Saturday, November 28, 2020

வேலுப்பிள்ளை பிரபாகரன் 66

 26 நவம்பர் 2020 விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள்.  

சென்ற ஆண்டு இங்கிலாந்து அரசாங்கத்தின் நீதிமன்றம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மேல் வைத்திருந்த அத்தனை குற்றச்சாட்டுகளையும் நீக்கி விட்டது.  இலங்கை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று இலங்கை அரசு ஈழத்தில் பல இடங்களில் அவரின் நினைவு தினம், பிறந்த தினம் விழா கொண்டாட இன்னமும் அனுமதிப்பதில்லை.


சிங்களர்களுக்கு இன்னமும் விடுதலைப்புலிகள் என்ற பெயரைக் கேட்டாலே ஈரக்குலை நடுங்குவது என்பது தவிர்க்க இயலாதது. 

ஆனால் தமிழ்நாட்டில் கள சூழல் வேறு விதமானது.

ஈழ வரலாறு குறித்து முழுமையாக தெரிந்தவர்கள், புரிந்தவர்கள், உள்வாங்கி அமைதியாக இருப்பவர்கள் ஒரு பக்கம்.

இதனை வைத்தே அரசியல் களத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டவர்கள், இதன் காரணமாகவே தங்களின் அரசியல் வாழ்க்கையை இழந்தவர்கள் மறு பக்கம்.

தமிழ்நாட்டில் உள்ள சிறிய மற்றும் பெரிய கட்சி சார்ந்த ஆதரவாளர்களில் இன்னமும் பிரபாகரன் அவர்கள் மேல் பற்று கொண்டவர்கள் ஏராளமான நபர்கள் இருக்கின்றார்கள்.

தமிழகத்தில் தேர்தல் வரும் சமயங்களில் தான் பிரபாகரன் புகழ் பாடப்படும். தூற்றப்படும்.

குறிப்பிட்ட கட்சி சார்ந்த ஆதரவு தளத்தில் செயல்படுபவர்கள், எழுதுபவர்கள், வேடிக்கை பார்ப்பவர்கள் அது குறித்து அதி தீவிரமாக எழுதுபவர்கள் இணையத்தில் செயல்படும் போது கவனமாகச் செயல்படுங்கள் என்று எங்கள் சங்கம் கோரிக்கையாக வைக்கக் கடமைப்பட்டுள்ளது.  

உங்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்து அறிந்த வரையில் வெறுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அவரைக் கொண்டாட உலகம் முழுக்க கோடிக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள் என்பதனையும் நினைவில் வைத்திருங்கள்.

உங்களுக்குத் தொடர்பே இல்லாத களமது. புரிந்து கொள்ளவே முடியாத வரலாற்றுப் பின்னல் கொண்ட வீபரிதமது. இதுவரையிலும் எழுதப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் உத்தேசமான உருவகம் கொண்டது தான்.

இன்று வரையிலும் அவரைக் கொண்டாடும் பல கோடி மக்களும் அவரவர் வாழ்ந்த வாழ்க்கையில் பெற்ற மோசமான அனுபவங்களின் வாயிலாக அடைந்த துன்பங்களுக்கு அருமருந்தாக அவரைப் பார்த்தவர்கள், கொண்டாடியவர்கள். கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள், வணக்கத்துக்கு உரியவராக தங்களின் தெய்வமாக இன்னமும் மனதில் வைத்து வழிபடுபவர்கள். 

சில்லறை பயல்கள் என்பவர்கள் பொறுக்கியை, பொறம்போக்குகளை, பள்ளி கல்லூரிப் படிப்புகளைக்கூடப் படிக்க முடியாத மிரட்டி பாஸ் மதிப்பெண்கள் போட வைத்து பெண்களின் உள்ளாடைகளை ஆராய்ந்து அனுபவ அறிவு பெற்றவர்களைக் கொண்டாடும் மனநிலையில் இருப்பவர்களை, மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தவறு அவர்களுடையது அல்ல.  நீங்கள் தான் மாற வேண்டும்.  உங்களுக்கு உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடினால் சுற்று ஓரமாக ஒதுங்குங்கள். இணையத்தை அசிங்கப்படுத்த வேண்டாம். 

ஒரு கட்சியில் ஓராயிரம் தனிப்பட்ட கொள்கைகள் கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் விரும்பும் கட்சிக் கொள்கைகள் சித்தாந்தங்கள் ஏதோவொரு வழியில் அவர்களை ஒன்று சேர்ப்பதாக இருக்க வேண்டும்.  உங்கள் வார்த்தைகள் ஒன்று சேர்ந்தவர்களை, சேர நினைப்பவர்களைப் பிரிக்கும் வண்ணம் இருக்கக்கூடாது. 

வெவ்வேறு கருத்துக்களை உள்வாங்கி உணர்ந்து ஆராய்ந்து பிரித்தெடுத்து உங்களுக்கான அடையாளத்தை நீங்களே உங்களுக்குள் தக்க வைத்துக் கொள்ளத் தெரியாத பட்சத்தில் உங்கள் இணைய வாழ்க்கை உங்களைப் பார்த்து விரைவில் சிரிப்பாய் சிரிக்கப் போகின்றது என்று அர்த்தம்.

பொறம்போக்கு போல நீங்கள் எழுதப்படும் ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட்டு அதுவே உங்களுக்கு எதிர் ஆயுதமாக மாற்றப்படும் என்பதனையும் உங்கள் கவனத்தில் வைத்திருந்தால் சகிப்புத்தன்மை என்பதன் அடையாளத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

ஜனநாயகத்தில்  ஓட்டரசியல் களத்தில் நாம் செயல்பட வேண்டிய அடிப்படை உண்மையும் உங்களுக்குப் புரியக்கூடும். அரசியல் களத்தில் வெற்றி என்பது நம் பலத்தை விட எதிராளியின் பலவீனத்தைப் பொறுத்தே கிடைக்கும் என்பதனை நீங்கள் புரிந்து கொண்டால் போதும்.  நீங்களே இரையாகி மடிந்து விடாதீர்கள். 

இதுவரையிலும் இங்கே எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் திணிக்கப்பட்ட வரலாறு. திக்குத் தெரியாத காட்டில் சிக்கி விடாதீர்கள். 

மாற்றுக் கருத்து உருவாகி மாற்ற முடியாத கோபம் உருவாகி மல்லாக்க படுத்து நாட்டை சீர்திருத்துவது எப்படி என்பதனைப் பற்றி யோசிப்பதை விட உங்கள் மனைவிக்குச் சமையலில் வெங்காயம் வெள்ளப்பூண்டு உரித்துக் கொண்டு நல்ல பெயர் எடுக்கப் பாருங்கள்.

பொதுநலன் கருதி வெளியிடுவோர்

திண்டுக்கல் தனபாலன் பேரவை சார்பாக😅

தென் மண்டல மோடி எதிர்ப்பாளர் நிரந்தர பொதுச் செயலாளர்.💪

(ஒப்பம்)

ஈழ வரலாறு முழுமையாக படிக்க வாசிக்க யோசிக்க அறிந்து கொள்ள

2 comments:

ஸ்ரீராம். said...

விடுதலைப்புலிகள், அவர்கள் போராட்டங்கள் பற்றி அன்டன் பாலசிங்கம் முயற்சியில் (?) அச்சிடப்பட்டு வெளியானபோதே இந்திய அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் ஒன்று இருப்பதாக முன்னர் படித்திருக்கிறேன்.  தலைப்பு நினைவில்லை.  ஏதோ ஒரு புகழ்பெற்ற புத்தகத்தின் தலைப்புதான் அதுவும் என்று எனக்கு ஞாபகம்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி