திருப்பூரில் நான் நேரில் சந்தித்த, பழகிய, தொடர்பில் இருந்த மிக உன்னதமான மனிதர். கட்சி கொள்கைகளுக்கு அப்பாற்பட்டவர். உண்மை, நேர்மை, அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்.கடைசி வரைக்கும் தன்னால் முடிந்தவரைக்கும் மக்கள் பணியில் இருந்தவர்.
கொரானா தொடங்கிய மார்ச், ஏப்ரல் மாதங்களில் நான் நடைபயிற்சி சென்று வரும் பாதையில் குமார் நகரில் இருந்த காபி கடையில் காலையில் பார்ப்பேன். அப்பொழுதே அவரைச் சுற்றி சில நண்பர்கள் இருந்தனர். அன்றே அவரிடம் கேட்டேன். இந்த சமயங்களில் வீட்டில் இருக்கலாமே? என்று. சிரித்துக் கொண்டார்.
திருப்பூரில் நான் பார்த்த சிறப்பான மனிதர்களில் ஒருவர். கொரானா தொற்று நோய் காரணமாக நேற்று கோவையில் காலமானார்.
கண்ணீர் அஞ்சலி.
கொரானா தொற்று நோய் காலத்தில், தமிழக அரசு உருவாக்கியிருந்த 160 நாட்கள் ஊரடங்கு சமயத்தில் தமிழக மக்களின் மனோபாவம் எப்படியிருந்தது? இப்போது வரைக்கும் கொரானா என்று எத்தனை பேர்களால் உச்சரிக்க முடிகின்றது? அதனை ஏன் நம்ப மறுக்கின்றார்கள்?
8 comments:
எங்கும் விழிப்புணர்வு நீங்கள் சொல்வது போலவே...
அண்ணே சற்றே 'ஒலி' அதிகம் வேண்டும்...
ஆழ்ந்த இரங்கல்கள்...
இன்று நீட் குறித்த இறப்புக்குப் பின்னால் உள்ள விசயங்கள் பற்றி பேசியுள்ளேன். மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
நான் மதித்த மனிதர். டாலர் நகரம் விழாவில் கலந்து கொண்டவர்.
மறைந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காணொளி பிறகு தான் பார்க்க வேண்டும்.
நீங்கள் எந்த நேரத்தில் ஜகத்ரட்சகன் சொத்து விவரங்களை வெளியிட்டீர்களோ அத்தனை சொத்துக்களையும் ED முடக்கி விட்டது.
இல்லை. 90 கோடி அருகே வருகின்றது. அது அவருக்கு டிப்ஸ் காசு. பெரிய மலையில் ஒரு கை மண் எடுத்துள்ளார்கள். தேர்தல் முடியும் வரைக்கும் எடுக்க மாட்டார்கள். பதிலுக்கு நீ திமுக வுக்கு நிதி உதவி செய்யக்கூடாது என்று பேரம் பேசுவார்கள்.
ஆழ்ந்த இரங்கல்கள்
Post a Comment