சில்லுண்டிகளுக்கு அரசியல் என்ற பாடத்தில் உள்ள "பரமபதம் விளையாட்டு" புரிய வாய்ப்பில்லை. வெட்டுப்படுவது, உடனே வெட்டுக்குத் தயாராக வைத்து இருப்பது, குறிப்பிட்ட காலம் கடந்து வெட்டத் தயாராக வைத்திருப்பது இந்த மூன்று மூன்றும் மிக முக்கியமானது.
நேரிடையான அரசியல் செயல்பாடுகள். மறைமுக செயல்பாடுகள் இரண்டுக்கும் கீழ் வருவது தான் திட்டம் வகுத்துக் கொடுப்பது.
அதிகாரத்தை அடையும் வரைக்கும் கட்சிக்கு வழிகாட்டியாக இருப்பது. அதிகாரத்தை அடைந்த பின்பு நிர்வாகத்திற்கு ஆலோசனைகள் சொல்வது.
இதற்கென செயல்படுபவர்கள் பெரும்பாலும் வெளிச்சத்தில் தங்களை மிக அபூர்வமாகவே வெளிப்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் காலம் முழுக்க கொள்கைவாதிகளாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். பாஜக வில் இப்படியானவர்கள் இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான பேர்கள் வெளியே தெரியாமல் செயல்படுவதே ஒரே நோக்கம் என்ற பாதையில் பயணிக்கின்றார்கள். இது தான் கட்சியின் பலம். நிரந்தர நீடித்த வளர்ச்சியின் அடையாளம். இப்படித்தான் பாஜக இன்று வென்று வந்துள்ளது.
"சாணக்கியர்" என்று எதிர்க்கட்சிகள் எரிச்சலுடன் பார்க்கும் மத்திய உள்துறை அமைச்சர் மரியாதைக்குரிய அமித்ஷா இன்று சென்னை வரும் சமயத்தில் முதல் முறையாக பிஎல். சந்தோஷ் அவர்களும் வருகை தருகின்றார்.
ஏழெட்டு மாதங்களுக்கு முன் பாஜக வில் எல் முருகன் என்பவர் யார்? எங்கேயிருந்தார்? என்ன பதவியில் இருந்தார்? என்று கேட்டால் பாஜகவில் உள்ளவர்களுக்கே குறிப்பிட்ட சிலருக்குத் தான் தெரியும். இன்று "வேல் யாத்திரை" தொடங்கிப் பல களப்பணி மூலம் ஊடகங்களால் முன்னிலைப்படுத்தும் அளவிற்குத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகும் அளவிற்கு வளர்ந்துள்ளதற்குக் காரணம்..........
தன்னை இகாப பணியில் இருந்து விடுவித்துக் கொண்டு ஓய்வு பெற்று இன்று தமிழக பாஜக வின் களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் து.செ அண்ணாமலை அவர்கள் குறித்து இன்று தமிழ் கூறும் நல்லுலகம் இன்று அறிந்திருப்பதற்குக் காரணம்.......
பிஎல். சந்தோஷ் அவர்கள். ஆர்.எஸ்.எஸ். வேர்களும் விழுதுமாய் இருப்பவர்.... தென் மாநில பாஜக அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஆதியும் அந்தமுமாக இருப்பவர்.
கர்நாடக முதல் மந்திரியாக இருந்தாலும் எடியூரப்பா இவரின் கருத்தறியக் காத்திருப்பதும்........
மோடி, அமித்ஷா தென் மாநிலங்கள் சார்ந்து அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கப்படும் முடிவுகளுக்கு சந்தோஷ் அவர்களின் பார்வையின்றி அணுவும் அசையாது.
தன்னை கட்சியில், கொள்கைகளில், சித்தாந்தங்களில் ஆழ அகல விழுது பரப்பி வழிகாட்டியாய் இருக்கும் சந்தோஷ் அதிகார ஆசையில் எவருடனும் போட்டியிடுவதில்லை.
