Tuesday, September 22, 2020

மருத்துவ கனவுக்கு பின்னால் உள்ள சோகங்கள்

இந்தப் பதிவு ஃபேஸ்புக் முழுக்க எங்கெங்கு காணினும் ஒவ்வொருவரும் பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். மருத்துவர் ஒருவர் எழுதியுள்ளார். இதனை அப்படியே வாட்ஸ்அப் வாயிலாக நண்பர் மகளுக்கு அனுப்பி வைத்தேன். அவர் சில வருடங்களுக்கு முன்பிருந்தே நான் படித்தால் மருத்துவருக்குத்தான் படிப்பேன் என்று ஒற்றைக் காலில் நின்று கொண்டிருக்கிறார். அம்மா பயந்து சாகின்றார். அப்பா வந்தால் மலை போனால் டேஷ் என்று இருக்கின்றார்.

உங்கள் மகளை முழுமையாகப் படித்து முடித்து விட்டு என்னை அழைக்கச் சொல்லுங்கள் என்று சொல்லியிருந்தேன். மதுரையிலிருந்து மகள் அழைத்தார்.

"என்னம்மா உன் சிந்தனையில் ஏதும் மாற்றம் உண்டா"? என்றேன்.

"இல்லை" என்றார்.

"குழப்பம் வந்துள்ளதா?" என்று கேட்டேன்.

"ஒரு குழப்பமும் இல்லை" என்றார்

"ஏன்?" என்று மீண்டும் கேட்ட போது அவர் சொன்ன பதில் இது.

இப்போது ப்ளஸ் ஒன் உள்ளே நுழைக்கின்றார்.

"எனக்கு ஒரு வாழ்க்கை தான். இந்த வாழ்க்கையை நான் தான் வாழவேண்டும். அதுவும் எனக்குப் பிடித்த மாதிரி தான் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். என்னைச் சுற்றி ஆட்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். நான் யாருக்காவது உதவி செய்யும் சூழலில் இருக்கவே வாழவே விரும்புகிறேன். நான் ஐடி துறையில் நுழைந்து கணினி முன்னால் நாள் முழுக்க முறைத்துக் கொண்டு லட்சக்கணக்கில் சம்பாதிப்பதை விட, கூண்டுக் கிளி போல மற்ற ஏதோவொரு துறையில் நுழைந்து எனக்குப் பிடிக்காததைப் பிடித்தது போல மாற்றிக் கொண்டு இம்சையுடன் வாழ்வதை விட முயன்று தான் பார்ப்போம். ஒரு முறை தான் முயல்வேன். இல்லாவிட்டால் அடுத்த துறையை அப்போது தேர்ந்தெடுப்பேன். இதற்கு மீண்டும் முயல மாட்டேன். லட்சக்கணக்கான பேர்கள் மோதும் இடத்தில் என் திறமை எனக்கான தகுதி என்ன என்று எனக்குத் தெரிந்தால் தான் நான் கல்லூரியில் சேரும் போது நான் யார் என்பதும் 12 வருடங்கள் நான் என்ன தான் கற்று வந்தேன் என்பதும் எனக்கும் புரியும் அங்கிள்".

"டோண்ட் ஒர்ரி அங்கிள். அவ்வளவு சீக்கிரம் சாக மாட்டேன். நான் இங்கே செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. எங்க அம்மாக்கிட்ட நீங்களே பேசுங்கள்" என்று அலைபேசியை அப்படியே தள்ளிவிட்டார்.

"ஒத்த புள்ள" என்று அம்மா விசும்புகின்றார்.

அப்பா "மீண்டும் ஹனிமூன் போவோம்" என்று மனைவியைக் கலாய்க்கின்றார்.

மகாகவி பாரதி என் நினைவுக்கு வந்தார்.

====

"உன் கழுத்துல அந்த stethoscope மாட்டி ஒரு வாட்டி பாத்துரனும். பாத்துட்டேனா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்" இந்த மாறி குழந்தைகளிடம் பேசும் பெற்றோர்களுக்கு இந்த பதிவு. நீங்கள் நினைப்பதை விட MBBS படிப்பு மிக மிக கடினம். அது மட்டுமில்லாமல் இப்போது ஏகப்பட்ட டாக்டர்கள் உள்ளார்கள் தமிழகத்தில். இனிமே புதுசா டாக்டராகி survive பண்றது ரொம்ப கஷ்டம்.

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் 100இற்கு 98,99 வாங்கிய மாணவர்கள் MBBS முதலாம் ஆண்டில் JUST PASS ஆகி தேர்ச்சி பெற முடியாமல் அவ்வளவு பேர் FAIL ஆவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ? அப்படி FAIL ஆனவர்கள் , ARREARS உடன் 2ND YEAR செல்ல முடியாது . முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் 2ND YEAR போக முடியும். நீங்கள் நினைப்பது போல MBBS படிப்பு 5 ஆண்டுகள் கிடையாது.

1ST YEAR -1 ஆண்டு

2ND YEAR -1½ ஆண்டுகள்

3RD YEAR -1 ஆண்டு

FINAL YEAR -1 ஆண்டு

HOUSE SURGEON -1 ஆண்டு ,

FAIL ஆகாமல் தேர்ச்சி பெற்றாலே ஆக மொத்தம் ஐந்தே முக்கால் ஆண்டுகள் ஆகி விடும். நடுவுல FAIL ஆனா, 6 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என நீண்டு கொண்டே போகும். ஒரு MBBS மாணவன் 3RD YEAR படிக்கும் போது, அவனோடு 12படித்த நண்பன் TIER 1 கல்லூரிகளில் B.E , B. TECH இல் சேர்ந்தவன் "மச்சி நா கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆயிட்டேன். மாசம் 50,000 சம்பளம் " என்று போன் பண்ணி சொல்லி depression ஆக்கி விடுவான். " நாம தப்பா MBBS எடுத்துட்டோமோனோ "நினைக்க வைத்து விடுவான்.

ஒரு வழியா MBBS முடிச்சு degree வாங்கியாச்சு. அடுத்து என்ன செய்வது ?

பெரிய மருத்துவமனைகளில் duty doctor ஆக பணியில் சேரலாம். மாசம் 25,000-30,000 கிடைக்கும்.

கிளினிக் ஆரமிச்சா "அவன் வெறும் MBBS டாக்டர், அவன்கிட்ட போவாத. MD டாக்டர் கிட்ட போ" னு ஒரு கேசும் வராது.

சரி. MD படிக்கணும்னா, அதுக்கும் NEET நுழைவுத்தேர்வு இருக்கு. அதுக்கு 2-3 வருஷம் PREPARE பண்ணனும். அதுக்கப்புறம் MD சேர்ந்து 3 வருஷம் படிக்கணும். இதெல்லாம் முடிக்க 35 வயதாகிடும். ( அதற்குள் முடிப்பவர்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் rare)

அதுக்குள்ள அந்த கேம்பஸ் இன்டர்வியூ ல செலக்ட் ஆன என்ஜினீயரிங் நண்பன், 10 வருஷம் நல்லா சம்பாரிச்சு, EMI ல கார் வாங்கிருப்பான். HOME LOAN போட்டு வீடு கட்டிருப்பான். இல்லனா USA/AUSTRALIA ல செட்டில் ஆயிருப்பான். சரி பரவால்ல, லேட் ஆனா என்ன ? அதான் MD முடிச்சாச்சே இனிமே நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்கும் னு நீங்க நினைக்கலாம். அங்க தான் ட்விஸ்ட்.

1.அரசு பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யலாம். அப்படி அரசு பணியில் சேர்ந்த மருத்துவர்கள் , ஊதியம் போதவில்லை என்று போராட்டம் நடத்தும்போது, " அதான் கிளினிக் ல நல்லா சம்பாரிக்கிராங்களே. இவனுங்க பாக்குற வேலைக்கு இந்த சமபளம் போதாதா ?" என்று மருத்துவர்களை திட்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறவாதீர்கள்

2.கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம். ஆனால் அங்கே நாம் 12ஆவது முடித்தவுடன் குடுக்கும் பேட்டியில் செய்வதாக சொல்லிய சேவையெல்லாம் செய்ய முடியாது. HOSPITAL POLICIES மற்றும் PROTOCOL களுக்கு கட்டுப்பட்டு தான் வேலை செய்ய முடியும். சுயமாக ஏதும் செய்ய முடியாது.

3.இன்றைய கால கட்டத்தில் சொந்தமா இடம் வாங்கி, கிளினிக் கட்டுவது ரொம்ப சிரமம். அப்படியே புதுசா கட்டினாலும், நோயாளிகள் வர மாட்டார்கள். ஒன்னு அரசு மருத்துவமனைக்கு போவார்கள். இல்லைனா, கார்ப்பரேட் மருத்துவமனை, இல்லைனா அதே ஊரில் ரொம்ப வருஷமா வைத்தியம் பார்க்கும் சீனியர் டாக்டரிடம் தான் போவார்கள். கிளினிக்கில் கூட்டம் வர எப்படியும் 5-10 வருடங்கள் ஆகி விடும் . கிளினிக்கில் வெற்றி பெற, புத்தக அறிவு மட்டும் போதாது, நோயாளிகளின் நாடி துடிப்பை பார்த்தால் மட்டும் போதாது. அவர்களின் மன ஓட்டத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படியே எல்லாம் செஞ்சாலும், கடைசியா அவர்கள் ஒரு வார்த்தை வைத்திருப்பார்கள். அதான் "கைராசி" அது இல்லைனு முத்திரை குத்திட்டாங்கன்னா அவ்ளோ தான். கிளினிக் ல ஒக்காந்து ஈ தான் ஓட்டனும்.

அவ்வளவு ஏன் ? சாதாரண மக்களுக்கு கொரோனா இறப்பு சதவீதம் 2% . டாக்டர்களின் இறப்பு சதவீதம் 15%.  எனவே பெற்றோர்களே, நீங்கள் நினைப்பது போல மருத்துவ படிப்பும், மருத்துவர்கள் வாழ்வும் அவ்வளவு சுலபம் அல்ல. உங்கள் ஆசைகளை உங்கள் பிள்ளைகள் மீது தினிக்காதீர்கள். " என் மீது நீங்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேணா என்று தெரியவில்லை " என்று NEET தேர்வுக்கு முதல் நாள் கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவச்செல்வங்கள் இறப்பது மிகவும் வேதனையான விஷயம்.

வீட்டிலேயே உட்கார்ந்து 2 ஆண்டுகளாக NEET தேர்வுக்கு படிப்பதெல்லாம் மிகப்பெரிய மன அழுத்தத்தை அளிக்க கூடியவை. MBBS கிடைக்கலைனா, Genetic engineering, Robotics, Microbiology, Embryology, Agri போன்ற படிப்புகளில் சேர்த்து விடுங்கள். அவை தான் எதிரகாலத்தில் மிகவும் most wanted படிப்புகளாக இருக்கப்போகிறது.  பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா என்று தோளில் கோட் போட்டு பாடும் முரளி, வானத்தை போல பிரபுதேவா போன்ற டாக்டர் கேரக்டர்களை மனதிலிருந்து எடுத்து விடுங்கள். ஆதித்ய வர்மா/அர்ஜுன் ரெட்டிய நினைச்சுகோங்க. அதான் இன்றைய நிலை.

Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS, MD


நுழைவுத்தேர்வு ஃபோபியா |Entrance exam phobia


15 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வு
நன்றி ஐயா

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதிஜி! மருத்துவர் ஆகியே தீரவேண்டும் என்று கனவு கண்டால் மட்டும் போதுமா?மனதில் உறுதியோடு முயற்சிக்கவும் வேண்டாமா? தவிர, மாற்று என்ன என்பதைத் தேர்ந்தெடுக்கும் பக்குவத்தையும் வளர்த்துக் வேண்டாமா? எல்லோருமே மருத்துவர்களாகியே தீர வேண்டுமா என்ன?!

மருத்துவப்படிப்பில் சேரமுடியவில்லையே என்று தற்கொலை செய்துகொல்பவர்களைவிட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் பயந்து தற்கொலை செய்துகொள்கிற மாணவர்களின் எண்ணிக்கை நீண்ட காலமாகவே அதிகம். NEET தேர்வை அரசியலாக்கித் தம்பட்டம் அடிக்கிற கும்பலுக்கு ஆதரவைக்கிற மாதிரியே இப்படி நீட்டி முழக்க வேண்டுமா என்ன? கடைசிப்பாராவை படிக்கவில்லை என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வரியையும் நிறுத்தி நிதானமாகப் படித்துவிட்டே இந்தப்பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

மஹாகவி பாரதியை வேறு இதில் வம்புக்கிழுப்பானேன்?

கிருஷ்ண மூர்த்தி S said...

நிறைய எழுத்துப்பிழைகள்! எழுதிப்பழகி மாதங்களாகிவிட்டதல்லவா? ஆனால் பதிவை வாசித்தபிறகு மனதில் எழுந்த கருத்தில் பிழையில்லை. NEET என்று மட்டுமில்லை, பொதுவாக எல்லாவிதமான தேர்வுகளுக்குமே இங்கே எழும் கூக்குரல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் எதனால் எதிர்ப்பு என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால், வருகிற கோபமே முந்தைய பின்னூட்டத்தின் சாராம்சம். உங்களுடைய பதிவின் உள்ளடக்கத்துக்கு சம்பந்தமில்லாததுபோலத் தோன்றலாம்....! .

ஜோதிஜி said...

கீழே உள்ளது மருத்துவர் எழுதி பரவலாக வந்த தகவல் இது. மேலே உள்ளது நண்பர் மகளிடம் உரையாடியது. நீட் குறித்து எனக்கும் விடை தெரியாத கேள்விகள் நிறைய உண்டு. எழுத்துப் பிழைகள் சிலவற்றை இங்கே எடுத்துப் போடுங்க. தெரிந்து கொள்ள விருப்பம்.

Aravind said...

