எப்படி இந்த அளவுக்கு இந்தப் பதிவு பலரின் பார்வைக்குச் சென்றது என்பது இன்று வரையிலும் ஆச்சரியமாகவே உள்ளது. நேற்று வாசித்துப் பார்த்த போது குறை ஒன்றும் தெரியவில்லை. ஊர் சார்ந்த புகைப்படங்களைக் கோர்த்து வேறொரு முறையில் யூ டியூப் ல் பதிவு செய்து உள்ளேன்.
புத்திசாலிகளின் திறமைகள் தோற்பது இயல்பு. நல்லதும்கூட.
ஆணவம் அழியும். அகங்காரம் குறையும். மாற்றம் உருவாகும். மனதில் தன்னம்பிக்கை மலரும்.
ஆனால் மகான் அவர்கள் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
திருப்பூர் முழுக்க பண வெறியில் அலையும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருப்பதால் சிறிய இடம் கிடைத்தால் கூட அதில் நான்கு குச்சு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு விடலாமே என்று எண்ணத்தில் உள்ளவர்களால் எந்தப் பக்கமும் போய் அமர்ந்து பேச முடிவதில்லை.
என் ஜட்டியைத் தவிரப் பெண்கள் நலக்கூட்டணியினர் அனைத்தையும் கைப்பற்றி விட்டனர்.
"ஆளை விட்டால் போதும்" என்ற ஞான மார்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற எளிய தமிழ்ப்பிள்ளைகள் படும் பாடு சொல்லி மாளாது. அதற்கே நான்கு யூ டியூப்களில் பேசி புலம்ப வேண்டியதாக உள்ளது என்பதனையும் தாங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
இப்போது எனக்கென்று எந்தச் சொந்தமும் இல்லை.
என் தனிமையைக்கூட என்னால் அனுபவிக்க முடியாத அளவிற்கு வளர்ந்தவர்கள் வாயடிக்கின்றார்கள்.
வெகுண்டு எழுந்து பழக்கப்பட்டவன் இப்போது மிரண்டு போய் பதுங்கு குழிக்குள் இருந்து பேசிய காரணத்தால் இந்தக் குரல் இப்படி வந்து விட்டது தம்பி.
"என்ன செய்வீர்களோ? எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்பது பேரன் பேத்திகள் வேண்டும்" என்று சொன்ன போது மூவரும் சொன்ன பதில்.......
"நீங்கள் மற்றொரு திருமணம் செய்து அதன் மூலம் உங்கள் சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்" என்கிறார்கள்.
நான் என்ன செய்யட்டும்?
3 comments:
இன்று விவாதிக்க வேண்டும்... ((எண்கள் எனக்கு) எங்கள் வீட்டில் )
பேசுவோம்.
உங்களுக்கென்று இப்போது சொந்தமில்லை என்பதை ஏற்கமுடியாது. உங்கள் எழுத்தின் காரணமாக அதிகமான சொந்தங்களை தற்போது பெற்றுள்ளீர்கள் என்பதை மறுக்கமுடியாது.
Post a Comment