Tuesday, March 26, 2013

500


வணக்கம் நண்பர்களே

இது என்னுடைய 500 வது பதிவு.  

எனக்கு இந்த வலையுலகம் வேர்ட்ப்ரஸ் மூலம் அறிமுகம் ஆன நாள் மே மாதம் 2009

2002 முதல் என் ஆய்த்த ஆடை ஏற்றுமதி துறை தொழில் வாழ்க்கையில் இணையம் என்பது தினந்தோறும் 12 மணி நேரத்திற்கும் மேலாக என் வாழ்க்கையில் ஒன்றாக கலந்து இருந்த போதிலும்  2009 ஆம் ஆண்டு தான் தமிழ் இணையம் என்பது எனக்கு அறிமுகம் ஆனது. 

என்னுடைய முதல் பதிவு வேர்ட்ப்ரஸ் ல் ஜுலை 3 2009 அன்று எழுதி வெளியிட்டேன். நண்பர் நாகாவின் வேண்டுகோளுக்கினங்க அவர் உருவாக்கித் தந்த இந்த ப்ளாக்கர் என்ற தளத்தின் மூலம் செப்டம்பர் 26 2009 முதல் எழுதி வருகின்றேன்.

இரண்டு தளத்தின் வாயிலாகவும் இதுவரையிலும்  500 பதிவுகளை எழுதியுள்ளேன். 

பதிவின் நீளம், அகலம், உயரம், எழுத்துப்பிழைகள், வாக்கியப் பிழைகள், புரியாத தன்மை, விவரிக்கும் பாங்கு என்று தட்டுத்தடுமாறி ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு இன்று இந்த நிலை வரைக்கும் உயர்ந்து வந்துள்ளேன். திருப்பூரில் எனக்கு முன்னால் எழுதியவர்கள் அநேகம் பேர்கள். பலருக்கும் தொழில் வாழ்க்கையின் காரணமாக படிப்படியாக தங்களை சுருக்கிக் கொண்டார்கள்.

இன்று வரையிலும் எனக்குத் தெரிந்தவகையில் சோர்வடையாமல் என்னைப் பாதிக்கும் ஒவ்வொன்றையும் பதிவுகளாக மாற்றிக் கொண்டே வருகின்றேன். 

என்னுடைய எழுத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்கள் எனக்கு நெருக்கமான உறவுகளாகவும் மாறியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இடத்திலும் யாரோ ஒருவர் எனக்கு நெருக்கமான சொந்தமாக மாறியுள்ளனர். அனைத்து கட்சிகளிலும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நெருக்கம் பாராட்டுபவர்கள் அநேகம் பேர்கள். ஊடகத் துறையிலும் அதிகம் பேர்கள் அறிமுகமாகி உள்ளனர். பலதரப்பட்ட இயக்கம் சார்ந்த கொள்கைகள் கொண்டவர்களுடன் நட்பு  கொள்ளவும் முடிந்துள்ளது. பிரபல எழுத்தாளர்கள், பதிப்பக மக்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் என்று பல தரப்பட்ட நிலையில் பலரையும் தொடர்பில் வைத்திருக்க முடிந்துள்ளது. 

ஒவ்வொரு அனுபவமும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பாடங்களை கற்றுத் தந்து கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு நிலையிலும் எண்ணம் போல வாழ்வு என்பதனையும், தீதும் நன்றும் பிறர் தர வரா என்ற முதுமொழியையும் மனதில் வைத்துக் கொண்டே நகர்ந்து கொண்டு இருக்கின்றேன்.

நான் கடந்து வந்த இந்த நான்கு வருடத்தில் என் தளத்தை தவிர்த்து வினவு தளம், சிறகு தளம், தமிழ்ப் பேப்பர் போன்ற தளங்களில் என் கட்டுரைகள் வந்துள்ளது. வெகுஜன பத்திரிக்கையான புதிய தலைமுறையில் எனது சாய்ப்பட்டறை குறித்து மூடு என்ற தலைப்பில் அட்டைப்பட கட்டுரையாக (கவர் ஸ்டோரி) வந்துள்ளது.  ஆழம் பத்திரிக்கையில் இதுவரையிலும் மூன்று கட்டுரைகள் வெளியாகி உள்ளது.  அதிக அளவு 4 தமிழ் மீடியா குழுமத்தில் எனது கட்டுரைகள் வெளியாகி உள்ளது.


