



திட்டம் முக்கியம். வெளிப்படைத்தன்மை அதைவிட முக்கியம். இலக்கு நோக்கம் எல்லாமே எளிமையாக்கி இந்தியப் பிள்ளைகள் நலமாக வாழ வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் எப்போதும் போலச் செயல்பாட்டில் சுணக்கம் காட்டி மக்களிடம் வந்து சேரவில்லை. கடந்த 6 வருடங்களாக பாஜக அரசு அதிக நிதி ஒதுக்கிச் சிறப்பாகச் செய்து கொண்டு இருக்கிறது.



விவசாயிகள் இடையே மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப சொட்டு நீர் பாசனத்தைப் பிரபலப்படுத்துவது. பொதுவாக நமது நாட்டில் விவசாயம் "கால்வாய் பாசனம்" முறையில் செய்யப்படுகிறது .இதனை ஆங்கிலத்தில் flood irrigation என்று சொல்லுவர் .நெல் போன்ற பயிர்களுக்கு இது சரியான உக்தி ஆகும் .ஆதி காலத்தில் இருந்தே இந்த முறை தான் உள்ளது .

ஆனால் அனைத்து விதமான பயிர்களுக்கு இந்த முறை தேவையற்றது .இதனால் தண்ணீர் நிறைய வீணாவுதுடன்,உரங்களும் தண்ணீருடன் வீணாகிறது. சொட்டு நீர்ப் பாசனம் செய்வதற்குக் குறைந்த அளவு நீர் போதும். மழை குறைந்த இடங்களில் இந்த பாசனம் மிகவும் உதவும் .இதனை விவசாயிகளிடத்தில் கொண்டு செல்லும் நோக்கமே இந்தத் திட்டமாகும்.

இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 100% மானியத்தில் தூவான் ,தெளிப்பான் போன்ற கருவிகள் கொடுக்கப்படுகின்றது. இரண்டு ஏக்கர் மேலே நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 75%மானியத்தில் தூவான் ,தெளிப்பான் போன்ற கருவிகள் கொடுக்கப்படுகின்றது,.(இந்தக் கருவிகளின் மதிப்பு சுமார் 50000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை )

கடந்த 6 வருடங்களில் சுமார் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 2500 கோடி ரூபாய் செலவில் இந்தக் கருவிகள் கொடுக்கப்பட்டுள்ளன . சுமார் 10 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் தமிழ்நாட்டில் மட்டும் சொட்டு நீர்ப் பாசனம் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது .

1. உரச் செலவு குறைவதால் லாபம் கூடுகிறது /நஷ்டம் குறைகிறது

2. தேவையான இடத்தில் மட்டும் நீர் பாய்வதால் களைகள் முளைப்பதில்லை .அதை நீக்குவதற்கு உரிய நேரம் /பணம் மிச்சம் .

3. குறைந்த அளவே தண்ணீரைப் பயன் படுத்துவதால் நிலத்தடி நீர் காக்கப்படுகிறது,

4. மின்சாரம் சேமிக்கப்படுகிறது .

5.பருவ மழை பொய்த்தாலோ /குறைந்தாலோ விரக்தி ஆகி விடாமல் ,சொட்டு நீர்ப் பாசனம் மூலம் என்ன விளைவிக்க முடியுமோ அதை விளைவித்து விவசாயி லாபம் பார்க்கலாம் .

இன்னும் 5 ஆண்டுகளில் 20 லட்சம் ஏக்கருக்கு இந்தச் சொட்டு நீர்ப் பாசனத்தை விரிவு படுத்த வேண்டும்.

ஒரு கிராமத்தில் குறைந்தது 25 ஏக்கராவது சொட்டு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும் இன்னும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் .

ஒரு விவசாயின் குடும்பத்தில் 4 நபர்கள் என்று வைத்துக் கொண்டால் சுமார் 2.5 லட்சம் x 4 =10 லட்சம் தமிழர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 6 வருடங்களில் பயன் பெற்று உள்ளனர்.

நிலையான கோடீஸ்வர சூட்சும ரகசியத்தின் உண்மைக்கதை

இல்லை. நான் இதை நம்ப மாட்டேன் என்று அடம்பிடிக்கும் தமிழ்ப்பிள்ளைகள் மட்டும் கீழே உள்ள ஆங்கிலம் மற்றும் தமிழ் இணைய தளங்கள் கொடுத்துள்ளேன்.  துல்லியமான விபரங்கள். பலன் பெயர் தமிழகக் கிராமங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.  நான் படிக்க மாட்டேன் என்பவர்கள் கொடுத்துள்ள படங்களை மட்டும் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசாங்கம் ஹிந்திப் பெயர் வைக்கின்றது என்று வடையை உண்ணாமல் ஓட்டையை மட்டும் வெறித்துப் பார்ப்பவர்களுக்கு மத்திய அரசாங்கம் கொடுத்துள்ள தமிழ் தளத்தையும் பார்க்கலாம்.


1 comment:

Agni rama said...

http://ramaniecuvellore.blogspot.com/