Monday, December 23, 2013

கணக்குபுள்ள மமோ காரியவாதி நமோ

நினைவுகள் 

சிறு வயதில் விரும்பிய இனிப்பு, உடைகள், மிதிவண்டி, சாகசங்கள் பதின்மவயதில் விரும்பிய ஆசைகள், அலங்காரங்கள் எல்லாமே திருமணம் என்ற முற்றுப்புள்ளியோடு நின்றுவிடுகின்றது. திருமணத்திற்குப் பிறகு தேடியலையும் ஒவ்வொரு விசயங்களும், விரும்பியவைகள் அனைத்தும் குறிப்பிட்ட நிலையில் நமக்கு அலுப்பைத் தந்து விடுகின்றது. ஒவ்வொன்றும் மாறி மாறி நம்மை விட்டு விலகிச் சென்று எது ஆசை? எது வாழ்க்கை? என்று தேடல்களாக மாற்றம் பெறுகின்றது.

நாம் தேடிய அனைத்தும் நினைவுகளாகவே நின்று விடுகின்றது. கொண்டாட்ட மனோநிலை மாறி கொண்டாடப்படுவர்களை வேடிக்கைப் பார்ப்பவர்களாக மாறிவிடுகின்றோம். 

இந்த வருடத்தின் தொடக்கம் முதல் இன்று வரையிலும் ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்தால் மனதின் வலிமை என்ன? என்பதை உணர்ந்து கொள்ள முடிந்துள்ளது. சுக துக்கங்களை மனதின் உள்ளே அனுமதிக்காமல் வெளியே வைத்து வேடிக்கை பார்க்க முடிந்துள்ளது. சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தம் இல்லாது வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்களை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நம்மை நாமே உணர்வது எப்படி? என்பதை இந்த வருட அனுபவங்கள் உணர்த்தியுள்ளது.

உணவின் ருசியைத் தவிர மற்ற அனைத்தும் நகர்ந்து போய்விட்டது. அடுத்த வருடம் இந்த ருசியின் தன்மை மாறிவிடக்கூடும். 

பரிசோதனை எலிகள் 

ஒரு வகையில் பார்க்கப் போனால் நாம் அனைவரும் யாரோ ஒருவரின் பரிசோதனைக்குரிய எலிகள் தான். ஒவ்வொரு சமயமும் நம்மை வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பரிசோதனைகள் செய்து கொண்டே தான் இருக்கின்றார்கள். பல சமயம் பலரின் விருப்பத்திற்குரியவர்களாக மாற முடிவதில்லை. நாம் எதிர்பார்க்கும் நபர்களும் நாம் விரும்பும் அளவிற்கு மாறிவிடுவதில்லை. வருடந்தோறும் வாழும் சூழ்நிலையின் காரணமாக நம்முடைய சிந்தனைகளும் மாறும் என்பது தற்போது மாறி விட்டது. மாதம் தோறும் மாறிக் கொண்டேயிருக்கின்றோம். 

முக்கியக் காரணம் வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பம். இல்லாத ஆசைகளை உருவாக்குகின்றது. இருக்கின்ற ஆசைகளை மேலும் வளர்க்கின்றது. சென்ற மாதம் நன்றாகத்தானே நம்மிடம் பேசினாரே? அதற்குள் ஏன் ஒதுங்கிச் செல்கின்றார் என்று யோசித்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். பணம் மற்றும் பணம் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே இங்கே உறவை வளர்க்கின்றது பலசமயம் முறிய காரணமாக இருக்கின்றது.

மன்மோகன் சிங் 

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் தொழில் நுட்ப வசதிகளுக்கு முக்கியக் காரணம் 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவான ஆட்சி மாற்றமும் பிரதமராக இருந்த நரசிம்மராவின் தீர்க்கதசரினமுமே ஆகும். இதனால் நல்லதும் கெட்டதும் அதிக அளவு நடந்துள்ளது. மொத்தத்தில் நாம் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய பண்டமாக மாற்றியுள்ளோம். ஆனால் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளே வந்த பிறகே நடுத்தரவர்க்கத்தின் முகச்சாயல் மாறத் தொடங்கியது.