நல்ல விழிப்புணர்வு ஊட்டிய பதிவு ஐய்யா.
உயிரோடு சம்மந்தப்பட்ட மறுத்துவத் துறையில் நிச்சயம் அதிக மன அழுத்தம் வந்தே தீரும்.
பணம் சம்பாத்தியத்திற்கு அப்பால் ஒவ்வொரு துறையிலும் பல சவால்கள் உள்ளன.
தங்கள் விருப்பத்திற்கேற்ப துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், அச்சவால்களை தைரியமாக எதிர்கொள்ளும் வாய்ப்பு அதிகம் அவர்கள் தேர்வு என்பதால்.
இல்லையேல் அடுத்தவர் மேல் பழிபோட்டு தம் முழு வாழ்வையும் நறகமாக்குதல் அல்லது தற்கொலையே மிஞ்சும்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பதிவு ஜோதிஜி. பலருக்கு இந்த விஷயங்கள் புரிவதில்லை.சவால்கள் நிறைந்தது மருத்துவ உலகம் - மருத்துவராக அவர்கள் படும் கஷ்டம், தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் சோதனைகள் என சிலவற்றை நெருக்கத்தில் பார்த்ததுண்டு - சில நெருங்கிய நண்பர்களின் குழந்தைகள் மருத்துவ படிப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் சமீபத்தில் தான் எம்.டி. முடித்தார். அந்தக் குழந்தைகளிடம் பேசும்போது அவர்கள் சந்திக்கும் சவால்களைப் பற்றிச் சொல்வதுண்டு.

ஜோதிஜி said...

அவசியம் எழுதுங்க வெங்கட். உங்கள் பதிவுகளை அலைபேசி வாயிலாக படிப்பதால் விமர்சனம் எழுத முடிவதில்லை. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஜோதிஜி said...

https://youtu.be/qgvLb6W7Ufc நன்றி அரவிந்தன். இது குறித்து பேசியுள்ளேன்.

ஜோதிஜி said...

நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் சரியே... எனது சொந்த அண்ணன் படிக்க ஆசை... அப்போது 15,000க்கு வழியில்லை... இன்றும் மருத்துவம் தான் செய்கிறார்... ஆனால் வேறு மாதிரி - சேவை...

இந்த சோகங்கள் மட்டுமா இருக்கிறது... மிகப்பெரிய "வர்ண பேதம்" அல்லவா உள்ளது...?

ஃபேஸ்புக் முழுக்க ஆரஞ்சு ரத்தம், பச்சை ரத்தம் வெளியே வருவது ஒருபுறம்... கட்டுப் போட்டவர்கள் மருத்துவர்கள் தானா...?

ஜோதிஜி said...

முட்டி மோதி அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி நான் முன்னேறிய ஆக வேண்டும் என்றால் நிச்சயம் முடியும் என்றே நம்புகிறேன். இல்லாதபட்சத்தில் நம் வாரிசுகளை தயார் செய்வோம்.

மெய்ப்பொருள் said...

சரியான பதிவு .
இப்போது கற்றுக் கொள்வது என்பது குறைந்து , ஒரு டிகிரி
வாங்கணும் என்பதுதான் இருக்கிறது .
சொன்னால் வேடிக்கையாய் இருக்கும்
முதலில் MBBS படித்த ஒருவர்க்கு வைத்தியம் பண்ண தெரியாது .
இதுதான் உண்மை . ஐந்தரை வருடம் அவர்கள் படித்தது
வெறும் தியரி - பிராக்டிகல் கிடையாது .
மேலே படித்தால்தான் வைத்தியம் பார்க்க சொல்லித்
தருவார்கள் . அதற்கு அட்மிஷன் கிடைக்காது .

இரண்டாவது டாக்டர் பிள்ளைதான் டாக்டர் ஆக முடியும் .

காசு , பணம் , துட்டு , மணி ,மணி
இன்று வைத்தியர் ஆக ஒன்று பணம் வேண்டும் .
அப்புறம் அப்பாவோ ,அம்மாவோ அடலீஸ்ட் மாமனார்
டாக்டர் ஆக இருக்க வேண்டும் .இது எழுதப்படாத விதிஜோதிஜி said...

உண்மை

மாறன் said...

NEET தேர்வை அனுமதித்து விட்டு,மருத்துவம் படிக்க முடியாமல் தவிக்கும் கனவுகளின் சமாளிப்பு.

இதன் விளைவை நீங்கள் 10 வருடங்களில்
புரிந்து கொள்வீர்கள்.

ஜோதிஜி said...

ஏன் பத்து வருடம். இப்போதே கல்விக் கொள்ளையர்களின் ஆட்டத்தால் இடைநிற்றல் அதிகமாகத்தானே இருக்கின்றது.