Sunday, October 03, 2021

அவர்கள் மனநோயாளிகள். மன்னித்து விடுங்கள்.

சில கேள்விகள் தம்பிமார்கள் அனுப்பி உள்ளனர்.  குறிப்பாக இணையத்தில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து எழுதி இருந்தார்கள்.  தீர்வு என்ன? என்று கேட்டு இருந்தார்கள்.  கடித வரிகள் முழுமையாக வெளியிட வேண்டாம் என்றும் கேட்டு இருந்தார்கள்.1. உங்களுக்கு  நெருக்கமாக அறிமுகமான  நூற்றுக்கணக்கான நண்பர்கள் இணையத்தில் இருப்பார்கள். ஆயிரக்கணக்கான நண்பர்கள் நீங்கள் எழுதுவதைப் பார்த்து இணையம் வழியே தொடர்பில் வந்து இருக்கக்கூடும். நீங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் போது லட்சக்கணக்கான பேர்களிடம் உங்கள் பெயர் சென்று சேர்ந்து இருக்கக்கூடும்.  

ஒவ்வொருவரும் வெவ்வேறு வாழ்க்கைச் சூழல், வாழ்ந்த விதம், வளரும் நிலை, பொருளாதாரப் பின்புலம், வெவ்வேறு மாநிலங்கள், பல நாடுகள் என்று ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாமல் இருக்கக்கூடும்.  அப்படித்தான் இணைய வாழ்க்கை இருக்கும்.  இருக்கின்றது.

இணையத்தில் வாழ்த்து என்பதும் வார்த்தைகள் என்பது பொய்யானது. போலியானது. 

உங்களுக்குத் தெரிந்தவர்கள் உங்களை அழைத்து அவரால் வாழ்த்து சொல்ல முடியவில்லை என்றால் அவர் உங்கள் நண்பர் அல்ல. எத்தனை காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம்.  

ஆனால் அனைத்தும் பொய் என்பதனை உறுதியாக நம்புங்கள்.  

உங்கள் வசதி, அதிகாரம், பொருளாதாரம் மூன்றும் தற்போதைய சூழலில் முக்கிய இடம் பிடிக்கின்றது.  

அதை வைத்துத் தான் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் பேச்சைச் செவி மடுக்கின்றார்கள்.  

அழைக்கின்றார்கள். பேசுகின்றார்கள்.  

மனைவி, மகன், மகள் என்று நெருங்கிய சொந்தம் கூட விதிவிலக்கல்ல.

இப்படிப்பட்ட சூழலில் இணையம் என்பதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆனால் இதில் உலாவும் பலவிதமான சைக்கோக்ககளை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும்.

1. உங்கள் கருத்துக்கும் உங்களுடன் நீண்ட காலம் நெருங்கிய தொடர்பில் இருந்த, நேரிடையான பழக்கத்தில் இருக்கும் நண்பர் மாற்றுக் கருத்துடன் இருப்பது தவறல்ல.  

அது அவரவர் சுதந்திரம். எண்ணத்தின் வெளிப்பாடு.  ஆனால் நீங்கள் எழுதியவுடன் சிரிப்பான் குறியை அவன் வந்து போடுகின்றான் என்றால் அவன் உறவு தேவையில்லை. நிறுத்தி விடுங்கள்.

2. கொள்கைக்கும் ஆத்மார்த்தமான நட்புக்கும் உண்டான வித்தியாசம் தெரியாமல் தொலைக்காட்சி பார்த்துப் பார்த்து, தமிழகத்தில் கணவன் மனைவி சண்டைக்குக் கூட மோடி தான் காரணம் என்று நம்பும் கூட்டத்திற்கு அறிவுரை எதுவும் சொல்லாதீர்கள். அவர்கள் அனுதாபத்துடன் பாருங்கள். அவர்கள்   மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.  

3. தானும் கெட்டு தன் வாரிசுகளை அந்த வழியில் அழைத்துச் செல்பவர்களிடம் எதுவும் சொல்லத் தேவையில்லை. அவர்கள் விதி. அவர்கள் பாதை. மலர்வளையம் தயார் வைத்து வைத்திருங்கள். செய்திகள் வந்து சேரும். கெட்ட எண்ணங்கள் சிறுநீரகத்தைத்தான் முதலில் தாக்கும்.

4.  வலைபதிவு, ஃபேஸ்புக், யூ டியூப் என்று நீங்கள் தொடர்ந்து செயல்படும் களங்களில் விபச்சாரிகள் பெற்ற மகன்களும் உங்களுடன் தொடர்ந்து பயணிப்பார்கள். 

அவர்கள் இணையத்தில் செயல்படும் போது புனைப் பெயர்கள் வைத்துக் கொள்வதற்குக் காரணம் வீட்டில் மனைவியை விலை பேசிக் குத்தகையாக பலரிடமும் விட்டு விட்டு வருவதும் ஒரு காரணம் என்று நம்புங்கள். 

5. அவர்கள் பெயர் அக்னி மகன், அக்னி ராமன் என்று விதம் விதமான வைத்துக் கொள்வார்கள்.  மகள்கள், மனைவிகள் என்று அவர்கள் நெருக்கத்தில் உள்ளவர்களுக்கே இவர்களின் மனம் பாதிக்கப்பட்டுப் பாதிப் பைத்தியமாக அலைவது யாருக்கும் தெரியாது.  

நீங்கள் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். கருத்தால், எண்ணத்தால், உழைப்பால் அடுத்தடுத்த கட்டம் நகர்ந்து செல்லும் போது இது போன்ற விபச்சாரிகள் பெற்ற திருமகன்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் காணாமல் போய்விடுவார்கள்.  அதுவரைக்கும் அவர்களுக்கு வேலை கொடுக்க நீங்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

தம்பிமார்களே கவலைப்படாதீர்கள்.  

நீங்கள் பயணிக்கும் பாதையில் ஏற்கனவே இருந்த பலரும் நகர்ந்து செல்கின்றார்கள் அல்லது விலகிச் செல்கின்றார்கள் என்றால் அவர்கள் இத்தனை நாளும் அட்டைப்பூச்சியாக இருந்தவர்கள் என்று அர்த்தம்.  

புதிய பூபாளம் இசைக்கும். 

எவர் குறித்தும் கவலைப்படாதே. அஞ்சாதே.  

தமிழக அரசியல் களம் சுத்தமாக வேண்டும் என்றால் நீ என் கடமை இது என்று எதனை நம்புகின்றாயோ அதனை நீ இறப்பதற்கு முதல் நாள் வரை செய்து கொண்டேயிரு. 

அங்கீகாரம் எதுவும் தேவையில்லை.
  
அச்சப்படவும் தேவையில்லை. இது நாள் வரைக்கும் சமூகம் குறித்துக் கவலைப்பட்டுப் பார்த்த காட்சிகளைச் சம்பவங்களைப் பதிவு செய்து வந்தாய்.  இனி அரசியல் தான் உன் களம்.  அயோக்கியர்கள் உருவாக்கியது வரலாறு என்று நம்ப வைத்துக் கொண்டு இருப்பதைச் சிதைப்பது தான் உன் வேலையாக இருக்க வேண்டும். அறிவார்ந்த பாதையில் பயணித்து தகுதியில்லாதவர்களை வெகு ஜனத்திற்கு அறிமுகம் செய்து வை. காலம் தாமதம் ஆனாலும் மக்கள் ஏதோ ஒரு சமயத்தில் புரிந்து கொள்வார்கள்.

அதைத் தொடர்ந்து செய். தொய்வு இல்லாமல் செய்.
காலம் கவனிக்கும்
காலம் உணர்த்தும்
காலம் கற்றுக் கொடுக்கும்

No comments: