Wednesday, November 18, 2020

காலம் கவனிக்கும்.

கொரானாவிற்கு முன் இந்தச் சம்பவம் நடந்தது.

ஈரோட்டில் உள்ள பெரிய நிறுவனம் தங்கள் நிறுவனத்திலிருந்து (தரைவழியே) குழாய் அமைத்து தங்கள் ஆலையின் கழிவு நீரை ஆற்றில் தொடர்ந்து இரவு நேரத்தில் கலக்க வைத்துக் கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது.  பெரிய பத்திரிக்கைள் அவர்களின் மற்ற துணை நிறுவனங்கள் மூலம் வரும் விளம்பரங்கள் வராமல் போய்விடக்கூடும் என்று கண்டும் காணாமல் இருந்தனர்.  அங்கே இருந்த சிறிய பத்திரிக்கை இதனை வெளிச்சத்திற்குக் கொண்ட வந்தது. 


ஆனால் அந்தப் பகுதியில் மட்டுமே பிரபல்யமாக இருந்தது. அவர்கள் இதனைச் செய்தியாக்குவதற்கு முன்பு பல முறை சம்பந்தப்பட்ட தமிழ்ப்பிள்ளை பார்வைக்குக் கொண்டு சென்றார்கள். பலன் பூஜ்யம்.   பிள்ளைவாள் சென்னையில் இருப்பதை விட வாரம் ஒரு முறை தவறாமல் சொந்த ஊருக்கு வந்து கணக்கு வழக்கு பார்த்து விட்டு பிறகே செல்வார்.  காரணம் புத்தம் புது கரன்சிகளை வீட்டில் வைத்துத் தான் வாங்கும் பழக்கம் இருந்த காரணத்தால் எதுவும் செயலாக்கத்திற்கு வரவில்லை. 

ஆனால் செய்தி வெளியே வந்தவுடன் குதியாட்டம் போட்டுக் காட்டுக் கத்தல் கத்தி அது குறித்த தகவல் வெளியே அரசல்புரசலாக வெளியே கொஞ்சம் வெளியே வந்தது.

அப்படியே அமுங்கிப் போனது.

இது பெரிய தொடர்கதையின் சிறிய அத்தியாயம். இது போலப் பல அத்தியாயங்கள் உண்டு. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் சலவையான காந்தித் தாத்தா மட்டுமே சிரித்தார். பேசினார். செயல்பட்டார். 

இப்படியொரு தமிழ்ப்பிள்ளை மக்கள் சேவையில் இருக்கின்றார் என்பதே அப்போது தான் பலருக்கும் தெரியவந்தது. சந்து முனைக்கு வந்துடும்மா போன்ற அக்கப்போர்கள் இல்லாமல் வாரம் தோறும் கணக்குப் பார்ப்பதிலேயே மக்கள் பணி கடந்து சென்று கொண்டிருந்தது.

இன்று அந்த மண்ணுக்குள் பெட்டியுடன் 

மண் கூடத் தொட வாய்ப்பில்லாமல் .........

மெதுவாக மண்ணுக்குள் ஊர்ந்து செல்லும் சாயத் தண்ணீர் நிச்சயம் நோயுடம்பை ஒரு நாள் தொடும்.

காலம் கவனிக்கும்.

(பின்குறிப்பு) சம்மந்தப்பட்டவரிடம் தேர்தல் செலவுக்காக கொடுத்து வைக்கப்பட்ட பல நூறு கோடிகளை கைப்பற்றிய பின்பே மரண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  மருமகன், மகன் மற்ற உறவினர்கள் போன்றவர்களை தனிப்பட்ட முறையில் கவனத்து கொடுத்து வைத்த பணத்தை கைப்பற்றி உள்ளனர் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றது.  

துரை என்ற மரணத்திற்கு மதிப்பில்லை.
கண் உள்ள மனிதனுக்கும் மதிப்பில்லை.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மன்னிக்கவும்...

சிறிது திருப்பூர் விட்டு வெளியே வாங்க... உங்களுக்கு எது சொன்னாலும் புரியாது... சொல்வதற்கும் எனக்கு தகுதியில்லை...

முடிந்தால் கண்ணோட்டம் எனும் அதிகாரத்திற்குள் உள்ளே போங்க...

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

பணம் எனும் மாயையை மட்டும் ஆய்வாக எடுத்துக் கொண்டால்...

தங்களின் பாதையை மாற்றிக் கொள்ளாதீர்கள்... ஒரு வகையில் உங்களுக்குத் தெரியாமலேயே (அது தான் எனக்கு கிடைத்த நடப்பியல் + கணக்கியல் ) எனக்கு உதவி செய்து கொண்டிருக்கிறீர்கள் அண்ணே...

நன்றி...

ஜோதிஜி said...

புரியவில்லை. தெளிவாக சொல்லித் தாருங்களேன் எளிய தமிழ்ப் பிள்ளைக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

இதை தான் சொன்னேன்...! ஹா... ஹா...

ஜோதிஜி said...

மகளும் மனைவியும் கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது. என்ன ரெக்கார்ட்டிங் இல்லையா என்று கலாய்க்கின்றார்கள். எதைப் பற்றி பேசுவது என்றே தெரியவில்லை. ஐடியா கொடுங்க

திண்டுக்கல் தனபாலன் said...

"என்னப்பா... கொஞ்ச நாள் உங்க மொபையிலிருந்து டிவிக்கு ஷேர் நடக்கல; யூ'டுயூப் போறதில்லையா...?"

"உனக்கு பதில் சொல்லவே முடியல; அங்கே மூணு பேரு...! என்ன செய்வார்...? தொழில் பார்க்க வேண்டாமா...?"

அண்ணே... (அரசியல் இல்லாமல்; அது முடியாது; இருந்தாலும் சற்றே) இதுவரை உளவியல் சார்ந்த அனைத்தும் (ஜோ பேச்சு மற்றும் காணொளி) அருமை என்று சொல்ல மாட்டேன்; ஏன் என்றால், அவ்வாறு சாதாரணமாக சொல்லி விட்டு செல்லவும் மாட்டேன்... ஆனால் அவை தொடர வேண்டும்... அதுவே உங்களின் அடையாளம்...! (எனது கருத்து)

ஈரேழு அரசியல் உலகத்தை ஆராய்வது ஒரு பகுதியாக இருக்கட்டுமே...!

(மகளின் உரையாடல் தவிர, மற்றவை : @_draft post & edit)

நன்றி...

ஜோதிஜி said...

புரிகின்றது. நன்றி.