Thursday, September 12, 2019

அருண் ஜெட்லி





பிரணாப் முகர்ஜி எப்படி வாழ்நாள் முழுக்க அம்பானி குடும்பத்தைக் காப்பதும் வளர்ப்பதுமே தன் முக்கிய கடமைகளில் ஒன்றாகக் கருதினாரோ? அதே போல இவரின் வாழ்க்கையும் நிழல் உலகத்திற்கும், இந்திய வளர்ச்சியை தங்களின் சொந்த வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ள நினைத்தவர்களுக்கு மட்டுமே பயன்பட்டது.

ஜெ ஃபெரா கேஸ் ல் மாட்டிக் கொண்டு தவித்த போது முன் தேதியிட்ட சட்ட மாற்றத்தைத் தோட்டத்தில் கொண்டு வந்து அவரை காப்பாற்றியது போல இவர் செய்த ஒவ்வொரு காரியமும் இங்குள்ள பலரைத் தைரியமாகத் தப்பு செய்ய வைத்தது. தமிழகத்தில் வீடியோகான் நிறுவனம் மின்சார வாரியத்தில் ஒப்பந்தம் எடுத்து எந்த வேலையும் செய்யாமல் இருந்து தமிழக அரசிடம் மிரட்டி பணம் வாங்கியதும் இவர் மூலம் நடந்தது. 

இதே போல பல பட்டியல்களைப் பற்றி எழுத முடியும். ஒரு வக்கீல் தன்னை நம்பி வருகின்றவர்ளுக்குத் தானே செயல்பட முடியும்? என்று கேட்கலாம். ஆனால் வந்தவர்கள் அனைவரும் இந்தியாவின் தொடைக்கறியை சுவைத்தவர்கள். பக்கவாட்டில் மட்டுமே பயணம் செய்யும் பயில்வான்கள். அவர்களைப் போன்றவர்களை பாதுகாப்பது தான் இவரின் கடமையாக இருந்தது. மோடியை தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் பிசிறில்லாமல் ஆதரித்தார் என்கிற ஒரே ஒரு விசயத்திற்காக இவரை விட்டு வைத்திருந்தார். விட்டுக் கொடுக்காமலும் சகித்துக் கொண்டிருந்து இருப்பார் போலும்.

ஆனால் இயற்கைக்கு தெரியும். எல்லாவற்றையும் ஏதோவொரு சமயத்தில் சமன் செய்தே தீரும் அல்லவா?

சீனா தானா மற்றும் இவரையும் ஒரே தராசுத் தட்டில் வைத்துத் தூக்கினால் முள் நேராக நிற்கும். அந்த அளவுக்கு இருவரும் அங்காளி பங்காளிகள்.

நல்ல வேளை கார்த்தி போல இவருக்கு மகன் அமைந்து இவரைச் சிக்கலில் மாட்டாமல் இருந்தது வரைக்கும் பரவாயில்லை என்று தோன்றுகின்றது.

போபால் விஷவாயு மூலம் 10,000 இந்தியர்களை கொலை செய்த"வாரன் ஆன்டர்சனின்" வழக்கறிஞர்)

(போபால் யூனியன் கார்பைடு விசவாயு கசிவு, அமெரிக்க கம்பெனிக்கு ஆதரவாக வாதாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கிடைக்காமல் செய்த வழக்கறிஞர்)

(வொடபோன்" வரி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர்) (குஜராத் 500 கோடி ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவான வழக்கறிஞர்)

STCMS என்ற (தனியார்) மின் உற்பத்தி நிலையம் வழக்கில் இறுதியில் லண்டனில் நடைபெற்றது, இதில் தமிழ்நாடு மின்வாரியம் 600 கோடியே இழந்தது, இந்த வழக்கில் STCMS க்கு ஆதரவாக வாதடிய வழக்கறிஞர்,

தாமிரபரணி ஆற்றைக் அழித்து கொண்டிருக்கிற பெப்சி, கொகொ கோல, கம்பெனிகளுக்கும் Legal Advisor ஆக இருந்தவர்)

கட்சி பாரபட்சமில்லாது அதிகாரத்திற்கு வரும் உயர்ந்த பட்ச அதிகாரம் கொண்ட அதிகாரிகள் ஆகட்டும் அல்லது அமைச்சர்கள் ஆகட்டும் இவர்கள் செய்த தவறுகள் அனைத்துக்கும் இங்குள்ள எந்த இபிகோ வும் சாகின்ற வரைக்கும் தண்டனை வழங்குவதில்லை. காரணம் இங்குள்ள சிஸ்டம் அப்படி.

அதற்குப் பதிலாக உள்ளுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, செல்லரித்து, தலை முதல் கால் வரைக்கும் மொத்த நோய் கிடங்காக மாறி, சித்தம் கலங்கி, உடம்பே கழிவாக மாறி, பாரமாக மாறி, உடன் இருப்பவர்களே எப்போது இவர் போய்ச் சேருவார்? என்கிற நிலைக்கு வந்து சாம்பலாக மாற்றி விடுகின்றது.

காலம் கழிவுகளை சுமக்காது.
நினைவிலும் வைத்து இருக்காது.



14 comments:

G.M Balasubramaniam said...

அரசியலில் ஈடு படுகிறவர்கள் எல்லோரும்ஒரு போலத்தான் போலிருக்கிறது

KILLERGEE Devakottai said...

இந்தியாவில் மக்களாட்சி எதற்கு ?
எதையும் கேட்கும் திராணியில்லாத போது...

ஸ்ரீராம். said...

சிலர் ஏண்டா போனார்கள் என்று நினைக்க வைப்பார்கள்.  சிலர் எப்படா போவார்கள் என்று நினைக்க வைப்பார்கள்.  அடுத்து ராம்ஜெத்மலானி பற்றி எதிர்பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

அரசியல் வேறு தொழில் வேறு என்று சொல்லிக் கொள்ள வேண்டியது தான். இங்கே இப்படி நிறைய பேர். என்ன சொல்ல? இந்திய அரசியலில் இருக்கும் இவர்களை ஒன்றும் செய்து விடமுடியாது.

ஜோதிஜி said...

ராம்ஜெத்மலானியைப் பற்றி அனைவரும் குறை சொல்கின்றார்கள். நான் சொல்லவே மாட்டேன். இவர்களைப் போல அவர் செயல்படவில்லை. குற்றவாளிகள், கொலைகாரர்கள், கொடூரமானவர்கள் என்று பாரபட்சமில்லாமல் அவரிடம் சென்றால் அவர் கேட்கும் காசைக் கொடுத்தால் அவர் விடுதலை பெற்று தருவார். காரணம் என்ன? அவர் புத்திசாலித்தனம் கால் பங்கு. லாபியை கையாளத்தெரிந்தவர் என்பதில் கால் பங்கு. மீதி பாதிப் பங்கு நம் இபிகோ லட்சணம் அப்படி உள்ளது என்று அர்த்தம். இப்போது பாஜக வந்தவுடன் 56 காலாவதி சட்டங்களை அப்படியே தூக்கி குப்பைக்கு அனுப்பி விட்டார்கள். நீரவ் மோடி ஓடிய பிறகு வங்கிப் பரிவர்த்தனையில் தவறு செய்ய முடியாத அளவிற்கு ஓட்டை உடைசலை முக்கால் வாசி அடைத்து விட்டார்கள். அப்படியே நடந்தாலும் அந்த வங்கி மேலாளர் தான் அந்தப் பணத்திற்கு பொறுப்பு என்று கொண்டு வந்து விட்டார்கள். மக்களுக்குத் தெரியாத, ஊடகங்கள் சொல்லாமல் இருக்கும் பல சட்ட விசயங்களை பாஜக அரசு செய்து முடித்து விட்டது. இதைப் போல இடம் வாங்கும் போது நடக்கும் கோல்மால்கள் எந்தப் பக்கமும் செய்ய முடியாத அளவிற்கு நான்கு பக்கமும் கேட் போட்டுள்ளார்கள். கொலிஜியத்தில் கை வைக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆர்பிஐ போல விரைவில் அதற்குள்ளும் நுழைவார்கள் என்றே நினைக்கிறேன்.

ஜோதிஜி said...

அதற்குத் தான் கடைசி வரி எழுதி உள்ளேன். இயற்கை அதன் வேலையைச் செய்து விடும்.

ஜோதிஜி said...

விடுங்க தல. அவனுங்க எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு அனுபவிக்க முடியாமல் தடுமாறுகின்றார்கள். நாம் மூணு வேளையும் புல் கட்டு கட்றோம் அல்லவா? போதும் நமக்கு. 25 வருடம் காத்திருங்க. பழைய பெருச்சாளிகள் முக்கால்வாசி போய்ச் சேர்ந்துரும். அதன் பிறகு மாற்றத்தின் தொடக்கம் உருவாகும். இனியெல்லாம் வசந்தமே.

ஜோதிஜி said...

பொது வாழ்க்கை என்று புனிதப் பெயர் கொண்டு அழைக்கவும்.

கிருஷ்ண மூர்த்தி S said...

அருண் ஜெயிட்லியை மட்டும் உதாரணமாக வைத்து, காலம் அல்லது இயற்கை கழிவுகளைச் சுமக்காது என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி முடித்தால் எப்படி, ஜோதிஜி?

அம்பானிகளை பிரணாப் முகர்ஜி மட்டுமல்ல, சி சுப்ரமணியம் உள்ளிட்டு காங்கிரசின் பெருந்தலைகள் அத்தனை பேருமே, ஆதாயத்துக்காக ஆதரித்தார்கள்! எதிர்க்கட்சிகளையும் தங்கள் பாக்கெட்டில் வைத்திருந்தது அம்பானிகளுடைய சாமர்த்தியம்! The Polyester Prince புத்தகம் இணையத்திலேயே கிடைக்கும், தேடிப் படித்துப் பாருங்கள்! இந்தப் புத்தகத்தை எழுதியவரே அடுத்து Ambani & sons என்று இன்னொரு புத்தகம் கூட எழுதியிருக்கிறார்.

அம்பானிகள் என்று மட்டுமல்ல, டாட்டா, பிர்லா போன்ற பெரிய நிறுவனங்களுமே கூட காங்கிரசை ஆட்டிப் படைத்தவர்கள் தான்! நிரா ராடியா விவகாரம் ஞாபகம் இருக்கிறதா? டாட்டா நிருவனத்தின் ப்ரோக்கராக இருந்த (PRO Liaison இப்படி பெயரில் , இருந்தாலும் செய்வதென்னவோ ப்ரோக்கர் வேலைதான்) சமயத்தில் கனிமொழி, ராசாத்தி இவர்களுடன் பேசிய தொலைபேசி உரையாடல்கள் செலெக்டிவாக லீக் செய்யப் பட்ட விவகாரம் ஞாபகம் இருக்கிறதா? அம்மணியை நீதிமன்ற விசாரணை என்று வரவிடாமல் செய்த வேலைக்கு கூலியாக 60 கோடி ரூபாய் சட்டபூர்வமாகவே கொடுத்துக் காப்பாற்றியது ரத்தன் டாட்டா!.2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பது எல்லோருக்குமே தெரிந்திருந்தாலும் டாட்டாவை அழைத்து விசாரிக்க அன்றிருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எவருக்குமே தோன்றவில்லையா? அல்லது துணியவில்லையா? .

அம்பானிகள் அந்த அளவுக்குப் போனதில்லை என்பதை ஏனோ மறந்து விடுகிறோம்!

Rathnavel Natarajan said...

அருமை

ஜோதிஜி said...

நான் ஆயிரம் கோடி மதிப்புள்ள தொழில் நடத்தும் பட்சத்தில் அம்பானி போலத்தான் செயல்படுவேன். எங்கங்கு ஆதாயம் உள்ளதோ அத்தனை இடங்களையும் வளைக்கவே பார்ப்பேன். அது தனிப்பட்ட நிறுவனம் சார்ந்த விசயம். ஆனால் அரசியலில் இருப்பவர்கள் யாருக்காக இருக்கின்றார்கள். அவர்கள் இந்த மக்களுக்காக என்ன செய்தார்கள்? இவர்களுக்கு ஏன் ராணுவ மரியாதை. இல்லை நாங்கள் எங்கள் சுயநலத்துக்காக மட்டுமே இதில் இருக்கின்றோம் என்று சொல்லும் பட்சத்தில் எனக்கு அவர்கள் குறித்து எந்த வருத்தமும் இல்லை.

அது ஒரு கனாக் காலம் said...

since you have touched the BJP ruling, let me try to reply here only. YES, AJ was big disaster , I don't know whether you mediacrooks blog, he revealed this much as soon a AJ was inducted into the ministry - intial slownewss in Finance and Defense, entirely due to him. Though he played a role in getting a OK for GST from different groups , but implementation was shoddy job , lots to be desired.

YES , once the court records , appointments , workings their administration is automated , it will be a total revolution like what happened in Telecom. Many things is possible by computer , Aadhar card, IT return, banks , loans, CC, if everything is linked , no body can escape court . Your observation is correct .....Also major , only reason for the economic problem is uncontrolled lending during chithambram's time, they gave away the money so much, set up time bomb for the next govt ....it is only due to demonetization, the money came back to bank , otherwise banks would have collapsed. GST brought the people who did not pay any tax , comply rules brought them to formal economy . It will take time to see the benefits - but obvious benefit is it saved us from collapse.
Car sales etc is not that important, no body , no body says the Metro and Bus transport increased in the city , and it carry millions of travellers- it did have an effect. Modi has good intentions - lets c how far and how long he can go.

ஜோதிஜி said...

நன்றி சுந்தர். மோடி குஜராத் பிரதமராக இருந்த போது ஆதார் முதல் காங்கு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் எதிர்த்தார். பிரதமராகி டெல்லி வந்த போது கூட அவர் எண்ணம் மாறவில்லை. ஆதார் உருவாக்கக் காரணமாக இருந்தன் நந்தன் நீலகேணி (பெயர் சரிதானே?) பிரதமர் மோடியை தொடர்ந்து நச்சரித்து கால் மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கினார். வேண்டா வெறுப்பாகத்தான் அவருடன் பேசத் தொடங்கினார். ஆனால் அந்த கலந்துரையாடல் இரண்டு மணி நேரம் நீடித்தது. அப்போது தான் ஆதார் என்பதன் முழு அர்த்தம் அதன் பின்னால் உள்ள உண்மைகளை மோடி புரிந்து கொண்டார். காங்கு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் அற்புதம். ஆனால் அவர்கள் எதனையும் செயலாக்கத்தில் கொண்டு வராமல் கோப்பு வடிவில் நிறுத்தி விட்டார்கள். காரணம் மேல் இருந்து கீழே வரைக்கும் ஊழல் செய்ய வாய்ப்பில்லை என்பதே முக்கியம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மோடி ஆதார் திட்டத்தை வேறு விதமாக மாற்றத் தொடங்கினார். பானையில் எங்கெங்கு ஓட்டை உள்ளது என்பதனை உணர்ந்து அதனை அடைக்க முக்கியத்துவம் கொடுத்தார். போலிகள் நீக்கப்பட்டது. சேர வேண்டிய பயனாளிகளுக்கு மட்டும் கிடைக்கத் தொடங்கியது. இரண்டு மூன்று என்று வைத்திருந்தவர்கள் ஆட்டத்தில் இருந்து விலக வேண்டியதாகப் போனது. இதை விட முக்கியம் வங்கித்துறை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பயனாளிகளுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கும் டாக்குமெண்ட் என்பது விவசாயிகள் முதல் சாதாரண பொதுமக்கள் வரைக்கும் எதுவும் வழங்க முடியாமல் இருந்தது. ஆதார் வந்தவுடன் அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்க முடிந்தது. அப்போதும் வங்கி மற்றொரு கேட் போட்டார்கள். எங்கள் செலவுக்கு நோ பாலணஸ் வங்கிக் கணக்கு கட்டுபிடியாகாது என்றார்கள். அதன் பிறகு மானியங்கள் அனைத்தும் வங்கி மூலம் வரவு வைக்கத் தொடங்கிய போது வங்கி எதிர்பார்த்த பரிவர்த்தனையும் நடந்தது. பயனாளிகளும் தங்கள் பணத்தை முழுமையாக அனுபவிக்கத் தொடங்கினர். மாஸ்டர் கார்டு விசா கார்டு மூலம் வங்கி ஒருபக்கம், வெளிநாட்டு நிறுவனம் மறுபக்கம் என்று கோடிகோடியாக ராஜபோக வாழ்க்கை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். ரூபே கார்டு வந்த போது அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மோடி விவசாயிகளுக்கு ஒரே சமயத்தில் 12 கோடி வங்கிக்கணக்கு (உர ஊழல் தவிர்க்க) தொடங்கி அத்துடன் ரூபே கார்டு கொடுக்க கதறிவிட்டார்கள். எதிர்த்துப் பார்த்தார்கள். ஒன்றும் பாச்சா பலிக்கவில்லை. எந்த வகையில் பார்த்தாலும் அடிப்படை கட்டமைப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கு வை விட இவர்களின் ஹிந்தி வெறி தான் பயமாக உள்ளது. இதன் காரணமாகவே இவர்கள் அழிந்து விடுவார்கள் என்ற எண்ணமும் உருவாகியுள்ளது.

ஜோதிஜி said...

மற்றொரு முக்கியமான விசயம் என்னவென்றால் முன்னால் பணம் இருந்தால் பொறம்போக்கு இடம் முதல் விலை அதிகமாக காட்டப்படும் இடம் வரைக்கும் வாங்கி அங்கே கொண்டு போய் பணத்தை முடக்கி விவசாய கணக்கு காட்ட முடியும். இப்போது பான் கார்டு இல்லாமல் 10 ரூபாய் ஸ்டாம் பேப்பர் கூட வாங்க முடியாது. இடம் பத்திரம் என்பது வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை செய்தால் மட்டுமே சாத்தியம். ஜிஎஸ்டி வந்தவுடன் வாங்கும் போது கணக்கு காட்ட வேண்டும். விற்கும் போதும் கணக்கு காட்ட வேண்டும். மிக அதிகப்படியான லாபம் சம்பாரிக்கலாம். அதற்கு தனி வரி என்று அதற்கு பல சிலாப் களை உருவாக்கி உள்ளனர். மொத்த கொள்முதல் வியாபாரிகள் பதுக்க முடியாமல் செயற்கை விலையேற்றத்தை உருவாக்க முடியாமல் தவிக்கின்றார்கள்.