Friday, August 21, 2020

சமாதி (தமிழக) அரசியல்

 தமிழக கிராமங்களில், கிராமங்களை ஒட்டிய சிறு நகரங்களில் இன்று வரையிலும் வியாபாரிகள் சங்கம் மூலமாக ஒரு வாரம் முழுக்க "மண்டகப்படி" என்று அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான கோவில் திருவிழா களைகட்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இன மக்கள் அந்த விழாவை தங்கள் சார்பாக எடுத்து நடத்துவார்கள். சந்தனக் காப்பு, பூச்சொரிதல், வாணவேடிக்கை என்ற திருவிழாக் கூட்டத்தைப் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாகயிருக்கும்.


1980 முதல் 90க்குள் பல ரெக்கார்ட் டான்ஸ், கரகாட்டம் இத்துடன் நாதஸ்வரக் கச்சேரியுடன் மெல்லிசை என்று எதைப் பார்ப்பது எதை விடுவது என்று குழப்பமாக இருக்கும். அண்ணன்மார்கள் அனைவருக்கும் அன்று மட்டும் தலை முழுக்க கண்களாக இருக்கும். அப்போது கனகாம்பரம் தான் அதிக விற்பனையாகும். "தலையெல்லாம் பூக்கள் வாயெல்லாம் பற்கள்" என்று அக்காக்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டேயிருப்பார்கள். இரட்டைச் சடை முதல் சவுரி சடை வரைக்கும் அழகூட்டும். இவை இப்போது படிப்படியாக மாறிவிட்டது அல்லது குறைந்து கொண்டே வருகின்றது.

அதற்குப் பதிலாக சென்னையில் மெரினாவில் ஓர் இடத்தில் தினமும் பூச்சொரிதல் விழா, தெய்வ வழிபாடு, பிரார்த்தனை, நெக்குருக வேண்டுதல், புளகாங்கிதப்படுதல், புண்ணிய பூமியைத் தரிசித்த அளவுக்கு நெக்குருகிப் போய் பிள்ளையைத் தூக்கி "டேய் காதை வைத்து கேளுடா எம்சியாரு கட்டியிருக்கிற வாடச் சப்தம் கேட்கும்" என்று அப்பாவி எளிய தமிழ்ப் பிள்ளைகள் இன்னமும் இந்த இடத்தைச் சுற்றிவருதல் ஒருபக்கம்.

மற்றொரு புறம் கக்கா போவதற்கு முன் அதிகாலை காக்கா கத்துவதற்கு முன்பு வெள்ளையும் சொள்ளையுமாக வந்து நிற்பதைப் பார்க்கும் போது "கோபுர தூசிகளும் கொலைவெறி தொண்டனும்" என்ற கவிதை பொங்கிப் பிரவாகமாகின்றது.

நல்ல வேளை "கர்மவீரர்" தப்பித்து ஒதுங்கி வேறொரு பக்கம் உறங்கிக் கொண்டிருக்கிறார்.😏

5 comments:

KILLERGEE Devakottai said...

என்னைப் பொருத்தவரை மெரினா சுடுகாடுதான் நண்பரே...

எனது ஐயமெல்லாம் இங்கு போய் வரும் மா'க்கள் வீட்டுக்குள் போகும் முன்பு குளிப்பதில்லையே... ஏன் ?

ஜோதிஜி said...

நான் நீங்க யோசித்த மாதிரி யோசிக்கவே இல்லை. அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

A1 Money மண்டபம்...?

ஜோதிஜி said...

அழகான பெயர்.

வெங்கட் நாகராஜ் said...

சென்னைக்கு மெரீனா என்றால் தில்லியில் ராஜ்காட்! வரிசையாக சமாதி தான்! ஆனால் சென்னை அளவுக்கு இங்கே இந்த சமாதிகள் பார்க்க திருவிழா கூட்டம் செல்வதில்லை! காந்தி சமாதியில் மட்டும் சுற்றுலாவாசிகள் தினம் செல்வதுண்டு. மற்ற சமாதிகளில் நினைவு நாள், பிறந்த நாள் சமயங்களில் குடும்பத்தினரும், கட்சியினரும் செல்வதுண்டு - குறைவான அளவிலேயே.