Saturday, October 12, 2019

வங்கிகள் மாற்றங்களும் அவஸ்த்தைகளும்

*_வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஒரு செய்தி வந்தது._*   ஆனால் அதன் பின்னூட்டமாகப் பல்வேறு கமெண்டுகள் வந்தன._

அதில் மிகப் பலர் குறைப்பட்டுக் கொண்ட விஷயம் :*_'எங்களை ATM ல் போய்ப் பணம் எடு என்று விரட்டிவிடுகிறார்கள்'_*    *_'பணம் செலுத்தப் போனால் - Remitting Machine - க்குப் போ என்று அனுப்பிவிடுகிறார்கள்'_*

*_'பாஸ் புத்தகம் என்ட்ரி போடப் போனால் கஸ்டமர் e- lounge க்குப் போ என அனுப்பிவிடுகிறார்கள்'_*   *_'அப்புறம் இவர்கள் வங்கிக்குள் அமர்ந்து என்ன ஆணியைப் பிடுங்குகிறார்கள்?'_*   _இவர்களுடைய கோபம் நியாயமானதுதான்._  *_ஆனால் முழுமையான பின்னணியைத் தெரிந்து கொண்டு கமென்டுவது நலம்!_*

_Roadmap 2020 என்ற Vision Document ஐ சுமார் 10 / 15 ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்து விட்டார்கள்!_   _அதாவது 2020 ல் வங்கிகள் எப்படி இருக்க வேண்டும், ஊழியர்கள் எவ்வளவு பேர் இருக்க வேண்டும், வங்கிக் கிளைகள் செயல்படும் கட்டிடத்தின் CARPET AREA எவ்வளவு இருக்க வேண்டும்... என்பதை எல்லாம் 2000 களின் தொடக்கத்திலேயே திட்டமிட்டு விட்டார்கள்._

_அதன் முதல் படி ON FLOOR BANKING லிருந்து OFF FLOOR BANKING ஐ நோக்கி நகர்வது!_   _அதாவது நீங்கள் வங்கிக்கு 'உள்ளே' சென்று பணம் எடுக்கலாம் - ATM கார்டு மூலம். அப்படி நிறுவப்பட்ட ATM இயந்திரங்களை 2 வகையாகப் பிரித்தார்கள்._   _வங்கிக் கிளை அலுவலகத்தை ஒட்டியே அமைந்தால் ON SITE ATM: ரயில்வே ஸ்டேஷன் - பஸ் ஸ்டாண்ட் - போன்ற வெளி இடங்களில் அமைந்தால் OFF SITE ATM._

*_இந்த முதல் மாற்றத்திலேயே வங்கிக்குள் அதன் தாக்கம் ஏற்பட்டது - நான்கு / ஆறு CASH COUNTER கள் செயல்பட்ட பெரிய கிளையில் கூட 2/3 என்று பணம் பெறும் / செலுத்தும் கவுன்டர்கள் குறைக்கப்பட்டன._* _வாடிக்கையாளர்களை ON FLOOR லிருந்து OFF FLOOR க்கு நகர்த்துவது என்பதன் அடுத்த கட்டம் NET BANKING, MOBILE BANKING போன்றவை._

_ஒருவருக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றால் என்ன செய்தீர்கள்?_

_வங்கிக் கிளைக்கு வந்தீர்கள் - DEMAND DRAFT பணம் கட்டி எடுத்தீர்கள் - அதைத் தபாலில் அனுப்பினீர்கள்!_  _அதெல்லாம் வேண்டாம் ராசா, நீ உன் வீட்டிலோ அலுவலகத்திலோ இருந்தபடியே நீ விரும்பும் நகருக்கு - THE SAME BANK OR FROM BANK TO BANK - பணம் அனுப்பு ராசா! இந்தா பிடி MOBILE BANKING/ NET BANKING..._

_இப்போது மிக அத்யாவசியமான சில GOVT TRANSACTIONS/ பல்கலைக் கழகக் கட்டணம்/ TENDERS... இவை தவிர வேறெதற்கும் DD தேவைப்படுவதில்லை - எல்லாம் NET BANKING தான் - TNEB/ TELEPHONE BILL/ INSURANCE PREMIUM உட்பட!_

_OFF FLOOR BANKING என்பதற்கு இரண்டு நோக்கங்கள்:_

*_1) வாடிக்கையாளர்களை முடிந்தவரை வங்கிக் கிளைக்கு 'உள்ளே' வருவதைத் தவிர்ப்பது_*   *_2) ஊழியர்களை அதற்கு ஏற்பக் குறைப்பது._*

_இதில் 2 வது நோக்கம் மிக வேகமாக நிறைவேறி விட்டது. 30 க்ளார்க், 3 Special Assistant, 6 Officer, 1 Field Officer (Agriculture), 2 Managers (1 internal control + 1 Branch Head)... இது போகக் கடைநிலை ஊழியர்கள் 4 பேர்.... எல்லாம் போயே போச்சு!_

_இப்போதெல்லாம் 30 CLERKS இருந்த கிளையில் மூன்றே பேர்தான்!_

_CBS எனப்படும் கம்ப்யூட்டர் வலை இணைப்பு சாத்தியமானவுடன் ஊழியர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைந்தது!_   *_ஆனால் வாடிக்கையாளர்கள் / பொதுமக்கள் பெரும்பாலோர் இப்படிப்பட்ட மாற்றங்களுக்குப் பழகவில்லை._*

_ACCOUNT STATEMENT எனப்படும் -வாரம் வாரமோ, மாதம் மாதமோ - கேட்டு வாங்கும் வியாபார வாடிக்கையாளர்கள் - CURRENT ACCOUNT - வைத்திருப்பவர்கள் கூட மிக மெதுவாகவே இந்த மாற்றங்களை ஏற்றனர்!_

_OFF FLOOR BANKING ல் இதுவும் ஒரு பகுதிதான்! அதாவது STATEMENT வாங்க ஏன் வங்கிக்கு 'உள்ளே' வருகிறீர்கள்?_  _e-Mail address கொடுங்கள் - உங்களுக்கு எத்தனை நாளைக்கு ஒரு முறை STATEMENT வேண்டும் சொல்லுங்கள் - Monthly, Fortnightly, Weekly, Daily- என்பதை நீங்கள் சொன்னால் போதும்._

_உங்களுக்கு e-Mail மூலம் வரும் - உங்களுக்கு Printed Statement வேண்டுமானால் Pen Drive ல் போட்டு நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்!_  _இதே மாற்றம் Savings Bank எனப்படும் சாதா கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும்!_

_ஆக... இப்படிப் பல வகைகளில் மக்களை OFF FLOOR BANKING நோக்கித் தள்ளியும் போகாதவர்களை என்ன செய்வது?_  _இதோ ஒரு BAR CODING SLIP உங்கள் பாஸ்புத்தகத்தில் ஒட்டி உங்கள் கணக்கோடு லிங்க் செய்து விடுகிறோம் - நீங்களே போய் PASSBOOK PRINTER ல் போட்டுக் கொள்ளுங்கள்!_

_40000 ரூபாய்க்கு உட்பட்டு (இப்போதைய லிமிட் என்னவோ) பணம் எடுக்கவோ, போடவோ வேண்டுமா... இயந்திரங்கள் மூலம் செய்யுங்கள் - 'உள்ளே' வந்து CASH COUNTERல் வரிசையில் நின்று சிரமப்படாதீர்கள்!_

*_இப்படி எல்லாம் திட்டமிட்டவர்கள் யார்? வங்கி ஊழியர்களும், அதிகாரிகளுமா?_*  _இவை எல்லாம் இன்று துவங்கியது இல்லை, மன்மோகன் சிங், சிதம்பரம், UPA காலத்திலும் ஏன் அதற்கு முன்பே 'ஐக்கிய முன்னணி' காலம்...._  _'வங்கித் துறைச் சீர்திருத்தங்கள்'- என்பதற்கு நரசிம்மம் கமிட்டி பரிந்துரைகள் உள்ளிட்ட மிக நீண்ட வரலாறு உண்டு!_

_அதில் மிக முக்கியம் VISION 2020 என்று இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட VISION DOCUMENT!_  _இப்போதைய நிலை என்ன தெரியுமோ? (இது வந்தே நான்கைந்து ஆண்டுகள் ஆகி விட்டன)_

_'அதாவது ஒரு கிளை என்றால் 2 (இரண்டே இரண்டு) TELLERS போதும். ஒருவர் கவுன்டருக்கு உள்ளே அமர்ந்து பெருந் தொகைகளை மட்டும் பணமாக வாங்குவார். ( BULK REMITTANCE FROM CUSTONERS AND BUSINESS ESTABLISHMENTS LIKE PETROL BUNK, TRANSPORT CORPORATIONS, TNEB etc)._

_2வது TELLER என்பவர் கவுன்டருக்கு வெளியில் அமர்ந்தபடி ACCOUNT OPENING, ATM CARD DISTRIBUTION போன்ற MISCELLANEOUS வேலைகள் செய்வார்._  இவர்களுக்கு ஒரு அதிகாரி - கிளையின் COMPUTER SYSYEMS மேற்பார்வைக்கு SYSTEM ADMINISTRATOR அவ்வளவுதான்._

*_அதற்குத் தகுந்தாற் போல் கிளைகள் பரப்பளவில் சிறியதாகவும், வாடகை குறைவாகவும் அமைய வேண்டும். இந்த திசையில் வங்கிகள் நகர வேண்டும் என்பதெல்லாம் நீண்ட காலம் முன்பே வகுக்கப்பட்ட கொள்கைகள்!_*

*_ரயில்வேத் துறையில் மாற்றம் வரவில்லையா? ஒரு ஊருக்குச் செல்ல டிக்கெட் ரிசர்வ் செய்ய எப்படி லோல் பட்டோம்? கெட்டி அட்டை டிக்கெட், கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட் டிக்கெட்..._*   _இப்போதெல்லாம் ONLINE RESERVATION - அதுவும் டிக்கெட் காலி உள்ளதா, வெயிட்டிங் லிஸ்டா, RAC யா எல்லாம் தெரிகிறதே...._  இப்படித்தான் வங்கித் துறையும் இன்னும் பல மாற்றங்களைச் சந்திக்கும்!_*

_நீங்கள் கிளைக்கு உள்ளேயே செல்லாமல் உங்களின் சகல தேவைகளையும் ONLINE மூலமே செய்ய வேண்டி வரும்!_   *_எனவே எனது அன்பான வேண்டுகோள் - அடுத்த முறை யாரேனும் ஊழியர் - 'போய் மெஷினில் பணம் கட்டுங்க/ எடுங்க/ பாஸ்புக் போட்டுக்கங்க'- என்று சொன்னால் டென்ஷன் ஆகாதீர்கள்!_*

*_இன்னும் சில ஆண்டுகளில் அதைச் சொல்வதற்குக் கூட உள்ளே கவுன்டரில் எவரும் இருக்க மாட்டார்கள்!_* ......


மொழி அரசியல்

மம்தா பேனர்ஜி

எம்.ஜி.ஆர் )( விஜயகாந்த்

ஆவின் பாலும் ஆதார் அட்டையும்

பெற்றோர்கள் ஆசிரியர்களாக மாற வேண்டாம்?

அச்சு ஊடகம் 2019

நேரு, இந்திரா,சஞ்சய், ராஜீவ் .........

அருண் ஜெட்லி

உங்கள் வீட்டில் (மகன்/மகள்) வாசிக்கச் சொல்லவும்.

2 comments:

Pandian Subramaniam said...

கடைசி வரி வெகு சீக்கிரமாக நிறைவேறப் போகும் உண்மை.

KILLERGEE Devakottai said...

எப்படியோ வங்கியில் ஆட்களை களையெடுத்தால் கொள்ளைக்காரர்களால் ஊழியர்களின் உயிருக்கு ஆபத்தில்லை.

ஆனால் சொற்ப சம்பளத்தில் வேலை செய்யும் ஏடிஎம் மிஷின் காவலாளிகளுக்கு பிரச்சனை அதிகரிக்கும்.