Showing posts with label ஜோ பேச்சு. Show all posts
Showing posts with label ஜோ பேச்சு. Show all posts

Wednesday, January 13, 2021

மொழியும் எழுத்தும் அண்ணன் தங்கை பாசம்

தமிழ் மன்னர்கள் காலம் முதல் அச்சுப் புத்தகம் காலம் வரைக்கும் மொழியும் எழுத்து வடிவமும் எத்தனை விதமாக மாறியுள்ளது. இன்று டிஜிட்டல் வாசிப்பில் வந்து நிற்கிறது. தமிழ் என்றும் வளரும். மாற்றத்துடன் பயணிக்கும்.

Friday, December 04, 2020

ஆன்மீக அரசியல் கடந்து வந்த பாதை

ஆன்மீகம் என்பது புதிரானது தானா? புனிதம் என்று வரையறைக்கப்பட்ட கோட்பாடுகளை அவசியம் நாம் கடைபிடிக்கத்தான் வேண்டுமா?  எங்கிருந்து தொடங்கியது? எப்படி தொடங்கப்பட்டது?    

Friday, November 20, 2020

ஊர் காதல் | Native Love

SaturdaySeptember 09, 2017 அன்று ஊர் காதல் என்ற பதிவை எழுதினேன். நேற்று வரை இந்தப் பதிவை 80 000 பேர்களுக்கு மேலாகப் படித்து உள்ளனர். 

எப்படி இந்த அளவுக்கு இந்தப் பதிவு பலரின் பார்வைக்குச் சென்றது என்பது இன்று வரையிலும் ஆச்சரியமாகவே உள்ளது. நேற்று வாசித்துப் பார்த்த போது குறை ஒன்றும் தெரியவில்லை. ஊர் சார்ந்த புகைப்படங்களைக் கோர்த்து வேறொரு முறையில் யூ டியூப் ல் பதிவு செய்து உள்ளேன். 

நவீனத் தொழில் நுட்பத்தின் வாயிலாகத் திறக்குறளை ஆராய்ந்து வரும் திண்டுக்கல் ஸ்ரீலஸ்ரீ மகா சந்நிதானமும் மோடிஜியின் தென் மண்டல வெறுப்பாளர் சங்கத் தலைவருமான என் மனம் கவர்ந்த தனபாலன் மகான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சற்று நேரத்திற்கு முன்பு தகவல் வந்து சேர்ந்தது.

புத்திசாலிகளின் திறமைகள் தோற்பது இயல்பு. நல்லதும்கூட. 

ஆணவம் அழியும். அகங்காரம் குறையும். மாற்றம் உருவாகும். மனதில் தன்னம்பிக்கை மலரும். 

ஆனால் மகான் அவர்கள் ஒன்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். 

திருப்பூர் முழுக்க பண வெறியில் அலையும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருப்பதால் சிறிய இடம் கிடைத்தால் கூட அதில் நான்கு குச்சு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு விடலாமே என்று எண்ணத்தில் உள்ளவர்களால் எந்தப் பக்கமும் போய் அமர்ந்து பேச முடிவதில்லை. 

என் ஜட்டியைத் தவிரப் பெண்கள் நலக்கூட்டணியினர் அனைத்தையும் கைப்பற்றி விட்டனர்.

"ஆளை விட்டால் போதும்" என்ற ஞான மார்க்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற எளிய தமிழ்ப்பிள்ளைகள் படும் பாடு சொல்லி மாளாது. அதற்கே நான்கு யூ டியூப்களில் பேசி புலம்ப வேண்டியதாக உள்ளது என்பதனையும் தாங்கள் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.

இப்போது எனக்கென்று எந்தச் சொந்தமும் இல்லை.

என் தனிமையைக்கூட என்னால் அனுபவிக்க முடியாத அளவிற்கு வளர்ந்தவர்கள் வாயடிக்கின்றார்கள்.

வெகுண்டு எழுந்து பழக்கப்பட்டவன் இப்போது மிரண்டு போய் பதுங்கு குழிக்குள் இருந்து பேசிய காரணத்தால் இந்தக் குரல் இப்படி வந்து விட்டது தம்பி.

"என்ன செய்வீர்களோ? எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்பது பேரன் பேத்திகள் வேண்டும்" என்று சொன்ன போது மூவரும் சொன்ன பதில்.......

"நீங்கள் மற்றொரு திருமணம் செய்து அதன் மூலம் உங்கள் சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ளுங்கள்" என்கிறார்கள்.

நான் என்ன செய்யட்டும்?

Friday, November 06, 2020

அதிர்ஷடம் மனிதர்களை மாற்றும்


மனிதர்களுக்குப் பணம் தரும் நம்பிக்கை வேறு எவற்றுடனும் ஒப்பிடவே முடியாது. சேர்த்த சொத்துகள் புதிய அங்கீகாரத்தை அளிக்கிறது.  வாழ்க்கையை முழுமையாக மாற்றுகின்றது. அறிவில்லாதவர்கள், ஆரோக்கியமில்லாதவர்கள் எனப் பாரபட்சமின்றி இங்கே கவனம் பெறுகின்றார்கள். சமூகம் இவர்களை வெற்றி பெற்றவர்களாகக் கருதுகின்றார்கள். இவர்களின் ஒழுக்கம் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. பெருமைக்குரிய  போற்றக்கூடிய சரித்திர நிகழ்வாகக் கொண்டாடுகின்றார்கள். கொடூர மனம் கொண்டவர்கள் அடையும் அங்கீகாரம் என்பது நல்லவர்களின் வாழ்க்கையை வாழவே முடியாத அளவிற்கு மாற்றி விடுகின்றது.

 

Tuesday, November 03, 2020

தொழில் என்பது முதலைகள் வாழுமிடம்


திறமை, உழைப்பு, தன்னம்பிக்கை இவை மூன்றும் இருந்தால் உறுதியாகத் தொழில் உலகத்தில் மட்டுமல்ல எந்த இடத்திலும் நம்மால் வெல்ல முடியும் என்பது உண்மை. அதைப்போலவே ஒவ்வொரு சமயங்களிலும் மாறிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பங்கள், சூழல் இவற்றையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையோடு பொருத்திக் கொண்டு மாற முடியாதவர்கள் தேங்கி நின்று விடுகின்றார்கள்.  

மனிதர்களின் கதை 3 - தொழில் என்பது முதலைகள் வாழுமிடம் |023| Oct 3 2020



Friday, October 30, 2020

நம்பிக்கைத் துரோகம் நடத்தும் பாடமிது

இன்றைய காலகட்டத்தில் நம்பிக்கைத் துரோகம் நம் வாழ்வில் ஓர் அங்கமாகவே மாறியுள்ளது. தப்பித்துப் பிழைத்துக் கொள் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய தத்துவமாக உள்ளது. ஆனால் ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு என்பதனை நாம் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அது எப்போதும் போலவே அதன் வேலையை நடத்திக் கொண்டே தான் இருக்கின்றது.

நாம் தான் அதனைப் பொருட்படுத்திக் கொள்வதில்லை.


Wednesday, October 28, 2020

உயிரைப் பறித்த சொந்த வீட்டுக் கனவுகள்

தங்களுக்கென்று ஓர் சொந்த வீடு என்பது வெறும் கனவல்ல. அது நடுத்தரவர்க்கத்தின் லட்சியம், சமூக அங்கீகாரம். ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் மாட்டிக் கொண்டு அவஸ்த்தைப்படுபவர்கள் தான் அதிகம். அவஸ்த்தைப்பட்டு தடம் மாறியவரின் உண்மைக் கதையிது. மனைவியை இழந்து, தொழில் இழந்து, மொத்த வாழ்க்கையையும் இழந்த ஒரு மனிதனின் கதையிது.



 

Sunday, September 20, 2020

இணைய விளையாட்டு-ஒரு லட்சம் போச்சு - On line Games for childrens


தற்போது ஒரு மகன் மகள் இருக்கும் குடும்பத்தில் கட்டுப்பாடுகள் எதையும் பெற்றோர்களால் உருவாக்க முடியவில்லை. தொழில் நுட்ப உலகம் அம்மா, அம்மா, மகள், மகள் என்று அனைவரையும் தனித்தனியாகப் பிரித்து வைத்துள்ளது. வேறு வழியே இல்லை. பெற்றோர்கள் தான் புரிந்து செயல்பட வேண்டும். ஆன்லைன் ரம்மி போன்ற இணைய விளையாட்டுகள் நேரம், காலம், மனம் போன்ற அனைத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. வங்கியில் இருக்கும் பணத்தையும் குழந்தைகள் சூறையாடப்படும் அளவிற்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.  




Saturday, September 19, 2020

சத்து மாவு

ஆரோக்கியம் என்ற வார்த்தை இன்று சந்தையில் சக்கைப்போடு போடும் வணிக தந்திரம். கொரானா காலத்திற்குப் பின் "உங்கள் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்க" என்று அனைத்துப் பொருட்களிலும் விளம்பரம் வந்து கொண்டேயிருக்கிறது. உங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம். எளிய முறையில் உண்மையான ஆரோக்கியத்தை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெற சத்து மாவு செய்து தினமும் இரு வேளைகள் சாப்பிட்டுப் பாருங்கள். 

குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து உலர வைத்து அதன் பிறகு டப்பாவில் போட்டு வைத்து பயன்படுத்தவும்.


Monday, September 14, 2020

#NEET|#JO PECHU|#அப்பா அம்மாக்கள் திருந்துங்கள்|Sep 13|- 05





ஒவ்வொரு வீட்டிலும் அம்மா தான் முதல் ஆசிரியர். அப்பா தான் முதல் வழிகாட்டி. இவர்கள் தான் ஒரு மாணவன் மாணவியரின் முதல் இருபது ஆண்டு கால வாழ்க்கையில் சிந்தனை செயல் என்று அனைத்து விசயங்களிலும் இருக்கின்றார்கள்.

இவர்கள் இந்தக் கடமையிலிருந்து தவறும் போது பாதை மாறும் போது மகன் மகள் நிச்சயம் தோல்வி அடைகின்றார் என்பதனை விட மன ரீதியான மாறுதல் அடைகின்றார். அது அவர்களின் குடும்பத்தை மட்டுமல்ல எதிர்காலத்தில் சமூகத்தையும் பாதிக்கும் என்பதே உண்மை.

மனநலம் சரியில்லாதவர்கள் எனில் அவர்கள் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்று அர்த்தம் அல்ல. சமூகத்தில் போராடத் துணிவில்லாத அளவிற்குப் பொத்திப் பொத்தி வளர்த்து அவர்களைச் செயல்பட முடியாதவர்களாகவும் அப்பா அம்மாக்கள் மாற்றிவிடக் கூடாது.

இதில் கவனம் செலுத்தினால் போதும். தற்கொலை போன்ற எண்ணங்கள் வர வாய்ப்பே இல்லை.





Sunday, September 13, 2020

மோடி தான் காரணம்


திருப்பூரில் நான் நேரில் சந்தித்த, பழகிய, தொடர்பில் இருந்த மிக உன்னதமான மனிதர். கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர். உண்மை, நேர்மை, அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்.கடைசி வரைக்கும் தன்னால் முடிந்தவரைக்கும் மக்கள் பணியில் இருந்தவர்.

கொரானா தொடங்கிய மார்ச், ஏப்ரல் மாதங்களில் நான் நடைபயிற்சி சென்று வரும் பாதையில் குமார் நகரில் இருந்த காபி கடையில் காலையில் பார்ப்பேன். அப்பொழுதே அவரைச் சுற்றி சில நண்பர்கள் இருந்தனர். அன்றே அவரிடம் கேட்டேன். இந்த சமயங்களில் வீட்டில் இருக்கலாமே? என்று. சிரித்துக் கொண்டார்.

திருப்பூரில் நான் பார்த்த சிறப்பான மனிதர்களில் ஒருவர். கொரானா தொற்று நோய் காரணமாக நேற்று கோவையில் காலமானார்.

கண்ணீர் அஞ்சலி.


Saturday, September 12, 2020

ஜோ பேச்சு -கில்லாடி மாணவர்கள் -Sep 12 2020

நம்மைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதற்கும் மேலை நாகரிகம் எப்படியுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள்.