படித்தவர்களுக்குப் பலதரப்பட்ட வாய்ப்புகள் உருவாகத்தொடங்கியது. நரசிம்மராவின் மொழிப்புலமை, அறிவுக்கூர்வை, பழுத்த அரசியல் அனுபவம் பற்றி இந்திய அரசியலை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.  ஆட்சிக்கு வந்த நரசிம்மராவுக்கு அப்போது அவர் சொல்வதைச் செய்ய ஒரு கணக்குப்பிள்ளை தேவைப்பட்டது. அப்போது கிடைத்தவர் தான் இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். நிதி அமைச்சராக மாறினார்.

இந்திய அரசியலில் ஒரு வினோதம் உண்டு. அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களாக இருக்க வேண்டும்.அதிகாரிகளை வேலை வாங்கத் தெரிந்திருக்க வேண்டும். மாறிக் கொண்டேயிருக்கும் அரசியல் சூழலையும் சமாளித்து பதவியையும் தக்க வைத்துக் கொண்டாக வேண்டும். 

கம்பி மேல் நடக்கும் கதை தான். 

பம்பாயில் நடந்த பயங்கரக் கலவரத்தையும், பாபர் மசூதி இடிந்ததையும் வேடிக்கை பார்த்துக் கொண்டே தனது பிரதமர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டவர் நரசிம்மராவ். ஊர்கூடி உதிரிக்கட்சிகள் ஒவ்வொன்றும் தேர் இழுத்து இவரை பிரதமராக உட்கார வைத்தது அதிர்ஷடம் என்றால் இவரோ கடைசி வரைக்கும் சமாளித்து முழுமையாக ஆட்சி காலத்தையும் ருசித்தவர் என்கிற வகையில் ஆச்சரியப்படுத்திய அரசியல்வாதி.

ஆனால் இவரின் கடைசிக் காலம் கொடுமையானது. மகன்கள் உருவாக்கிய கேவலங்கள் ஒரு பக்கம். ஆந்திரப் பிரதேச பாடப்புத்தகங்களில் நரசிம்மராவ் குறித்து வந்த பாடங்களை நீக்கும் அளவிற்கு அவமானப்பட்டு இறந்தார். இப்போதுள்ள காங்கிரஸ் சூழ்நிலையில் "கணக்குபுள்ள" மன்மோகன் சிங்கின் கடைசிக் கால வாழ்க்கையும் இதே போலத்தான் மாறப்போகின்றது. 

நரேந்திரமோடி

பிரதமராக நரேந்திரமோடி வரக்கூடாது என்பவர்கள் அவர் மதவாதி என்றும், கோத்ரா கலவரத்தையும் உதாரணம் காட்டுகின்றார்கள். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், ஆட்சி செய்த மாநிலங்களில் நடந்த மதவாத கலவரங்களின் பட்டியல் மிக நீளமானது.

இந்த வருடத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர் நரேந்திர மோடி. காரணம் அலட்டிக் கொள்ளாமல் தான் நினைத்தவற்றைப் படிப்படியாக அடைந்தவர். அவர் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதியை அடைவதற்கு அவரின் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்குள்ளே இருந்த குழிபறித்தல்களை உடைத்து வந்தவர். 

பா.ஜ.க. கட்சியைத் தொடக்கம் முதல் தங்கள் கைக்குள் வைத்திருந்த லாபி மக்களைப் படிப்படியாக ஆட்டத்தில் இருந்து ஒதுக்கி வைத்து மேலே வந்தவர். நிதின் கட்காரியை ஓரே அடியாக அடித்துச் செல்லாக்காசாக மாற்றிய தந்திரசாலி.

அதன் பிறகே ஒவ்வொரு மாறுதல்களும் விரைவாக நடந்தேறத் தொடங்கியது. 

சமூக வலைதளங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தந்திரங்கள், மீடியாக்களின் பார்வையைத் தன் மேல் எப்போதும் இருக்கும்படி உருவாக்கிக் கொண்டது என்று ஒவ்வொரு படியாக ஏறிவந்துள்ளார். இவர் பிரதமராக வந்தால் ஆர்.எஸ்.எஸ் ன் கட்டுப்பாட்டில் தான் செயல்பட முடியும் என்கிறார்கள். 

நிச்சயம் அப்படியே இருந்தாலும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அத்தனை லாபிகளையும் தன் வட்டத்திற்குள் கொண்டு வந்து விடுவார் என்றே நினைக்கின்றேன். சோனியாவின் 'அதிர்ஷ்ட வாழ்க்கைக்கு'ச் சரியான போட்டி இவரின் அதிர்ஷ்டமும். 

எப்படி என்று கேட்காதீர்கள்? 

சில வருடங்களில் இது நடந்தால் அப்போது இந்தப் பதிவில் வந்து மீண்டும் மறுமொழி வாயிலாக வந்து சொல்லுங்களேன்.  அதுவரையிலும் என்னையும் "அடிப்படை ஹிந்துவ மதவாதி" என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டு செல்பவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

விஜயகாந்த்.

தமிழக அரசியல் சரியான இடத்திற்கு வந்து விடுவார், வளர்ந்து விடுவார் என்று சொல்லப்பட்ட வைகோ உணர்ச்சி பூர்வமான அணுகுமுறைகள் மற்றும் தெளிவற்ற கொள்கையினால் காணாமல் போனார். தொடக்கம் முதலே மருத்துவர் ராமதாஸ் என்றால் சாதீ என்ற கோரப்பல் துருத்திக் கொண்டு தெரிய குறுகிய வட்டத்திற்குள்ளே நிற்க வேண்டியதாக இருந்தது.  வன்னியர் சாதியில் இருப்பவர்களின் மொத்த ஆதரவும் அவருக்கு கிடைத்து இருந்தாலே அவர் பெரிய சக்தியாக வளர்ந்திருக்க முடியும்.

ஆனால் வன்னியர்கள் கூட தேர்தல் சமயத்தில் திமுக, அதிமுக என்ற ஏதோ ஒரு வட்டத்திற்குள் அடைக்கலமாகி விடுவதால் மருத்துவர் ராமதாஸ் இன்னமும் ஏதோவொரு கட்சியைச் சார்ந்தே இயங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார். நடக்கப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றும் என்று வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றார். வைகோ வும் பா.ஜ.க ஜீப்பில் நம்மை ஏற்றிக் கொள்வார்கள் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றார்.

திருமாவளவன், கிருஷ்ணசாமி மற்றும் ஓடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலரும் ஒன்று சேர்ந்து ஒரு வலிமையான சக்தியாக ஒற்றுமையாக இருந்து தங்கள் இனத்திற்காக ஒன்று சேர்ந்து, கூட்டணி சக்தியாக மாறியிருந்தால் தமிழ்நாட்டில் பல ஆச்சரியங்களை நிகழ்த்தியிருக்க முடியும்.  3013 ஆனாலும் இதற்கு வாய்ப்பில்லை என்பதே எதார்த்தம்.

ஆனால் ஏற்கனவே விரிவாக சொன்னபடி இவர்களை விட விஜயகாந்திற்கு தமிழக அரசியலில் நிறைய வாய்ப்புகள் இருந்தது.  திமுக, அதிமுக விற்கு மாற்றாக ஒரு மாற்று அரசியல் உருவாகி விடும் என்றே பலரும் நம்பியிருந்தனர். ஆனால் இன்று கதாநாயகன் வில்லன் வரிசையில் தேவைப்படும் கோமாளி போலவே இவரை இன்று ஊடகங்கள் சித்தரிப்பதும், இவரும் தன்னுடைய வெளிப்படையான பேச்சால் செயல்பாடுகளால் அதையே உண்மையாக்கிக் கொண்டிருப்பதும் தான் நடந்து கொண்டு இருக்கின்றது.

"மாற்று அரசியல் பார்வை" என்பதற்கும் "மாற்றுக்கட்சி" என்பதற்கும் உண்டான வித்தியாசங்களை அர்விந்த் கெஜரிவால் பெற்ற வெற்றிக்குப் பின்னால் அவர் கட்சியினர் ஆற்றிய களப்பணிகளைப் பார்த்து இவர் இனியாவது கற்றுக் கொள்வாரேயானால் பிழைத்துக் கொள்வார் என்றே நினைக்கின்றேன். விகா வின் குடும்ப அரசியல் முக குடும்பம் கொடுத்த பரிசுகளைத் தான் கொடுக்கப் போகின்றது என்றே நினைக்கின்றேன்.

பழைய குப்பைகள் கழிந்து புதிய கொள்கைகள் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி அத்தியாயத்தை தொடங்கி விடாதா? என்ற எண்ணத்தில் இருக்கும் எனக்கு இந்த வருடம் திமுக, அதிமுக கட்சியில் உள்ள இணைய நண்பர்கள் என்னை "கொலவெறி பட்டியலில்" சேர்த்து இருக்கின்றார்கள் என்பதே யான் பெற்ற பலன். நான் எழுதிய, பகிர்ந்த செய்திகளுக்கு, கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு என் தைரியத்தை ஆச்சரியத்துடன் கவனித்து வந்து அழைத்து பாராட்டிய கடிதம் வாயிலாக தெரிவித்த நட்புகளுக்கு என் நன்றியை இங்கே எழுதி வைத்து விடுகின்றேன்.

படங்கள்

கூகுள் கூட்டலில் தொகுத்து வெளியிடப்பட்ட 2013 கதைகள் சொல்லும் படங்களை சொடுக்க ரசிக்க  ரசிக்க 2

(அடுத்த வாரம் வெளியிடப்படும் இந்த மின் நூலை இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து எல்லாவித நவீன தொழில் நுட்ப வசதிகளின் மூலமும் நீங்கள் வாசிக்க வாய்ப்புள்ளது.) http://freetamilebooks.com/

படித்ததும் யோசித்ததும்

தன்னைப் பற்றிய விமர்சனங்களையும் பாராட்டு மொழிகளையும் எல்லோரிடமும் சேகரித்து வைத்துக் கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அவற்றை ஒரு மூட்டையில் சேகரித்து வைத்திருந்தாள்.   

வளர வளர அதை மறந்தும் போனாள்.  வெற்றிமிக்க இளம் பெண்ணாய் வளர்ந்து சிறந்த பிறகு அந்த மூட்டை அவள் கண்களில் பட்டது.   எழுத்துக்கள் மங்கியிருந்தன. காகிதம் இற்றுப்போயிருந்தது.  

ஆனால்,  அவளுக்கு இப்போது தன்னைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது. அடுத்தவர்களின் அபிப்பிராயங்கள் மங்கியிருந்தன.  

நம்மை உணர்வதே நல்லது.


தொடர்புடைய பதிவுகள்
36 comments:

அபயாஅருணா said...

Objective analysis! Good!

ஸ்ரீராம். said...

தத்துவமாக ஆரம்பித்து நல்ல அலசல் செய்திருக்கிறீர்கள். நரசிம்மாராவ், விஜயகாந்த் பற்றிய உங்கள் பார்வைகள் கவர்ந்தன. நரேந்திரமோடி- என்ன ஆகிறது என்று பார்ப்போம்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையா சொன்னீங்க.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நம்மை உணர்வதே நல்லது.

Avargal Unmaigal said...

நல்ல அலசல் ... எனது பார்வையில் மோடி இன்னொரு சந்திரபாபு நாயுடுவாகத்தான் தெரிகிறார் ஜோதிஜி .

Avargal Unmaigal said...

///அவர் பிரதமர் வேட்பாளர் என்ற தகுதியை அடைவதற்கு அவரின் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்குள்ளே இருந்த குழிபறித்தல்களை உடைத்து வந்தவர். ///

குழிபறித்தல்களை உடைத்து வந்தவரல்ல குழிபறித்து மற்றவர்களை அதில் தள்ளிவிட்டுவந்தவர் என்பதுதான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்..

என்னாட இந்த மதுரைத்தமிழன் நம்ம ஹிரோவை குறை சொல்லுகிறேன் என தவறாக நினைக்க வேண்டாம். யாரு எப்படியோ வலையுலகத்தில் நீங்கள் எனது ஹிரோ என்பது என்றும்மாறாது

Avargal Unmaigal said...

எனக்கும் மோடியை ரொம்ப பிடிக்கும் அவர் மட்டும் பிரதம வேட்பாளராக இல்லாமல் இருந்து இருந்தால் எனது தளத்திற்கு வருகை மிக குறைவாகவே இருக்கும் எனது தளத்திற்கு வருகையை அள்ளி தந்தவர் அவர். வாரத்திற்கு ஒரு முறையாவது அவரை கலாய்த்து பதிவிடாவிட்டால் எனக்கு தூக்கம் வராதுங்க ஹீ.ஹீ

Avargal Unmaigal said...

ஒரு நல்ல பிரதமர் ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு ( இந்தியமக்களுக்கு ) நல்லது இல்லையென்றால் எங்களை மாதிரி உள்ள ஆட்களுக்கு நல்லது (கலாய்த்து பதிவு போட )

Paramasivam said...

அருமையான அலசல் கட்டுரை. நாமும் ஏன் மோதிக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாது?
நல்ல உறுதியான திறமையான பிரதமர் தான் இப்போது தேவை.
N.Paramasivam

Unknown said...

Good.....

phantom363 said...

you are very correct. most of communal riots happened in congress led states. the worst being the pogrom against the sikhs in 1985 for which not one of the leaders was punished. good balanced analysis. wising the best for our country. and more so for our dear tamil nadu.

sivakumarcoimbatore said...

அருமையான அலசல் sir...thanks..

ப.கந்தசாமி said...

நல்ல கருத்துகள்.

நம்பள்கி said...

[[உள்ளே உள்ள சிறைச்சாலை குறித்தும் நம்மூர் மாதிரி காசிருந்தால் வீட்டுச்சாப்பாடு வரவழைக்க முடியுமா போன்ற பலன் உள்ள பயமுள்ள தகவல்களையும் எழுதலாமே? ]]

நீங்கள் கேட்ட இந்தக் கேள்விக்கு இப்போ பதில் கொடுத்து உள்ளேன்; சென்று பார்க்கவும்!

கரந்தை ஜெயக்குமார் said...

//பணம் மற்றும் பணம் சார்ந்த சிந்தனைகள் மட்டுமே இங்கே உறவை வளர்க்கின்றது//
எண்ணிப் பார்த்தால் சரியென்றே தோன்றுகிறது ஐயா.

ஜோதிஜி said...

நன்றி அபயா அருணா.

ஜோதிஜி said...

நன்றி ஸ்ரீராம்.

ஜோதிஜி said...

நன்றி நண்பா.

ஜோதிஜி said...

ஒரு அரசியல்வாதி நண்பர் நீங்க சொன்ன இந்த கருத்தைத்தான் என்னிடம் ஆறு மாதத்திற்கு முன்பு வார்த்தைகள் மாறாமல் சொல்லியுள்ளார்.

எம்.ஞானசேகரன் said...

விஜயகாந்த் இவ்வளவு சீக்கிரம் புஸ்வாணமாகிப்போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரை அடக்கி வைத்தது அம்மா (ஆயா)வின் சாமர்த்தியம். ஆயாவின் காலத்திற்குப் பிறகு அ.தி.மு.க. வை கைப்பற்றாலம் என்று திட்டம் போட்டிருக்கிறார். அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். மருத்துவர் ஐயாவுக்கு அவர் ஜாதி மக்களிலேயே ஆதரவு இல்லை என்பதுதான் நிதர்சனம். ''மோடி'' மஸ்தான் வித்தையை பார்க்க எனக்கும் ஆசைதான். மக்கள் இந்த முறை காங்கிரசுக்கு மாற்றாகத்தன் இவரை தேர்வு செய்வார்களே தவிர அலை எல்லாம் ஒன்றும் இருக்காது. கூட்டணிக் கட்சிகளின் தயவைப் பெறும் நேரத்தில் இவர்களின் ஜம்பமெல்லாம் சரிந்துபோய்விடும் என்பதை பார்க்கத்தான் போகிறோம்.

ஜோதிஜி said...

இல்லை நண்பா. அது குறித்து நிறைய எழுத முடியும். ஆனால் அவை எல்லாமே நண்பர்களுடன் உரையாடிப் பெற்றவை. அவற்றை எழுதினால் என் தனிப்பட்ட விருப்பங்களை எழுதுவது போலவே அமைந்து விடும். அதனால் அதனை எழுதாமல் தவிர்த்தேன்.

அப்புறம் நீங்க கொடுத்த அங்கீகாரத்தை பார்த்து பயந்து போயுள்ளேன். நன்றி.

ஜோதிஜி said...

போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கி எடுத்துட்டீங்களே? கவனித்துக் கொண்டு தான் வருகின்றேன்.

ஜோதிஜி said...

நல்ல பிரதமர் என்பதற்கு சில வரைமுறைகள்.

முதலில் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

மக்களை களத்தில் சந்திப்பவராக இருக்க வேண்டும்.

குடும்ப நலனை தாண்டி யோசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பமே இல்லாவிட்டால் இன்னமும் ரொம்ப நல்லது.

அரசியல் அனுபவம் இருக்க வேண்டும். ஏற்கனவே செய்த சாதனைகள் மக்களுக்கு கொஞ்சமாவது தெரிந்து இருக்கும் அளவிற்கு அவரின் முந்தைய செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

சர்வதேச பார்வை இருக்க வேண்டும். கூடவே இந்தியா குறித்து அதன் பன்முக கலாச்சாரம் குறித்து அதன் அடிப்படைத்தன்மை தெரிந்தவராக இருக்க வேண்டும்.

முக்கியமாக வெளிநாட்டு கல்வி, வெளிநாட்டு கலாச்சாரம், வெள்ளைத்தோல் மயக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும். குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்களால் மட்டுமே இந்தியாவை வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவராக இருக்க வேண்டும். முற்றிலும் வெளிநாட்டு நிறுவனங்களை தவிர்க்க முடியாது என்ற சம கால எதார்த்தத்தை புரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

தான் கொண்டுள்ள கொள்கைகளில் நம்பிக்கையும், அதனை செயல்படுத்திக் காட்டுவதில் தைரியம் மிக்கவராகவும் இருக்க வேண்டும்.


இப்போது சொல்லுங்க?

ஜோதிஜி said...

நிச்சயம் மாறுதல் வரும் என்றே நம்புகின்றேன் பரமசிவம். வராவிட்டால் கஷ்டம் தான். ராகுலை நினைத்தால் அவரை நம்பி நாட்டை ஒப்படைத்தால்?

ஜோதிஜி said...

வருகைக்கு நன்றி ஹேமா ரவி.

ஜோதிஜி said...

நேரு முதல் இந்திரா, நரசிம்மராவ், ராஜீவ் வரைக்கும் உண்டான இந்தியா முழுக்க நடந்த கலவரங்களை தனியாக பட்டிலிட்டு பதிவுகளில் எழுதினால் நிச்சயம் விக்கிபீடியாவிற்கு உச்சாந்து துணையாக கொடுக்கும் அளவிற்கு இருக்கும். படிக்கும் மக்கள் பயந்து ஓடிவிடுவார்கள்.

ஜோதிஜி said...

மின் அஞ்சலுடன் இங்கேயும் உங்களை அறிமுகம் செய்து கொண்டமைக்கு நன்றி சிவகுமார்.

ஜோதிஜி said...

நன்றிங்க அய்யா.

ஜோதிஜி said...

என் அடுத்த விருப்பத்தையும் அங்கேயே எழுதியுள்ளேன்.

ஜோதிஜி said...

உண்மையும் அதே தானே. நன்றிங்க.

ஜோதிஜி said...

முக்கியமான அரசியல்வாதிகள் நீங்க சொன்ன கடைசி வரிகளைத்தான் உதாரணமாக காட்டிச் சொல்கின்றார்கள். பார்ப்போம்.

ஆயா, ஆத்தா, தாயம்மா என்ற பன்முகத்தன்மை மற்றம் இது சார்ந்த பல பேர்கள் இங்கே பலருக்கும் பீதியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதும் உண்மையே.

ezhil said...

சுய அலசல் குறித்த தங்கள் பார்வை அருமை....

ஏதோ ஒன்று எல்லோரும் நம்மை ஆட்டு மந்தையாக்கி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மை. இருப்பவர்களில் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளதே காரணம்...பார்ப்போம் ஆம்ஆத்மி எப்படிச் செயல்படுகிறார்கள் என்று...பின்னே எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலல்லவா நாம்... நாமும் பழகிக்கொண்டோம் இலஞ்சம் பெற்று நம் ஓட்டை விற்க....

உஷா அன்பரசு said...

நல்ல பிரதமருக்கு நீங்க சொல்லியிருக்கிற வரைமுறையை நானும் வரவேற்கிறேன்...

Unknown said...

Fantastic.....Especially about Narashimha Rao - to think about present day politics and comparing it to the days of Babri Masjid demolition, Mumbai bombings and PM handling and continuing in the post was something impossible, which he had made it possible.

Coming to Captain, he lacks clarity, which is very important for a politician(doesnt require to be an orator, ex-Moopanar). He should learn about "kaluvura meen la naluvura meen" from MK.

Modi's regime could become golden period for business magnets. Will it be beneficial to common man? I m not very clear about how much has he done for SMEs, which is very important for a country like India. Modi has a very big task towards him to plan for next generation as countries like Poland, Belgium(etc - east european countries) are competing with us in terms of cheap skilled workforce. Also countries like Thailand, Philippines etc are competing in various ways. Lets hope he would focus on sustainable development.

ஜோதிஜி said...

நன்றி எழில்

ஜோதிஜி said...

நன்றி. தற்போது இந்தியாவிற்கு ஒரு சிறந்த நிர்வாகி தேவை. அவர் களத்தைப் பற்றி தெரிந்தவராக இருக்க வேண்டும் என்பதே நமோ ஆதரவுக்கான என் காரணங்கள் உள்ளது. வியாபாரிகளைப் போல நீங்க சொன்னது போல சாதாரண குடிமகனுக்கு அவர் செய்யாவிட்டால் அந்த எண்ணம் இல்லாமல் ஆட்சி செய்தால் அடுத்து பத்தாண்டுகளுக்கு மீண்டும் காங்கிரஸ்க்கே இந்த நாட்டை அடிமையாக வைத்து விட வேண்டியது தான். பார்க்கலாம்.