Friday, August 14, 2020

அந்த 42 நாட்கள்

சம்பவம் நடந்த போது, சம்பவம் நடத்த களத்திலிருந்து போன்ற வார்த்தைகள் ஊடகங்கள் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் போது நம் மனநிலை எப்படியிருக்கும்?சில வாரங்களுக்கு முன்பு அஸ்ஸாமில் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டது ஒவ்வொரு வருடமும் இப்படித்தான். மகாராஷ்டிராவில் மும்பை மாநகரமே வெள்ளக்கடாகி மாறிய போதும் சென்னையில் இருப்பவர்களுக்கு அது குறித்த புரிதல் இருக்காது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்து சென்னை மூழ்கிய போது காரைக்குடியில் இருந்தவர்களுக்கு அது குறித்த கவலையில்லை.

இப்படித்தான் நம்மை குறிப்பிட்ட "சம்பவம்" தாக்காதவரைக்கும் வாசித்து கடக்கும் செய்திகளாக ஒவ்வொரு நாளும் கழிகின்றது. ஆனால் கொரானா அப்படியல்ல.

இந்தியாவின் குடிமகன்கள் 132 கோடி பேர்களும் நேரிடையாக மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராகவே இருப்பார்கள். 2019 டிசம்பர் மாதம் சிங்கப்பூர் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருப்பதை எழுதத் தொடங்கினேன். ஜனவரி பிப்ரவரியில் இத்தாலி ஸ்பெயின் போன்ற நாடுகளில் இராணுவ வண்டிகளில் கொண்டு போய் எரிக்கும் அவலத்தையும் எழுதிய சமயங்களில் கூட இந்தியா விழித்துக் கொள்ளவில்லை. ட்ரம்ப் வந்தார். கையாட்டினார். வாகன அணிவகுப்பு ஜோராக களைகட்டியது. முக்கியமான இந்திய 17 பன்னாட்டு விமான நிலையங்களில் ஒவ்வொரு நாளும் வந்து இறங்கிக் கொண்டிருந்தவர்களை வருக வருக என்றே வரவேற்று வரவில் வைத்துக் கொண்டிருந்தது. மார்ச் மாதம் இறுதியில் லேசாக உறக்கம் களைய இறுதியில் பொது ஊரடங்கு இந்தியாவிற்கு அறிமுகம் ஆனது.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா மற்றும் தமிழ்நாடு என்று தொடங்கி திருப்பூரில் நான் கண்ட காட்சிகள், சமூக நிகழ்வுகளை தொடர்ந்து எழுதி வந்தேன்.

உலக சுகாதார மையம் சீனாவுடன் ஏன் கை கோர்த்தது. பின்னால் இருந்த அரசியல் என்ன? இன்று வரையிலும் உலக சுகாதார மையத்தின் மேல் ட்ரம்ப் ஏன் கொலைவெறியில் இருப்பதோடு ஒதுக்கிய நிதியை நிறுத்தினார் என்பதில் தொடங்கி கொரானாவின் மொத்த ஜாதகத்தையும் எழுதியுள்ளேன். இரண்டு மாதங்களில் நான் பார்த்த வாசித்த பார்வையை இந்த மின்னூலில் பதிவு செய்துள்ளேன்.

இப்போது கொரானா என்றால் சிரித்துக் கொண்டு கடந்து விடும் மனநிலைக்கு வந்து விட்டோம். தொடக்கத்தில் உருவாக்கிய தாக்கம் என்பதனை எவரும் எழுத்தில் எழுதிவிட முடியாது அல்லவா? அடுத்த பத்து வருடங்களில் இப்போது நடந்த நிகழ்வுகளைப் பற்றி யோசிக்கும் போது எப்படியிருக்கும்?

இன்று (14/08/2020) மதியம் 1 மணி முதல் இலவசமாக வாசிக்கக் கிடைக்கும்.


அந்த 42 நாட்கள்.

https://amzn.to/2XYzn3n


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துகள் அண்ணே...

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் ஜி.

G.M Balasubramaniam said...

எழுதுவது எல்லாம் மின்னூல்களாகின்றன

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி ஐயா

ஜோதிஜி said...

இங்கு எழுதாத பல கட்டுரைகளும் மின்னூலில் வரும்.

ஜோதிஜி said...

நன்றி