ஆனால் அதிகாரத்தை அடைய ஆசைப்படுபவர்கள் அனைவரும் இவரின் கண்ணசைவுக்காகக் காத்திருப்பது தான் இன்றைய சூழல்.
இன்று சென்னையில் நடக்கும் பாஜக கட்சி சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்கிறார். திமுக வில் இருந்து நீக்கப்பட்ட கேபி ராமலிங்கம் முதல் பல நபர்கள், ஆளுமைகள், மாற்றுக்கட்சியினர் பலரும் இன்று பாஜக வில் இணைய இருக்கின்றார்கள்.
இன்று மாலை தெரியவரும்.
கட்சி அரசியல் செயல்பாடுகள் என்பதும் நீண்ட காலச் செயல் திட்டங்கள் என்பதும், பணம் கொடுத்து ஆள் வரவழைத்து கடன் வாங்கி அறிக்கை வாயிலாகவே நாள் முழுக்க பின்னால் ஒளிந்து கொண்டு நடத்தப்படுவது அல்ல.
அதற்கு ஆளுமைப்பண்பு இயற்கையிலேயே இருக்க வேண்டும். குறைந்தபட்சம் தன் உழைப்பின் மூலம் கற்றறிந்து தன்னை வளர்ந்து மேம்படுத்திக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும். அதற்கு குறிப்பிட்ட சித்தாந்தம் இருக்க வேண்டும். அது உங்களுக்குப் பிடிக்காமல் போனாலும் பரவாயில்லை. அது வெற்றியடைந்தால் அது தான் அரசியலில் வளர்ச்சி.
அதுவே தான் வெற்றி.
இது தான் இங்குள்ள எதார்த்த அரசியல்.
புரிந்தவர்கள் அமைதியாகவே செயல்படுவார்கள்.
காரணம் அவர்களின் பயணம் நீண்டதாக இருக்கும். இலக்கை மட்டும் யோசித்து முன்னேறிக் கொண்டிருப்பார்கள்.
இலக்கில்லாதவர்கள் புரியாதவர்கள் ட்விட்டரில் "கோலமாவு கோகிலா" படம் காட்டுவார்கள்.
8 comments:
நீங்களும் பிஎல். சந்தோஷ் மாதிரிதானோ ஜோதிஜி( சந்தோஷ் அதிகார ஆசையில் எவருடனும் போட்டியிடுவதில்லை. )
இயற்கை தன் வேலையை இயற்கையாக செய்யும்...
நடிகை பின்னால் சுற்றி அவரை மோந்து பார்த்துக் கொண்டு திடீர் என்று கட்சியின் தலைவர் என்று மாறியதை வெட்கம் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் எனக்கில்லை நண்பா.
அடுத்த வருடம் இந்நேரம் இந்தப் பதிவை மீண்டும் படிக்கும் போது புரியும் தனபாலன்.
மன்னிக்கவும் அண்ணே...
என்றாவது...
இத்தனை நாள் எவ்வளவு கேவலமாக கீழ்த்தரமான எண்ணங்களுடன் வாழ்ந்துள்ளோம் (எழுதி பேசியும் உள்ளோம்) எனும் கணக்கியல் தெரியும் போது...
// சாணக்கியர்
மரியாதைக்குரிய //
"ஓஒ" எத்தனை முறை என அறிய முற்படலாம்...!
தமிழன் எப்படிக் கெட்டான்...? என பாவாணர் போல் பதட்டம் வரலாம்...
உறவு உட்பட "அனைத்தும் என்னவொரு மாயை" என...
?
கொசுறு தகவல் : after year : ____
ஹிட்லரின் போர் வெறி, அவருடைய நாஜி கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை உண்டாக்கியது. அதனால், அவரை கொலை செய்ய அவருடைய தளபதிகளே சதித்திட்டம் தீட்டினார்கள். இவர்களுக்குத் தலைவர் கர்னல் வான் ஸ்டப்பன்பர்க்.
1944 ஜுலை 20-ந்தேதி தன்னுடைய தலைமை அலுவலகத்தில் தளபதிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார், ஹிட்லர். அவர் முன் இருந்த மேஜை மீது தேசப்படம் விரிக்கப்பட்டிருந்தது. எந்தெந்த இடத்தை எப்படித் தாக்கவேண்டும் என்று ஹிட்லர் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது ஹிட்லரின் கால்களுக்கு அருகே ஒரு "சூட்கேஸ்" இருந்ததை மெய்க்காவலர் ஒருவர் பார்த்தார். "இது இங்கு எப்படி வந்தது? யார் வைத்தது?" என்று அவர் மனதில் கேள்விகள் எழுந்தது. சந்தேகம் தோன்றியது. பெட்டியை தள்ளிவிட்டார்.
தரையில் 'சர்' என்று சரிந்து சென்ற பெட்டி, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. ஹிட்லர் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. நாலாபுறமும் புகை மண்டலம் சூழ்ந்தது. புகை அடங்கியவுடன் பார்த்தால், இடிபாடுகளுக்கு இடையே 4 அதிகாரிகள் செத்துக் கிடந்தனர்.
மயிரிழையில் உயிர் தப்பிய ஹிட்லருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
குண்டு வெடித்த இடத்துக்கும், ஹிட்லருக்கும் இடையே ஒரு மேஜை இருந்ததால் அவர் தப்பினார். மெய்க்காவலர் சந்தேகப்பட்டு பெட்டியை தள்ளி விடாமல் இருந்திருந்தால், நிச்சயம் ஹிட்லர் பலியாகியிருப்பார். இந்த சதியையொட்டி, 5 ஆயிரம் பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வளவு பேருக்கு தூக்கு மேடை கிடைக்காததால், விளக்குக் கம்பங்களிலும், மரங்களிலும் பலர் தூக்குக் கயிற்றில் தொங்கவிடப்பட்டனர்.
கறிக்கடையில் மாமிசத்தை தொங்கவிடப்படுவதற்காக உள்ள கொக்கிகளில், வயர்களைக் கட்டி, அதில் பலர் தூக்கில் மாட்டப்பட்டனர். கர்னல் ஸ்டப்பன்பர்க்குக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொரு தளபதியான ரோமெல் என்பவரும் இந்த சதியில் சம்பந்தப்பட்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவரும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். குணம் அடைந்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் கடைசி காலத்தில் இப்படி ஹிட்லருக்கு எதிராகத் திரும்பினாலும், முதலில் ஹிட்லருக்கு பக்கபலமாக இருந்தவர். ஆகவே ஹிட்லரின் மனதில் இரக்கம் ஏற்பட்டது. "அவரை தூக்கில் போட வேண்டாம்" என்றார், கருணை தேய்ந்த குரலில். ரோமெல் அதிர்ஷ்டசாலி, அவரை விடுதலை செய்ய உத்தரவிடப்போகிறார் ஹிட்லர் என்று எல்லோரும் நினைத்தனர். "அவருடைய பழைய சேவையை நினைத்துப் பார்த்து கருணை காட்டுகிறேன். அவரை சுட்டுக் கொல்லவேண்டாம்; தூக்கிலிடவேண்டாம். விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள அனுமதியுங்கள்!" என்று கூறினார், ஹிட்லர்! அதன்படி அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரை ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டார் ஹிட்லர்.
இணையத்தில் இருந்து எடுத்தது
ஒரு நான்கு நாட்கள் உங்களால் ஒதுக்க முடிந்தால் முன்பு ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றிய திருமாவேலன் எழுதிய 2004 முதல் 2013 வரைக்கும் காங்கிரஸ் அரசு குறித்து அவர் எழுதிய புத்தகங்களைப் படித்துப் பாருங்க. பாஜக செய்து கொண்டிருப்பது 00001 சதவிகிதம். எல்லாவற்றையும் வாசித்து உணர்ந்த காரணத்தால் குற்ற உணர்ச்சி இன்றி என்னால் கம்பீரமாக எழுத முடிகின்றது.
சிறிது ஆங்கிலேய காலத்திற்கு முன்...
?
____
Post a Comment