Tuesday, November 12, 2019

கிண்டில் (ஆச்சரியமான) சில குறிப்புகள்KINDLE  (சில ஆச்சரியமான) குறிப்புகள்.

நான் அமேசான் போட்டிக்காக என் 5 முதலாளிகளின் கதையை வெளியிட்டு பத்து நாட்கள் முடியப் போகின்றது. என் முக்கிய நோக்கம் பலரையும் கிண்டில் பக்கம் திருப்ப வேண்டும் என்பதே.

ஆனால் எதார்த்தம் எப்படி உள்ளது?

1. பத்து நாட்களில் மொத்தம் இதுவரையிலும் 9500 பேர்கள் வாசித்து உள்ளனர். 90 சதவிகிதம் கிண்டில் அன்லிமிட் மூலமாக வாசித்து உள்ளனர். மீதி விலை கொடுத்து வாங்கி உள்ளனர்.

2. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள், பெரும் படிப்பு படித்தவர்கள், நாற்பது ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி வைத்திருப்பவர்கள் என்று என் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு கிண்டில் குறித்து அறிமுகம் இல்லை. ஆச்சரியமாகக் கேட்கின்றார்கள்.

3. ஆர்வத்துடன் உள்ளே வருபவர்களுக்கு அமேசான் கிண்டில் சட்ட திட்டங்களை உள்வாங்க முடியவில்லை. என்ன தான் கற்றுக் கொடுத்தாலும் ஃபேஸ்புக் போல எளிமையாக இல்லை என்கிறார்கள். ஆனால் உள்ளே நுழைந்த பிறகு "இதைக் கற்றுக் கொள்ள இத்தனை பாடுபட்டேன் " என்று வெட்கப்படுகின்றார்கள்.

4. "நான் புத்தகங்களே வாசிப்பதில்லை. வாசிக்க விரும்புவதில்லை. செய்தித்தாள்கள் வாசித்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. உனக்காக வாசிக்கின்றேன். ஆனால் புத்தகமாகக் கொடு" என்கிறார்கள். அமேசான் ஆங்கிலத்தில் போட்டி நடத்துகின்றார்கள். அதில் கலந்து கொண்டவர்களை நினைத்துப் பார்த்தேன்.

5. சமீபத்தில் ஊரில் மூன்று நாட்கள் இருந்தேன். உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட படித்த, படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களை, இளைஞிகளைச் சந்தித்தேன். வெளியுலகத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எதிர்காலத்தில் சந்தையில் வரக்கூடிய பொருட்களை வாங்கக்கூடிய நுகர்வோராக மட்டும் இருப்பார்கள். நான் மாறவே மாட்டேன்? என்னை ஏன் மாற்ற விரும்புகின்றாய் என்பவர்களுக்கு மட்டும் தனியாக ஒரு பதிவு எழுதி வெளியிட்டுள்ளேன்.


என் கடன் பணி செய்து கிடப்பதே.

6. அமேசான் இந்தியச் சந்தை, வெளிநாட்டுச் சந்தை என்பதற்கு அவர்கள் உருவாக்கி உள்ள தொழில் நுட்பமென்பது ஏராளமான பஞ்சாயத்துக்களை இலவசமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறது. ஆனால் அவர்களின் வாடிக்கையாளர் சேவை மையம் அற்புதமாக அழகாகச் செயல்படுகின்றது. மொக்கை கேள்விகளுக்குக்கூடப் பொறுமையாகப் பதில் அளிக்கின்றார்கள். அவரவர் தாய் மொழியில் உரையாடுகின்றார்கள்.

7. அமேசான் தளத்தில் ஆங்கிலத்தில் தான் விமர்சனம் எழுத வேண்டும் என்ற கொள்கை பலரையும் பின்னங்கால் பிடரி தெறிக்க ஓட வைக்கின்றது. அதற்கு மேலாக அதன் சட்ட திட்டங்கள் கடுமையாக உள்ளது. உடனே வெளியிடுவதில்லை. பொறுமை இழந்து விடுகின்றார்கள். எடிட் செய்த பிறகே வெளியிடுகின்றார்கள் என்கிறார்கள். நம் மக்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றார்கள்.

8. ஆனால் தொடக்கத்தில் தான் தடுமாறுகின்றார்கள். உள்ளே நுழைந்து விட்டால் ஒரே நாளில் என் தம்பி ஒருவர் பிரித்து மேய்ந்துள்ளார். சில தொழில் நுட்ப வசதிகளை என்னிடம் அறிமுகம் செய்து வைத்த போது மிரட்சியாக இருந்தது.

9. என் புத்தகத்தில் உள்ள பிழைகள், நான் செய்து இருந்த தவறுகள் போன்றவற்றை அவர்களே சுட்டிக்காட்டி தனியாக அனுப்புகின்றார்கள். அதன் மூலம் நாம் திருத்திக் கொள்ள முடியும். மற்றொரு இடத்தில் வாசித்து அவர்கள் சொன்ன கருத்துக்களை நம் கணினி மூலம் திருத்த முடியும். அதை அப்படியே இங்கே வலையேற்ற முடியும். தொழில் நுட்பங்களைப் பார்க்கும் போது மலைப்பாக உள்ளது.

