Thursday, October 17, 2019

படம் பார்த்து கதை சொல் (அக்டோபர் 2019)


ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து அரசுத் தேர்வு வரப் போகின்றது.  அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விதிவிலக்கு பெற்று உள்ளனர்.  எப்போதும் போல இணைய உலகம் பொங்கிப் பொங்கல் வைத்துக் கொண்டு இருக்கிறது.  ஆனால் இந்தப் படத்தைத் திருப்பூரில் சில வாரங்களுக்கு முன் ஒரு பள்ளியின் முன்பு பார்த்தேன்.  இது தான் திருப்பூரில் உள்ள 2019 ஆம் ஆண்டு நிலவரம்.



தமிழக அரசியல் களத்தில் தமிழ்த் தேசியம் என்ற வார்த்தை எப்போதும் உயிரோடு இருக்கும்.  ஆனால் தமிழக அரசியல் களத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.  பஞ்சாபிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, பொருளாதார நிலையில் உயர்ந்த இடத்திற்கு வந்தவர் அதிமுக குறிப்பிட்ட பதவியில் கோலோச்சுவது ஆச்சரியமல்ல.



ஒரு தலைவரின் கொள்கைகளை விட அவரின் பலவீனங்கள் பலராலும் நூற்றாண்டுகள் கடந்தாலும் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கும் வல்லமை கொண்டது.



காதலன் காதலியிடம் தன் காதலைச் சொல்லும் போது ஒற்றை ரோஜா கொடுப்பார்கள். இங்கே ஒவ்வொருத்தரும் ஒத்த ரோசா வுடன் காட்சியளிக்கின்றார்கள்?
ஆக.............
எடப்பாடி கூட உலகத்தலைவர்களுடன் சந்திப்பு நடத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.
காலம் தான் எத்தனை ஆச்சரியங்களை வைத்துள்ளது?




பொருளாதார மந்தம் என்றால் என்ன?
படம் பார்த்து கதை சொல்.




இன்னமும் ஒன்னரை இஞ்ச் புட்டாமா (பவுடர்) போட்டுக் கொண்டு கலைஞர் பெயரைச் சொன்னாலே கண்ணீர் சிந்தும் துமு அவர்களை நேரில் சந்திக்க ஆசை.  அவரிடம் கேட்க கேள்விகள் வண்டி வண்டியாக உள்ளது.



2018/19 ஆம் ஆண்டு இந்தியாவில் கல்விச்சூழல் எப்படியிருந்தது? என்று இன்னும் பத்தாண்டுகள் கழித்து எவரேனும் ஆராய்ச்சி செய்ய இந்த புகைப்படம் சாட்சியாக இருக்கும்?


நமது சவடால்தனத்தை முழுமையாக பொறுத்துக் கொள்ளும் ஜீவனுக்குத்தான் அம்மா என்று பெயர் வைத்துள்ளார்கள்.


4 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நமது சவடால்தனத்தை.....நெகிழ்ச்சியான,அதே சமயம் இயல்பான புகைப்படம்.

ஸ்ரீராம். said...

எல் கே ஜிக்கா அவ்வளவு ரூபாய்??

ஜோதிஜி said...

இந்த வருடம் விலை மாறியிருக்கும் ராம்.இந்தப் பணத்தை கட்டணமாக செலுத்த முடிந்தவர்களை நாம் பாராட்ட வேண்டும். காரணம் அங்கே கல்வித்திட்டம் ஆகாயத்தில் இருந்து கற்றுக் கொடுப்பார்கள் என்றே நினைக்கின்றேன்.

ஜோதிஜி said...

மகள் எனக்குத் தெரியாமல் எடுத்த படமிது.