Saturday, October 09, 2021

ருத்ர தாண்டவம் உணர்த்தும் செய்திகள்

திரௌபதி, ருத்ர தாண்டவம் என்ற இந்த இரண்டு படங்கள் எனக்கு தற்போதைய சமூகத்தில் உள்ள சில துறைகளைப் பற்றியும் அதில் வாழும் அரிய ஜீவன்களைப் பற்றியும் புரிய வைத்தது.

என் உறவுக்கூட்டத்தில் ஒரு பெண்மணி 1980 ஆம் ஆண்டு நாகர்கோவில் அருகே உள்ள ஹோலிகிராஸ் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்புக்காக (எம்எஸ்சி) சேர்ந்தார். அவருக்குப் பின்னால் வாங்கிய மதிப்பெண்கள் (கிறிஸ்துவர்கள்) அனைவருக்கும் இடம் கிடைத்தது. 



மோதி அரசின் வெளியுறவுக் கொள்கை வெற்றிகள்/பிரகாஷ்  


இவருக்குக் கிடைக்கவில்லை. இவர்களும் கண்டு கொள்ளவில்லை. படித்தது போதும் என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள்.  

அப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் கீழ் அந்தக் கல்லூரி இருந்தது. ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் அந்த ஆண்டு சேர்க்கை ஓர் அதிகாரியின் பார்வைக்குப் போக இளங்கலையில் 85 சதவிகிதம் வாங்கிய அந்தப் பெண்ணுக்கு ஏன் இடம் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்ப அதன் பின்பு வேண்டா வெறுப்பாக இடம் வழங்கினார்கள்.  

முதல் பருவத் தேர்வு முடியும் வரைக்கும் இவரை கண்டு கொள்ளவே இல்லை.  விடுதி முதல் வகுப்பறை வரை ஆசிரியர்கள் அனைவரும் பாராமுகமாகத்தான் இருந்தார்கள்.  முதல் பருவம் தேர்வு முடிவு வந்த போது இவரின் மதிப்பெண் 89 சதவிகிதம்.  இவர் தான் பல்கலைக்கழக அளவில் டாப் ரேங்க்.  அதன் பின்பு தான் அனைவரும் சகஜமாக பேசினார்கள்.

சென்றவாரம் இதனை அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.

எனக்கு மனதில் இருந்த ஆச்சரியம் என்னவெனில் இன்று பாஜக, ஆர்எஸ்எஸ், மதவாதம் என்று இங்கே கதறுகின்றார்கள்.  

ஆனால் இது நடந்தது 1980.  அப்போது நான் பள்ளிக்கூடச் சிறுவன்.  இதையே வேலூர் சிஎம்சி என்று கணக்கிட்டு ஒவ்வொரு கிறிஸ்துவ நிறுவனங்களாக கணக்கிட்டால் அவர்கள் மதத்தில் உள்ளவர்களுக்கு மனசார அவர்கள் உதவி செய்து உள்ளனர். இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களில் இது நடைபெறவில்லை. இந்து மதத்தில் இட ஒதுக்கீடு, அது இது என்று வசதிகள் பொறுத்து எப்படியே படித்து மேலேறி வந்துள்ளதும் நடந்து உள்ளது. 

ஆனால் இஸ்லாமியர்கள் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் கடந்த சில வருடங்களாக மாறி உள்ளனர்.  

இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் பத்திரிக்கை என்றால் அது அய்யர்கள் மட்டும் ஆட்சி செலுத்திய துறை என்றும், அவர்கள் தான் அனைத்து இடங்களிலும் நீக்கமற இருந்தார்கள் என்றும் இன்று வரையிலும் சொல்லக்கூடியவர்கள் இப்போது காட்சி ஊடகம், அச்சு ஊடகம் பெரும்பான்மையாக யாருடைய கையில் உள்ளது? என்பதனைப் பற்றி ஏன் பேச மறுக்கின்றார்கள்?

இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் 90 சதவிகிதம் யார் என்று உங்களுக்குத் தெரியும்.

விகடன் வழங்கிய இந்த மதிப்பெண்கள் முதல் ஒவ்வொருவரும் கதறும் கதறலைப் பார்க்கும் போது மோகன் அவர்கள் இராமநாராயணன் மாதிரி மினிமம் கேரண்டி இயக்குநர் என்று கொடி நாட்டுவார் என்றே என் உள் மனம் சொல்கின்றது.

No comments: