உங்கள் மகன் மகள் இந்த வருடம் பள்ளி வாழ்க்கை முடித்து கல்லூரிச் செல்லத் தயாராக இருந்தால் இந்தக் காணொளியைக் கேட்கவும்.
இணைய தளத்தில் எந்த இடத்திலும் உண்மையான மகன், மகளின் பெயரை, மின் அஞ்சலை, அலைபேசி எண் போன்றவற்றைப் பதிவு செய்யாதீர்கள். மாற்று ஏற்பாடு வைத்திருக்கவும்.
2. எந்தப் பிரபல்யமான நிறுவனம் சார்ந்த இணைய தளங்கள் உங்களுக்கு வழிகாட்டும் என்பதனை நம்பாதீர்கள்.
3. மத்திய அரசு, மாநில அரசின் இணையதளங்களில் சோதிக்க முயலுங்கள்.
4. இணையதளங்களின் நம்பகத் தன்மையை நிச்சயம் அலைபேசி வழியாகச் சோதிப்பது என்பது முழுமையான புரிதல் ஏற்பட வாய்ப்பு குறைவு.
5. நீங்கள் பதிவு செய்து வைக்காத நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்தி வந்தால் ப்ளாக் லிஸ்ட் ல் சேர்த்து விடுங்கள்.
6. திடீரென்று தொடர்பில்லாத, நீங்கள் பதிவு செய்யாத கல்வி நிறுவனங்களிலிருந்து அழைப்பு வந்தால் முதலில் தன்மையாகப் பேசி அடுத்த முறை அழைக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
ஷிப்ட் மாறும் போது அடுத்தவர் அழைப்பார். செந்தமிழில் பேசுங்கள்.
மற்ற விபரங்கள் காணொளியில்.......
3 comments:
விளக்கமும் அருமை அண்ணே...
நன்றி.
இணைய தளத்தில் எந்த இடத்திலும் உண்மையான மகன், மகளின் பெயரை, மின் அஞ்சலை, அலைபேசி எண் போன்றவற்றைப் பதிவு செய்யாதீர்கள். மாற்று ஏற்பாடு வைத்திருக்கவும். சரியான யோசனை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி
Post a Comment