Thursday, May 28, 2020

அதிகாரிகளுக்கு மனசாட்சி இருந்தால் போதும்.

சுய ஊரடங்கு 4.0 - 70


Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 31 வரை)புலம்பெயர் தொழிலாளர்களின் அவஸ்தைக்கு யார் காரணம்? 

மோடி.

தூங்கும் போதே தண்டவாளத்தில் இறந்தார்கள். இதற்கு யார் காரணம்? 

மோடி.

தமிழகத்தில் நோய்த் தொற்று இன்னமும் அதி வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அதற்கு யார் காரணம். 

நிச்சயம் மோடி பெயரைச் சொல்வோம்.

அவர் தான் தமிழகத்திற்கு நிதி கொடுக்கவில்லையே?

ஆக காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரைக்கும் கடந்த 7 வாரங்களில் என்ன பிரச்சனை நடந்தாலும் எல்லாவற்றுக்கும் காரணம் மோடி மட்டுமே.
காரணம் வேறு எந்த மத்திய மாநில அரசு அதிகாரிகளும், மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள் எவரும் எதற்கும் காரணமே இல்லை. மொத்த அதிகாரமும் மோடி வசம் மட்டும் உள்ளது. அவர் பட்டனைத் தட்டினால் தான் 130 கோடி மக்களையும் ரோபோ போல இயக்க வைக்க முடியும். அவர் தான் இங்கு அனைவர் வாழ்க்கையிலும் தொடர்ந்து மண் அள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கின்றார். அவர் ஒழிந்தால் தான் நிம்மதி என்று இங்கு போராளிக்கூட்டங்கள் தொடர்ந்து எழுதித் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.

உண்மை நிலவரம் தான் என்ன?

உங்களுக்கு வாய்ப்பு நேரமும் விருப்பமும் இருந்தால் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ட்விட்டர் ஐடி மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ட்விட்டர் ஐடியில் ஒரு முறை, ஒரே ஒரு முறை சென்று பாருங்கள். ஒவ்வொரு பதிவுகளையும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு நேரம் இல்லாவிட்டால் கீழ்க் கண்ட விசயங்களைப் பொறுமையாகப் படிக்கவும்.

1. இந்தியா முழுக்க கொரானா வைரஸ்க்காக முழு ஊரடங்கு என்று பிரதமர் மோடி அறிவித்த நாள், அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியிலிருந்து அருகே உள்ள மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய தொழிலாளர்கள் பட்ட அவஸ்தைகள், நடைபயணம் போன்றவற்றைப் பார்த்து வருத்தப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொரு படமும் மனிதாபிமானத்தை விலைபேசுவது போலவே இருந்தது.

2. அவரவர் விருப்பப்படி அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் (எப்போதும் போல) மோடி அவர்களை இன்று வரையிலும் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரவிந்த் கேஜ்ரிவாலின் மொள்ளமாரித்தனம் என்று நண்பர்கள் எனக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் கடைசி வரைக்கும் டெல்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வாழ்ந்த தொழிலாளர்களுக்கு அரசு உதவ இல்லை. என்ன ஆனார்கள்? எப்படிப் போய்ச் சேர்ந்தார்கள்? எத்தனை பேர்கள் இறந்தார்கள்? யாருக்குத் தொற்று நோய் இருந்தது. அந்தந்த மாநில பொதுச் சுகாதாரத்துறை எப்படி இவர்களைக் கையாண்டது. இன்று வரைக்கும் இந்தத் தகவல் யாருக்கும் தேவைப்படவில்லை. மறந்து விட்டோம். கடைசியாகத் தண்டவாளத்தில் படுத்து உயிர் விட்டவர்களைப் பற்றி இப்போது பேசிக் கொண்டு இருக்கின்றோம். இதற்கும் மோடி தான் காரணம் என்றே பொங்கல் வைக்கிறார்கள்.

3. பிரதமர் முதல் நகர்மன்ற உறுப்பினர் வரைக்கும் அவர்களின் அதிகார ஆயுள்காலம் வரையறுக்கப்பட்டது. அதிகபட்சம் 5 வருடம். ராஜ்ய சபா உறுப்பினர் மட்டும் 6 வருடங்கள். ஆனால் விஏஓ முதல் தலைமைச்செயலாளர் வரைக்கும் அவர்களின் ஆயுள் காலம் 60 வயது வரைக்கும் உள்ளது. நீட்டிப்பு என்று மேலும் வாங்க முடியும். செல்வாக்கு இருந்தாலும் அடுத்தடுத்த பதவிகள் பெற முடியும். மக்களிடம் கூழைக்கும்பிடு போட வேண்டிய அவசியம் இல்லை. 80 சதவிகித அதிகாரவர்க்கத்தினரை எதற்காகவும் இங்கே நீதிமன்றங்கள் தண்டித்தது இல்லை. சுகமான வாழ்க்கை ஓய்வு பெற்றபின்பு வாழ வரம் வாங்கியவர்கள்.

3. கோயம்பேடு மூடினார்கள். சில தினங்களில் திருமழிசை (காய்கறி மொத்தக் கொள்முதல் வியாபாரத்திற்காக) திறந்தார்கள். ஒரு தடவை ஓபிஎஸ் ஈபிஎஸ் வந்து எப்படி வேலை நடக்கிறது என்று பார்த்தார்கள். திறப்பு விழா கூட இல்லை. அதிகாரிகளே திறந்தார்கள். முதல்நாளே விற்பனை சூடு பறந்தது. விற்பனை தொடங்கிய நாளில் சென்னையில் காய்கறி விலை பாதியாகக் குறைந்தது. கொரானா என்ற பெயரை வைத்து கோயம்பேடு சந்தையை மூடிவிட்டார்கள்.ஆனால் மக்கள் பல மடங்கு விலையில் அடிப்படைத் தேவையான காய்கறிகளை சில வாரங்கள் வாங்கி தங்கள் வருமானத்தைத் தமிழக அரசின் அநியாய நிர்வாகத்திற்காக தங்கள் பணத்தை இழந்தார்கள்.

4. நிதியமைச்சராக இருந்த ஒபிஎஸ்க்கு மேலும் சில துறைகள் வழங்கப்பட்டது. அதற்காக அந்த சமயத்தில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள், பல பஞ்சாயத்துகள் கடந்து இன்னும் சில துறைகள் கொடுத்துச் சமாதானப்படுத்தவேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இருந்து பிடுங்கி இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் திறமைக்காக அல்ல. கொடுத்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம். ( நிதி, வீட்டு வசதித்துறையுடன் அமைச்சர் ஜெயகுமார் வசமிருந்த திட்டம், சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு ஆகிய இலாகாக்கள் கூடுதலாகத் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஒதுக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரைப்படி இந்த அறிவிப்பை ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்டார்.)

ஆனால் ஓபிஎஸ் ஜெ இருக்கும் போதும் சரி, அவர் சார்பாக முதல்வராக அந்த நாற்காலியில் நுனியில் மட்டும் அமர்ந்து தனது விசுவாசத்தைக் காட்டிய போதும் சரி, இன்று வரையிலும் சரி தமிழ்நாட்டின் நலனுக்காக ஒரு பிட்டு கூட நகர்த்தவில்லை என்பது தான் உண்மை. இவர் பதவியில் இருப்பது சம்பாதிக்க. தன் குடும்ப நலனுக்காக என்ற கொள்கையில் கச்சிதமாகவே செயல்பட்டு வருகின்றார். அவர் தன்னை நம்பி வந்தவர்களைக்கூடக் காப்பாற்றவில்லை என்பதே உண்மை. எனக்குப் பதவி வேண்டும் என்று வாங்கிக் கொண்டு இன்று வரைக்கும் வந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு ஆத்மா.

இவர் ஒரு வேளை சரியாக இருந்தால் இவருக்கும் கீழ் இருக்கும் இஆப அதிகாரிகள் டக் கென்று முடிவெடுத்து இருப்பார்கள். அதிகாரிகளும் மண்ணுளிப் பாம்பு போல மண்ணுக்குள் தங்கள் தலைகளைப் புதைத்துக் கொண்டிருந்த காரணத்தால் இன்று சென்னை முழுக்க வைரஸ் தாண்டவமாடுகிறது. சந்துக்குச் சந்து வண்டியைப் போட்டு நிறுத்தி நிப்பாட்டி ரத்த மாதிரி எடுத்து ஒவ்வொருவரையும் சோதித்தால் சென்னை ஜனத் தொகையில் காற்பங்கு பேர்களுக்கு நிச்சயம் தொற்று இருக்கக்கூடும். இதற்கு முக்கியம் காரணம் யாராக இருக்கும் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

5. தமிழகம் எங்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். தொழிலாளர் துறை அமைச்சர் (Dr. Nilofer kafeel, Minister for Labour and Employment Department) என்ன செய்கின்றார் என்று தெரியவில்லை? அமைச்சர் மங்குணி என்றால் அதிகாரிகள் மண்ணுளிப் பாம்பாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு உதாரணம் ஓபிஎஸ் மற்றும் அம்மையார் திருமதி நிலோபர்.

வேலுமணி நிர்வகிக்கும் உள்ளாட்சித்துறை, விஜயபாஸ்கரின் சுகாதாரத்துறை இரண்டு தான் நூற்றுக்கு நூறு வாங்கும் அளவுக்குக் கடந்த 50 நாளில் செயல்பாடுகள் இருந்தது. காரணம் உள்ளே இருந்த அதிகாரிகள் அவர்களின் செயல்பாடுகள்.

6. திருப்பூர் முதலாளிகள் இயல்பாகவே நல்ல புண்ணியவான்கள். எதையும் அவிழ்க்கவில்லை. வட மாநிலத் தொழிலாளர்கள் இங்கே சம்பாதிக்கும் பணம் மாதம் 5000 என்றாலும் கூட அப்படியே தங்கள் ஊருக்கு அனுப்பி விடும் பழக்கம் உள்ளவர்கள். காரணம் உணவு, தங்குமிடம் பெரிய நிறுவனங்கள் வழங்கி விடுவார்கள்.

இப்போது வேலை இல்லை சாப்பாடு இல்லை. நிர்வாகம் ஒதுங்கி விட்டது. சங்கங்கள் ஒதுங்கி விட்டது. வசன வியாபாரிகள் ஒதுங்கி விட்டார்கள். தன்னார்வச் சேவா மக்கள் தான் கடந்த சில வாரங்களாக உதவினார்கள். கையில் காசு இல்லை. ஊருக்கு அனுப்ப முடியாது. குடும்பத்தில் பிரச்சனை. இங்கே தங்குவதிலும் பிரச்சனை. மறுபடியும் வேலை தொடங்கும் என்றும் தெரியாது. ஏகப்பட்ட குழப்பம். மன உளைச்சல். பொங்கி விட்டார்கள். தெருவில் டயர் போட்டு எறித்தார்கள். கூட்டமாகக் கூடினார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் படையெடுத்தனர். ரயில் இல்லை என்றாலும் கேட்கவில்லை.

நேற்றும் இன்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் புலம் பெயர் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தி படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்தந்த ரயிலில் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் காய்கறிச் சந்தை ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு இயல்பு வாழ்க்கை வாழ உதவியது போல ஒவ்வொரு நிலையிலும் தன் அதிகாரத்திற்கு உட்பட்டு, தனக்கு வாய்ப்பு இருக்கக்கூடிய அனைத்து விசயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி, நேரம் காலம் பார்க்காமல் கடந்த 7 வாரங்களைத் திருப்பூரில் வாழக்கூடியவர்கள் எந்நாளும் திரு விஜய கார்த்திகேயன் அவர்களை மறக்க முடியாத அளவிற்கு தன் செயல்பாட்டால் பெருமை சேர்த்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, இன்னும் பல பேர்கள் எப்படி இஆப அதிகாரிகளிடம் பேசுவார்கள் அல்லது அவர்கள் இவர்களை எப்படி கையாள்வார்கள் என்று யோசித்துப் பார்த்தால் நள்ளிரவில் முழிப்பு வந்து விடுகின்றது.

அதிகாரிகளுக்கு மனசாட்சி இருந்தால் போதும்.

மோடியை எடப்பாடியை நாம் திட்ட வேண்டிய அவசியம் இருக்காது.


10 comments:

G.M Balasubramaniam said...

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு லாபம் கூத்தாடி= கொரோனா

திண்டுக்கல் தனபாலன் said...

பட்டனை கூட தட்ட தெரியாத மூடனை என்ன செய்வது...?

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கு உள்ள அடிமைக்கூட்டம் அதை விட...

Jayakumar Chandrasekaran said...

நீங்கள் சுலபமாக சொல்லிவிட்டீர்கள். அதிகாரிகள் மனது வைத்தால் நடந்த, நடக்கும் குழப்பங்களை சரிப்படுத்தியிருக்கலாம் என்று. முதல் கட்டம் அதற்கு பணம் தேவை. அது அமைச்சர் சொன்னால்தான் செலவு செய்யமுடியும். பணம் தேவையில்லாத சில நல்ல விஷயங்களை செய்யலாம்.  செய்தால் சகாயம் போன்று கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

 மோடி வந்ததற்கு பின்தான் அதிகாரிகளையும் (ஏன் நீதிபதிகளையும் கூட) பழி வாங்கும் சர்வாதிகார போக்கு அதிகரித்து விட்டது. ஆகவே அதிகாரிகளும் நமக்கேன் வம்பு என்று சாய்ந்தா சாயுற பக்கம் சாயுற மாடுகள் ஆகி விட்டார்கள். 
Jayakumar

அது ஒரு கனாக் காலம் said...

Jytotjig, what ever u write... Modi is responsible, all most everybody who had driver, maid, Gardners, cleaning, have asked small wage earners to stop coming for work, and hardly compensated them.... BUT KEEP COMPLAINING ABOUT MODI...

ஜோதிஜி said...

இந்தத் தொடர் தொடக்கத்தில் கொரோனா தன்மையைப் பற்றி எழுதியிருந்தேன். வூகான் மாநில, ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, ஈரான், இந்தியா கொரானா வைரஸ் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பு உள்ளது. வீர்யம் 270 சதவிகிதம் வித்தியாசம் உள்ளது. இது தான் இங்கே முக்கியப் பிரச்சனை.

ஜோதிஜி said...

இந்த வார குரல்பதிவு உங்களை திருப்திபடுத்தும். உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜோதிஜி said...

உங்கள் கருத்து சரியென்று எடுத்துக் கொள்கிறேன். ஆனால் பாஜக முதல் 5 ஆண்டுகளில் நீதித்துறையில் பாஜக நினைத்த அளவிற்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. காங்கிரஸ் ஆதிக்கம் தான். தொலைபேசியில் பேசி முன் ஜாமீன் வாங்கிக் கொண்டு கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். சிதம்பரம் வெற்றிகரமாக 25 முறைக்கு மேல் ஜாமீன் வாங்கிக் கொண்டிருந்தார். இதற்கு என்ன சொல்வீர்கள்.

ஜோதிஜி said...

எதிர்கட்சிகள் மோடி புகழை முழுமையாக பரப்புகின்றார்கள் என்றே நண்பர்களிடம் பேசும் போது சொல்வதுண்டு.

bakki said...

ஆமாம் இப்போது அர்னாபுக்கு மட்டும் தான் இரவு கோர்ட்