எழுத்தாளர் ஞாநி அவர்கள் அதிகாலையில் தான் இறந்தார். அதே போல அமுதவனும் கடந்த வெள்ளிக்கிழமை (2 மணி அளவில) அன்று இறந்தார்.
மிக மிக நெருக்கமாகப் பழகியவர். திரைப்பட உலகம், எழுத்து உலகம், இலக்கிய உலகம், அரசியல் உலகம் இதற்குப் பின்னால் உள்ள மனிதர்கள் அவர்களின் உண்மையான முகங்கள் போன்றவற்றை எனக்கு முழுமையாக புரிய வைத்தார்.
சென்ற மாதம் பெங்களூரில் மூன்று நாட்கள் இருக்க வேண்டியதாக இருந்தது. அழைத்தேன். அலைபேசியை எடுக்கவில்லை. குரல் பதிவு செய்து அனுப்பினேன். உடனே பதில் வரவில்லை. உடல் நிலை மோசமாக உள்ளது. மற்றொரு நாள் சந்திப்போம் என்று எழுதி அனுப்பினார். அடுத்த சில வாரங்களில் இறந்து விடுவார் என்று நான் நினைக்கவில்லை.
()()()
பெங்களூருவைச் சேர்ந்த மூத்த எழுத்தாளரும், பத்திரிகையாளருமான அமுதவன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. நடிகர் சிவகுமார், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் மெல்கியோ (எ) அமுதவன் (71) தனது மனைவி மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், ராமமூர்த்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்தார்.
இதையடுத்து, அமுவனின் உடல் அஞ்சலிக்காக அவரது 'ஆனந்தம்' இல்லத்தில் வைக்கப்பட்டது. பெங்களூருவை சேர்ந்த தமிழ் அமைப்பினரும், இந்திய தொலைபேசி தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலையில் கல் பள்ளி கல்லறையில் அமுதவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த அமுதவனின் குடும்பத்திற்கு நடிகர் சிவகுமார், கவிஞர் அறிவுமதி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தடம் பதித்த பத்திரிகையாளர்: 1980-களில் இந்திய தொலைபேசி தொழிற்சாலையில் பணியாற்றிய போது அழுதவனுக்கு எழுத்துலகின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பத்திரிகையாளர் சாவி மூலம் இதழியல் துறைக்கு நுழைந்த அமுதவன் கல்கி, ஆனந்த விகடன், குமுதம், பிலிமாலயா உள்ளிட்ட இதழ்களில் சுயாதீன பத்திரிகையாளர் பணியாற்றினார். தமிழ் திரைப்படங்கள் குறித்து, கர்நாடக அரசியல் குறித்து ஏராளமான கட்டுரைகளை எழுதினார். இது தவிர சிறுகதை, தொடர்கதை, கவிதை, நாவல் ஆகியவற்றையும் எழுதியுள்ளார். சாவி இதழில் அமுதவன் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு' தொடர்கதையும், குமுதத்தில் வெளிவந்த 'விபத்து' குறுநாவலும் இலக்கிய வட்டாரத்தில் பரவலான கவனத்தை பெற்றது.
அமுதவன் (இரண்டு) புத்தகங்கள் - அறிமுகம்
கடந்த சில ஆண்டுகளாக மாற்று மருத்துவம் 'ரெய்கி' சிகிச்சையிலும் ஈடுபட்டு வந்தார். ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி','சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்' ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன், மறைந்த எழுத்தாளர் சுஜாதா, மூத்த நடிகர் சிவகுமார் உள்ளிட்டோருக்கு அமுதவன் மிக நெருக்கமானவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment