Sunday, October 10, 2021

20 ஆண்டுகளும் 7 ஆண்டுகளும்

மோடி பிரதமராக பதவியேற்று 7 ஆண்டுகள் முடிந்து இப்போது 8 வது ஆண்டு.

மோடி அவர்கள் குஜராத் முதல்வராக பதவியேற்று 20 ஆண்டுகள் முடிந்து இப்போது 21 வது ஆண்டு.

வளர் முகம். வளர் பிறை. கறை இல்லாத பொது வாழ்க்கை. 

விமர்சித்தவர்கள் பல காத மைல்கள் பின்னால் இருந்து இன்னமும் இன்றும் கத்திக் கொண்டு எழுதிக் கொண்டே இருக்கின்றார்கள்.

மோடி ஆட்சியில் மக்கள் அரசு திட்டங்களை உணர்கின்றார்கள். 
அனுபவிக்கின்றார்கள். 
கூனிக்குறுகி வெந்து நொந்து நமக்கு கிடைக்குமா? என்று எவரும் அவஸ்த்தைப்படவில்லை.  

நலத்திட்ட உதவிகளில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர், சீக்கியர் என்ற பாகுபாடும் இல்லை. 


மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை வெற்றிகள் பகுதி -2


இந்தியர்கள் கக்கூஸ் போகும் செயலை சுதந்திரமாக செய்ய மோடி என்றொரு மனிதர்  பிரதமராக வர வேண்டியிருந்தது என்பதனை யோசித்தால் போதுமானது. இதன் மூலம் இதற்கு முன்னால் இருந்தவர்கள் எப்படி ஆண்டார்கள்? என்பதனை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

கடந்த ஏழு ஆண்டுகள் மத்திய அரசின் சிறப்புகளில் ஒன்று எல்லாவற்றுக்கும் தரவுகள் உள்ளது.  எந்த துறையாக இருந்தாலும் நீங்கள் தகவல்கள் பெற முடியும்.  இணையத்தில் உள்ளே நுழைந்தால் கட்டாயம் ஒப்பீடு வரைக்கும் நம்மால் கணக்கீடு செய்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் கடந்த 50 வருடங்களில் எந்த துறைகளிலும் தரவுகள் இல்லை. எல்லாத் துறைகளும் உத்தேசமாக ஓடிக் கொண்டு இருக்கின்றது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். எந்த இடத்திலும் கணக்கு மற்றும் தரவு என்பதே இல்லை. பணிபுரியும் அதிகாரிகளுக்கே தங்கள் துறை குறித்த புள்ளிவிபரங்கள் ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை.

நம் தமிழகத்தில் அமைச்சராக  வர வேண்டும். தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் சில தகுதிகள் வேண்டும்.  

சுடுகாட்டினை அலங்கரிக்கத் தெரிய வேண்டும்.  வெட்டியான் வேலை வரைக்கும் செய்ய வேண்டும். வயது வித்தியாசமின்றி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கத் தெரிந்து இருக்க வேண்டும். புத்திசாலித்தனம் ஆகாது. அப்படி கொஞ்சம் உள்ளே இருந்தாலும் காட்டக்கூடாது. முடியாது. 

கிச்சன் காபினெட் முதல் இணைவி, துணைவி, வரைக்கும் வந்தது போனது முதல் அனைத்து பேர்களுக்கும் பேட்டா வழங்க கற்று இருக்க வேண்டும்.  மாமா என்பது இரண்டு முதுகலை பட்டப்படிப்பு அல்ல.  ரசிகர் மன்ற கோமாளிகள் அமைச்சர்களாக வருவதும் முக்காத அறிஞர் என்று புகழ்வதும் நம் தமிழகத்தின் சிறப்புகளில் ஒன்று.

இவர்கள் தங்கள் திறமைகளை காட்ட முடியாமல் மோடி என்ற பிம்பத்தை வைத்து இன்னமும் ஓட்டுப் பிச்சை எடுக்கின்றார்கள். எடுக்கப் போகின்றார்கள். 

மோடி ஆட்சியின் சிறப்பு என்ன?

பிரதமர் மோடி ஆட்சியில் குறைகளே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் இதற்கு முன்பு சுமார் 58 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியை ஒப்பிடும்போது, ஸ்திரத்தன்மை கொண்ட மோடி ஆட்சி மக்களுக்குப் பெரிதும் நன்மை பயக்கும் விதத்தில் உள்ளது.

நாட்டில் தீவிரவாதம் / வெடிகுண்டு வெடித்து உயிர் பலிகள் 2014-க்குப் பிறகான காலத்தில் அறவே இல்லை. 2014-க்கு முன்பு வரை, சுமார் 30000-க்கும் மேலாக அப்பாவி மக்கள் தீவிரவாதம் காரணமாக உயிர் இழந்தனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறது மோடி அரசு. குறிப்பாக எப்போதும் தீவிரவாதம் என்ற பெயரில் நமக்குத் தொல்லை கொடுக்கின்ற பாகிஸ்தான் நாட்டை (இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று) தனிமைப்படுத்தியது மோடி அரசு.

தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கிய காஷ்மீர் பகுதியில் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை (Article 370 abrogated) நீக்கியது மற்றும் அப்பகுதியை இந்தியாவுடன் இணைத்தது (one Constitution one India), இஸ்லாமியப் பெண்களின் வாழ்க்கையில் பாதுகாப்பு (Triple Talaq) அளித்தது போன்ற பல முக்கியமான விஷயங்களைச் செயல்படுத்தியது மோடி ஆட்சியில் தான்.

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் அட்டூழியம் தொடர்கதையாக இருந்த நிலையில், சிறப்பு அதிகாரம் கொண்ட சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த எல்லைதாண்டிய தீவிரவாதிகள் / தீவிரவாதம் குறித்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மிக குறுகிய காலத்தில் தக்க நடவடிக்கை எடுத்து, வரலாற்றுச் சாதனை படைத்தது மோடி அரசு. 

ஜம்மு காஷ்மீர் பகுதியை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்து, அவைகளின் நிர்வாகத்தை நேரடியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அங்குள்ள மக்களுக்கு அமைதியான வாழ்க்கை வாழ வழிவகுத்தார் பிரதமர் மோடி அவர்கள். இதனால் நாடு முழுவதும் ஒரே சட்டம் அமுலுக்கு வந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கான நல்ல பல திட்டங்களைத் தந்துள்ளது இந்த மோடி அரசு. கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிப்பறை வசதிகள், ஏழைகளுக்கு எரிவாயு உருளை, மின்சார வசதி, வங்கிக் கணக்கு மற்றும் நேரடியாக அதில் அரசு மானியம், அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆரோக்கியம் இன்சூரன்ஸ் போன்ற நல்ல பல திட்டங்களை உருவாக்கித் தந்தது மோடி ஆட்சியில் தான்.

நாட்டில் ரொக்கப் பணப் பரிவர்த்தனையை (cashless transactions) பெருமளவு குறைத்து மின்னணு பண வர்த்தனையை (electronic payments via paytm etc.) முன்னெடுத்து அமல்படுத்தியது  மோடி ஆட்சியில் தான்.

நாடு முழுவதிலும் ஒரேவிதமான வரிவிதிப்பு - ஜி.எஸ்.டி. எந்தவொரு நிறுவனமும் முறையாகப் பதிவு செய்யாமல், வியாபாரம் / தொழில் / உற்பத்தி செய்ய முடியாது. பதிவு செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்த மோடி அரசு, கிட்டத்தட்ட 300000 நிறுவனங்களுக்கு மேல் பதிவு செய்யாமலேயே இருந்து வந்தது கண்டுபிடித்து சீல் வைத்தது.

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 மில்லியன் போலி உருளைகள் விநியோகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக நிறுத்தப்பட்டது. போலி ரேஷன் அட்டைகள் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டது மோடியின் வெளிப்படையான ஆட்சி நிர்வாகத்தால் தான்.

வங்கியில் சர்வதேச பணப் பரிவர்த்தனை (international money transfer) முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டது மோடி ஆட்சியில் தான். அனைத்து வரவுகளும் முறையாக கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்ற நடைமுறையை அமலாக்கம் செய்தது.

சாமானியனின் வங்கிக் கணக்கில் உள்ள பணம் சரியான முறையில் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது மோடியின் ஆட்சியில் தான். அதன்படி யாரும் பணத்தைக் கணக்கில் கொண்டு வராமல் இருப்பது மற்றும் வரிஏய்ப்பு செய்வது குற்றமாகும்.

எரிவாயு மானியம் உட்பட மக்களுக்கு வழங்கப்படும் பணத்தை நேரடியாக அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது மோடி ஆட்சியில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது - இடைத்தரகர்கள் எவருமில்லை.

கடத்தல், பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு அச்சடிப்பு / கள்ள நோட்டு புழக்கம்  குறைந்தது மட்டும் அல்ல, தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மோடி அரசாங்கத்தால் - கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது சிறப்பு. 

நாடு முழுவதும் சாலை வசதிகள், புதிய பாலங்கள் அமைப்பு, தேவையான கட்டமைப்பு வசதிகள் (infrastructure developments), நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் அதிநவீன விமானங்கள் / கருவிகள் /தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ரயில்வே துறையில் ஏற்படுத்தப்பட்ட தேவையான மேம்படுத்தப்பட்ட வசதிகள் (ஆளில்லா ரயில்வே கிராஸ்ஸிங் உட்பட) என பட்டியல் நீளுகிறது.

ஊழல்கள் புரிந்த எந்த அரசியல் கட்சியும் / கட்சித் தலைவர்களும் மோடி ஆட்சியில் / மோடி அரசுக்கு எதிராக "அரசியல்" செய்ய முடியவில்லை என்பது வெளிப்படை.

மக்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்பதால் 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக-வுக்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தார்கள். 

அதன் பிறகான காலகட்டத்தில் பாஜகவின் ஆட்சி அதாவது மோடி ஆட்சியின் நடவடிக்கைகள் பிடித்துப் போக, மீண்டும் 2019-ம் ஆண்டு தேர்தலில் பாஜக அரசுக்கு / மோடி ஆட்சிக்குச் சான்றளித்து இரண்டாம் முறையாக மோடி அரசு நீடிக்க வாக்களித்தார்கள் மக்கள்.

எதிர்க்கட்சிகள் (காங்கிரஸ் உட்பட) அனைத்தும் ஒன்று சேர்ந்து / சேர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் பாஜக-வை / மோடி அரசை ஆட்சியை விட்டு அகற்ற முடியவில்லை. பெருவாரியான மக்கள் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தனர் என்பதே முக்கிய காரணமாகும்.


ஜனநாயக நாட்டில், மக்களின் நம்பிக்கையை / நன்மதிப்பைப் பெற்ற எந்த ஓர் அரசையும், எதிர்க்கட்சிகளால் அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது என்பதே நிதர்சனம். அதற்கு பாஜக அரசும் / மோடி ஆட்சியுமே உதாரணம் ஆகும்.


No comments: