Friday, September 25, 2020

கில்லாடி எடப்பாடி

படைப்புக் கடவுள் தற்போது மிகவும் குழம்பிப் போய் இருப்பதாக நம் சங்கத்துக்குச் செய்தி வந்துள்ளது. அதுவும் தமிழக ஆட்சியாளர்கள் அவர்களுக்குத் துணையாக இருக்கும் அதிகாரிகளுக்குத் தமிழர்கள் அனைவருக்கும் படைத்தது போலத்தானே சராசரி மூளை அதற்குள் நியூரான்கள் வைத்து அனுப்பினோம். இவர்கள் எப்படி கொரானா வைரஸ் நாட்டுக்கு நாடு, நாளுக்கு நாள் மியூட்டேசன் ஆகி வளர்வது போல எப்படி தங்கள் மூளைத்திறனை வளர்த்து நமக்கே சவால் விடுகின்றார்கள் என்று குழம்பிப் போய் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் உறுதியாகத் தெரிவித்த செய்தி பின்வருமாறு இருந்தது.

காட்சி ஒன்று

"ஏழரை லட்சம் பொறியில் கல்லூரி (அரியர்க்குப் பணம் கட்டிய அனைத்து மாணவர்களும்) தங்கள் ஆல் பாஸ்".

காட்சி இரண்டு

"வாய்ப்பே இல்லை. அவர்கள் போங்காட்டம் ஆடுகின்றார்கள்". (சூப்பர் சூரப்பா)

காட்சி மூன்று

"பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்".

காட்சி நான்கு

"முடிவில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை" (விவசாயி)

காட்சி ஐந்து.

"படவா பிச்சுப்பிடுவேன். ஒழுங்கு மரியாதையாக பரீட்சை நடத்து".

காட்சி ஆறு

"மாணவர்களே உங்கள் வீட்டில் இருங்கள். இணைய தளத்தில் கேள்வித் தாள் இருக்கும். தரவிறக்கம் செய்து கொள்ளவும். வீட்டில் இருந்தபடியே அதற்குப் பதில் எழுதுங்கள். வாட்ஸ்அப் வாயிலாக அனுப்புங்கள். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் உங்கள் பேராசிரியர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். இணையத் தொடர்பு இல்லாத தமிழ்ப் பிள்ளைகள் கவலைப்படாதீர்கள். பேராசிரியர்கள் உதவுவார்கள்". சுபம்.

காட்சி ஏழு

டெல்லி கிடுகிடுத்துப் போய் உள்ளது. அடுத்து அமித்ஷா அதற்கடுத்து யோகி என்று எத்தனை பேர்கள் வந்தாலும் தமிழ்நாடு நமக்கு எட்டாக்கனி தான். இவங்கள ஹேண்டில் செய்ய ஐம்பது அண்ணாமலை வந்தாலும் போதாது. பேசாமல் நாம் மேற்கு வங்கம், பீகார், கேரளா முடித்து அப்புறம் இவர்கள் கிட்ட வருவோம் என்று முடிவெடுத்துள்ளார்கள் என்று ஜண்டா வெறுத்துப் போய் சொன்னதாகத் தகவல் வந்துள்ளது.

பின்குறிப்பு

ஒத்த பொம்பளை பிள்ளையை பெற்று வச்சுருக்குற தகப்பன் பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு மகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டே வெறுத்துப் போய் என்னை அழைத்தார். "என்ன சார் அக்கிரமம். இவர்களையும் இப்படி வீட்டில் இருந்தே எழுதச் சொன்னா என்ன சார்?" என்று கேட்டார்.

ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன்.

"உங்கள் பெண்ணுக்கு ஓட்டு போடும் வயது வந்துடுச்சா"?

அவர் புரியாமல் "எம்பொண்ணு ஏஜ்அட்டன் ஆயிடுச்சு சார் " என்கிறார்.😁*********

Murali Dharan 

நமது பாடத்திட்டத்தில் எப்போதுமே பெரிய அளவில் குறைகள் இல்லை. மதிப்பீட்டு முறைகள்தான் ஒவ்வொரு ஆண்டும் எளிமையாக்கிக்கொண்டே போனார்கள். சராசரி மாணவன் 80% வாங்கமுடியும். சிந்திக்கும் திறன் முழுவதுமாகத் தவிர்க்கப்பட்டது.பாடம் சொல்லிக் கொடுத்ததை விட மதிப்பீட்டு முறைகளை சொல்லித் தந்தனர். எதை எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும் எந்தப் பாடத்தை விட்டுவிடலாம் என்றே கற்பிக்கப் பட்டது. ஒரு கட்டத்தில் தனியார் பள்ளிகளின் இத்தந்திரங்களை அரசு பள்ளிகளும் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. நான் கவனித்தவரை கற்பித்தல் நிகழ்வை காண்பதே அரிதாக இருந்தது. எந்த நேரமும் தேர்வு எழுதிக் கொண்டிருப்பார்கள். அல்லது இடைவெளிவிட்டு உட்கார்ந்து படிக்க வைத்துக்கொண்டு இருப்பார்கள். Sin90°=1 என்பதை மனப்பாடம் செய்ய வைப்பார்கள் அது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். அது எப்படி என்பதை சில ஆசிரியர்களேகூட சிந்தித்திருக்க மாட்டார்கள்.

*****

எட்டுக் கோடி தமிழர்களில் இன்னமும் பாதிக்குப் பாதி பேர்கள் திறந்தவெளி கழிப்பிடங்களைத்தான் பயன்படுத்துகின்றார்கள். ஆரோக்கியம் சார்ந்த விசயங்களில் அவரவர் பக்தி மற்றும் மூட நம்பிக்கைகள் தான் இன்னமும் இங்கே நிலவுகின்றது. நடுத்தர வாழ்க்கை வரைக்கும் பொருளாதார நிலையில் உயர்ந்துள்ள தமிழினம் இன்னமும் பொது சுகாதார விசயங்களில் எண்ணம் அளவில் உயராமல் தான் இருக்கின்றார்கள்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான உதாரணங்களுடன் நல்ல உரை அண்ணே... பக்தியை விடக் கழிவுகளில் சிங்கமாக இரு என்று வைத்திருக்கலாமோ...?

ஏனென்றால் உள்நாட்டிலேயே அந்நிய, அடிமைப் படுத்துகிற, வெளியில் சொல்ல முடியாத, இனி வெளியே செல்ல முடியாதபடி காணும் காட்சிகள் உட்பட அனைத்தும் அசிங்கமாக இருக்கிறது...! முழுவதும் மாற சில வருடங்களே ஆகும்...! சீரழிவின் உச்சமாக வரலாறும் மாற்றப்படுகிறது...

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

காணொளி வழி சொன்ன விஷயங்கள் நன்று. மாற்றங்கள் நிறைய வேண்டும் - மனித மனங்களிலும்!

உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து வரும் உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.