வலைச்சரத்தில் இதுவரையிலும் இரண்டு முறை சீனா அவர்கள் என்னை வலைச்சரம் ஆசிரியர் பணியில் அமர்த்தி வைத்து அழகு பார்த்ததோடு முழுமையான சுதந்திரத்தையும் அளித்து ஊக்கப்படுத்தினார். சிலருக்கும் ஊக்கத்தையும் பலருக்கு தாக்கத்தையும் இதன் மூலம் ஏற்படுத்த முடிந்தது.

நான் சார்ந்திருக்கும் ஏற்றுமதி தொழில் வாழ்க்கைச் சூழலில் இந்த எழுத்து வாழ்க்கையில் முனைப்பாக செயல்பட வாய்ப்பில்லாத காரணத்தால் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுத வாய்ப்பில்லாது நகர்ந்து கொண்டேயிருக்கின்றேன்.

ஐந்தாம் ஆண்டில் பயணிக்கப் போகும் என் எழுத்து வாழ்க்கையில் ஜனவரி மாதம் 27ந் தேதி 2013 அன்று என்னுடைய முதல் நூலான டாலர் நகரத்தை ஸ்விஸ் ல் இருந்து செயல்படும் 4 தமிழ்மீடியா இணைய தள குழுமம் கொண்டு வந்துள்ளனர். எனக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளது. நூல் விற்பனையும் திருப்தியை தந்துள்ளது.

நாங்கள் நிர்ணயித்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். 

தேவியர் இல்லம். திருப்பூர் என்ற இந்த வலைதளத்தை முகநூல், கூகுள்ப்ளஸ், ட்விட்டர், ஆர்க்குட், மின் அஞ்சல் வழியாக, கூகுள் ரீடர் ( இந்த சேவையை விரைவில் நிறுத்தப் போகின்றார்கள்), ஹாட் மெயில், யாகூ மெயில், இந்த தளத்தில் இணைத்துக் கொண்டவர்கள்  போன்றவற்றின் வாயிலாக தொடர்பர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய  4000 க்கும் மேற்பட்டவர்கள். எனது கருத்துக்களை ஏதோவொரு வழியில் உலகம் முழுக்க சென்றடைய இது வாய்ப்பாக உள்ளது.

தற்போது கூகுள் தளத்தின் வாயிலாக நேரிடையாக தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டில் உயர்ந்துள்ளது. ஒவ்வொரு சமயத்திலும் கூகுள் தேடுதல் சேவையின் வாயிலாக குறி சொற்கள் மூலம் தேடிக் கொண்டுருக்கும் பலருக்கும் எனது தளம் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றது. ஒரு வட்டத்திற்குள் இல்லாத எனது சிந்தனைகள் பல விதங்களில் என் எழுத்துலக பயணத்திற்கு உரமாக உள்ளது. 

எனது தள தொழில் நுட்பம் மற்றும் வடிவமைப்பில் நாகாவைத் தொடர்ந்து சுடுதண்ணி பல உதவிகளை செய்துள்ளார்.  ஆனால் இன்று வரையிலும் எனது தளம், ஞானாலயா தளத்தின் வடிவமைப்பு, திருப்பூர் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கான பணி மற்றும் எனக்குத் தேவைப்படும் பிற வடிவமைப்பு சார்ந்த அத்தனை வேலைகளையும் எனக்கு செய்து கொடுத்துக் கொண்டு இருப்பவர் அவர்கள் உண்மைகள் என்ற வலைதளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் உள்ள நண்பர். அசாத்தியமான உழைப்பாளி. எந்நாளும் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.

இன்று வரையிலும் பழைய பதிவுகளை படித்து விட்டு கடிதம் எழுதுபவர்களும், என்னை சந்திக்கும் தருணத்தில் மகிழ்ச்சியுடன் அதனைப் பற்றி பகிர்ந்து கொண்டவர்களும் அதிகம்.  

இந்த தளத்தை நாற்பது வயதை தொட இருப்பவர்களும், கடந்தவர்களும் என்று தொடங்கி 70 வயது வரைக்கும் இருக்கும் பலரின் விருப்பமான தளமாக உள்ளது.  நான் எழுதத் தொடங்கிய பிறகே வாழ்க்கையை அதிக அளவு ரசிக்கவும், அன்றாட வாழ்க்கையை அனுபவித்து வாழவும் கற்றுள்ளேன். 

வலைதளத்தில் முதன் முதலாக தொடர் போல பலவற்றை எழுதத் தொடங்கியதும், ஈழம் மற்றும் திருப்பூர் குறித்தும் அதிகம் எழுதியுள்ளேன். ஐந்தாம் ஆண்டில் பயணிக்கப் போகும் இந்த வலையுலக பயணத்தில் எழுத்துப் பயணத்தோடு சில உருப்படியான களப்பணிகளையும் செய்ய முடிந்துள்ளது. 

புதுக்கோட்டையில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆய்வு நூலகமான ஞானாலயாவை தமிழ் இணையத்தில் அதிக அளவுக்கு கொண்டு சேர்த்துள்ளேன். திருப்பூரில் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் தாய்த்தமிழ்ப் பள்ளி குறித்து அதன் நிதி ஆதாரங்களைக் கண்டு நண்பர்களிடத்தில் பகிர்ந்து சிறிய அளவு நிதி ஆதாரங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன். இந்த பள்ளியின் வளர்ச்சியில் தேவைப்படும் நிதிக்காக பல முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றேன்.

நான் பிழைக்க வந்த ஊரான திருப்பூரைப் பற்றி டாலர் நகரம் என்ற புத்தகத்தின் வாயிலாக கொண்டு வந்ததைப் போல நான் வாழ்ந்த காரைக்குடியை, இராமநாதபுரம் மாவட்டத்தை (தற்போது சிவகங்கை மாவட்டம்) இதே போல ஒரு ஆவணமாக உருவாக்க வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன். இது தொடர்பாக வலைபதிவில் எழுதி இருந்தாலும் புத்தக வடிவில் முழுமை பெற், ஏராளமான வரலாற்று தகவல்களை திரட்ட வேண்டும் என்கிற நிலையில் நிச்சயம் அதற்கான நேரம் வரும் என்று நம்பிக்கையோடு இருக்கின்றேன்.  

வலைதளத்தில் மின் நூல் தொகுப்புக்கென்று தனியாக ஒரு தளம் உருவாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துள்ளேன்.  அது தமிழ் நூல்கள் சார்ந்த, நூலகம் சார்ந்த, மின் நூல் தொகுப்பின் மொத்த இடமாக இருக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்து ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன். எதிர்வரும் காலத்தில் மின் நூல்கள் மூலம் வாசிக்க விரும்புவர்களுக்கு அது பயன் உள்ளதாக இருக்கக்கூடும். சமய சந்தர்ப்பங்கள் உருவாகும் போது இதை நிச்சயம் முயற்சிப்பேன்.

வலைதளத்தில் எழுதத் தொடங்கிய போது குழப்பமான சிந்தனைகளை அதிகம் பெற்றிருந்த போது தேவியர்கள் பள்ளிக்கு செல்லத் தொடங்கியிருந்தார்கள். இன்று நான்காம் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்புகக்கு செல்ல தேவியர்கள் கல்வியில் முதல் தரத்திலும், தமிழ் வாசிப்பு எழுத்துப் பயிற்சியில் முதன்மை தரத்திலும் இருக்கின்றார்கள். மனைவியின் ஆதரவு எப்போதும் போல இயல்பாக இருப்பதால் இந்த வாழ்க்கையை ரசனைக்குரியதாக தினந்தோறும் உருவாக்கிக் கொள்ள முடிகின்றது.

