Friday, October 18, 2019

சீனிவாசன் மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துகள்


கடந்த பத்தாண்டுகளாக நண்பர் சீனிவாசன் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  வாய் வார்த்தைகளில் மட்டும் வீரராக இல்லாமல் எதார்த்த உலகில் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல்வேறு விசயங்களைச் சப்தமில்லாமல் செய்து வந்து கொண்டிருக்கிறார்.  

எதையும் விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை.  

எங்கேயும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதும் இல்லை. மனைவி நித்யா மற்றும் அவருடன் ஏராளமான இளையர் கூட்டம் பல்வேறு சரித்திர சாதனைகளைச் செய்து கொண்டு வருகின்றார்கள்.  தமிழ் மென்பொருட்கள், ஒப்பன் சோர்ஸ் தொடர்பான கணினி மென்பொருள் சார்ந்த விடயங்கள் என்று எல்லாப் பக்கங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றார்கள்.    

https://freetamilebooks.com/என்ற தளம் இப்போது  70 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து வெற்றிகரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கின்றது.  தொடக்கம் முதல் பொருளாதார உதவிகளை வெளியே இருந்து எதிர்பார்ப்பதும் இல்லை.  

நிதி உதவி வரும் போது மறுப்பதும் இல்லை.  என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தமிழ்மொழிக்குக் கணினி வழியே தங்களால் ஆன கடமைகளைச் செய்து வருகின்றார்கள்.

குழுவில் உள்ள அனைவருக்கும் என் வாழ்த்துகள்.  முதல் முறையாக அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளது.  மகிழ்ச்சி.


)(

தமிழ் இணைய இணையர் விருது

Published by admin on September 24, 2019

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 18 வது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப் 20-22, 2019 ல் நடைபெற்றது.

மாநாட்டை அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு ‘தமிழ் கணிமை முன்னேர் விருது’ வழங்கப்பட்டது.

அதேபோல், எனக்கும் (து. நித்யா) என் இணையர் த.சீனிவாசன்-க்கும் ‘தமிழ் இணைய இணையர் விருது’ வழங்கப்பட்டது.

விருது வழங்கிய அமைச்சர்களுக்கும், உத்தமம் அமைப்பிற்கும் எங்கள் நன்றிகள்.

திருவிழாவில், உயரத்தில் உள்ள சாமியை காட்ட, பெற்றோர் குழந்தைகளை தோள் மீது ஏற்றி, சாமியைக் காட்டுவர். நாங்களும் இது போலவே உணர்கிறோம். இவ்விருதையும் மகிழ்ச்சியையும் தமிழ்க் கணிமைக்கும் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறோம்.

கட்டற்ற மென்பொருளை எமக்கு அறிமுகம் செய்த, சென்னை லினக்ஸ் பயனர் குழு (Indian Linux Users Group Chennai), தமிழ் விக்கிப்பீடியர்கள், FSFTN, PuduvaiGLUG, Villupuram GLUG, KanchiLUG, Open-Tamil பங்களிப்பாளர்கள், கணியம் பங்களிப்பாளர்கள், FreeTamilEbooks.com பங்களிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவிக்கிறோம்.

இன்னும் கூடுதலாக தமிழுக்கும் கட்டற்ற மென்பொருளுக்கும் பங்களிப்போம்.

நன்றி !

https://www.youtube.com/watch?v=VfBXY5TxhL8

4 comments:

G.M Balasubramaniam said...

என் நாவல் நினைவில் நீ திரு ஸ்ரீநிவாசன் free tamil books மூலம் வெளியிட்டிருக்கிறார்முடிந்தால் படித்து பார்க்கலாமே

ஜோதிஜி said...

https://archive.org/details/ninaivilnee6inch/page/n39 முதல் நாற்பது பக்கங்கள் படித்தேன். நடை ரொம்பவே வித்தியாசமாக உள்ளதே. இந்த நடையில் (அக்கறையுடன்) வலைதளத்தில் நீங்கள் எழுதுவது இல்லையே?

ஸ்ரீராம். said...

சீனிவாசன்- நித்யா தம்பதியரை வாழ்த்துவோம்.

Rathnavel Natarajan said...

சீனிவாசன் மற்றும் நித்யாவுக்கு வாழ்த்துகள் - மகிழ்ச்சி. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி