Tuesday, October 05, 2021

வட மாவட்டங்களில் சூழ்ந்துள்ள ஆபத்து




நண்பர் கிரி இந்த தளத்தை பாஜக தளமாகவே மாற்றி விட்டீர்களா? என்று கேட்டு இருந்தார்.  எனக்கு எதையும் எழுத விருப்பம் இல்லை. காரணம் மக்களின் மனோபாவம் முற்றிலும் மாறிவிட்டதைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  இன்னமும் திரைப்படம் சார்ந்த செய்திகள், துணுக்குள், காட்சிகள் என்று அதன் மேல் உள்ள ஈர்ப்பு தமிழர்களுக்குக் குறையவில்லை. வாசிப்பு என்பதன் நோக்கம் மாறிக் கொண்டே வருகின்றது.  எனவே நான் பார்க்கும் சமூகத்தை உள்ளே வைத்துக் கொண்டு இனி இங்கே மாற வேண்டிய சூழலுக்கு என்னால் ஆன பங்களிப்பு செய்ய அதன் அடிப்படையில் அந்த எண்ணத்தில் செயல்படவே விரும்புகிறேன்.  எல்லாத் தளங்களிலும் அதற்காகவே என் பணியைச் செய்ய விரும்புகிறேன்.  இது என் தனிப்பட்ட சுய விருப்பம்.

அதற்கு முதலில் இவர்கள் இருவரையும் இங்கே அப்புறப்படுத்தப்பட வேண்டும். புதிய நபர்கள் எவர் வேண்டுமானாலும் வந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தாலும் பரவாயில்லை. காரணம் அந்த அளவுக்கு அரசு நிர்வாகம் உழுத்துப் போய்விட்டது.

•••

அரவிந்த் கெஜரிவால், ராகுல், பிரியங்கா, அகிலேஷ் இவர்கள் அடுத்த வருடம் மட்டுமல்ல. 2024 நாடளுமன்றத் தேர்தல் வரைக்கும் தூங்கப் போவதில்லை.  

ரத்த ஆறு ஓடினாலும் கவலைப்படப் போவதில்லை.  

இந்தியாவின் வளர்ச்சி என்பது இவர்களுக்கு எரிச்சலூட்டும் சமாச்சாரம்.  

இதன் தொடக்கப்புள்ளி இப்போது உபி யில் நடந்து கொண்டு இருக்கின்றது.  

மோடி இடத்தில் வேறொருவர் இருக்கும் பட்சத்தில் வருடக்கணக்கில் உள்ளே இருந்து களி திங்க வேண்டியிருக்கும். பிரியங்கா அறையை சுத்தம் செய்து தன் உடையை தானே துவைத்துக் கொள்ள வேண்டியதாக இருக்கும். 

அதுவும் நிரந்தரமாக ஹெரால்டு வழக்கு முடிவுக்கு வரும்பட்சத்தில்.


•••

திண்டுக்கல் ஐ பெரியசாமி அவருடைய குடும்பத்தில் மருமகள் பேசிய பின்பு தான் அங்கு பெந்தகோஸ்து எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது அதுபோல விரைவில் மருத்துவர் குடும்பத்திலும் இது போல ஏதோ ஒன்று கிளம்பும் என்று என் உள் மனம் சொல்கின்றது

விழுப்புரம், திண்டிவனம் , கடலூர் போன்ற வடக்கு மாவட்டங்கள் அனைத்தும் பெந்தகோஸ்தே கோஷ்டி ஊடுருவல் மிக மிக அதிகம்.  

காரணம் படிப்பறிவு இல்லை. இடை நிற்றல் அதிகம்.  வருமானம் இல்லை. சாதி பெயரில் கட்சி நடத்தி தங்கள் குடும்பத்தை வளர்த்துக் கொண்டது தான் மிச்சம்.  

மக்களுக்கு ஒரே வழி யார் பணம் கொடுக்கின்றார்களே அவர்கள் சொல்வதைக் கேட்பது. அவர்கள் அழைத்துச் செல்லும் பாதையில் பயணிப்பது.  