எனது தளத்தை தமிழ்மணம், தமிழ்வெளி, இன்ட்லி திரட்டிகள் அதிக அளவு கொண்டு சேர்த்துள்ளார்கள். இதுவரையிலும் வந்துள்ள 

விமர்சனங்களின் எண்ணிக்கை 


Published comments 7228 

பார்வையிட்ட பக்கங்களின் எண்ணிக்கை


Page views all time history  4 56,582


(வேர்ட் ப்ரஸ் தளம் நீங்கலாக)


ஒவ்வொரு பிரபல்ய எழுத்தாளர்களும் வாசகர் கடிதம் என்று ஒன்றை வெளியிட்டு அதற்கு அவர்களும் பதில் அளித்துருப்பதை நீங்கள் படித்து இருக்கக்கூடும். அது குறித்த முரண்பட்ட தகவல்கள் நிறைய உண்டு.  எனக்கும் வலைபதிவில் விமர்சனம் கொடுக்காமல் தனிப்பட்ட முறையில் மின் அஞ்சல் வழியே தங்கள் அன்பை, ஆச்சரியத்தை வெளிப்படுத்தியவர்கள் அநேகம் பேர்கள். அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது உண்டு. 

ஆனால் இந்த 500 வது பதிவில் கடந்த மார்ச் 23 ந் தேதி அன்று வந்த ஒரு நண்பரின் கடிதத்தை பெயர் தவிர்த்து அவர் எழுதிய மொழியிலேயே இங்கு வெளியிடுகின்றேன். இதுவும் ஒரு வகையில் அங்கீகாரம் தான். 

மொழி பெயர்ப்பு செய்யாமல் வெளியிட காரணம் சில பதிவுகளுக்கு முன்பு நண்பர் ஒருவர் மூச்சுக்கு மூச்சு தமிழ் என்று ஏன் புலம்புகின்றீர் என்றார். அவருக்கு இதை டெடிகேட் செய்கின்றேன்.  போதுமா நண்பா?

ஆதரவளித்த ஆதரவளிக்கும் அத்தனை வாசிப்பாளர்களுக்கும் என் நன்றிகளை இங்கே எழுதி வைக்கின்றேன்.

Dear Jothi Ganesan,

Well and wish the same. You may be surprised to receive this e-mail after a long interval.

Due to my personal health problems I discontinued posting my writings in the web and stayed away from the web for some time.

Very recently I had the chance to read some of your article on Eelam Tamil issue.  Those articles forced me to write this e-mail.

Dear Jothigy your investigative journalism have exposed many influential people to the web readers.   You have touched very sensitive nerves of the higher ups. Exposing their design  and their manipulations to amesh wealth and fame have angered many of them. Due to this I fear for your safety and well being. Anything can happen to anyone in India.

Please show some restraint in exposing those elements. I have personal bitter experience in this type of matter in SriLanka. That is why I am requesting you to be cautious. Your personal safety is very important to your family. Particularly to your wife and children.

I hope that you can understand my fear as a co writer in the web. I have preserved many of your article in a separate external hard disc.

So far no one has written with facts and proof in their articles. I am proud of you. I am living in Toronto, Canada. After serving in the Royal Bank of Canada

I am retired now. I have only one daughter who is married and settled here. I am  enjoying my retired life by visiting distance land in the globe. If I come to India I wish to meet you.

Please be cautious and alert. My best wishes and blessings to your wife and children.

My best wishes and blessing for all your future endeavor.

Take care.

வாருங்கள் நண்பரே. அவசியம் சந்திப்போம்.


நான் எழுதிய தலைப்புகளை அறிய உதவும் இடம்.

உங்கள் மனதில் உள்ள பாரங்களை இறக்கி வைக்க இந்த காணொளி காட்சி

50 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முதலில் 500 (க்கு) வாழ்த்துக்கள்...

தங்களின் வலைப்பயணம் வேர்ட்ப்ரஸ் என்பது இதன் மூலம் தான் தெரியும்... விரிவான விளக்கமான வலைப் பயணம்...

முடிவில் படத்தில் உள்ள வரிகள்... புன்னகையாக வெளிப்படுத்துவோர் மிகவும் குறைவு...

Unknown said...

goodluck jothiji and best wishes for reaching next milestore (1000).
-surya

Ranjani Narayanan said...

உங்களின் 500 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
மேலும் மேலும் இந்த வலைபதிவுப் பயணம் இனிமையாக (நண்பர் மேலே கூறியிருப்பது போல) பத்திரமாக, பாதுகாப்பாகத் தொடரட்டும்.

வவ்வால் said...

ஜோதிஜி,

500க்கு வாழ்த்துக்கள் ,பல ஆயிரத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!

உங்களிடம் இருந்து இன்னும் அதிகம் எதிர்ப்பார்க்கிறோம்!

reverienreality said...

500க்கு வாழ்த்துக்கள்...

It is just a number...Even If you had stopped with five...I would have loved all five...

சமூக அக்கறையுள்ள உங்கள் பதிவுகள் நீண்ட காலம் தொடர்ந்து எங்களை அடையும் என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது...

வாழ்த்துக்கள்...

ஊரான் said...

வாழ்த்துகள்! மேலும் என் போன்ற வலைப்பதிவர்களுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவாலும் ஊக்கத்தாலும் மேலும் நீங்கள் உயர்ந்து நிற்கின்றீர்கள். தொடரட்டும் உங்கள் பதிவுலகப் பணி.

நிகழ்காலத்தில்... said...

500 க்கான வாழ்த்துகளும்,மகிழ்ச்சியும்

நல்ல நோக்கத்துடன் எழுதுகிறீர்கள்.நல்லதே நடக்கும்.

சீனு said...

//கூகுள் தேடுதல் சேவையின் வாயிலாக குறி சொற்கள் மூலம் தேடிக் கொண்டுருக்கும் பலருக்கும் எனது தளம் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றது.// நமது தளத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று, இவை மூலம் எந்நாளும் நம்மக்கள் நம்மை அறிந்து கொள்வார்கள்...

//அவர்கள் உண்மைகள் என்ற வலைதளத்தில்// எனக்கு புதிய செய்தி, அவர் படக்கலவையில் வல்லவர், அதன் நேர்த்தி எனக்கு மிகவும் பிடிக்கும் ஜோதிஜி ....

ஐநூறு பதிவுகள் கடந்து அசராமல் அசாத்தியமாக முன்னேறி இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து வெற்றிகரமாக வளம் வர உற்சாகமான வாழ்த்துக்கள்

எஸ் சம்பத் said...

சாதனை உயரம் (500 க்கு) நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சாதனை பயணம் தொடரட்டும்

//என்னுடைய எழுத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்கள் எனக்கு நெருக்கமான உறவுகளாகவும் மாறியுள்ளனர். ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இடத்திலும் யாரோ ஒருவர் எனக்கு நெருக்கமான சொந்தமாக மாறியுள்ளனர். அனைத்து கட்சிகளிலும் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நெருக்கம் பாராட்டுபவர்கள் அநேகம் பேர்கள். ஊடகத் துறையிலும் அதிகம் பேர்கள் அறிமுகமாகி உள்ளனர். பலதரப்பட்ட இயக்கம் சார்ந்த கொள்கைகள் கொண்டவர்களுடன் நட்பு கொள்ளவும் முடிந்துள்ளது. பிரபல எழுத்தாளர்கள், பதிப்பக மக்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் என்று பல தரப்பட்ட நிலையில் பலரையும் தொடர்பில் வைத்திருக்க முடிந்துள்ளது. //

உங்கள் எழுத்தைப் படித்து உங்களின் நட்பு கிடைத்ததன் வாயிலாக வலைப்பூக்களை படிக்கும் எனக்கே, பல நல்ல நட்புகள் கிடைத்திருக்கிறது. எழுதும் உங்களுக்கு கிடைப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. உங்கள் நட்பு என்னையும் ஒரு வலைப்பூ துவங்க வைத்து சில பதிவுகளையும் இட வைத்தது. நல்ல நட்பு தொடரட்டும், புதிய நட்புகள் வளரட்டும். சிறிய தேவியர்கள் மற்றும் பெரிய தேவியருக்கும் வாழ்த்துக்களை சொல்லுங்கள்
அன்புடன்
ஸ்ரீ சம்பத்

எஸ் சம்பத் said...

எந்த வலைப்பூவின் புதிய பதிவை பார்வையிட்டாலும் திண்டுக்கல் (நான் பள்ளிக் கல்வி பயின்ற ஊர்) தனபாலன் முதல் ஆஜர் என்பது வியக்க வைக்கிறது

எஸ் சம்பத் said...

தங்கள் தளம் தவிர வினவு, தமிழ் பேப்பர், புதிய தலைமுறை போன்ற வற்றில் எழுதியதை மறக்காமல் நினைவு கூர்ந்தீர்கள், ஆனால் வலைச்சரம் ஆசிரியர் பணி ஒரு வாரத்தை குறிப்பிடவில்லை என எண்ணுகிறேன். அந்த சரத்தை தொடர்ந்தபின் தான் நான் பல வலைப்பூக்களை தொடர்கிறேன்.

வனம் said...

ம்ம்ம் இதுவரை 500 குத்து வாங்கி இருகோமா ......................

வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா said...

முண்டாசு, அந்தக் கடுதாசி ரொம்பவே கவணிக்காதவங்களையும் கவணிக்க வைக்கிற ரேஞ்சிற்கு இருக்கு... சில பகுதிகளை நறுக்கிட்டு ஒட்டியிருக்கலாம்.

எப்படியோ, மென்மேலும் உழைத்து உயர வாழ்த்துகள்!!

Ravichandran Somu said...

மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துகள் தலைவரே !!! தொடருங்கள்....

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி - முதலில் 500 க்கு பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள் - கடந்து வந்த பாதையினை அழகாக பதிவாக்கியமை நன்று - மறுமொழிகளின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. தேவியர்களுக்கும் நல்வாழ்த்துகள் - நட்புகளும் நல்லுள்ளஙகளும் உடன் தொடர்ந்து வருவது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தி.தமிழ் இளங்கோ said...

// இன்று வரையிலும் எனக்குத் தெரிந்தவகையில் சோர்வடையாமல் என்னைப் பாதிக்கும் ஒவ்வொன்றையும் பதிவுகளாக மாற்றிக் கொண்டே வருகின்றேன். //

வாழ்த்துக்கள்!
பயணம்... ... ... தொடரட்டும்!


டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வாழ்த்துக்கள் ஐயா! 500பதிவுகள் என்பது சாதாரண விஷயமல்ல.தொடர்ந்து சிறக்கட்டும் தங்கள் பணி.
தங்கள் வலைப்பதிவில் தமிழ்மண இணைப்புப் பட்டை காணப்படவில்லை.அதை இணைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இன்னும் பலரையும் சென்றடைய உதவியாக இருக்கும்.

Avargal Unmaigal said...

ஜோதிஜி 500 க்கு எனது வாழ்த்துகள்.. திருப்பூர் தலைவரே நான் உங்களுக்கு செய்து தந்தது சில வடிவமைப்பு மட்டுமே ஆனா அதை நான் என்னவோ யாரும் செய்யது தரமுடியாதது போல என்னைப் பாராட்டி உள்ளிர்கள் இதை இணையத்தில் உள்ள பதிவாளர்கள் யாரிடம் கேட்டாலும் உங்களுக்கு கண்டிப்பாக செய்து தருவார்கள் நான் செய்தது சிறிய உதவியை மிகப் பெரிய உதவியாக நீங்கள் நினைத்து பாராட்டும் உங்கள் நல்ல குணம்தான் உங்களுக்கு பெரிய நட்பு படையை மற்றும் நல்ல மாமனார் மற்றும் நல்ல மனைவி , குழந்தைகளை தந்திருக்கிறது என்று சொல்லாம்.

இன்று போல என்று வாழ்கவென்று உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த 500வது பதிவில் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நண்பரே

புதுகை.அப்துல்லா said...

ஆரம்பம் துவங்கி 500 இடுகைகளையும் படித்தவன் என்ற உரிமையில் வாழ்த்துகிறேன் :)

எம்.ஞானசேகரன் said...

தங்களின் 500 வது பதிவிற்கும், தங்களின் தளராத உழைப்பிற்கும் ஆர்வத்திற்கும் பாராட்டுக்கள்.

சிவானந்தம் said...

ஜோதிஜி,
தற்போது தற்போதுதான் கவனித்தேன்.
உங்களின் பதிவுகளை ஒருவர் சேமித்து வைத்திருக்கிறார் என்பது உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.வாழ்த்துக்கள். நீங்கள் மேலும் பல எல்லைகளை தொடுவீர்கள்.

சுடுதண்ணி said...

உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

முனைவர் மு.இளங்கோவன் said...

நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தொடர்க தங்கள் தமிழ்ப்பணி. உயிரோட்டமான நடை கண்டு மகிழ்கின்றேன்.

ஜோதிஜி said...

புன்னகையாக வெளிப்படுத்த முடியாத பட்சத்தில் மனதில் ரணமாக மாறி காலப்போக்கில் மனப்பிறழ்வாக மாறிவிடும் தனபால்.

ஜோதிஜி said...

இனிய ஆச்சரியம். உங்கள் வாழ்த்து அதிக மகிழ்ச்சியை தந்தது. நன்றி.

ஜோதிஜி said...

எல்லா இடத்திலும் பாதுகாப்பாற்ற சூழ்நிலை தான் நிலவுகின்றது. சிலவற்றை சிலரால் மட்டும் தான் உடைக்க முடிகின்றது. முடியும்.

ஜோதிஜி said...

பரஸ்பரம் கொடுத்து எடுத்துக் கொள்வோம். நன்றி வவ்வு.

ஜோதிஜி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

ஜோதிஜி said...

குறுகிய காலத்தில் தெளிவாக நேர்த்தியாக எழுகக் கற்றுக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர். நல்வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

நல்லதை நடத்திக் காட்டுவோம்.

ஜோதிஜி said...

நன்றி சீனு

ஜோதிஜி said...

உங்கள் ஆதரவு என்றும் மறக்க முடியாத ஒன்று. நன்றி சம்பத்.

ஜோதிஜி said...

காரியத்தில் வெற்றி பெற வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

முதலில் இதை நம்புவார்களா என்ற பயம் இருந்தது. அந்த பயம் மட்டும். நன்றி பிரபா.

ஜோதிஜி said...

நன்றி ரவி.

ஜோதிஜி said...

நன்றி சீனா அவர்களே.

ஜோதிஜி said...

உங்கள் நெஞ்சார்ந்த அக்கறைக்கு எந்நாளும் நன்றி.

ஜோதிஜி said...

திரட்டி ஓர் அளவுக்குத் தான் வெளியே கொண்டு செல்லும். ஆனால் நமது தரமே தொடர்ந்த உள்ளே வரவழைக்கும். அது போதும் தானே.

ஜோதிஜி said...

நன்றி நண்பா.

ஜோதிஜி said...

இனிய மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

மிக்க நன்றி

ஜோதிஜி said...

நன்றி தமிழ்

ஜோதிஜி said...

மிக அழகான வார்த்தைகளை கோர்க்கும் உங்களின் நடை எனக்கு எப்போதும் பிடிக்கும்.

ஜோதிஜி said...

நன்றி சேகர்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...
This comment has been removed by the author.
அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

பதிவு உலகுக்காக இத்தனை தூரம் கடந்து வந்ததாதால் நிங்கள் இழந்த்ததை விட உங்களை உங்கள் இடைவெளியை அனுபவித்த அன்பு குடும்பத்தை பாராட்டி நன்றி சொல்கிறேன் .

ஜோதிஜி said...

வித்தியாசமான விமர்சனம். ஆனால் அந்த இடைவெளி ஏதும் இங்கே உருவாகவில்லை. எனக்கே இது போன்ற சந்தேகம் வரும் போது குழந்தைகளிடம் கேட்டு உறுதி படுத்திக் கொள்வதுண்டு. என் சிந்தனைகளை திணிக்காமல் அவர்கள் அவர்களாகவே வாழ்க்கின்றார்கள். வளர்கின்றார்கள்.

நன்றி கிருஷ்ணமூர்த்தி

ஜோதிஜி said...

வாழ்கின்றார்கள்

துளசி கோபால் said...

அரை ஆயிரமா!!! ஆஹா ஆஹா.. இனிய பாராட்டுகள்.

எப்படி கண்ணில் படாமப் போச்சுன்னு புரியலை:(

ஜோதிஜி said...

நன்றி டீச்சர்