Sunday, March 17, 2013

40+

நாற்பது வயதுகளை கடக்க இருப்பவர்களும், கடந்து சென்றவர்களுக்கு மட்டும்.  இந்த படங்களை ரசிக்க ருசிக்க மற்றவர்களுக்கு பகிரவும் செய்யலாம். மின் அஞ்சல் வழியே எனக்கு அனுப்பிய சேலம் திரு. லெஷ்மணன் அவர்களுக்கு தேவியர் இல்லத்தின் சார்பாக நன்றிகள்.21 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை... சிலவற்றை தரவிறக்கம் செய்து கொண்டேன்... நன்றி...

Anonymous said...

நான் ஒளியாய் பிரகாசிக்கிறேன் என் மதிப்போ மிகப்பெரிது
நான் எல்லவ்ற்றையும் சரியாக்ச் செய்கிறவன்
என் அழகும் என் ஜொலிப்பும் ,அற்ற எல்லரைக் கட்டிலும் மிஞ்சியது
உம்மைப் போன்றோருக்கு என் எஜமானே பொன்னே மிகச் சிறந்தது

பதில் ஏதும் சொல்லாமல் எஜமன் கடந்து சென்றார்.

ஒருங்கி ஓங்கி நின்ற வெள்ளிப்பாத்திரத்தைக் கண்டார்
என் அன்பார்ந்த எஜமனே, நான் உம்மையே சேவிப்பேன்,
உமக்கு திராட்ச ரசம் ஊற்றித்தருவேன்
நீர் உண்ணும்போது, மேஜையில் உம் அருகாமையிலிருப்பேன்
என் மீது செதுக்கப்பட்டிருக்கும் சிற்ப வேலை எவ்வளவு அழகு!
நிச்சயமாக வெள்ளிப்பாத்திரமே உமக்கு பாராட்டுதலைப் பெற்றுத்தரும்.

எஜமான் இப்பொழுது வெங்கலப்பாத்திரத்தின் பக்கமாக வந்தார்
தட்டையான தோற்றம், அகன்றவாய், கண்ணாடி போன்ற மினுமினுப்பு
கடக்க முற்பட்டவ்ரை, எஜமனே நான் இங்கே இருக்கிறேன்"
எல்லா மனிதர்களும் பர்க்கதக்கதாக என்னை மேஜையில் வையும்
நான் அலங்கரமாயிருப்பேன் என்றது "

எஜமனே என்னைப்பாரும்" என்றது பளிங்குப்பாத்திரம்.
எளிதில் உடைந்து போகும் தன்மை எனக்கிருந்தாலும்
பயத்தோடே உம்மை சேவிப்பேன் என்றது

எஜமான் மரப்பாத்திரத்தின் அருகே வந்தார்
சிற்ப வேலையோடமைந்திருந்த மினுமினுப்பான தோற்றம் "
என் அன்பார்ந்த எஜமானே என்னைப் பயன்படுத்தலாமே" என்றது மரப்பாத்திரம். "
பழவகைகளை என்னில் வைத்து பாதுகாக்கலாமே என்றது

எஜமான் இப்பொழுது களிமண் பாத்திரத்தை பரிவோடு பர்த்தார்
கீறல் விழுந்த காலிப் பாத்திரம், தேடுவரற்ற நிலையில் கிடந்தது
எஜமான் தெரிந்தெடுத்து சுத்தப்படுத்தி சரி செய்து பயன்படுத்த
எந்த நம்பிக்கையுமற்ற பாத்திரம்

இப்படிப்பட்ட பாத்திரத்தைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்
இதை சரிப்படுத்தி என் உபயோகத்திற்கு வைத்துக் கொள்வேன்
பெருமை பாராட்டிக்கொள்ளும் பாத்திரங்கள் எனக்கு தேவையில்லை
அலமாரியில் அலங்காரமய் இருப்பதும் எனக்கு தேவையில்லை
பெரிய வாயோடு பெருமை பராட்டிக் கொள்வதும் எனக்கு தேவையில்லை
தன்னுள்ளிருப்பதை பெருமையோடு எடுத்துக்காட்டுவதும் எனக்கு தேவையில்லை

களிமண் பாத்திரத்தை மெதுவாக தூக்கினார், சரி செய்து சுத்தம் செய்தார்.
தம்மிலுள்ளவற்றால் நிரப்பினார். அன்போடு அதனுடன் பேசினார்.
" நீ செய்ய வேண்டிய வேலையொன்று உண்டு
நான் உனக்குள் ஊற்றுவதை வாங்கி நீ மற்றவர்களுக்கு ஊற்று"

வல்லிசிம்ஹன் said...

அனைத்து வாக்கியங்களும் அருமை. அத்தனை எண்ணங்களும் அயர்ச்சியை நொடியில் ஓட்டிவிடும்.
படங்களுக்கும்,அருமையான கருத்துகளுக்கும் மிக நன்றி ஜோதி ஜி.
பெயரில்லாதவர் கொடுத்திருக்கும்
கருத்துக் கதையும் நன்று.

தி.தமிழ் இளங்கோ said...

இன்று காலை எனக்கு கிடைத்த நற் சிந்தனைகள் கொண்ட நல்ல வண்ணப்படங்கள்! மறுபடியும் ஒருமுறை உள்வாங்கிப் படிக்க வேண்டும்! நன்றி!

ஜோதிஜி said...

காலையில் வாசிக்க கிடைத்த அற்புதமான வாசகம், நேற்று ஒருவரை சந்தித்தேன். நீங்கள் சொல்லியுள்ளஅடிப்படை கருத்தை அவர் வாழ்க்கையில் வாழ்நாளும் முழுவதும் கடைபிடித்து வருகின்றேன். விரைவில் அதைப்பற்றி எழுதும் போது நீங்க புரிந்து கொள்வீர்கள்.

நிதானமாக எழுதிய உங்களுக்கு என் மீண்டும் நன்றி.

ஜோதிஜி said...

எனக்கு படித்தவுடன் பலருக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும் என்று தோன்றியது. நன்றி அம்மா.

ஜோதிஜி said...

ஒவ்வொரு முறையும் படிக்கும் போது ஒரு புதிய சிந்தனைகள் நமக்கு கிடைக்கும்.

ஜோதிஜி said...

பொக்கிஷம்.

arul said...

superb post very thoughtful

ezhil said...

அத்தனையும் அருமை.... அழகான படங்களுடன் .... என் முக நூல் நண்பர்களுக்கு பகிர்கிறேன்... நன்றி

வல்லிசிம்ஹன் said...

உடனே பகிர்ந்து கொண்டேன். இனிமையான மாற்றம் கொடுக்கும் எண்ணங்களைப் பரப்புவதால் இனிமையும் திடமும் மேலும் பரவட்டும். மிகநன்றி ஜோதிஜி.

Unknown said...

Too Good

அகலிக‌ன் said...

பயன்படுத்தப்படாதவரை பணம் வெறும் காகிதமே. அனுபவங்களை ஆராயதவரை வாழ்க்கை வெறும் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகம்மட்டுமே. உன்னிடமுள்ள கடைசி ஒரு ரூபாயையும் ஒரு மகராஜனைப்போல் செலவுசெய். இதுபோல் பல சிந்தனைகளை தூண்டுகிறது. நிதானமாய் படித்தால் இன்னும் பலவும் தோன்றலாம்.

Anonymous said...

மூச்சுக்கு மூச்சு தமிழ் தமிழ் என்று கலைஞரைப் போல பேசி எழுதி வரும் நீங்கள் இந்த பதிவை ஆங்கிலத்தில் வெளியிட்டது ஏன்?
அடிராசக்க என்ற பதிவாளரைப்போல காப்பி பேஸ்ட் பதிவாளராக ஆகிவிட்டீர்களா?

ஜோதிஜி said...

தவறாக புரிந்து கொண்டீங்க. இந்த படங்களும் வாசகங்களும் எனக்கு பிடித்து இருந்தது. காரணம் நானும் நாற்பது வயதை கடந்தவன். எனக்குத் தேவையான பல விசயங்கள் இதில் உள்ளது. என்னைப் போல என்னைத் தொடர்பவர்களும் என் வயதுக்கு அருகில் இருப்பவர்கள் தான். அவர்களுக்கும் தேவைப்படும் என்ற எண்ணத்தில் தான் இதை வெளியிட்டேன். 90சதவிகிதம் காப்பி பேஸ்ட் எந்த பதிவும் என் தளத்தில் இல்லை. விமர்சனம் கொடுத்தவர்களுக்கும் என்னைப் போலவே அவர்களுக்கும் ஒரு தாக்கத்தை உருவாக்கி உள்ளது என்பதை அவர்களின் வார்த்தைகளின் மூலம் புரிந்து கொண்டு இருப்பீங்க என்று நம்புகின்றேன். அப்புறம் கலைஞரை என்னுடன் ஒப்பிட்டு பேசியது தவறு. என் தாய் மொழியை நான் பேசாமல் வேறு எவர் பேச முடியும்? சில விசயங்களை ஆங்கிலத்தில் அப்படியே படிக்கும் போது தான் அதன் உண்மையான தாக்கம் நமக்கு கிடைக்கும். இதைப் போலவே 4 தமிழ் மீடியா தளம் மனமே வசப்படு என்பதன் மூலம் வெளியிடுகின்றது. அதையும் பாருங்க.

ஜோதிஜி said...

கீழே ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார். அவர் பார்வையைப் பாருங்க அகலிகன்.

ஜோதிஜி said...

நன்றி ஆறுமுகம்

ஜோதிஜி said...

நன்றி அம்மா.

ஜோதிஜி said...

நன்றி எழில்

ஜோதிஜி said...

நன்றி அருள்

Unknown said...

அத்தனையும் அருமை.... அழகான படங்களுடன், இந்த படங்களும் வாசகங்களும் எனக்கு பிடித்தது காரணம் நானும் நாற்பது வயதை கடந்தவன்.