Thursday, January 14, 2021

தமிழர் திருநாள் வாழ்த்துகள் 2021

இன்று கொண்டாடிய பொங்கலில் எந்தச் சுவராசியமும் இல்லை. ஆனால் எனக்குக் கிடைத்த தின்பண்டங்கள் மிக அதிகம்.  நான் ஒரு மெது வடை விரும்பி. கூடவே காரச்சட்னி இருந்தால் போதும். அந்தக் காரமும் கண்ணிலிருந்து நீர் வரும் அளவிற்கு இருந்தால் மனமெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கும். மகள்கள் என்னை வினோதமாக வேடிக்கை பார்ப்பார்கள். பூமி என்றொரு படத்தை இன்று பார்த்தேன். பத்து நிமிடங்களுக்கு மேல் என்னால் உட்கார முடியவில்லை. ஜெயம் ரவியின் 25 ஆவது படம். தமிழ் நடிகர்களுக்கு தங்களை சமூக ஆர்வலராகப் படத்தில் மட்டும் காட்டிக் கொள்ள ஆசை. களத்தில் வர அச்சம்.  கையிலிருந்து காசு எடுத்துச் செலவழிக்க அதை விடப் பயம் அதிகம் இருப்பதால் இது போன்ற படங்கள் தமிழ்நாட்டில் அடுத்த பத்தாண்டுகள் ஆனாலும் நிற்கப் போவதில்லை.

காங்கிரஸ் குறித்து இனம் புரியாத வெறுப்பு இருந்தாலும் இந்தப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. ராகுல் ஆண்டிப்பட்டி, உத்தமபாளையம், தேனி, கம்பம், மதுரை பக்கம் பொண்ணு எடுத்துக் கட்டினால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.


வாழ்க்கை அதிர்ஷ்டம் என்ற தங்கத் தட்டை வாரி வழங்கினாலும் திறமையும் உழைப்பும் இல்லாவிட்டால் என்னவாகும்? என்பதற்கு இந்தப்படம் சாட்சி.


நான் எழுதுவதற்குக் காரணம் ராஜாராமன் என்பதனை பலமுறை பதிவு செய்துள்ளேன். அவருடைய மென்பொருள் இல்லாவிட்டால் நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன். அவருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று பலமுறை யோசித்துள்ளேன். இப்போது கிடைத்துள்ளது. என்று வாழ்த்துகள்.


என் எழுத்துப் பயணத்தை மாற்றியதில் சீனிவாசனுக்குப் பங்குண்டு. ஆனந்தவிகடன் இந்த வருடம் அவருக்குச் சிறப்புச் செய்துள்ளது. என் வாழ்த்துகள்.   தை மாதத்தில் என் நெஞ்சுக்கு நெருக்கமான இருவரையும் உச்சி முகர்ந்து வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றேன்.


தம்பி ஒருவர் என்ன அண்ணே யூ டியூப் என்றால் இப்போது பரபரப்பான செய்திகளைப் போட்டுப் பல ஆயிரம் பார்வையாளர்களைத் தட்டிக் கொண்டு போவது தான் வாடிக்கை. நீங்க என்ன வேறு பாதையில் போய்க் கொண்டு இருக்குறீங்க? உங்களை மாற்றிக் கொள்ளலாமே? என்று கேட்டார்.  பத்து நிமிடப் பேச்சு. அரை மணி நேரம் மகள் அதனை யூ டியூப் க்காக மாற்றுவது என்பது மிகச் சாதாரணமாக விசயமாக மாறிவிட்டது.  

இது 18 முதல் 25 வயதுக்குள் இருப்பவர்களுக்காக மட்டுமே.  அது போன்ற வயதில் இருப்பவர்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.  100 பேர்கள் பார்த்தால் போதும் என்றேன்.  என் அடுத்த தலைமுறை உணர்ந்தால் போதும் என்றேன்.

மகள் விஜய் ரசிகை. கொரானா காலத்தில் மாஸ்டர் படம் பார்க்க திரையரங்கத்திற்கு அனுமதியில்லை என்றவுடன் கர்புர் என்று கோபத்துடன் அம்மாவைச் சுற்றிக்கொண்டு இருக்கின்றார். தொடர்ந்து ட்விட்டரில் கல்வி அமைச்சர் மற்றும் முதலமைச்சரிடம் பள்ளி திறப்பது குறித்து தினமும் எழுதிக் கொண்டேயிருந்தேன்.  வருகின்ற 19 ஜனவரி 2021 12 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு மட்டும் பள்ளி வகுப்புகள் தொடங்கப்படுகின்றது. 

மகிழ்ச்சி.

அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மூன்றாவது படத்திற்கு பின் உள்ள திருக்குறளையும் புரிந்தவர்கள் கற்றவர்கள்...

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் மனமும் பார்வையும் குறள்தான்

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துகள் ஐயா

ஜோதிஜி said...

அவர் பெயர் குறள்பாலன்.

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் ஜோதிஜி.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்