Thursday, June 02, 2011

ஒரே ஒரு மிஸ்டு கால் ?

நண்பர்கள் கவனத்திற்கு

அன்னா ஹாசரே மூலம் லஞ்சம் ஊழலுக்கு முடிவு கட்ட இப்போது சற்று மேலே வந்து கொண்டிருக்கும் லோக்பால் மசோதா தாக்கல் செய்ய வேண்டுமென்றால் 25 லட்சம் மக்களின் ஆதரவு தேவை என்ற புதிய குண்டு ஒன்றை இந்திய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

இதற்காக ஒரு தொலைபேசி எண் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்.+91 22 615 50 789 . இந்த எண் மூலம் நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். மேலும் இந்த அழைப்புக்கு கட்டணம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. (டோல் ப்ரி)

உங்கள் அழைப்பு சென்றதும் உங்கள் ஆதரவு எடுத்துக் கொள்ளப்பட்டது என்ற குறுஞ்செய்தி உங்கள் கைபேசிக்கு வந்துவிடும்.

இதன் தொடர்பான வலைதளம் www.indiaagainstcorrupiton.org

எந்த நாட்டில் இருந்தாலும் உங்கள் ஆதரவை இந்த கைபேசி எண்ணுக்கு அனுப்பலாம் 09212472681

நண்பர்கள் இந்த செய்தியை பரவலாக்கம் செய்தால் நலம்

10 comments:

 1. நல்ல பதிவு...

  இதோ நான் கொடுக்கிறேன் மிஸ்டுகால்...

  ReplyDelete
 2. மிஸ்டு கால் தானே இதோ 10...........

  ReplyDelete
 3. கொடுத்தாச்சு சார், பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. மிஸ்டு கால் கொடுத்துவிட்டேன் தோழரே!!

  ReplyDelete
 5. ஜோதிஜி!இந்தியாவில் 25 லட்சம் ஒருமுறை கூப்பிடும் தொலை பேசி சாத்தியமற்றதா?

  பிரச்சினை அதுவல்ல.இந்த தகவல் மக்களுக்குப் பரவலாக எப்படி போய்ச்சேர்கின்றது என்பதே.

  காங்கிரஸ் அரசு ஒரு மார்க்கமாகத் தான் சுத்துது.கறுப்பு பணத்தை காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற பிரணாப் போன்ற காங்கிரஸ்காரர்களை நினைத்தால் பத்திகிட்டு வருது:(

  ReplyDelete
 6. 25 லட்சம் விரைவிலேயே எட்டிவிடும்.ஆனால் நாடாளுமன்றத்தில் என்னென்ன வித்தை காட்டப் போகிறார்கள் என்பதே பிரச்சினை.

  ReplyDelete
 7. ஜோதிஜி...வந்தேன்...ஓட்டும் போட்டேன்...அழைப்பும் கொடுக்கிறேன் !

  ReplyDelete
 8. என்ன ஜோதிஜி

  இன்னுமா லோக்பால் என்ற பெயரில் கூத்தடிக்கிறார்கள் என்பது புரியவில்லை. பிரதமர், நீதியரசர்கள், மந்திரிபிரதானிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை லோக்பால் மசோதாவிற்குள் கொண்டுவரக்கூடாது என்ற கருத்து தோன்றி 2 நாட்களாக வேட்டி மட்டும் கிழிபடவில்லை. தற்போது மாநில முதல்வர்களெல்லாம் இதில் கருத்து சொல்ல வேண்டுமாம்? ஆக லோக்பால் வந்த(தால்)பிறகும் தாசில்தார், மோட்டார் வாகன ஆய்வாளர், வி ஏ ஓ போன்ற லஞ்சம் வாங்குபவர்களை மட்டும் அந்த சட்டம் தண்டிக்கும் போலும் - காதுல பூ

  ReplyDelete
 9. ஒன்று சேர்

  இதில் புத்திசாலி சீனாதானா போட்டாரே ஒரு போடு. அன்னா ஹாசரே குழுவில் ஒற்றுமை இல்லையாம்? எப்பூடி?

  நன்றி ஹேமா

  சண்முக வேல். ஆட்டம் ஆடும் சோனியா அரசாங்கத்திற்கு நிச்சயம் தமிழ்நாடு தேர்தல் போல விரைவில் ஆப்பு உண்டு என்று நம்புகின்றேன்.

  நடாஜி பிரணாப்பூ இந்த கருப்பு விவகாரம் சம்மந்தம் மட்டுமல்ல. பெரிய அளவுக்கு வரிஏய்க்கும் தொழில் அதிபர்கள் என்ற போர்வையில் உள்ள கொள்ளைக்கூட்டத்தை கைவைக்கக்கூடாது. நாட்டின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டும் என்பது போல பல கிச்சுகிச்சு சமாச்சாரங்களையும் சொல்கிறார். இந்தியாவிற்கு நல்ல விவசாய நிதி உள்துறை அமைச்சர். வளர்க பார(ம்)தம்.

  நன்றி சென்னை பித்தன். சுரேஷ் மற்றும் தொப்பி சங்கவி

  இது ஒரு தவறான செய்தி என்று சொல்லி பலரும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். முடிந்தவரைக்கும் குறுஞ்செய்தி மூலம் பரப்ப பாருங்க.

  ReplyDelete
 10. http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete

கேட்பது தவறு. கொடுப்பது சிறப்பு.