Wednesday, January 18, 2023

ஆளுநர் அவர் வேலையைச் செய்யட்டுமே?

 சிறைச் சாலைக்குள் முதல் முறையாக உள்ளே செல்பவர்களுக்கு மிகப் பெரிய பயம் உருவாகும். அதே போல குழப்பம் கலந்த நடுக்கமும் உருவாகும். ஒரு டைலர் இது குறித்துச் சொன்ன போது வியப்பாகவே இருந்தது.


பலமுறை வந்து சென்றவர்கள் நடவடிக்கை ஆச்சரியமாக இருந்தது என்றார். சிறிய குற்றம், சுமாரான குற்றம், பெரிய குற்றம், திகைக்க வைக்கக்கூடிய குற்ற வகைகள் என்று தனித்தனியாகக் குற்றவாளிகள் உள்ளே இருப்பார்கள். உள்ளே இருப்பவர்களிடம் 90 சதவிகித பேர்களிடம் எவ்வித குற்ற உணர்ச்சிகளும் இருந்தது இல்லை என்றார். சிறு குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்தவன் முதல் சொத்துக்காக அப்பா அம்மாவைத் துடிதுடிக்கக் கழுத்தறுத்தவன் வரைக்கும் உள்ளே சுகமாகவே இருப்பார்கள்.

தான் செய்தது தவறு என்பதனை உணர அவர்களுக்கு வாய்ப்பே இருக்காது என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீ ஏம்பா கிழவியைக் கற்பழித்தாய்? என்று கேட்டால் அப்ப இருந்த வெறி மாப்ள என்று சொல்வார்களாம்.

ஏம்பா பச்ச புள்ளன்னு கூட உன்னோட அறிவுக்குத் தெரியலையாடா என்று கேட்டவனுக்கு அதற்கு ஒரு பதில் வருமாம்.

மீதி உள்ள பத்து சதவிகித சந்தர்ப்பவசத்தால் குற்றவாளியாக ஆகி வருத்தப்பட்டு, சிறைக்குள் உள்ள சூழலுடன் ஒத்து போக முடியாமல், விலகிச் செல்லவும் வழியில்லாமல் எப்போது இந்த நரகத்தை விட்டு வெளியே செல்வோம் என்பவர்கள் உலகம் வேறு. தமிழக சிறைத்துறை நிர்வாகம் முதல் திகார் சிறைத்துறை வரை எவரும் கண்டு கொள்வதும் இல்லை.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அநாகரிகம், முறையற்ற பாலியல் தொடர்புகள், கஞ்சா முதல் பவுடர் வரைக்கும் எளிதாகக் கிடைக்கும் நிர்வாக அமைப்புகள் என்று உள்ளே சென்று வந்தவர்களிடம் கேட்டால் விதம் விதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள்.

மேலே சொன்ன அத்தனையும் பொருந்தக்கூடிய ஒரே அமைப்பு நம் பத்திரிக்கைத்துறை.

நேற்று அண்ணாமலை அவர்களுடன் பாப்பா நடத்திய கலந்துரையாடலைப் பார்த்து விட்டு எரிச்சலுடன் கூடுதல் சற்று நேரம் நடந்து சென்று வந்து என் ஆற்றாமையைப் போக்கிக் கொண்டேன். அண்ணாமலை அவர்களுக்கு எல்லா விசயங்களும், தத்துவங்களும், தமிழக அரசியல் நிகழ்வுகளும், விளைவுகளும் தெரிந்த போதிலும் அனைவருக்கும் நல்லவர் என்ற கோட்பாடுகளைச் சுமந்து எத்தனை நாளைக்குப் பயணப்படப் போகின்றார்? எப்படிப்பட்ட திட்டங்கள் வைத்துள்ளார்? பெரிய பள்ளம் தன் முன்னால் இருப்பதை உணர்ந்து இருப்பாரா? என்பதனை யோசித்துப் பார்க்கின்றேன்.

அரசுப் பள்ளியில் (11 மற்றும் 12 ஆம் வகுப்பு) கல்லூரியில் படிக்கும் இஸ்லாமியக் கிறிஸ்துவ மாணவிகள் பலருடன் கடந்த சில வருடங்கள் நலத்திட்ட உதவிகள் மூலம் பேசி உள்ளேன். ஒரு மாணவி கூட பாஜக என்பதனை தீர்க்கமான சிந்தித்து அண்ணாமலை குறித்து நல்ல எண்ணத்தை வெளிப்படுத்தியே இல்லை. காரணம் குடும்பம், அவர்கள் சுற்றுப்புறம், அவர்கள் சமூகம், அவர்கள் நம்பும் கொள்கைகள் சார்ந்த விசயங்கள் தான் அவர்களை வழி நடத்துகின்றது என்பதனை உணர்ந்து கொண்டேன்.

என் சந்தில் நேற்று பலரும் ஒவ்வொரு வீட்டின் வாசல் முன்னால் கோலம் போட்டு இருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தேன். சில வீடுகளில் கோலத்துடன் தமிழ்நாடு வாழ்க என்றும் எழுதியிருந்தார்கள். காரணம் என்ன? என்று வீட்டில் வந்து கேட்ட போது முழுமையாகச் சொல்லத் தெரியவில்லை. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் ஒருவருக்குப் பினாமி வேலை செய்து கொண்டு இருப்பதை வேறு சிலர் மூலம் உணர்ந்து கொண்டேன். அதாவது ஏதோவொரு வழியில் எனக்குப் பணம் வேண்டும். அதைத் தடை போட நீ யார்? என்பதாக சமூகம் நினைக்கின்றது. அப்படிப்பட்ட சமூகம் தற்போது 25 முதல் 75 வயது வரைக்கும் மூன்று தலைமுறைக்குள்ளும் உள்ளது என்பதனை அண்ணாமலை அவர்கள் உணர்ந்து இருப்பார் என்றே நம்புகின்றேன்.

இவர்களுக்குக் கீதையின் பலன்களைப் பற்றியோ, மார்னிங் கன்சல்டன்ட் மோடி அவர்களை உலகத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய தலைவர்களின் முதல் ஆளாக எடுத்தது பற்றியோ என்ன அக்கறை? வீட்டு வேலைக்கு வட மாநிலத் தொழிலாளர்களை ஒப்பந்தம் மூலம் வரவழைத்துக் குறைவான கூலி மூலம் சாதித்துக் கொண்டு காலையில் பில்டர் காபி அருந்திக் கொண்டு இந்த வடக்கனுங்க வந்து தமிழ்நாட்டையே கெடுத்து விட்டானுங்க என்ற கோஷ்டியிடம் நீங்க பாப்பாவிடம் பேசிய கலந்துரையாடல் போல பேசினால் என்ன ஆகும்? என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றேன்.

பாப்பா அடித்து ஆடுகின்றார். ஆனால் நீங்கள் நினைத்தால் அக்குவேறு ஆணி வேறாகப் பிச்சு எறிந்து இருக்க முடியும்? ஏன் பம்முகிறீர்கள்? ஏன் தயக்கம்? ஏன் சுற்றி வளைத்து மென்று முழுங்கி?

அந்தம்மாவுக்கு ஒரே நோக்கம் நிகழ்ச்சி வெற்றி என்பதாக சீனியர் எடிட்டர்க்கு செய்தி போக வேண்டும். அதற்காக அந்தம்மா எந்த எல்லைக்கும் சென்று வார்த்தை விளையாட்டுகளை நடத்தும்? ஆனால் அந்த நிர்ப்பந்தம் உங்களுக்கு இல்லையே? உங்களின் அடுத்த வார்த்தை என்ன? உங்கள் கட்டளை என்ன? என்பதற்காக இன்று நிஜமான பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள். எவரும் கூலிக்காக அழைத்து வரப்படுகின்றவர்கள் அல்ல? உங்கள் திறமை, புத்திசாலித்தனம், ஒழுக்கம், நல்ல எண்ணங்கள், நிஜமான ஆன்மீக ஈடுபாடு, அர்ப்பணிப்பு உணர்வு போன்ற பலவற்றையும் கடந்த 20 மாதங்களாகப் பார்த்து ஒவ்வொரு இளைஞர்களாக தானவே வந்து சேர்ந்து இன்று பாராளுமன்றத் தேர்தலுக்காகக் காத்திருக்கின்றார்கள். நீங்கள் நம்புகின்றீர்களோ இல்லையோ நான் நம்புகின்றேன். நிஜமான சம்பவம் வரக்கூடிய தேர்தலில் நடக்கவுள்ளது.

மேலே உள்ள அழுத்தம், வாக்கு அரசியலுக்குப் பின்னால் உள்ள நிர்ப்பந்தம், கூட்டணிக்கட்சிகளின் எதிர்பார்ப்புகள், உங்கள் அருகே உள்ள எதிரிகள் என்று ஏராளமான இக்கட்டுகள் உங்களுக்கு இருப்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால் இது போன்ற கலந்துரையாடல் மூலம் தொண்டர்களைச் சோர்வடைய வைக்கக்கூடாது.

கடந்த ஐம்பது வருடங்களாக இங்கே ஏதோவொரு சித்தாந்தம் என்பதனை சொல்லிக்கொண்டு, யாரோ சிலரை அதன் சார்பாளர்கள் என்று முன்னிறுத்தி, அடுத்தவன் மனைவியை ஆட்டையைப் போட்டவன் முதல் ஊர் சொத்தை கொள்ளையடித்ததோடு அரசாங்கத்தை தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கரையான் அரித்து எலும்பாக மாறியவர்களை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டுகின்றவன்களை நீங்கள் உங்கள் அகிம்சை மூலம் மாற்றி மக்களுக்குப் புரிய வைத்து வாக்காக மாற்றி மக்களின் மனதை வென்று விடலாம் என்று நம்பி நடை போடுவது உங்களின் தனிப்பட்ட விருப்பம்.

ஆனால் இதுவரை இங்கே வந்து ஆளுநர்கள் பெண் பித்தர்களாக, பணப்பேய்களாகவும், ஓய்வெடுக்க வந்த முதியவர்களாகவும் இருந்த ராஜ்பவன் என்ற உயர்ந்த அங்கீகாரம் கொண்ட இடத்தில் முதல்முறையாக ஒரு ஆண் மகன் வந்ததை நாங்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றோம். அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உருட்டித் திரட்டி குறி பார்த்து அடிக்கும் நான்கு கிலோ வெடிப்பொதி. மோதிய இடத்தில் சிதறும் திருக்குவளை மாஃபியா கும்பல் ஏன் கதறுகின்றது என்றால் அதற்குள் தான் அவர்கள் திருடிச் சேர்த்த மொத்த சொத்துக்களும் உள்ளது.

ஆளுநர் அவர் வேலையைச் செய்யட்டுமே? அவர் மக்கள் ஆட்சியின் மாண்புகளை உணர்ந்த காரணத்தால் நாகாலாந்தில் அவர் செய்த எந்த காரியத்தையும் இங்கே அவர் இன்னமும் செய்யாமல் இருக்கின்றார் என்பது மாஃபியா கும்பலுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

உங்களுக்கும் தெரியவில்லையா? இந்த நாய்கள் எத்தனை நாளைக்குக் குலைக்கும்? தொண்டை வற்றும் வண்ணம் குலைக்க வைக்க வேண்டும். நிதானத்தை இழக்க வைக்க வேண்டும். தஞ்சை மதமாற்றப் பள்ளி முதல் கோவை சிலிண்டர் வெடிகுண்டு வரைக்கும் நீங்கள் உணர்ந்த ஒவ்வொன்றையும் இந்த சமூகத்திடம் கொண்டு சேர்த்தீர்களே? ஊடகங்கள் என்ன செய்தது? அரசு எந்திரம் எப்படிச் செயல்பட்டது? மக்கள் இதுவரையிலும் இப்படிப்பட்ட தீவிரவாத தாக்குதல் முயற்சி இங்கே நடந்தது என்பதனை உணரவே இல்லை என்பதனை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள் தானே? 

இது தான் ஊடக மாஃபியாவின் பலம். புலிகேசிக்கு அறிவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரைச் சுற்றி பலன் பெறக்கூடிய பல நூறு சாத்தான்கள் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்களே? அவர்களிடம் உங்கள் கீதா உபதேசம் எடுபடும் என்று நம்புகின்றீர்களா? நம் ஆளுநர் செய்வது ஒரு வகையில் சொல்லப் போனால் தீவிரவாத தாக்குதல். அவர் பேசியவுடன் ஒருவர் எப்படி அவன் இவன் என்று உளறுகிறான் என்பதனை பார்த்தீர்கள் தானே?

அவர் செய்த பணியின் விளைவுகளை வரக்கூடிய சமஉ தேர்தல் உங்களுக்கு உணர்த்தும்.  

No comments: