Wednesday, August 26, 2020

வறட்டுக் கௌரவும் வாரிச் சுருட்டும் டாஸ்மாக்கும்

 "வறட்டுக் கௌரவம்" என்றால் என்ன?

கொரானா செய்த மாய மந்திரங்களின் விளைவாக அரசுப் பள்ளிக்கூடங்களில் கூட்டம் அலை மோதுகின்றது. தனியார் பள்ளிக்கூடங்களில் விண்ணப்ப பாரம் என்ற ஒற்றை காகிதத்திற்கு ரூபாய் ஐந்து ஆயிரம் கட்டி தங்கள் கௌரவத்தை நிலைநாட்டிய எளிய தமிழ்ப் பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரையும் வரிசையில் பார்த்தேன். எவரெல்லாம் முதல் கட்டணமான இருபது ஆயிரத்தைக் கட்டுகின்றார்களோ? அவர்களுக்கு மட்டும் தான் இணைய வகுப்பு என்ற அறிவிப்பைப் பார்த்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அடுத்த இரண்டு வருடச் செயலாக்கத்தின் அடிப்படையில் அரசு பள்ளிக்கூடச் சேர்க்கையில் முன் வரிசையில் நிற்கின்றார்கள்.பெரியார் மண் என்றால் என்ன?

"சார் இன்றைக்கு ஆவணி ஆவட்டம். சுப முகூர்த்த தினம். இன்றைக்குப் பிள்ளையைச் சேருங்கள். அடுத்த வருடமும் எளிதாகத் தேர்ச்சி அடைவார்" என்று எளிய தமிழ்ப் பிள்ளையின் பெற்றோர் மற்றொரு எளிய தகப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சமீபத்தில் கொரானா போல மற்றொரு வைரஸ் மலேசியாவில் வீர்யத்துடன் பரவிக் கொண்டிருப்பதை மனதில் வைத்து சொல்லியிருப்பாரோ என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


ஏன் நாங்கள் எங்கள் விவசாயி எடப்பாடி அய்யாவை மக்கள் மனதைப் புரிந்த எளிய முதல்வர் என்ற அழைக்கின்றோம்?

கடந்த ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மக்கள் வெளியே சுற்றித் திரிந்தால் கொரானா என்ற பூச்சாண்டி எளிய தமிழ்ப் பிள்ளைகளைப் பிடித்து விடுவான் என்று யோசித்த விவசாயி அய்யா உருவாக்கிய திட்டம் தான் வாரத்தில் ஒரு நாள் பொது ஊரடங்கு. வாரம் முழுக்க உழைத்துக் களைத்த தமிழ்ப் பிள்ளைகள் அய்யாவின் வேண்டுகோளைப் புரிந்து கொண்டு சனிக்கிழமை தங்களுக்குத் தேவையான உற்சாக பானத்தை மொத்தமாக கொள்முதல் செய்து கொண்டிருந்த காரணத்தால் ஒரு நாள் விற்பனை அதிரிபுதிரியாக எகிறத் தொடங்கியது. வீட்டுக்குள் மல்லாக்க படுத்துக் கொண்டு அரசுடன் ஒத்துழைப்பு நல்கியதை நாம் அனைவரும் அறிந்ததே.


ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் விற்பனையில் திருப்பூரை பின்னுக்குத் தள்ளி மதுரை விற்பனையில் பல முறை முன்னிலை வகித்தது. தாகத்தில் தவித்துத் திண்டாடி பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த சென்னை வாழ் எளிய தமிழ்ப் பிள்ளைகளின் தாக சாந்தியை நிவர்த்தி செய்தார் எங்கள் விவசாயி. எதிர்க்கட்சி ஏகடியம் பேசியது. அது பொறாமை என்று நம் பிள்ளைகளுக்கு தெரியாதா?

இன்று மொத்த தமிழக விற்பனையையும் பின்னுக்குத் தள்ளியுள்ளனர் எங்கள் தலைநகரத்தின் தன்னிகரில்லா தமிழ்ப் பிள்ளைகள். நீங்கள் தருவது வாரத்தில் ஒரு நாள். நாங்கள் ஒவ்வொரு நாளும் அதே தொகையைத் தருகின்றோம் என்று சங்கல்பம் எடுத்துள்ளனர் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வலதுசாரி தீவிரவாதம்? தி இந்து ராம் அவர்களுக்கு 3 கேள்விகள்! - மாரிதாஸ் |...


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அண்ணாமலை பற்றி அடுத்து வரணுமே என்று நேற்று நினைத்தேன்... முகநூலில் கண்டேன்... நினைத்தது நடந்தது... மகிழ்ந்தேன் அண்ணே...

ஜோதிஜி said...

எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கு வைத்துக் கொண்டு பணி ஓய்வு பெற்றவுடன் திமுக அதிமுக கட்சியில் சேரும் இஆப மற்றும் இகாப அதிகாரிகளைக் கவனித்துப் பாருங்க. அண்ணாமலை போன்றவர்களையும் கவனித்துப் பாருங்க. பாஜக முன்னெடுக்கும் அரசியல் வித்தைகள் புரியக்கூடும்.

கரந்தை ஜெயக்குமார் said...

மதுவிற்பனை
வேதனை

வெங்கட் நாகராஜ் said...

மது விற்பனை - வேதனை.