மதமாற்றிகள் மிகப் பெரிய அஜண்டாவுடன் இந்தப் பகுதிகளில் செயல்பட்டு வெற்றி கண்டுள்ளார்கள்.  

ராமதாஸ் அய்யா குடும்பம் நிச்சயம் இதில் கை வைக்க மாட்டார்கள்.  அவர்கள் கிறிஸ்துவ வன்னியரும், சாதா வன்னியரும் இரண்டுமே ஒன்று தான்.  ஓட்டு மட்டும் மாம்பழத்திற்கு போட்டால் போதும்.  🤪


நன்றாக இருந்த தமிழகத்தைத் தங்களுடைய சுயநல அரசியலுக்காக இரு கழகங்களும் தேர்தலுக்குத் தேர்தல் ஏராளமான இலவச வாக்குறுதிகளை அறிவித்து வாக்குகளைப் பெற்றனர். 

இலவசங்களுக்கு எதிராக யாராவது கேள்வி கேட்டால் அவர்களை மக்கள் நலத் திட்டங்களுக்கும், சமூக நீதிக்கும் எதிராக செயல்படும் கட்சிகள் என்று கூறி முத்திரை குத்தியதன் விளைவுதான் 2021 மார்ச் இடைக்கால நிதிநிலை நிலவரப்படி தமிழகத்தின் கடன் தொகை ₹485502.54 கோடி ரூபாய். 

புதிதாக பதவியேற்ற அரசு நிதிநிலை தாக்கல் முன்னரே சுமார் ₹40000 கோடி அளவிற்குக் கடன் பெற்றுவிட்டார்கள். 

2021-22 நிதிநிலை தாக்கலுக்குப் பிறகு வருவாய் பற்றாக்குறை ₹58692.68 கோடியாகவும், நிதிப் பற்றாக்குறை ₹92529.43 கோடியாகவும், இந்த நிதி ஆண்டில் ₹92484.50 கோடி அளவுக்குக் கடன் பெறுவதற்குத் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.

ஆக மக்களுக்கு வேண்டிய அத்தியாவசியத் திட்டங்களைச் செயல்படுத்தவே கடன் வாங்கி செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள். ஏற்கனவே போக்குவரத்துத் துறையில் இலவசங்களை அறிவித்து செலவினங்களைச் சமாளிக்க முடியாமல் பல பணிமனைகளை வங்கியில் அடமானம் வைத்து போக்குவரத்துத் துறையை நாசம் செய்ததோடு, மகளிருக்குப் புதிதாக இலவசப் பேருந்து சேவையையும் தற்போது ஆரம்பித்துள்ளார்கள். 

'தமிழக அரசு' மின்சார நிறுவனமான "TANGEDCO"க்கு கொடுக்க வேண்டிய கடன் பாக்கியைக் கொடுக்காததோடு, புதிய அரசு தமிழகத்தில் பதவியேற்ற பிறகு கடுமையான மின்சாரத் தட்டுப்பாடும் புதிதாக உருவாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான DAவை (Dearness Allowance) மத்திய அரசு கொடுத்தது போல், மாநில அரசானது மாநில அரசு ஊழியர்களுக்குக் கொடுக்க வேண்டிய DAவை கொடுக்காமல் 2022 மார்ச் வரை நிறுத்தி வைத்துள்ளார்கள்.

நிதிநிலை அறிக்கையிலும் அதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. திராவிட கட்சிகளின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகத்தை நாசம் செய்ததோடு, அரசு ஊழியர்களின் DA, மின்சாரம், போக்குவரத்து உட்பட மேலும் பல சீரழிவுக்கும் காரணமாகவும் இருந்தது தான் இந்த இரு கட்சிகளின் சாதனை. உள்ளாட்சித் தேர்தலுக்காக திமுக அரசு அமைதியாக இருக்கிறது. 

தேர்தல் முடிந்தவுடன் அனைத்து விதமான வரிகளும் கூடும். 

(இலவசங்களுக்கு ஆசைப்பட்டு திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்தவுடன் சாட்டையடி நிச்சயம்)



No comments: