Saturday, January 14, 2023

இன்றைய ஊடகங்கள் யாருக்காக?

 புரோட்டோகால் என்பது அரசு நிர்வாகத்தில் அதிகம் உச்சரிக்கும் ஒரு வார்த்தையாகும். 1967 வரைக்கும் இந்த வார்த்தையின் அடிப்படையில் தான் ஆட்சி அதிகாரம் இங்கே நடந்து கொண்டு இருந்தது. அதிகாரிகள் சொல்வதைத்தான் அமைச்சர்களும், முதல் அமைச்சர்களும் கேட்க வேண்டும். கேட்க முடியும். கேட்டுத்தான் ஆக வேண்டும். சட்டத்தை நாம் மீறக்கூடாது என்பார்கள். அதற்குள் நுழைந்து தான் காமராஜர் பலவற்றைச் சாதித்தார்.


ஆனால் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தவுடன் பதவி ஏற்பு விழா நடந்து முடிந்து கோட்டை கொத்தளத்திற்கு வந்து சேர்ந்த போது திமுக வைச் சேர்ந்த அத்தனை கட்சிக்காரர்களும் கோட்டைக்குள் நுழைந்தனர். பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் முதல் சாதாரணக் கடைநிலை தொண்டன் வரை.
அதிகாரிகளைக் கேள்வி கேட்கவும் ஆரம்பித்தனர். இது புதுக் கலாச்சாரம். தமிழகம் இதற்கு முன்னால் பார்க்காத ஒன்றாகும். ஆனால் கருணாநிதி 1971க்குப் பிறகு தனித் தன்மையுடன் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின்பு கட்சிக்காரர்கள் தான் ஆட்சி என்பதாக மாறியது. மாற்றப்பட்டது. எனவே திமுக கட்சிக்காரன் என்றால் அவர்கள் கடவுளாக மற்றவர்களால் பார்க்கப்பட்டான்.
இணையான அரசாங்கம் நடக்கத் தொடங்கியது. அரசு நிலம் முதல் கனிம வளம் வரை அனைத்தும் திருடப் போகத் தொடங்கியது. இணையான அரசாங்கத்தை நடத்தினார்கள். சர்வ சாதாரணமாக திருட முடிந்தது. அங்கீகாரம் கிடைத்தது. அட்டகாசமான வாழ்க்கை உடனே அமைந்தது. வாழ்க்கைத் தரம் மாறியது. அசிங்கமான அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்யத் தொடங்கினார்கள். காவல்துறையினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பல உயர் அதிகாரிகளைக் கருணாநிதி எந்த அளவுக்கு அசிங்கப்படுத்தினார்? கேவலப்படுத்தினார்? போன்ற அனைத்து விசயங்களும் இனி வரும் காலங்களில் வெளி வரும். டிஜிபி அருள் என்பவர் பட்ட கதை எல்லாம் கண்ணீர் வரவழைக்கக்கூடியது.
கள்ள ஓட்டுப் போட்ட கட்சிக்காரனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையைக்கட்டி பொதுவில் அழைத்து வர ஜெயக்குமாரை திருச்சி வரை எப்படி அலைய வைத்தார்கள் என்பதனை இப்போது நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
ஆனால் அதிமுக வில் இப்படிக் கட்சிக்காரனைத் தாங்க மாட்டார்கள்.
அண்ணாமலை அவர்கள் ஒரு படி மேலே. அய்யா தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும் நீங்களே பாட்டிலில் கொண்டு வந்துவிடுங்க என்கிறார்.
எனவே தான் திமுக அடிமட்டத் தொண்டன் நான் என்று இறுமாந்து கிறுக்கனாக பலரும் இருப்பதற்குக் காரணம் என்ன தவறு செய்தாலும் கட்சி காப்பாற்றும் என்பதே. அது கருணாநிதி காலத்தில் தான் தொடங்கி வைக்கப்பட்டது. அது தான் கருணா கவசம் போல இருந்தது.
இப்போது உள்ள நான்கு மாவட்டங்கள் சேர்ந்தது தான் அன்றைய ஒரு மாவட்டம். இராமநாதபுரம் மாவட்டத்தை ஒரு மாவட்ட ஆட்சியர் முழுமையாக சுற்றி வர வேண்டும் என்றால் ஒரு வருடம் கூட ஆகலாம். கோசி மணியும் வீரபாண்டி ஆறுமுகம் போன்றவர்களின் முழுமையான உண்மையான கதையை யாராவது எழுதினால் அது சரோஜாதேவி புத்தகம் படிப்பது போலவே இருக்கும். அதன் மிச்சமும் சொச்சமும் இன்றைய ரயில் பயணக் காட்சிகளுக்குள் நடக்கும் பல சமாச்சாரங்கள்.
கருணாநிதி எதிர்பார்த்த கட்சி கட்டுக்கோப்பு, கட்சி வளர்ச்சி விரைவாக உருவானது. தன் கீழ் இருக்க வேண்டிய குண்டர் படை, எதிர்த்துப் பேசுபவர் உடனே காணாமல் போய்விடக்கூடிய அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்களைத்தான் கருணா வைத்து இருந்தார். இவர்களைத் தான் யூ டியூப் ல் பேசக்கூடியவர்கள் பல்வேறு வார்த்தைகளில் இன்று வரையிலும் பாராட்டிப் பாராட்டிப் பேசுகின்றார்கள்.
அன்று முதல் இன்று வரை இவர்கள் பெண்களைச் சதைப் பிண்டமாகவே பார்த்தார்கள். காரணம் அடங்காத வெறி கொண்ட நாய்கள் போலவே வருடம் முழுக்க வாழ்ந்தார்கள். அதனைக் கௌரவமாக பரிமாறிக் கொண்டார்கள். உனக்கு எத்தனை? எனக்கு இத்தனை என்று கைவிரல் விட்டு எண்ணினால் கூட கைக்குள் அடங்காத அளவுக்கு ராசலீலைகள் செய்யும் காமப் பேய்களாக மேலிருந்து கீழ் வரைக்கும் வாழ்ந்தார்கள். அதன் எச்சமும் சொச்சமும் இன்றும் அங்கங்கே உள்ளது. இப்போது அறுத்து விடுவார்கள் என்ற பயமும் இருப்பதால் பம்முகின்றார்கள்.
அதாவது ரவுடி என்ற வார்த்தை கட்சிக்காரன் என்பதாக மாறியது. மாற்றப்பட்டது. எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்த போதிலும் இந்த ரவுடிக் கும்பலைச் சமாளிக்க அவர் பக்கமும் பல விதமான ரவுடிக்கும்பலை இறக்கியபின்பு தான் கொட்டம் கொஞ்சம் அடங்கியது. ஜேப்பியார் போன்றவர்கள் எல்லாம் அரசியல் பிரமுகராக வளர்ந்து இறுதியில் கல்வித்தந்தையாக மாறியதன் தொடக்கப்புள்ளி இங்கே இருந்து தான் தொடங்கியது.
()()()
நிலம் இருப்பவர்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது. காரணம் நில உச்ச வரம்புச் சட்டம் என்று சொல்லப்பட்டது. பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து பிடுங்கி நாட்டு உடைமை ஆக்கப்பட்டது. மக்கள் விருப்பம் என்று சொல்லப்பட்டது. இது கால் வாசி உண்மை. மீதி கருணாநிதியின் நயவஞ்சகம்.
அதாவது இன்று எப்படி அதிமுக அமைச்சர்கள் எவரும் செலவு செய்யக்கூடாது. கூட்டம் சேர்க்கக்கூடாது என்று ரெய்டு விட்டுத் தொடர்ந்து ரவுண்டு கட்டிய காரணத்தால் பெல் அமைச்சர்கள் கூட அமைதியாகி விட்டனர். எடப்பாடி மட்டும் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேறு விழி தெரியாமல் காசை எடுத்து செலவு செய்ய வேண்டிய சூழல்.
அன்றைய சூழலில் காங்கிரஸ் ஆதரவு மன நிலையில் இருந்த பணக்காரர்களின் கைகள் முதலில் கட்டப்பட்டது. பிறகு கால் ஒடிக்கப்பட்டது. நாட்டு நலம் என்று போதிக்கப்பட்டது. வீட்டுக்குள் முடங்கிக் கிட என்று மாற்றினார் கருணாநிதி.
அண்ணாதுரைக்கு முதலியார் சமூகம் உதவி செய்தது. அவருக்கு முன்னால் காமராஜருக்கு நாடார் சமூகம். ராஜாஜி பிராமணர். அரசியலில் இல்லாவிட்டால் விட ஈவெரா பலிஜா நாயுடு. ஓமந்தூரார் அவர்களுக்கு ரெட்டியார்.
அதாவது ஆதிக்கச் சாதி ஒவ்வொருவர் பின்னாலும் இருந்தது. கருணாநிதி ஆதரவு இல்லை. மோளகாரர் என்று அழைக்கப்பட்டது. இப்போது இசை வேளாளர் என்று மாற்றப்பட்டது. ஆனால் மாவட்டம் தோறும் ஆதிக்கச் சாதியை வளர்க்கும் பணியை உருவாக்கிய அவர்களுக்குள் பிரிவினையை உருவாக்கிய தன்னை தக்க வைத்துக் கொள்வதில் வெற்றி கண்டார். இன்று வரையிலும் திமுக உருவாக்கிய சாதியப் பிரச்சனைகள் என்பது இன்னும் எழுதப்படாமல் உள்ளது.
காமராஜர் ஏற்கனவே இந்திரா காந்தி செய்து கொண்டு இருந்த அயோக்கியத்தனத்தால் முடங்கிப் போய்த்தான் கிடந்தார். திமுக வளர்ச்சிக்குத் தடையில்லை. கருணாநிதி ஆட்சிக்கு வர ஆதரித்த கம்யூ கட்சியினரை ஓட ஓட திமுக குண்டர்கள் பாய்ந்து தாக்கினர். காங்கிரஸ் ல் ஒருவர் கூடக் களத்தில் இல்லை.
தனிக்காட்டு ராசாவாக மாறினார் கருணாநிதி. என் கட்சி. என் ராஜ்யம். என் கீரிடம். இனி என்றும் நான் தான் என்ற சூழலை முதல் இரண்டு வருடத்திற்குள் உருவாக்கிய பின்பு அரசியலை வைத்துச் சம்பாதிக்கும் கலையை எதிர்காலத் தமிழகத்திற்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்.
சர்க்காரியா என்ற பூதம் வெளியே வந்தது.
முதல் முறையாக சர்க்காரியா கமிஷன் மூலம் இந்திரா அம்மையார் விளக்கெண்ணெய் கமிஷன் ஒன்றைப் போட்ட போது இந்தியா முழுக்க ஒரு செய்தி மறைமுகமாக உணர்த்தப்பட்டது.
யார் வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம்
என்னுடன் மோதக்கூடாது
நான் சொல்வதைக் கேட்க வேண்டும்
நான் கேட்கும் சீட் தர வேண்டும்
எனக்கு அடங்கி நடக்க வேண்டும்
என்ற புதிய பாதையை இந்திரா உருவாக்கினார்.
அன்று கருணாநிதிக்குக் கிடைத்த தைரியம் இன்று எடப்பாடி வரைக்கும் வந்து இன்று கருணாநிதியை விட மிகவும் புத்திசாலி என்று ஒருவர் பாராட்டும் நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது.
()()()
எம்ஜிஆர் பிரிந்த போது எம்ஜிஆர் தான் உயிர் என்று சொன்ன அத்தனை பேர்களும் அதிகாரத்திற்காகக் கருணாநிதி பின்னால் நின்றனர். கொடுத்த காகிதத்தில் கையெழுத்துப் போட்டனர். எம்ஜிஆர் திமுக வில் இருந்து நீக்கப்பட்டார். இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில் இங்கே கையெழுத்து வாங்கிக் கொண்டு இருந்த போது மற்ற அத்தனை பத்திரிக்கைகளிலும் எம்ஜிஆர் நீக்கப்பட்ட விபரங்கள் அடங்கிய விசயங்கள் அச்சுக் கோர்ப்பு செய்து கொண்டு இருந்தார்கள்.
அப்போது தான் பத்திரிக்கையுலகத்தையும் கருணாநிதி கையில் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். அன்று அவர் தொடங்கி வைத்த கொடுமைகளின் தொடர்ச்சியின் நீட்சியைத் தான் இப்போது நீங்களும் நானும் பார்க்கும் துர்ப்பாக்கிய நிலைமை அமைந்துள்ளது.

No comments: