Wednesday, June 15, 2011

தயாநிதி மாறன் -- மலையாய் மாறிய (ஸ்பெக்ட்ரம்) அலை

மழைக்காலம், வெயில் காலம் என்பது போலவே இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஸ்பெக்ட்ரம் காலம்.  திமுகவின் ஆட்சியை காவு வாங்கிய காரணங்களில் ஒன்றாக இருந்த இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி நாளொரு மேனியும் புதுப்புது வண்ணத்துடன் செய்திகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு செய்திக்குள்ளும் ஓராயிரம் மர்ம முடிச்சுகள். முதலில் திஹாருக்கு தனியாக போன ராசா துணைக்கு ஒரு கூட்டத்தையே சேர்த்து அழைத்துக் கொண்டார். 

இப்போது ' மெல்லிய மலர் வாடுகின்றது' என்ற தத்துவத்தை கலைஞர் உதிர்க்கும் அளவிற்கு கனிமொழி பேசும் மொழி திஹார்மொழியாக மாறிப் போயுள்ளது. இன்னும் சில வாரங்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ உள்ளேயிருக்கும் அத்தனை பேர்களும் இந்த திஹார் மொழியை பேசித்தான் ஆக வேண்டும் போலிருக்கு. ஆனால் இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஜயின் வலையில் சிக்கியது அத்தனை கெண்டை கெளுவை மீன்கள் மட்டுமே.  இன்னும் சுறா மீன்கள் சிக்கியபாடில்லை. ஆட்சியில் இருக்கும் வரைக்கும் சம்மந்தப்பட்ட காங்கிரஸ் தலைகளுக்கும் கவலையில்லை..


இதில் விட்டகுறை தொட்டகறை ஒன்று உள்ளது.  அவர் தான் திருவாளர் தயாநிதி மாறன்.  தொலைக்காட்சி துறையில் தொழில் தொடங்கிய குறுகிய காலத்திற்குள் மாறன் குடும்பம் பெற்ற வளர்ச்சி அசாதரணமானது. 15 வருடங்களுக்குள் உலக பணக்காரர் வரிசையில் கோலோச்சியவர்கள் செய்த உள்ளூர் தாதாதனங்கள் இப்போது தான் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. தயாநிதி சோனியாவை ஆண்டி என்றாலும் அம்மா தாயே என்றாலும் கூட உச்சநீதி மன்றத்தால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆப்பை கழட்ட முடியாது போலிருக்கு. அவரின் அதளபாதாளம் கண்ணுக்குத் தெரிவதால் அண்ணாத்தே நீ என்றைக்கு? என்பது போல் நிலவரம் சூடாய் போய்க் கொண்டிருக்கிறது.

எல்லாப் புகழும் தெஹல்கா இணைய தளத்திற்கே. 

நாம் இப்போது பார்க்கப் போவது காங்கிரஸ், திமுக, மாறன் வகையறாக்களைப் போல இதுவரைக்கும் வெளியே தெரியாத ஒரு நபரும் உண்டு. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது அலைக்கற்றை மூலம் இந்தியாவின் கஜானாவிற்கு முறைப்படி சேர வேண்டிய பணத்தை திருடியவர்களின் காவிய கதை. ஆனால் சன் குழுமமத்தால் தொழில் ஒப்பந்தம் போட்டிருக்கும் மலேசிய நிறுவனமென்பது (ASTROI) ஒருங்கிணைந்த இந்தியாவை எதிர்காலத்தில் துண்டாக்கி விடக்கூடிய சீன உளவு நிறுவனத்தின் கைப்பாவையாகும். அதன் முதலாளி வெகுஜன ஊடகம் எதுவும் இதுவரையிலும் சுட்டிக்காட்டப்படாத  மலேசிய தொழில் அதிபர் தமிழர் ஆனந்தகிருஷ்ணன். இவருடன் சன் தொலைக்காட்சி போடப்பட்ட ஒப்பந்தங்களுக்காக பலிகிடா ஆக்கப்பட்டவர் தான் இப்போது பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சிவசங்கரன்.  

யாரிந்த ஆனந்தகிருஷ்ணன்? . 

இவருக்கும் ஈழத்தில் நடந்த கடைசி கட்ட போராட்ட நிகழ்வுக்கும் சம்மந்தம் உண்டென்றால் நம்பமுடியுமா? 

இவரின் கைங்கர்யம் வெறுமனே தமிழ்நாடு, இந்தியா என்றில்லாமல் தெற்காசியா முழுக்க பரவியுள்ளது. குறிப்பாக ஈழம் சார்ந்த அத்தனை பொருளாதார உடன்படிக்கைகளுக்கும் சீன அரசு இவரை முன்னிறுத்தியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேம்போக்கான பார்வையில் இவர் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி. மலேசியாவின் அசைக்க முடியாத ஆளுமை. மலேசியாவின் எதிர்க்கட்சி ஆளுங்கட்சி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவரின் தயவும் வேண்டும்.  ஆனால் இவர் அடிப்படையில் சீனாவின் பொருளாதார அடியாள். 

இன்று வரையிலும் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த விமர்சனத்திறகு பஞ்சமில்லை. ஏன் விடுதலைப்புலிகள் இயக்கம் போரில் தோற்றது? எப்படி தோற்கடித்தார்கள்? ஏன் இத்தனை நாடுகளும் ஒன்றாக சேர்ந்து இலங்கைக்கு உதவி செய்தது? இந்தியாவுக்கு பிரபாகரன் மட்டும் தான் பிரச்சனையா? போன்ற ஏராளமான கேள்விகளுக்கு நாம் பதில் தேடினால் அதில் முக்கிய இடத்தை பிடிப்பவர் இந்த மலேசிய தொழில் அதிபர் ஆனந்த கிருஷ்ணன். 

மகிந்த ராஜபக்ஷே ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு நாடும் இலங்கையின் மேல் வைத்திருந்த கண்ணும், எதிர்பார்த்து காத்திருந்த தருணங்கள் போன்ற அத்தனையும் அனந்த கிருஷ்ணன் வாழ்க்கை வரலாற்றை நாம் தோண்டும் போது கப்பு வாடை நம் மூக்கை துளைக்கும்.  மனித உரிமை மீறல், அனாதை ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முகாமில் உள்ளவர்கள் என்று தேய்ந்து போன் வார்த்தைகளுக்குப் பின்னால் இருப்பது ஒவ்வொன்றும் சர்வதேச ஒப்பந்தங்களும் அதற்காக அடித்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளுமே ஆகும்.  2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சீன ஒப்பந்தங்களுக்குப் பினனாலும் அனந்த கிருஷ்ணனின் பங்களிப்பும் உண்டு. இவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு துக்கடா வேடத்தில் துட்டுக்காக அடித்துக்கொண்டிருக்கும் இவர்களை பார்த்து விடலாம்.

மாறன் சகோதர்களின் சன் நெட்ஓர்க் நிறுவனத்திற்கும் இப்போது தயாநிதி மாறனின் அமைச்சர் பதவியை காவு வாங்க தயாராக இருக்கும் தொழில் அதிபர் சிவசங்கரன் யார்?


திருவண்ணாமலை பகுதியில் பிறந்த 54 வயதான பி.ஈ பட்டதாரி.  தொடர்ச்சியாக எம்.பி.ஏ பட்டத்தை அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெற்றவர்.  உலகம் முழுக்க பரவியிருக்கும் இவரின் இன்றைய சொத்து மதிப்பு ஏறக்குறைய 20 ஆயிரம் கோடி ரூபாய். இன்று உலகம் முழுக்க இரும்புத்தொழிலில் சக்ரவர்த்தியாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் இந்தியரான சுனில் மிட்டலின் தொழில் தத்துவத்தைப் போலவே சிவசங்கரனும் நலிந்த நிறுவனங்களை வாங்கி, அதனை வளர்த்து, சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்றுவிட்டு அடுத்த தொழிலை நோக்கி நகர்ந்து போய் விடுவது என்ற கொள்கையை வைத்திருப்பவர். 

இவர் வைக்காத துறையே இல்லை என்கிற அளவிற்கு தொழில் மூளையைக் கொண்டவருக்கு தேடிக் கொண்ட தொழில் ரீதியான எதிரிகளும் அதிகம். கணினி, காற்றாலை முதல் பாமாயில், மின் திட்டங்கள் வரைக்கும் அத்தனை துறைகளிலும் ஆட்சி செலுத்திக் கொண்டிருப்பவர்.  பின்லாந்து முதல் இந்தோனேசியா வரைக்கும் இவரின் வேர்கள் பரவாத நாடுகளே இல்லை என்கிற அளவிற்கு மல்டி பில்லியனர்.  இவரின் மற்ற சுயதிறமைகளை பார்ப்பதை விட இவருக்கும் மாறன் சகோதர்களுக்கும் உருவான மோதலின் ஆணி வேரை பார்த்துவிடலாம்.  இவருக்கு வேறெங்கும் உருவாகத பிரச்சனைகள் இவருக்கு இந்தியாவில் மட்டும் உருவாகக் காரணம் என்ன? 

சன் தொலைக்காட்சி சேட்டிலைட் துறையில் காலடி வைப்பதற்கு முன்பே இந்த துறையில் இருப்பவர்கள் ஜீ ( ZEE )  குழுமம். இந்த குழுமத்தின் தலைவர் சுபாஷ் சந்திரா. இவர்கள் தான் மாறன் சகோதரர்களுக்கு நேரிடையான போட்டியாளர்கள்.  ஆனால் இன்று வரைக்கும் தமிழ்நாட்டில் ஜீ தொலைக்காட்சி அரசாங்கம் நடத்தும் பொதிகை போலவே பெயருக்கென்று தான் ஓடிக் கொண்டிருக்கிறது. . காரணம் சன் நிறுவனத்தின் ஆதிக்கத்தை .தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு நன்றாகவே தெரியும்.

மாறன் சிவசங்கரனை துரத்தி துரத்தி பழிவாங்கி நாட்டைவிட்டே ஓட வைத்த சம்பவங்கள் எதற்காக?  .

ஜனவரி 5 2005 முதல் சிவசங்கரன் சுபாஷ் சந்திராவுடன் கைகோர்த்து டிஷ்நெட் நிறுவனத்தை நடத்த தங்களின் தொழில் எதிரியுடன் சேர்ந்த சிவசங்கரன் சன் நிறுவனத்திற்கு நிரந்தர எதிரியாக மாறிப்போனார். முரசொலி மாறனுக்கு நண்பராக இருந்த சிவசங்கரன் மகன்களுக்கு நிரந்தர எதிரியாக மாற மாறன் சகோதர்களின் அரசியல் செல்வாக்கு சிவசங்கரனை நாடு விட்டு ஓடும் அளவிற்கு உருவாக்கத் தொடங்கியது. சிவசங்கரன் இந்தியாவில் நடத்திக் கொண்டிருந்த தொழில்களுக்கு உண்டான பாதிப்புகள் ஒரு பக்கம். ஜீ குழுமத்துடன் தான் நடத்தி வந்த டிஷ்நெட் தொழிலுக்கு உருவான இடைஞ்சல்கள் என்று சன் குழுமத்தால் உருவாக தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறத் தொடங்கினர். இதைத்தான் இப்போது சிபிஜ வசம் சிவசங்கரன் வாக்குமூலமாக கொடுத்துள்ளார் என்று நம்பப்படுகின்றது. 


தயாநிதி மாறன் மிரட்டலின் மூலம் சிவசங்கரனின் ஏர்டெல் நிறுவனத்தின பங்குகளைப் பெற்ற அஸ்ட்ரோ நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்தகிருஷணன் பற்றியும், ஈழத்தில் ராஜபக்ஷே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, வந்த பிறகு நடந்த சர்வதேச ஒப்பந்தங்களைப்பற்றியும் இனி பார்க்கலாம். 

இதன் தாக்கம் எதிர்கால இந்தியாவிற்கு எவ்விதமான அச்சுறுத்தல்களை உருவாக்கும்??? அதுவே நமக்கு இந்திய உளவுத்துறையின் "சிறப்பு" அம்சங்களையும் நமக்கு புரியவைக்கும்.

நன்றி -  நான் ஈழம் தொடர் எழுதிக் கொண்டிருந்த போது தோழர் பாமரன் அவர்கள் முருகன் என்பவர் எழுதிய அழிவின் விளிம்பில் தமிழினம் (முற்றுகைக்குள் இந்தியா) என்ற கோப்பை எனக்கு அனுப்பியிருந்தார்.  அச்சுக்காக தயாராக இருந்த அந்த பிடிஎப் கோப்பு ஏராளமான அதிர்ச்சிகளை தந்தது. இலங்கையை முன்னிறுத்தி சீன செய்து வரும் அத்தனை தில்லாலங்கடி வேலைகளையும் ஆதாரப்பூர்வமாக பல்வேறு தகவல்களுடன், இணையதளங்கள் உதவியுடன் எழுதியிருந்தார்.  ஒரு வருடத்திற்கு மேலான போதும் இந்த புத்தகம் வெளிவந்துள்ளதா என்பது குறித்து தகவல் இல்லை.  இனி வரும் பெரும்பான்மையான தகவல்கள் அவரின் கோப்பிலிருந்து எடுத்தாளப்படுகின்றது.

20 comments:

தமிழ் உதயம் said...

மாறன்களின் முறைகேடுகள் தேர்தல் முன்பு பரபரப்படைந்திருந்தால், காங்கிரஸுக்கு இந்த ஐந்து இடங்கள் கூட கிடைத்திருக்கிறது. திமுக ஒற்றை இலக்கத்திற்குள் முடங்கி போயிருக்கும் என்று ஒரு தளத்தில் வாசித்தேன். அது உண்மை தான் போலும்.

Paleo God said...

எத்தனை கிணறுகளோ? எத்தனை எத்தனை பூதங்களோ?

தொடருங்கள்..

Anonymous said...

மீளவே வாய்ப்பில்லை என்ற சூழல்தா உள்ளது...சரிகிறது சாம்ராஜ்யம்

சக்தி கல்வி மையம் said...

ஒரு டீடேலான பதிவு..

Anonymous said...

எல்லாம் பணமயம் ? அனந்தகிருஷ்ணனுக்கும் கேபிக்கும் எதாவது சம்பந்தம் இருக்குமா ? அதுக் குறித்தும் தகவல் சொன்னால் இன்னும் நல்லாருக்கும்.

Unknown said...

எனக்கு தெரிந்த்து அத்தகைய புத்தகங்களை அவ்வளவு சுலபமாக அனுமதிக்க மாட்டர்கள்... வாய்ப்பிருந்தால் அந்த பிடிஎப் கோப்பை தளத்தில் அப்லோட் செய்யுங்கள்.. எல்லாரும் பார்க்கலாம்//

Anonymous said...

நாளைக்கு ஒரு எக்சாமை வைச்சுக்கொண்டு இங்க வந்ததே தப்பு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். ஆனந்த கிருஷ்ணன் ரோபோ விழாவுக்கு வந்திருந்தார், நட்டின் உறவினர் ஒருவர் மூஞ்சி புத்தகத்தில் போட்ட படம் பார்த்திருக்கிறோம். அதில் இருந்தே தெரிய வேண்டும் அவருக்கு மாறன் சகோதரர்களுக்கும் எவ்வளவு நெருக்கம் இருக்க வேண்டும் என்று.

இரண்டு, புலிகளுக்கு ஒரு சதமும் கொடுக்காதவர் இந்த ஆனந்த கிருஷ்ணன். ஏன், நிதி சேகரிக்க இவரைச் சந்திக்க முயன்ற யாரையும் சந்தித்தில்லை. ஆனந்த கிருஷ்ணன் ஒரு தாதா என்று இங்கு படிக்கும் மலேசியர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். மலேசியாவில் கூட அவருக்கு தமிழர்கள் மத்தியில் மதிப்பில்லையாம்.

ஜோதிஜி said...

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

NAGA INTHU said...

ஒய்யாரகொண்டையாம் உள்ளே ஈறும்,பேனுமாம்,என்பதைப்போல ஒரே அசிங்கம்,அயோக்கியத்தனம் இவையே கேடி சகோதரர்களின் தொழில்மூலதனம்.வெட்கக்கேடு.
அரவரசன்.

Unknown said...

ஸ்பெக்டரம் விவகாரம் பூதத்தை விட பெரியதாக இருக்கும் போலிருக்கே, ஒருமாறன் போனாலும் இன்னொரு மாறன் தப்பிச்சிருவார் போல

சீ.பிரபாகரன் said...

கருப்புப்பணத்திற்கு எதிரான போராட்டம் என்பது சோனியாகாந்திக்கு எதிரான போராட்டமே.

சோனியா குடும்பம், கருணாநிதி குடும்பம், மாறன் குடும்பம், சிதம்பரம் குடும்பம் ஆகிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அதிகாரத்தில் உள்ள மலையாளிகளும் தமிழினத்திற்கும் நமது நாட்டிற்கும் மிகப் பெரிய துரோகத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை முழுமையாக அம்பலப்படுத்துவது ஊடங்களின் கடமை.

அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

Anonymous said...

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

Thank you.

Anamika

saarvaakan said...

நல்ல பதிவு.

ராஜ நடராஜன் said...

நீங்களும் விக்கிலிக்ஸ் மாதிரி புலானாய்வு தொடங்கிட்டீங்க போல இருக்குதே!

ஆனந்த கிருஷ்ணன் பெயர் தயாநிதி மாறனுடன் செய்திகளில் அடிபட்ட போது எனக்கு முதலாவது எழுந்த எண்ணம் இவருக்கும் இலங்கைப் போருக்கும் ஏதாவது தொடர்புகள் இருக்குமோ என்பதுதான்.

நமக்கு தெரியாத நிறைய விசயங்கள் ராவுக்கு தெரிந்திருக்கும்.ஆனால் அரசு இயந்திரங்கள் நாட்டு நலன் என்பதை விட தமது தேவைக்கேற்பவே தகவல் பரிமாற்றங்களும் திசை திருப்பல்களும் செய்கிறார்கள்.

ஊரான் said...

அரிய பல புதிய தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

குறும்பன் said...

//சிவசங்கரனின் ஏர்டெல் // அது ஏர்செல் ஏர்டெல் அல்ல. செ க்கு பதில் டெ போட்டா கதையே மாறிடும் :)

ஜோதிஜி said...

குறும்பன் நீங்க சொன்னது உண்மை. தொடர்ந்து மக்கள் தளத்தில் இருந்து கொண்டேயிருப்பதால் மாற்ற முடியாமல் தவிக்கின்றேன். மன்னிக்வும்.

லெமூரியன்... said...

வணக்கம் நண்பா..!
முந்தய பதிவில் நீங்கள் இணைத்திதிருந்த காணொளியை கண்டேன்...
அப்பொழுதே தெரிந்தது இந்திய உளவுத்துறை அமெரிக்காவின் கால்களை நக்கி கொண்டிருக்கிறதென்பது...
அவர்களுக்கு இது ஒன்றும் புதிதில்லையே...
நேரு காலத்தில் சீனாவுடன் நெருக்கம் கொண்ட இந்தியாவில்..
பெரும்பதவியில் இருந்த அத்தனை நபர்களும் சீனாவுடன் கால நக்கி கொண்டிருந்தனர் என கேள்வி....
பின்பு இந்திர காந்தி காலத்தில் கே.ஜி.பீ
பின்பு ஆரம்பித்தது அமெரிக்க கால் நக்கல்...இன்று வரை நேரடியாகவும்..மறைமுகமாகவும்
இந்திய உளவுத்துறையை இயக்குவதே அமெரிக்கா என்றே கதை நகர்கிறது....
இதற்கு நேர்மார் எண்ணம் கொண்ட புதிதாக சேரும் அதிகாரிகள் ஒன்று கணக்கிலா பணத்தின் மூலம் அடக்கப் படுகிறார்கள்..
அல்லது இந்தியாவிற்கான ஆபிரிக்க மற்றும் ஆசிய பசிபிக் தூதரகங்களுக்கு தூக்கி அடிக்கப் படுகிறாகள்...
உண்மையிலேயே தேச நலனில் அக்கறை இவர்களுக்கு இருந்திருக்குமானால் இந்திய பெருங்கடலை ஆள்வதற்காக புலிகளை பாதுகாத்திருப்பார்கள்..
அல்லது அவர்களுக்கென்று ஈழம் அமைத்து முடித்திருப்பார்கள்...
தமிழக ஆண்களால் சிங்கள ஆணுக்கு தெரியாமல் அவனின் உறவு பெண்களை புனர்ந்ததில் பிறந்தவர்கள்தாம் இந்த மலையாளிகள்
என்பது என்னுடைய நெடு நாள் சந்தேகம்...\
நல்ல தாயின் வயிற்றில் வந்தவன் எவனும் இவ்வளவு கொடூர மனம் படைத்தவராக இருக்க முடியாது....
சொல்லபோனால் ராஜபக்சேவை விட கொடூரமானவர்கள் இந்த மெனங்கள் நாயர்கள் பிள்ளைகள் மற்றும் நபூதிரிகள்....

ஜோதிஜி said...

தமிழக ஆண்களால் சிங்கள ஆணுக்கு தெரியாமல் அவனின் உறவு பெண்களை புனர்ந்ததில் பிறந்தவர்கள்தாம் இந்த மலையாளிகள்
என்பது என்னுடைய நெடு நாள் சந்தேகம்...\

நான் படித்த ஈழ சரித்திர பார்வையில் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகள் தொடங்கி ஈழத்தில் வாழ்ந்த பெரும்பான்மையினர் தமிழர்களே. இனக்குழுக்களாக சிங்களர் தமிழர்கள் என்ற பாரபட்சம் இல்லாமல் வாழ்ந்து போதும் கூட தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்க்குச் சென்ற தமிழர்கள் எந்த இனக்குழுவில் சேர்ந்தார்களோ அவர்கள் காலப்போக்கில் அந்த குழுவாக மாறியுள்ளனர். இந்த கணக்கின் படி அதிகமாக வருபவர்களும் தமிழர்களே. ஜெயவர்த்னே முதல் பல பெரிய தலைகள் அத்தனை பேர்களும் அக்மார்க் தமிழர்கள். சந்திரிகா குடும்பத்திலும் அவரின் கணவர் குடும்பத்தில் உள்ள முன்னோர்களும் சரி தொடக்க காலத்தில் தமிழ் பேசி தமிழில் பிரிட்டன் மக்களுக்கு காட்டிக் கொடுத்து கையெழுத்துப் போட்டும் கொடுத்துள்ளனர். நீங்கள் அப்பட்டமான வார்த்தைகளில் கொட்டியுள்ளீர்கள். சிங்களர்களின் முகச்சாடையை நன்றாக கவனித்து உற்றுப் பாருங்க. பெரும்பாலும் நம் தென்மாவட்டத்து மக்களைப் போலவே இருப்பாங்க. நிச்சயம் ஆறு தலைமுறைக்குப் பின்னால் தோண்டிப்பார்த்தால் அவங்க அப்பனும் தாத்தனுடைய பெயர் நிச்சயம் சுப்பன் குப்பனாகத்தான் இருக்க முடியும். இந்த வலி தான் இன்றைய தமிழர்களுக்கு அதிக வலியை உருவாக்கி மனசாட்சியே இல்லாமல் பல துன்பங்களை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்களோ என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு. இதற்கு மேல் இந்த சிங்கள இனவாதத்தை வைத்து பிழைக்கும் மானங்கெட்ட சிங்கள அரசியல்வாதி ஜென்மங்கள்.