Tuesday, November 24, 2020

ஒரு மாவட்டம் ஒரு பொருள்

 'One District, One Product' (ODOP) scheme

நாம் நக்கலுக்கும் நையாண்டிக்கும் பெயர் போனவர்கள். கிசுகிசு பேசுவதில் ஆர்வம் மிக்கவர்கள். சினிமா தான் உலகம் என்று நம்பக்கூடியவர்கள். எவன் தலைவன் எவன் தறுதலை? என்பதனைக்கூட உணர மறுப்பவர்கள். வட மாநிலங்களைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு கற்பனை வாதங்களை எடுத்து வைப்பவர்கள். எதையும் கட்சி ரீதியாகவே பார்க்க கற்றுக் கொண்டவர்கள். அப்படிப் பார்க்காதவர்கள் முத்திரை குத்தி முட்டுச் சந்துக்குள் நிறுத்த ஆர்வத்துடன் செயல்படுபவர்கள். எதைப் பற்றிப் பேச வேண்டுமோ? அதைத் தவிர மற்ற அனைத்தையும் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் இந்தச் செய்தியை அவசியம் படிக்க வேண்டும்.


மொட்டைச் சாமியார் என்று காவிச் சாமி என்று கண்ணுக்குள் பீதியோடு பார்க்கப்படும் உபி (இது உத்திரப்பிரதேசம் என்று கவனத்தில் எடுத்துக் கொள்ளவும்)யில் ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற திட்டம் கடந்த பல மாதங்களாக உருவாக்கப்பட்டு தீர்மானிக்கப்பட்டு அதில் கவனம் செலுத்தி இப்போது வெற்றிப்பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

மொத்தம் 45 மாவட்டங்கள். அந்தந்த மாவட்டங்களில் எவையெல்லாம் அதிகப்படியான பொருட்கள் கிடைக்குமே? அதில் கவனம் செலுத்துவது. வேறொரு பொருள் அந்த மாவட்டத்திற்கு வர அனுமதியில்லை. மற்றவர்கள் அதில் நுழைய முடியாது. 

அந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை. அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கான சந்தை வாய்ப்பு, மற்ற மாநிலங்களுக்குத் தேவைப்படுகின்ற வாய்ப்புகள், ஏற்றுமதி வாய்ப்பு இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு அந்த மாவட்ட தொழில் துறை அமைப்பு கவனம் செலுத்தும். அதை மாநில ரீதியான ஒருங்கிணைப்பு உருவாக்கி உற்பத்தியாளர்களுக்குத் தேவைப்படுகின்ற பயிற்சி, தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தல், விற்பனை செய்ய உதவி செய்வது, கடைசி வரைக்கும் கண்காணிப்பு என்ற பல படிகளில் இன்று உபி மாநிலம் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.  

சமீபத்தில் விர்சுவல் கூட்டம் நடத்தப்பட்டது. 

45 உற்பத்தியாளர்கள் (பெரும்பாலும் கைவினைப் பொருட்கள்) கலந்து கொண்டனர். உலகம் முழுக்க 130 (Buyers) வாங்கக்கூடியவர்கள் கலந்து கொண்டனர்.

முழுமையான வெற்றி. 

மத்திய அரசின் வழிகாட்டுதலோடு அடுத்த கட்ட பயணத்தையும், இலக்கையும் தீர்மானித்து உபி முன்னேறிக் கொண்டு இருக்கிறது.

சூரரைப் போற்று

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல வெற்றிப் பாதைகளை செய்து, மற்ற நாதாரிகளை இனி மேல் செயல்படுத்த வைத்துள்ளது தமிழ்நாடு...!

பேரறிஞர்...
படிக்காத மேதை...

U.P. சாக்கடை... அதைப்பற்றி எண்ணம் அதை விட...!

Unknown said...

வணக்கம் , நீங்கள் சொல்லவரும் கருத்துக்கள் பல நேரம் புரிந்துகொள்ள முடியவில்லை எங்களை போன்ற சாதாரண வாசிப்பாளருக்கும் புரியும் படி எழுதும் மாறு என் பணிவான வேண்டுகோள்

ஜோதிஜி said...

தம்பி தேர்தல் முடியும் வரைக்கும் இப்படித் தான் எழுதுவார். அதுவரையிலும் பொறுத்தருள்க. அவர் வேகத்தை குறைக்க வேண்டாம் என்ற அன்போடு சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Unknown said...

தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி அண்ணா...

Unknown said...

மேல் படிப்பு முடித்தவரிடம போய் உ பி ல் நல்லா A B C D சொல்லி தருகின்றது நீங்கள் படியுங்கள் என்று சொல்ல வருவது போல் இருக்கிறது. தனபால் நம்ம சோதி முழுவதும் சந்திரமுகி யாக மாறிவிட்டார்

ஜோதிஜி said...

எல்லாப் பயல்களும் அரியர்ஸ் தம்பி.

திண்டுக்கல் தனபாலன் said...

தம்பி... அண்ணன் தான் வருங்காலத்தை சீரழிக்கும் இனத்திற்கு அடிமை அல்லது போற்றிப் பிழைப்பது என்றாகி விட்டபின், அதன் பின்புறம் தழுவும் அல்லது நக்கும் நீர் யார்...?

ஜோதிஜி said...

கடந்த 65 ஆண்டுகளில் காசி என்ற நகரம் நரகம் போல் இருந்தது. இன்று அது வெளிநாட்டில் உள்ள நகரம் போல மாறியுள்ளது.