Tuesday, February 04, 2020

2025 - இந்தியா - மாற்றம் - முன்னேற்றம்

யூ டியூப் தளத்தில் 3 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரைக்கும் உள்ள காட்சிக் கோர்வைகளை வலையேற்றுகின்றார்கள். சிலரின் பேச்சுக்கள் மட்டும் ஒரு மணி நேரம் கடந்தும் பார்க்கும் அளவிற்கு நேயர்கள் இருக்கின்றார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும் வரவேற்பு உள்ளது. அவரவர் ரசனைக்கேற்ப தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த உலகத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.

டிஜிட்டல் வாசிப்பு முறையிலும் இது போன்ற பல விதங்களைப் பார்த்தேன். நாமும் ஏன் முயலக்கூடாது என்பதற்காக முதல் முயற்சியைத் தொடங்கியுள்ளேன். ஏறக்குறைய 5500 வார்த்தைகள் உள்ள நூல். ஆனால் முக்கியமான அவசியமான தற்காலத்தைப் பிரதிபலிக்கும் தகவல் களஞ்சியம்.

திருப்பூர் விட்டு எப்போதும் வெளியே வரப் போகிறீர்கள்? என்று கோரிக்கை மனு அனுப்பியவர்களுக்கு இது 2.0 போலவே இருக்கும்.


விரைவான வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு பத்து நிமிடத்தில் முடிக்கக்கூடியதாக இருந்தது. இது போன்று நாமும் ஒரு நூலை உருவாக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தத் துணுக்குச் செய்தி கண்ணில் பட்டது.

கடந்த ஜனவரி 14,15,16 அன்று அமேசான் முதலாளி ஜெப் டெல்லி வருகை தந்தார். பலருடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். கூட்டத்தில் பேசினார். அறிவிப்புகள் வெளியிட்டார். திரும்பிப் போய்விட்டார். மோடி சந்திக்கவில்லை. முக்கியமான அதிகாரவர்க்கத்தினர் சந்திக்கவில்லை. கோயல் மட்டும் பொன் மொழிகளை உதிர்த்தார். மாட்டிக் கொண்டார். வாபஸ் வாங்கினார்.

என்ன நடந்தது? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன?

இந்தியாவில் அமேசான் இன்னமும் நட்டத்தில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வால்மார்ட் கையகப்படுத்திய ப்ளிப்கார்டு க்கு டப் பைட் அமேசான் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போது 2025 இலக்கு என்பதனை நிர்ணயித்து அமேசான் பெரிய முதலீட்டை இங்கே இறக்கப் போகின்றது.

இந்தியக் குடிமைச் சமூகத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 800 கோடி ரூபாய் அளவில் ஆன் லைன் உணவு வர்த்தகம் இருக்கும் என்று கணித்துள்ளார்கள். அதாவது எல்லோரும் வெளியே சாப்பிடுவதை விருப்பத்துடன் செய்யப் போகின்றார்கள் என்று சோசியம் சொல்லியுள்ளனர்.

இதே போல ஒவ்வொரு துறைகளும் முழுமையாக மாறப் போகின்றது. இந்தச் சமயத்தில் அமேசான் உருவாக்கப் போகின்ற உள் கட்டமைப்பு, நுகர்வோர் சந்தையில் உருவாக்கப் போகும் தாக்கம் எல்லாமே அதிரிபுதிரியாக இருக்கப் போகின்றது என்பதனை யோசித்துக் கொண்டே இரண்டு தமிழ் நாளிதழ் ஒரு ஆங்கில நாளிதழ்களின் என்ன செய்தி வந்துள்ளது என்பதனைப் பார்த்த போது கால் பத்தி அளவில் முக்கியத்துவம் ஏதும் கொடுக்காமல் காமா சோமா என்று எழுதியிருந்தார்கள். ஏன்?

மோடியின் அமைதிக்குக் காரணம் என்ன?

அவர் சொல்லும் டிஜிட்டல் இந்தியா, மின்சார வாகனம், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களை அமேசான் முதலாளி அடுத்த ஐந்தாண்டுகளில் தன் லட்சியக் கனவாகச் சொல்லி அறைகூவல் விடுத்துள்ளார்.

ஆனால் அவரை இந்திய அரசியல் சமூகம் பொருட்படுத்தவே இல்லை. ஏன்?

2025 இந்தியா - மாற்றம் - முன்னேற்றம் என்ற நூல் உங்களுக்கு (விரைவாக வாசிக்க முடிந்தவர்களுக்கு அரை மணி நேர வாசிப்பு) காத்திருக்கின்றது.

இலவசமாகவே வாசிக்க முடியும். காத்திருங்கள். 

2025 - இந்தியா - மாற்றம் - முன்னேற்றம்

#Amazon

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

காத்திருக்கிறேன் ஐயா

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமோ போங்க...

ஜோதிஜி said...

இந்தியா போன்ற அனைத்து வளம் உள்ள நாட்டில் அதிகார மமதையில் அலைபவர்களை தொழில்நுட்பம் ஒன்றே மடக்கும். நிச்சயம் நடக்கின்றதா? இல்லையா? என்று பொருத்திருந்து பாருங்க. நம் இறுதிக் காலத்தில் நிச்சயம் நாம் ஏங்கும் அளவிற்கு இந்தியாவில் மிக நல்ல மாற்றங்கள் நடந்தே தீரும்.

Rathnavel Natarajan said...

நன்றி

வெங்கட் நாகராஜ் said...

தகவல் பகிர்வுக்கு நன்றி ஜோதிஜி.