Thursday, February 13, 2020

அட்டைக்கத்திகள்


சமீபத்தில் நடந்த தொலைக் காட்சி விவாதங்களில் பேசியவர், இப்போது இந்தச் சூழலில் நடிகர் விஜய் தைரியமாக ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.

"நான் நேர்மையாக வரி கட்டி வாழ்பவன். இதனைக் கடந்து சட்டப்படி நிரூபித்து வருவேன் என்று சொல்ல வேண்டும்" என்றார்.

அப்படி அறிக்கை விட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

லண்டன் வரைக்கும் நோண்டுவார்கள்.

அடுத்த 5 படங்களின் சம்பளத்தொகையையும் அபராதமாகக் கட்ட வேண்டியிருக்கும்.

கம் மென்று அடக்கி வாசித்து ஜம் என்று போஸ் கொடுக்கின்றார்.

படம் போட்டு பயத்தை மாற்றிக் காட்டிவிட்டார்.

நடிகர்கள் யதார்த்தவாதியாகத்தான் இருக்கின்றார்கள்.

கூடும் இளையர்களின் கூட்டம் தான் பாவம். 😏


நடிகர் விஜய் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

1. நெஞ்சுக்கு நீதி மொத்தப் பாகமும் வாங்கி படிக்க வேண்டும். படித்தவுடன் அப்பாவுக்கு அரசியல் குறித்து விஜய் புரிய வைக்க முயல வேண்டும்.

2. இதுவரையிலும் ஆடிட்டர் கையில் கொடுத்த அனைத்து ஆவணங்களையும் வீட்டுக்கு அள்ளிக் கொண்டு வந்து விடவேண்டும். பாஜக ஆதரவு ஆடிட்டர் யார் என்று குருமூர்த்தி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

3. மேடையில் பேசும் போது அம்புலி மாமா கதைகளைப் பற்றி மட்டும் பேசி விட்டு கம்ன்னு இறங்கி வேடிக்கை (மட்டும்) பார்க்க வேண்டும்.

4. போட்டுக் கொடுப்பவர்கள் யாராக இருக்கும்? என்பதனை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். முடிந்தால் எஸ்வி சேகர் போன்றோர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.

5. பன்ச் டயலாக் வேண்டும் என்று படுத்தி எடுக்கக்கூடாது. இன்று இரவோடு கதை இலாகாவிடம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.

6. ட்விட்டர் ல் செயல்படும் ரசிகர்களிடம் குருவி படம் நடித்து குருவி போலக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்ததுப்பா என்று புரியவைக்க வேண்டும்.

7. கமல், அஜித் போன்றோர்களைப் பார்த்துப் பொறாமைப்படக்கூடாது. காரணம் அவர்களுக்கு சந்திரகேசர் போன்ற அப்பாக்கள் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

8. கடைசியாக எடப்பாடியரை திடீர் அப்பாவாகத் தத்தெடுத்த நிஜ அப்பா சந்திரகேரருக்கு இரண்டு ராத்திரி டயட் இருக்க அறிவுறுத்த வேண்டும்.

16 comments:

KILLERGEE Devakottai said...

//நடிகர்கள் யதார்த்தவாதியாகத்தான் இருக்கின்றார்கள்.

கூடும் இளையர்களின் கூட்டம் தான் பாவம்//

இதை புரிந்து கொள்ள இன்னும் மூன்று தலைமுறை கடக்க வேண்டும்

காரணம் அப்பொழுது இந்த சமூகம் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அப்பொழுதுதான் கூத்தாடியும் நம்மைப் போன்ற மனிதன்தான் என்பதை உணர்வர்.

அறிவுரைகள் ஸூப்பர் நண்பரே...

Yaathoramani.blogspot.com said...

ஆஹா...அற்புதமான யோசனைகள்..அவருக்கு நல்ல நேரம் இருந்தால் இது நிச்சயம் அவரின் கவனத்திற்குப் போகும்..

ஸ்ரீராம். said...

பாவம், அவரைப் படுத்தி எடுக்கிறார்கள்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனைகள்!

வருண் said...

***கமல், அஜித் போன்றோர்களைப் பார்த்துப் பொறாமைப்படக்கூடாது. காரணம் அவர்களுக்கு சந்திரகேசர் போன்ற அப்பாக்கள் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.***

எனக்கென்னவோ விஜய் இவர்களைப் பார்த்தெல்லாம் பொறாமைப்படுவதாகத் தோணவில்லை. நான் விஜய் ரசிகன் இல்லை. விஜய் படங்கள் பார்ப்பதில்லை. விஜயை இன்று மக்கள அமோகமாக ரசிக்கிறார்கள் என்பது உண்மை. அதற்கு சந்திரசேகர்க்கு எந்த வகையிலும் க்ரிடிட் கிடையாது.

வருண் said...

எனக்குப் புரியாதது.

2.0 படம் லைகா தயாரித்து வெளியிட்டு போட்ட காசை எடுக்கவில்லை என்கிறார்கள். அது உண்மையாகவே இருக்கும்னு நம்புறேன். அதுக்கப்புறம் லைகா ரஜினியை வைத்து அடுத்த படம் எடுக்கும்போது 2.0 சரியான வருமானம் வராததால் ரஜினி குறைந்த சம்பளத்தில் நடிப்பதாக சொன்னாங்க. இப்போ என்னடானா ரஜினிக்கு சம்பளம் 100 கோடி லைகா கொடுத்ததாகவும், அதனால்த்தான் போட்ட காசை எடுக்க முடியவில்லைனு சொல்ராங்க. 100 கோடி என்பது சுத்தமான கட்டுக்கதை என்பது என் அபிப்பிராயம். இப்போ என்னனா உங்க சவுக்கு சொல்லுது தர்பார் சையாகப் போகாதனால சன் குழுமம் அடுத்த படத்துக்கு 116 கோடியிலிருந்து 58 கோடி யாக குறைத்துவிட்டதாக சொல்லுது. 116 கோடி என்பது முழு கட்டுக்கதை. 58 கோடி??!!!! இதே மிக மிக அதிகம் அதுவும் ஒரு 70 வயது நடிகனுக்கு. உண்மையான செய்தி எதுவுமே வராதா??!!

வருண் said...

அடுத்து ரஜினிக்கு உள்ள ஐ டி பிரச்சினைக்கு பி ஜே பி உதவுவதாகத்தான் தெரிகிறது.

இப்போ விஜய் பி ஜே பியை ஜி எஸ் டி பிரச்சினை அது இதுனு சொல்லி விமர்சனம் செய்கிறார். ரஜினி செய்வதில்லை. அது மட்டுமில்லாமல், யார் இந்த அகோரம்னு தெரியலை. பிகில் எடுத்து விட்டார். 300 கோடி வசூல்னு இவங்களே சொல்லிக்கிட்டாங்க (உண்மையாக இருக்கலாம்). இவருக்கும் அன்புச் செலழியந்தான் ஃபனான்சியர்னு தோனுது. ஒரு பக்கம் படத்தை ஓட்ட் இவர்கள் வசூல் 300 கோடி ஆயிரம் கோடினு சொல்றாங்க. அப்போ இன்கம் டாக்ஸ் 300 கோடிக்கு கட்டுவதாக கணக்குக் காட்ட தயாராக இருக்கணும் இல்லையா? அதுக்கு ஏன் தயாராக இல்லை??

வருண் said...

நீங்க கந்துவட்டி கொடுக்கிறவன் அன்பு அண்ணே மேல தப்பில்லை. வாங்குறவன் மேலதான் தப்புனு சொல்றீங்க. என்னைப் பொருத்த வரையில் கொடுப்பது தப்பில்லை. வர்ர வருமானத்துக்கு இன்கம் டாக்ஸ் கட்டிவிட்டால். அன்பு ஒழுங்கா கட்டிடுறாரா?

கந்துவட்டிக் கொடுப்பது தப்பில்லை என்பதை ஏற்றுக்க முடியாதுங்க.

ஜோதிஜி said...

1.அன்புச் செழியனிடம் சென்றால் கேட்ட சமயத்தில் 50 முதல் 100 வரை பணமாக கொடுக்க முடியும் என்கிறார்கள். அவர் பணம் இல்லை. யார் யாரிடம் இருந்தோ அவருக்கு வந்து சேர்கின்றது. கொடுப்பவர்கள் எதிர்பார்க்கும் வட்டி அவரால் கொடுக்க முடிகின்றது. இவர் அதை வைத்து தனியாக சம்பாரிக்கும் கலையை கற்று வைத்துள்ளார். இப்போது கணக்கில் கொண்டு வந்து தொழில் செய்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்துள்ளார்.

2. ரஜினி வாங்கியது 100 கோடி ஜிஎஸ்டி 12.5 (இதனை லைகா தனியாக கட்டினார்கள்). இந்த செய்தி உண்மை. பல இடங்களில் பலர் பேசியது எழுதியது வைத்து உறுதியாக சொல்ல முடிகின்றது. நயன்தாரா சம்பளம் 6 கோடி. முருகதாஸ் சம்பளம் 30 கோடி (தர்பார் படத்தில்) ஆனால் விஜய் சம்பளம் 50 கோடி. ஆனால் கணக்கில் கொண்டு வந்தது 30 கோடி. இது தான் பிரச்சனையின் தொடக்கப்புள்ளி.

ஜோதிஜி said...

விஜய் யை பாடாய்படுத்தி தூண்டி விடுவது அவர் ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்ற ஆசைப்படுவது முதலில் சந்திரசேகர் மட்டுமே. விஜய் சமீபகாலமாகத்தான் பேசக் கற்றுள்ளார். அது இயல்பான குணாதிசியம் அல்ல.

ஜோதிஜி said...

தமிழக அளவில் ஒரு தொழில் எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு இளைஞர்கள் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியது சன் குழுமம். தெளிவாக அழகாக நடத்துகின்றார்கள். லாபம் இல்லாமல் எதிலும் இறங்கவே மாட்டார்கள்.

ஜோதிஜி said...

பட்டினிச் சாவு வருமா என்று தெரியவில்லை. நீங்க சொல்லும் காலகட்டத்திலும் தண்ணீருக்கு அலையும் சூழல் உருவாக வாய்ப்புண்டு.

திண்டுக்கல் தனபாலன் said...

அரசு பிடுங்கும் பல தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று...!

சிவானந்தம் said...

பிலிம் நியூஸ் ஆனந்தன் மாதிரி சினிமாக்காரர்களின் (சம்பள) விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யோசனை நன்றாகத்தான் இருக்கிறது. அவரால் கடைபிடிக்க முடியுமா?

G.M Balasubramaniam said...

விஜய் நன்றாக ஆடுவார் யார் ஆட்டுவிக்கிரார்களோ