Sunday, November 29, 2020

பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பக்கால ஆவணங்கள்

 எவையெல்லாம் வரலாறு என்று நம்பவைக்கப்பட்டு நாம் பாடப் புத்தகங்களில் படித்து வந்த அனைத்தும் அது உண்மையல்ல என்பதனை அறியும் போது நமக்கு 50 வயது ஆகின்றது. இப்போது இணையத்தில் பொங்கிக் கொண்டிருப்பவர்கள் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பக்கால ஆவணங்கள் என்ற புத்தகத்தைப் படிக்கப் பரிந்துரை செய்கின்றேன்.



சென்னையில் (1860) பிரசிடன்சி கல்லூரியில் படித்த டால்பாய்ஸ் வீலர் என்பவர் 16, 17,18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை அவர் டைரிக்குறிப்பாக வெளியிட்டுள்ளதைத் தமிழில் ஜெயராமன் என்பவர் மொழிபெயர்ந்துள்ளார், 

பாபர் அக்பர்  முதல் கடைசியில் ஔரங்கசீப் வரைக்கும் (இடையே சிவாஜி) ராபர்ட் கிளைவ், கிழக்கிந்திய நிறுவனம், பிரிட்டன் ஆட்சி போன்றவற்றில் நடந்த நிகழ்வுகளை அப்பட்டமாக எழுதி உள்ளனர்.

வரலாறு என்பது புனைவு அல்ல. அப்பட்டமான ஆவணம். யாரோ ஒருவர் உடைப்பார். மாற்றுவர். எஞ்சியது மிஞ்சும். உண்மைகள் ஒரு நாள் வெளிவந்தே தீரும்.  மதவெறி என்று குதிப்பவர்கள் இது போன்ற புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பாகக் கோரிக்கை வைக்கின்றேன்.

என் ஆங்கர் பாட்காஸ்ட் ல் ஆவணப்படுத்துகிறேன்.

நவீன இந்தியாவின் வரலாற்றுக்குத் தொடக்கமாக அமைந்த பிரிட்டிஷ் இந்தியாவின் தொடக்க காலம் இன்னும் விறுவிறுப்பானது. அதைக் காலவாரியாகப் பேசுகிறது இந்நூல். ஒரு நாவலை வாசிப்பதுபோல, ஒரு வரலாற்று நூலை இலகுவான நடையில் தர முடியும் என்பதற்கு இந்நூல் சாட்சி.
சென்னையின் இதழியல் வரலாற்றில் ‘மெட்ராஸ் ஸ்பெக்டேட்டர்’ (Madras Spectator) பத்திரிகை முக்கியமானது. அதன் ஆசிரியராக பணியாற்றியவர் ஜேம்ஸ் டால்பாய்ஸ் வீலர் என்ற ஆங்கிலேயர். சென்னை பிரசிடென்ஸி கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்து, பின்னர் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற வரலாற்றாசிரியர் இவர்.

1600-களில் தொடங்கி 1770-கள் வரையான தொடக்க கால பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாற்றை ‘எர்லி ரெக்கார்ட்ஸ் ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா’ என்ற நூலாகத் தொகுத்தார் வீலர். 1897-ல் வெளியான இந்த நூலை உயிர்ப்புடன் மொழிபெயர்த்திருக்கிறார் க. ஜெயராமன்.

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஏற்கனவே இந்நூல் பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்

ஜோதிஜி said...

நன்றி. மீண்டும் நினைவூட்டல்.