Friday, January 29, 2021

கோவிட் தடுப்பு மருந்து மேட் இன் இண்டியா

 கோவிட் என்ற தொற்று நோய்க்கு இந்திய அரசு உதவியோடு மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்பான தடுப்பு மருந்தை வைத்துக் கொண்டு பாரதப் பிரதமர் மோடி அவர்களை பணியில் இருக்கும் மருத்துவர் தொடங்கி அல்லக்கை வரைக்கும் விமர்சனம் எழுப்புகின்றார்களே? உங்கள் கருத்து என்ன?




மோடி குறித்த முதல் குற்றச்சாட்டுப் பத்திரிக்கையாளர்களைக் கண்டு கொள்வதில்லை. பொதுவெளியில் பேசப் பயம். தான்தோன்றித்தனமாக செயல்படுகின்றார். அவர் ஜனநாயகவாதி அல்ல போன்ற கருத்துக்கள் இங்கே கடந்த ஆறு ஆண்டுகளாக விதைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது.  ஆனால் இதற்கு மோடி தொடக்கத்திலே தெளிவாகப் பதில் அளித்து விட்டார். 

50 வருடங்களாகத் தின்று பழகி சுகமாக வாழ்ந்து பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டு கால் ஜீவன்களை எவரும் நெருங்காதீர்கள். கண்டு கொள்ளாதீர்கள். அதன் குணாதிசயம் மாறாது. நீங்கள் கொடுக்கும் பிஸ்கட் சுவை சரியில்லை என்றால் அது வேறொரு பக்கம் தாவும். அங்கு சரியில்லையென்றால் அடுத்த பக்கம் தாவும்.  எதிரி நாடு, நம்மை ஏளனப்படுத்தும் நாடுகள் என்பது அதற்கு பொருட்டல்ல.  அதற்குத் தேவை உணவு.  அந்த உணவு கொடுப்பவன் தான் அதற்கு முதலாளி. இதை உணர்ந்து வைத்திருந்த மோடி தொடக்கம் முதலே இது போன்ற ஜீவன்களைக் கண்டு கொள்ளவே இல்லை.

குலைத்த , குலைத்துக் கொண்டிருக்கும் ஜீவன்களுக்குத் தொண்டை வற்றியது தான் மிச்சம்.  இப்போது வெறி பிடித்து, பசியோடு அலைந்து கொண்டிருக்கிறது.  இதே போலத்தான் காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் மற்ற மனித ஜீவன்கள் என்ற பெயரில் உலாவும் அரசியல் புரிதலற்ற, இந்திய நாடு குறித்த தெளிவற்ற, பொய்களை வைத்தே பிழைப்பு நடத்திய கூட்டத்திற்குக் கண்ணில் விழுந்த தூசியாக மோடியின் செயல்பாடுகள் இருப்பதால் இந்தக் கூட்டம் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக தங்கள் உடம்பு முழுக்க தங்களைத் தாங்களே சவுக்கால் அடித்துக் கொண்டு பிச்சை எடுக்கும் மனிதர்கள் போல இணையம் எங்கும் தங்கள் அசிங்கங்களை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.  

காரணம் நாலும் மூன்றும் எத்தனை என்று சொல்லத் தெரியாதவன், நடிகைகளை மோந்து பார்ப்பதே தான் வாழ்க்கை கோட்பாடாகக் கொண்டிருந்தவன், மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது தான் எங்கள் கொள்கை என்று அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு எழவு விழுந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும். இந்திய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தால், இனி கொள்ளையடிக்க முடியாதோ என்ற பயமும், பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற வாய்ப்பில்லாமல் போகுமோ என்ற அச்சமும், கடைசியாக அவர்களின் குடும்பத்திற்குள்  எழவு விழுந்திடுமோ என்ற பயம் இருக்கத்தானே செய்யும். 

இது போன்ற ஜீவன்களைக் கதறல்களைச் சொறி நாய்கள் ஊளையிடுவதைப் பார்ப்பதைப் போலப் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். 

ஒவ்வொரு நாளும் மத்திய அரசின் திட்டங்கள் இந்தியாவில் ஏதோவொரு மாநிலத்தில் தொடங்கப்படும் செய்தி வருகின்றது.  ஏற்கனவே தொடங்கப்பட்ட திட்டம் முடிவடைந்து செலவே இல்லாமல் காணொளிக் காட்சி மூலமாக நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது.  இந்தியாவின் விரைவான வளர்ச்சியென்பது அதன் குறுக்கும் நெடுக்கும் இருக்கும் வழித்தடங்கள் தான் உருவாக்கும் என்ற நோக்கத்தில் பல லட்சம் கோடிகள் அடங்கிய ஒவ்வொரு திட்டமும் கடந்த ஆறு ஆண்டுகளில் நம்ப முடியாத வேகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை கவனிப்பார்களா? ஊளையிடுபவர்களை கவனிக்க நேரம் இருக்குமா?

அடுத்த நான்கு வருடத்திற்குள் நடக்கவிருக்கும் காட்சியில் பாதி நாய்கள் பரலோகம் போயிருக்கும். நாம் தான் பொறுமையாக இருக்க வேண்டும்.

வலைதளங்கள் தரும் சுதந்திரம்


8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னது விரைவான வளர்ச்சியா...? ஹா... ஹா...

நாய் = நன்றி

நீங்கள் சொல்வது ஜந்து தானே...?

திண்டுக்கல் தனபாலன் said...

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்...

திண்டுக்கல் தனபாலன் said...

4 + 3 = ? வியப்பூட்டும் பல கணக்கியல் பதிவுகள் விரைவில்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பத்திரிக்கை நிருபர்களைப் பற்றி ஒரு முறை வாஜ்பாயி கூறியது நினைவிற்கு வருகிறது. "Do not push your mike into my mouth"

ஸ்ரீராம். said...

ஆரம்பக் கேள்வி அப்படியே நிற்கிறதே...

ஜோதிஜி said...

கேள்வி நானே பதில் நானே என்ற பாணியில் எழுதினேன்.

ஜோதிஜி said...

சரியான வார்த்தைகள்

ஜோதிஜி said...

ஆவலுடன்