மனிதர்களுக்குப் பணம் தரும் நம்பிக்கை வேறு எவற்றுடனும் ஒப்பிடவே முடியாது. சேர்த்த சொத்துகள் புதிய அங்கீகாரத்தை அளிக்கிறது. வாழ்க்கையை முழுமையாக மாற்றுகின்றது. அறிவில்லாதவர்கள், ஆரோக்கியமில்லாதவர்கள் எனப் பாரபட்சமின்றி இங்கே கவனம் பெறுகின்றார்கள். சமூகம் இவர்களை வெற்றி பெற்றவர்களாகக் கருதுகின்றார்கள். இவர்களின் ஒழுக்கம் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. பெருமைக்குரிய போற்றக்கூடிய சரித்திர நிகழ்வாகக் கொண்டாடுகின்றார்கள். கொடூர மனம் கொண்டவர்கள் அடையும் அங்கீகாரம் என்பது நல்லவர்களின் வாழ்க்கையை வாழவே முடியாத அளவிற்கு மாற்றி விடுகின்றது.
6 comments:
அருமையான பொன்மொழிகள் இடையிடையே... ஆனால் திருக்குறள் திறமை இல்லையே என்ற ஏக்கம் எப்போதும்... இதற்கெல்லாம் அதில் தீர்வு உள்ளது... புரியா விட்டாலும் நன்றி அண்ணே...
உண்மை.
சுவாரசியமாய் இருந்தது. திருப்பூரில் எத்தனை தொழிலதிபர்கள், முதலாளிகள் இருக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் ஒருவர் போல் இன்னொருவர் இல்லை எனபது தெரிகிறது. ஒருவரின் வளர்ச்சிக்கு காரணம் உழைப்பா,திறமையா,அதிர்ஷ்டமா என்று கடைசிவரை கண்டறிய முடிவதே இல்லை. அறம் சார்ந்த விழுமியங்களை எண்ணிப்பார்க்கவோ பின்பற்றவோ யாருக்கும் நேரமில்லை. உலகம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது/
அருமை. இவற்றை நீங்க சொன்ன மாதிரி தெரிந்து கொள்ள 25 வருடங்கள் ஆகியுள்ளது முரளி.
மக்கள் இலக்கியப் பேச்சாக கருதி விடுவார்கள் என்று பயந்து அதனை தவிர்க்கின்றேன்.
ஆவணப்படுத்துவது நம் கடமை
Post a Comment