10. என் புத்தகத்தைப் படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரைத் தொழில்நுட்ப வல்லுநராக நான் மாற்றி உள்ளேன். என் நெருங்கிய நண்பரும் பொருளாதார வல்லுநரும், நல்லதைப்பற்றிப் பேசுவோம். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை நாற்றுகளை மட்டுமே விதைக்கும் எதிர்கால நிதியமைச்சர் Chakkravarthy Mariappan உங்கள் புத்தகத்தைப் படித்தவுடன் நானும் களத்தில் குதிக்கப் போகின்றேன் என்று ஒரு புத்தகத்தைச் சுடச் சுட தயார் செய்துள்ளார்.

அவருக்கு என் முன் கூட்டிய வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன்.

அவருடன் சேர்ந்து நானும் கொஞ்சம் கற்றுள்ளேன்.

#Amazon
#Amazon Pentopublish 2019
#Amazonpentopublishtamil 2019

()()()()

Ramanathan

book every aspiring leader should read.

8 November 2019

This gives an accurate insider perspective of an industry known only as a Forex earner. commitment and sincerity always pays. A very positive book and must read.

SAMPATH S

well written

11 November 2019

Very well written. It explains how labour welfare like ESI, PF, Gratuity, Insurance etc., are neglected for this garment workers. Mr.Jothiji had depth knowledge on the field of inner garment industry. He explains his concern about the ground water pollution by profit making selfish fellows. The author clearly indicate that dedication, hard work are the only deciding factors about sustainability of any business. Reading this book will guide everybody what are all the things not to be done as a owner of a business.

kamalakkannan

5 November 2019

Verified Purchase

what makes you become a successful businessman? the simple answer is it depends on what value you carry on while doing business, the author shares his experiences thought 5 businessman's story. really nice book written like fiction I enjoyed it.

()()()

எழுத்தாளர் செல்லமுத்து குப்புசாமி.

திருப்பூர் எனும் டாலர் கொழிக்கும் ஊரைப் பற்றி வெளியே இருந்து பார்க்கும் நமக்கு தெரியாமல் போகலாம். வெறும் கையில் முழம் போட்டோர், ரோமத்தை கட்டி மலையை இழுத்தோர், வாழ்ந்து கேட்டோர் என எல்லா கேட்டகிரிலும் திருப்பூரில் நீங்கள் ஆட்களை காணலாம்.

திருப்பூர் பிசினிஸ் பற்றியும், பொதுவாகவே பிசினஸ் பற்றியும் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் ஜோதிஜி எழுதிய இந்த நூலை வாசிக்கலாம்.

கூடுதலாக RS Prabu அதைப்பற்றி எழுதிய விமர்சனத்தையும் படித்து தெரிந்து கொள்ளலாம்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என் கடன் உதவி செய்து கிடப்பதே

கரந்தை ஜெயக்குமார் said...

கிண்டில் பயன்படுத்தி வருகிறேன் ஐயா

கிருஷ்ண மூர்த்தி S said...

ஜோதிஜி!
பிரச்சினை கிண்டில் வாங்குவதோ பயன்படுத்தக் கற்றுக்கொள்வதோ அல்ல. புத்தகங்களை புரட்டிக் கொஞ்சம் வாசித்துப்பார்த்து, அதன்பிறகுதான் புத்தகம் வாங்குவது என்பது என்னுடைய நீண்டநாள் பழக்கம். இங்கே உள்ள பதிப்புச் சூழலில் புத்தகத்தைப் பற்றிய சரியான மதிப்பீட்டு செய்ய முடியாமல் அச்சுப்புத்தகமாக வாங்கி ஏமாறுவதற்கு மாற்றாக amezon unlimited உதவுகிறது. ஆனால் என்னுடைய தனிப்பட்ட சூழலில் amazon unlimited என்று போவதற்குக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது.

ஜோதிஜி said...

ஊரில் இருந்த போதும் இங்கு வந்த போதும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். காரணம் உங்களைப் போல கிண்டில் குறித்து ஒரு விதமான தயக்கம் இருப்பவர்களுக்கு ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எழுதுகிறேன். நிச்சயம் ஒரு வேளை கிண்டில் பக்கம் நீங்கள் வந்து பயன்படுத்தத் தொடங்கி விட்டால் நிச்சயம் இரண்டு விசயங்கள் நடக்கும். மாதம் பத்து புத்தகங்கள் வாசிப்பீர்கள். உங்கள் எழுத்து நடை இன்னமும் கூர்மையாகும்.

ஜோதிஜி said...

அருமை

ஜோதிஜி said...

தகுதியான நபர்களுக்கு............