Friday, October 04, 2019

Avarum Naanum: என் ஸ்ரீனிவாசன் இவர்தான் - வானதி ஸ்ரீனிவாசன்


திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கும் பாஜகவிற்கு ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. 1980 வாக்கில் உங்களுக்குத் தெரிந்த திமுக அல்லது அதிமுக பிரபல்ய முகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பலரும் அங்குமிங்கும் தாவி மீண்டும் உள்ளே வந்து வெளியேறி என்று வந்து போனவர்களாக இருப்பார்கள். திமுக வில் இருப்பவர் அதிமுக வில் இருந்த போது பேசிய பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வரும் போது அவரை பதம் பார்க்கும்.

இரண்டு கட்சியிலும் குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே கட்சியில் இருக்கின்றார்கள்.

இங்குக் கட்சியின் கொள்கையை விடத் தனி நபர்களின் முகம் தான் முன்னிறுத்தப்படும். அண்ணா, பெரியார் என்று சொன்னாலும் இன்று வரையிலும் கலைஞர், எம்ஜிஆர் போன்றவர்கள் கட்சியின் ஆதார நாடி. ஆனால் பாஜகவிலோ அல்லது அதன் துணை மற்றும் சார்ந்துள்ள பிரிவுகளில் கொள்கை தான் பேசு பொருளாக இருக்கும். அந்தக் கொள்கை உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். இல்லாமல் போகலாம். ஆனால் அதன் அடிப்படை மாறாது.

முன்பு வாஜ்பாய் இருந்தார். அடுத்து அத்வானி என்று பேசப்பட்டார். இப்போது மோடி வந்துள்ளார். ஆனாலும் அதன் கட்டுமானம் இன்று வரையிலும் அவர்களின் சித்தாந்தம் அடிப்படையில் தான் நகர்கின்றது.

அடுத்த ஐந்தாண்டுகள் போல அவர்களின் திட்டமிடுதல் என்பது கால் நூற்றாண்டு என்கிற ரீதியில் தான் இருக்கின்றது.

சென்ற முறை உத்திர பிரதேசத்தில் வெல்ல வேண்டும் என்பதற்காக மோடி ஆட்சிக்கு வந்த அடுத்த வருடமே அமித்ஷா களம் இறக்கப்பட்டார். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற பேச்சே இல்லை. உடனே துவங்கு. உடனே செல். களப்பணி முக்கியம். முகம் தேவையில்லை. எங்கங்கு பிரச்சனையிருக்கின்றதோ அங்கே செல். அதனைச் சாதகமாக மாற்ற முடியுமா? போன்ற கட்டளைகள் கடைசி சாவடி வரைக்கும் கொண்டு சென்றனர்.

மதம் முக்கியம். அதனை விட வாக்களிக்கும் வாக்காளர்களின் வாக்கு முக்கியம். அவன் நம்பும் காரணிகள் எல்லாவற்றையும் விட முக்கியம். அதனைச் சாதகமாக மாற்று. இதற்கு மேலாக எங்கங்கு எவர் இருக்கின்றார்? அவரின் சாதகம் என்ன? பாதகம் என்ன? போன்ற அனைத்து காரணிகளையும் அலசு. ஆன்மீக காரணங்கள், அரசியல் காரணங்கள், இதற்கு மேலாகக் கடந்த காலத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய கட்சியின் வரலாற்றுக் காரணங்கள் என்று ஒன்று விடாமல் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

அறிக்கை முக்கியம். அது வெற்று அறிக்கை அல்ல. அறிவை விசாலமாக்கும் முன்னெச்சரிக்கை தரும் அறிக்கையாக இருக்கும். அதன் பின்னே காய்கள் நகர்த்தப்படுகின்றது. விழத் தயாராக இருப்பவர்கள், விழ வைக்க வேண்டும் என்று பட்டியலில் உள்ளவர்கள் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கின்றார்கள்.

இது போன்ற காரணத்தால் நம்ப முடியாத வெற்றியை பாஜக உத்திர பிரதேசத்தில் பெற்றது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்திலும் கால் பதித்தார்கள். இவையெல்லாம் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. காரணம் இங்கு களப்பணி என்பதே தொடங்கவில்லை. வேறுபட்ட கணக்கீடு அடிப்படையில் தான் இந்த மாநிலத்தைக் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள் போல.

இப்போது தெலுங்கானா ஆளுநர் பதவிக்கு உயர்ந்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் அவர் பாஜக வில் இணைந்து தன் பணியை (1980க்கு பிறகு) துவங்கிய காலகட்டத்தில் இன்று பிரபல்யமாக பேசப்படும் டயாலிஸ் மருத்துவச் சிகிச்சையை இலவச முகாம் மூலம் நடத்தியவர். அன்று பாஜக என்ற கட்சியே தமிழகத்தில் இருப்பது ஆயிரம் பேர்களுக்குக்கூடத் தெரியாது.

ஆனால் மரம் தாவும் பறவை போல எவரும் மாறாமல் இருந்தனர். பணம் துரத்திப் பறவைகள் போல அள்ளிக்குவித்து விட வேண்டும் என்று ஆவலாய் அலையவும் இல்லை.

அரசியலில் இரண்டு விதம் உண்டு. எப்படி பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் சொல்லும் அறிவுரை போல நீண்ட கால முதலீடு நிறைய லாபம் என்பது போல அர்ப்பணிப்புடன் கூடிய நீண்ட கால கட்சிப்பணி என்பது கண்ணியமான இடத்தை பாஜக வில் பெற்றுத் தரும் என்பதனை இன்று எவரும் நம்பும் நிலைக்குக் கட்சி கட்டுக் கோப்புடன் உள்ளது.

புதிய தலைமுறை வெளியிட்டுள்ள அடுத்த அவரும் நானும் நிகழ்வில் வானதி சீனிவாசன் பங்கெடுத்துள்ளார்.

நிதானமான அணுகுமுறையும், நாகரிகமான முன்னெடுப்புகளும் இருக்கும் அவரின் செயல்பாடுகள் இங்குள்ள அவசர உலகில் பரபரப்பு நிகழ்வில் முன்னிலை வகிக்காமல் இருக்கலாம். ஆனால் டெல்லி வரைக்கும் ஆதிக்கம் செலுத்துக் கூடிய முக்கிய தலைவராக இருந்த போதிலும் அவரின் இந்த கட்சி பணி அடிமட்டத்திலிருந்தே தொடங்கியுள்ளது. கல்லூரி வாழ்க்கை காதலைத் தந்துள்ளது. கட்சி பணியில் ஒன்று சேர வைத்துள்ளது. அது திருமணம் வரைக்கும் முடிந்துள்ளது. பெற்றோர்கள் சம்மதம் பெற்று இணைந்துள்ளனர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் என்றால் பெயர் சொல்லத் தேவையிருக்காது. அதே போல இவருக்கு இவர் பெயருடன் சீனிவாசன் என்ற பெயர் சொன்னால் தான் புரியும் என்கிற அளவிற்கு இருவரின் பெயரும் வாழ்க்கையும் கட்சியோடு இன்று இணைத்துள்ளது. திருமண புகைப்படத்தில் பழைய நடிகை சுஹாசினி போலவே இருக்கின்றார்.KINDLE READING

ஈழம் - படிக்க மறந்த வரலாற்றுக் குறிப்புகள்: ஈழ வரலாற்றில் இதுவரையிலும் வெளிவராத சர்வதேச அரசியல்

5 முதல் 50 வரை: ஐம்பது என்பது வயதல்ல

டாலர் நகரம் (DOLLAR NAGARAM): A Tamil book about the history of Tirupur city and auto biography

அந்தரங்கக் கதைகள்: பாலியல் தொழிலாளியின் பாசப் போராட்டம்

பஞ்சு முதல் பனியன் வரை: ஒரு தொழில் நகரின் வரலாறு

ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி!: அஞ்சலிக் கடிதங்களின் தொகுப்பு

3 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

//அவர் பாஜக வில் இணைந்து தன் பணியை (1980க்கு பிறகு)//

தகவலில் பிழையிருக்கிறது ஜோதிஜி! தமிழிசை பிஜேபியில் இணைந்தது 1990களின் இறுதியில். தேர்தல் களத்தில் வேட்பாளராக அறிமுகமானது 2006.சட்டசபைத் தேர்தல்களில் தான்!

ஜோதிஜி said...

நண்பருடன் பேசிய போது கிடைத்த தகவல் இது. ஒரு வேளை நீங்க சொன்னது இருக்க வாய்ப்புண்டு.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. காலையிலேயே பதிவு படித்தேன் என்றாலும் இப்போது தான் காணொளியைக் காணமுடிந்தது. பொதுவாக தொலைக்காட்சி பார்ப்பதில்லை என்பதால் இவரின் பேச்சு கேட்டதில்லை.