Thursday, June 16, 2011

சீனாவின் பொருளாதார அடியாள் -- ஆன்ந்தகிருஷ்ணன் - 1

"எல்லோரும் செய்வதை நாங்கள் செய்வதில்லை. பணம் பண்ண வேண்டுமென்றால் நாளைக்கான தொழிலை நாம் இன்றே கண்டறிய வேண்டும்.  நாளைக்கான பணத்தை இன்றைக்கே சம்பாரிக்க வேண்டும். இன்றுக்கான தொழிலை செய்து பணம் சம்பாரிக்க நினைத்தால் அதில் கிடைக்கும் லாபம் சிறிது. நாளைக்கான தொழில் வளர்வதற்கு பொறுமையாக காத்திருக்க வேண்டும். ஆனால் கிடைக்கப் போகும் லாபமோ மிகப் பெரிது."

2006 ஆம் ஆண்டு BUSINESS TIMES பத்திரிக்கைக்கு ஆனந்த கிருஷ்ணன் கொடுத்த இந்த பேட்டியின்படி தான் கடந்த 36 வருடங்களாக தனது தொழில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்.


1938 ஆம் ஆண்டு சாதாரண அரசு ஊழியரின் மகனாக பிறந்தவர் தத்பாரனந்தம் ஆனந்த கிருஷ்ணன். ஆனால் 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவர் அடைந்த உயரம் மலேசியாவின் இரண்டாவது பணக்காரர்.  இப்போது உச்சத்தில் இருப்பதோடு உலக தமிழர்களின் பணக்காரர் வரிசையில் முதன்மை இடத்தில் இருப்பவரும் இவரே.  எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்ற பிரிவு மட்டும் தான் மலேசிய அரசியலில் இருக்குமே தவிர இவர் இரண்டு பக்கமும் முக்கியமான நபராக இருப்பவர்.  1976 ஆம் ஆண்டு மலேசியாவில் நிதி மந்திரியாக இருந்த கு லி என்றழைக்கப்படும் ராஜலே ஹம்சாவுக்கு ஆலேசகராக செயல்பட்டதோடு 1981 முதல் 2003 வரை ஆட்சியில் இருந்த மஹாதீர் முகம்மதுக்கு வலதுகரமாகவும் செயல்பட்டவர். 

இதில் மகத்தான ஆச்சரியம் என்னவென்றால் கு லி மற்றும் மஹாதீர் இருவரும் வெவ்வேறு துருவங்கள்.  நம்மூர் ஜெயலலிதா, கருணாநிதி போல. இருவருடன் கூடிய உறவை எல்லை வகுத்து வேலி தாண்டாத வெள்ளாடு போலவே இருந்து இருவர் மூலமும் அத்தனை ஆதாயங்களையும் பெற்றவர். இது எந்த அளவுக்கு இருந்தது என்றால் இந்த இரு அரசியல் தலைவர்களுக்கிடையே சர்ச்சைகளும், சண்டைகளும் அதிகமான போது இருவரையும் தனது வீட்டுகே வரவழைத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கி புதிய கெமிஸ்ட்ரி வாத்தியராக செயல்பட்டவர்.  மஹாதீருக்குப் பிறகு வந்த அப்துல்லா அகமது படாவியுடன் பசையாக ஒட்டிக்கொண்டு தனது தொழில் வாழ்க்கையின் குறியீட்டை நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு செங்குத்தாக உயர்த்திக் கொண்டவர்.  

1984 ஆம் ஆண்டு தனது உஷா டெகஸ் (USHA TEGAS) என்ற தனியார் முதலீட்டு நிறுவனத்தின் மூலம் பெட்ரோல் நிறுவனங்களை தோண்டுவதற்குரிய உபகரணங்கள் மற்றும் பல சில்லுண்டி தொழில்களை செய்து வந்தாலும் இவருக்கு பம்பர் லாட்டரி அடிக்கத் தொடங்கியது மஹாதீர் முகம்மது தொடர்பு உருவான போது தான்.  அதன் பிறகே 1980 ல் மலேசிய அரசுக்கு சொந்தமான .BANK NEGARA மற்றும் மலேசியாவின் பெட்ரோலிய நிறுவனமான PETRONAS என்ற இரண்டு நிறுவனங்களிலும் இயக்குநராக அமர்த்தப்பட்டார். இவர் வகித்த இந்த இரண்டு நிறுவன பதவிகளும் இவரின் சொந்த தொழில்களுக்கு வாய்க்கால் தோண்ட அவஸ்யமில்லாமல் பாலாற்றை பாய்ச்சிக் கொண்டிருந்தது. 1987 முதல் இதுவே இவரின் தொழில் வாழ்க்கையின் உச்சத்தை தொட வைத்தது.  ஓரு வேளை அந்த சமயத்தில் தான் இவருக்கு சுக்கிர பகவான் பங்காளியாகிருப்பார் போல?

1980 முதல் இவர் செய்து வந்த தொழில்களில் ஒன்று லாட்டரி சீட்டு. அதன் பெயர் PAN MALAYSIA SWEEPS.   மஹாதீர் முகம்மதுவின் கடைக்கண் பார்வையினால் மலேசிய அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த BIG SWEEP என்ற நிறுவனத்தையும் ஆனந்த கிருஷ்ணனிடம் ஓப்படைக்க அடுத்த பண ஆறு இவரின் வாழ்க்கையில் கரை கடக்கத் தொடங்கியது. இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் மலேசிய அரசாங்கம் நடத்திக் கொண்டிருந்த லாட்டரி என்பது மலேசியாவில் உள்ள சமூக பொது நல திட்டங்களுக்கு நல்ல முறையில் பயன்பட்டுக் கொண்டிருந்ததாகும்.

ஆனால் ஆனந்த கிருஷ்ணன் நிர்வாகத்திற்கு வந்தவுடன் அரசாங்க லாட்டரி நிறுவனங்கள் தள்ளாடத்தொடங்கியது.  இந்த சமயத்தில் தான் மகாதீர் மகத்தான் ஆச்சரிய அறிவிப்பு ஒன்றை (இவர் முன்னோர்கள் கேரளாவில் இருந்து சென்ற இந்தியர்கள்) வெளியிட்டார்.  

"இஸ்லாமிய கொள்கையின்படி லாட்டரி தொழிலை அரசாங்கம் செய்யாது.  ஆனால் தனியார் நிறுவனங்கள் இதை தராளமாக செய்யலாம் "

வேறெதுக்கு?

மலேசிய லாட்டரி தொழிலில் தனிப்பெரும் ஆளுமையாக ஆனந்த கிருஷ்ணன் உருவானார். இது தவிர மலேசியாவில் உள்ள குதிரைப் பந்தய தொழிலிலும் வெற்றிக் கொடி நாட்ட உதவியவரும் மஹாதீர் முகம்மதுவே.  

இந்த இடத்தில் ஒரு இடைச் செருகல் உண்டு.  


ஆனந்த கிருஷ்ணனுடன் தொழில் ஒப்பந்தம் போட்டுள்ள சன் தொலைக் காட்சி நிறுவனத்தைப் பற்றி ஏராளமான காழ்ப்புணர்ச்சிகள் இருந்தாலும் கலாநிதி மாறனைப் பொறுத்தவரையிலும் எந்த இடத்தில் எந்த பதவியில் எவரை அமர்த்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்.  ஒரு தொழில் நிறுவனத்தின் தனிப்பட்ட கொள்கை எப்படி வேண்டுமானலும் இருக்கலாம்.  ஆனால் அவர்களின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயல்படுபவர்கள் இந்த தனிச்சையான நிர்வாகத்தினரே.  இன்று வரையிலும் சன் குழுமம் பெற்ற வெற்றிகள் எப்படி அரசியல் அதிகாரத்தால் விரைவாக உயரமுடிந்ததோ அதே அளவிற்கு கலாநிதி மாறனை சுற்றியுள்ள போர்ப்படை தளபதிகளும் முக்கிய காரணமாக இருப்பவர்கள்.  தமிழ்திரைப்பட உலகில் கலாநிதி மாறனின் போர்ப்படைத் தளபதிகளில் ஒருவரான சக்ஸேனா பற்றி கேட்டாலே பலருக்கும் புளியைக் கரைக்கும்.  நிறம் சொன்னால் போதும்.  தரம் எளிதில் விளங்கும்.

இந்த இடத்தில் இவற்றை குறிப்பிடக்காரணம் ஆனந்தகிருஷ்ணனின் வளர்ச்சிக்குப் பினனாலும்,ஒவ்வொரு இன்ஞ்சிலும் இந்த அரசியல் அதிகாரங்கள் தான் அதிக அளவிற்கு உதவியுள்ளது.  இதற்கு மேலும் இவர் ஒவ்வொரு தொழிலுக்கும் நியமித்த நம்பத்தகுந்த சீனர்களும், அவர்களுக்கு இவர் நிறுவனம் வழங்கிய குறிப்பிட்ட பங்குகளும் முக்கிய காரணமாக இருந்தது. இதுவே இவரின் நிறுவன பங்குகளை சந்தையில் வாங்குபவர்களுக்கு நல்ல பங்களாளியாக இருக்க மிக விரைவில் உச்சத்தை எட்டினார்.

மஹாதீர் இவருக்கு செய்த உபகாரங்கள் எந்த அளவிற்கு இருந்தது என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் பார்க்கலாம். 

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இன்று வரையிலும் ஒரு வித்யாசமான சூதாட்டம் உண்டு.  அது எண்கள் அடிப்படையில் இருக்கும்.  நாம் எந்த எண்களை சொல்கிறோமோ அந்த எண்களின் பேரில் நாம் பணம் கட்டி வாங்க வேண்டும்.  சீனர்களுக்கு இயல்பாக இந்த சூதில் அதிக ஆர்வம் உண்டு.  1989 முதல் மஹாதீர் உத்தரவின்படி குதிரைப்பந்தயத்தையும், இந்த சூதாட்டத்தையும் ஆனந்த கிருஷ்ணனின் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததை மேலே பார்த்தோம் அல்லவா?  ஆனால் இதற்குப் பின்னால் அரசாங்கத்திற்கும் இவரின் நிறுவனத்திற்கும் உள்ள உடன்பாடு எப்படி இருந்தது தெரியுமா?

மொத்த வருவாயில் இவருக்கு 45 சதவிகிதம் குதிரைப் பந்தய நலவாரியத்திற்கு 5 சதவிகிதம் மீதியுள்ள 50 சதவிகிதம் குதிரை பந்தய கிளப்புகளுக்கு.  அரசாங்கம் உருவாக்கியுள்ள அமைப்பில் நாட்டாமை செய்வதற்கு இவருக்கு அதிகாரப்படி பாதிக்கு பாதி.

இது தவிர கணக்கில் வராதது எப்போதுமே மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதது தானே?  அரசியல்வாதிகள் என்றாலே எல்லா நாடுகளிலும் மணம்,திடம்,குணம் ஒன்று தான் போலிருக்கு.

ஓரே காரணம் மஹாதீர்.  ஆனந்தகிருஷ்ணன் அடைந்த லாபத்திற்கு பினனால் இந்த இவரின் பங்கு சதவிகிதம் எங்கெங்கு பாயும் என்பதை நாமே எளிதில் புரிந்து கொள்ள முடியும்.


மலேசிய நாட்டுக்குள் மட்டும் கில்லாடியாக இருந்த ஆனந்த கிருஷ்ணனின் தொழில் பார்வை வேறொரு பக்கம் திரும்பியது.  அதற்கு இவர் உருவாக்கிய தந்திரம் தொழில் உலகத்தில் இருந்த மொத்த மக்களையும் தாவாக்கட்டையில் கையை வைத்து ஏக்கத்தோடு இவரை பார்க்க வைத்தது.

அது குறித்து................?

15 comments:

saravananfilm said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.


Share

Anonymous said...

super please continue

saarvaakan said...

கலக்கிறீங்க தலை
நவீன ஜெகதலப் பிரதாபனின் சரித்திரம் அருமை
எங்கே கிடைக்குது இவ்வளவு விவரங்கள்?
நன்றி.

Anonymous said...

Interesting.

Anonymous said...

super..

http://thavaru.blogspot.com/ said...

ஆனந்த கிருஷ்ணா...ஆபத்து கிருஷ்ணாவா அன்பின் ஜோதிஜி.

எண்ணங்கள் 13189034291840215795 said...

பல புதிய தகவல்.. சுவாரஸ்யமும்..தொடருங்கள் படிக்கிறேன்..

Unknown said...

ஆனந்தம் அவருக்கு மட்டுமேவா? எங்கிருந்து சார் புடிக்கறீங்க இத்தனை தகவல்களை???

ஒன்று சேர் said...

என்ன ஆச்சர்யம் ஜோதி,

புலனாய்வு பத்திரிகையாளர் என்கிற நிலையை எட்டும் நிலையில் கலக்குறீங்க- எங்கிருந்து இத்தனை தகவல்கள்?

ஒன்று சேர் said...

என்ன ஆச்சர்யம் ஜோதி,

புலனாய்வு பத்திரிகையாளர் என்கிற நிலையை எட்டும் நிலையில் கலக்குறீங்க- எங்கிருந்து இத்தனை தகவல்கள்?

சத்ரியன் said...

ஜோதிஜி,

மக்கள் கண்களை கருப்புத் துணியால் கட்டி விட்டு, ஒளிவீசி உலகை ஏமாற்றும் உத்தமர்களை ஆடையை கழற்றி அந்தரத்தில் தொங்கவிடும் உங்கள் கட்டுரைகள் ஒவ்வொரு மனிதனும் படித்து விழிப்படைய வேண்டும்

ராஜ நடராஜன் said...

இரண்டாம் பகுதி படித்து விட்டு இந்த பகுதியை படித்தேன்:)

ஊரான் said...

எனது கருத்து அடுத்தத் தொடரில்...

Anonymous said...

மெக்ஷீஸ் தொலைபேசி நிறுவனம் உள்ளிட்ட மலேசியாவில் உள்ள பல நிறுவனங்களுக்கு சொந்தக்காரான இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஆனந்த கிருஷ்ணன், மலேசிய நாட்டின் இரண்டாவது நிலையில் இருக்கும் மிகப் பெரிய செல்வந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே பிறந்தார் என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை நண்பரே!

ஜோதிஜி said...

பிரபு நீங்கள் சொல்வது உண்மை தான். அவர் யாழ்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர் தான். அவரின் செயல்பாடுகளை தொழிலைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் அவரின் குடும்ப வாழ்க்கையை அதிகம் தொடவில்லை. நன்றி.

நன்றி சத்ரியன்.

கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அணைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.