Thursday, February 20, 2020

Corona கொரானா வைரஸ்


Corona Update

தமிழகத்தில் சுற்றுலாத்தலங்கள் எங்கே சென்றாலும் அங்குள்ள அனைத்துக் கடைகளிலும் சீனப் பொருட்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என்று தொடங்கி தெய்வச் சிலைகள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் சீனமே.

கிராமங்கள், நகர்ப்புறங்கள் என்ற பாரபட்சமின்றி அனைத்து பேன்சி கடைகளும் சீனத்தின் உதவியால் மட்டுமே இங்கே தொழில் செய்து கொண்டிருக்கின்றார்கள். பேன்சி கடை நண்பர்கள் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள்.

தொடர்ந்து செய்திகளைக் கவனித்துக் கொண்டு வந்த போது தமிழகத்தில் சீனப் பொருட்களை மட்டுமே நம்பி இயங்கிக் கொண்டிருந்த வியாபாரிகள் பெரிய பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குத் தெரிந்த சென்னை நபர் மாதம் இரண்டு கண்டெய்னர் என்கிற ரீதியில் வரவழைத்துக் கொண்டிருந்தார். இப்போது ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

பத்து ரூபாய்க்கு வாங்கும் பொருட்களை மனசாட்சியே இன்றி நூறு ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தவர்கள் இப்போது விழிபிதுங்கிப் போய் இருக்கின்றார்கள். இன்னும் ஒரு மாதம் இந்த வைரஸ் பகவான் அருளாசி புரிந்தால் இந்தியா மட்டுமல்ல உலகமே பெரிய பாதிப்பைச் சந்திக்கப் போகின்றது. நாம நல்லாயிருக்கிறதுக்கு அவர்கள் நல்லா இருக்கனுன்னும் வேண்டிக்கத்தான் வேண்டும். மேட் இன் இண்டியா, மேக் இன் இண்டியா எல்லாமே தூத்துக்குடி பக்கம் உள்ள கடல் இருக்கிற திசையில் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. எங்கெங்கும் சீன இந்தியா தான் இப்போது இங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

திருப்பூர் ஏற்றுமதி தொழில் சீனத்தை நம்பித்தான் உள்ளது. குறிப்பாக ஆடைகளுக்குத் தேவைப்படும் உப பொருட்கள் சந்தையில் சீனர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றார்கள். ஆனால் முழுமையாக இல்லை என்பதோடு வட இந்தியர்களும் இதில் இருப்பதால் இதுவரையிலும் பெரிய பாதிப்பு உருவாகவில்லை. ஆனால் விரைவில் உருவாகி விடும் சூழல் உள்ளது.

அங்கே 50 ரூபாய் என்றால் இங்கே 500 ரூபாய். பட்ஜெட் தாங்குமா?

#கொரானாசூனாமிபொள்ளாச்சி பகுதிகளில் 550 முதல் 750க்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் (தென்னை நார் ஏற்றுமதி) உள்ளது. இவர்களின் வர்த்தக மதிப்பு மாதம் 1400 கோடி. 90 சதவிகிதம் ஏற்றுமதி தான் செய்யப்படுகின்றது. குறிப்பாகச் சீனாவிற்குத்தான் அதிகம் ஏற்றுமதியாகின்றது. ஜனவரி, பிப்ரவரி மாதம் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட சரக்குகளுக்கும் பணம் வந்தபாடில்லை. இரண்டு லட்சம் டன் மதிப்புள்ள சரக்கு தேங்கியுள்ளது.

காரணம் கொரானா வைரஸ்.

9 comments:

G.M Balasubramaniam said...

நாய் பற்றி என்னவோ சொல்ல வ்ருகிறீர்கள் புரியவில்லை

ஜோதிஜி said...

நாய் என்ற இடத்தில் விமர்சனம் என்ற வார்த்தையை பொருத்திக் கொள்ளுங்க. இப்போது புரியும்.

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனைதான் ஐயா

வலை ஓலை said...

ஆம். சீனா பல தொழில்களிலும் கோலோச்சி வருகிறது. அமெரிக்காவிலேயே சீனாவின் ஆதிக்கம் தானாம்...

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்ரீராம். said...

மருந்துகள் முதல் சோலார் பேனல் வரை மூலப்பொருள்கள் அங்கிருந்தே வருவதால் பெரும் டிமாண்டை சந்திக்க இருக்கின்றன இதுபோன்ற பல்வேறு துறைகள். 
  
என்ன ஆகப்போகிறதோ...    

மரணம் காட்டும் அந்த வைரஸுக்கு சரணம் சொல்லி  'சென்று வா...  போதும் உன் அதிரடிஆட்டம்' என்று வணங்கித் திருப்பி அனுப்ப வேண்டும்.

வருண் said...

பயங்கர உயிர் சேதம். இந்த வைரஸால் சீனா மற்றூம் உலகமே ஸ்ம்பித்து நிற்கிறது. உயிர் சேதத்தைப் பத்தி ஒரு வரிகூட எழுதாமல் கன்டய்னர் இறக்குறவனுக்கு கவலைப் பட்டுக்கிட்டு இருக்கீங்க. இந்தியாக்கு உள்ளே இந்த வைரஸ் நுழைந்தால், மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.

எவன் செத்தால் நமக்கென்ன? நம்ம பிழைப்பு எப்படியோ ஓடனும்..அவரவருக்கு அவரவர் பிரச்சினை.

ஜோதிஜி said...


எவன் செத்தால் நமக்கென்ன?.......... இது தான் சீனர்களின் தலையாய கொள்கை. இன்று அவர்களையே திரும்பித் தாக்கியுள்ளது.

வருண் said...

நம்ம நம்மளாவே இருப்போம், ஜோதிஜி. அவங்களோட போட்டி போட வேணாம்! :)

வெங்கட் நாகராஜ் said...

வைரஸ் வேதனை - எத்தனை உயிரிழப்பு.

தேங்கிக் கிடக்கும் பொருட்கள் - விரைவில் நிலை சரியாக வேண்டும்.