Monday, October 12, 2009

கொலை கொலையாய் காரணமாம்


மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள்(3)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (46)

(முதன் முதலாக காந்தி தங்கிய ஆடம்பர மாளிகை தான்.  ஆனால் கடைசி மாளிகையாகவும் ஆகிவிட்டது)

கல்கத்தாவில் அப்போது கிளர்ந்தெழுந்த கலகத்தை எல்லோரும் சேர்ந்து நிறுத்தாவிட்டால் நான் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பேன் என்று காந்தியின் பிடிவாதத்தைக் கண்டு ஒவ்வொருவராக தங்களுடைய ஆயுதங்களைக் கொண்டு வந்து காந்திஜியிடம் ஒப்படைத்து இனி இங்கு மத துவேச அடிப்படையில் எந்த கலவரமும் உருவாகாது என்று சொல்ல மோசமான அவரது ஆரோக்கியமற்ற உடல் நிலைமையை கருத்தில் கொள்ளாமல் டெல்லி வந்து (1947 செப் 9) இறங்கினார்.

காந்திஜி எப்போது டெல்லி வந்தாலும் நகர சுத்திகரிப்பில் ஈடுபடக்கூடிய தொழிலாளர்கள் வசிக்கக்கூடிய சேரியில் (பங்கி காலணி) வந்து தங்குவது வழக்கம். ஆனால் இப்போது இந்திய பாகிஸ்தான் இடப்பெயர்ச்சி காரணமாக, கலவரத்தின் தொடக்கத்தின் காரணமான அத்தனை பேர்களும் மலத்தில் ஈ மொய்பபது போல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தனர்.  மேலும் மேலும் ஜனத்தொகை நாள்தோறும் கூடிக்கொண்டு இருந்ததால் சிகித்துக்கொள்ள முடியாத வாழ்க்கை அமைந்து இருந்தது.

ஆனால் காந்தி எப்போது போல நான் அவர்களுடன் தான் போய் தங்குவேன் என்றதும் அத்தனை பேர்களுக்கு வியர்த்து விட்டது.  நேருவும் படேலும் மொத்த நிலைமையை எடுத்துச் சொல்லி அதற்கு மேல் அவர் உடல் நிலைமையை அவருக்கு புரியும் விதத்தில் அக்கறையை உணர்த்தி அவரை பிர்லா மாளிகையில் தங்க வைப்பதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது.

முதன் முதலாக காந்தி தங்கிய ஆடம்பர மாளிகை அது தான்.  ஆனால் கடைசி மாளிகையாகவும் ஆகிவிட்டது.

காந்தி பிர்லா மாளிகையில் தங்க சம்மதம் சொன்னாரே தவிர அங்கிருந்த எந்த சொகுசு சமாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் எப்போதும் போல தான் கொண்டு வந்த கோரைப்பாயை தரையில் விரித்து வசிக்கத்தொடங்கினார்.

உண்ணும் உணவும் பாத்திரங்களைக்கூட அவர் மாற்றிக் கொள்ள தயராய் இல்லை.  கைப்பிடி உடைந்து மூங்கில் குச்சி வைத்து கட்டப்பட்டுருந்த ஸ்பூனைக்கூட அவர் மாற்றிக்கொள்ளவில்லை.  காரணம் அவரை மாற்றவும் முடியாது.  மாற்ற எவருக்கும் துணிச்சலும் இல்லை என்பது தான் உண்மை.

அங்கு இருந்தவர்கள், அவரைத் தேடி வந்து கொண்டுருந்தவர்கள் அத்தனை பேருமே  நீங்கள் இங்கு அவஸ்யம் நீண்ட நாள் தங்கியிருக்க வேண்டும்.  இந்த கலவர பூமியை கல்கத்தா போல் பிரார்த்தனை பூமியாக மாற்ற வேண்டும் என்றனர்.

அவருடைய அன்றடாட கடமை என்பது, தினசரி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்ப்பது, ஆறுதல் கூறுவது, முடிந்தவரைக்கும் சுகாதாரமாக இருக்கும் இடத்தை தாமே பாதுகாத்துக்கொள்வது என்று அங்குள்ள அனைவருக்கும் ஆலோசனை கூறுவது.  ஆனால் காந்தி இறப்பதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

விதி என்பது முடியும் தருவாயில் நம்பிக்கை இருப்பவர்களுக்கும் அது குறித்து நம்பிக்கை இல்லாதவர்களும் நிச்சயம் அதன் உணர்வுகள் ஒவ்வொன்றும் அறிகுறியாக தெரிவித்துக்கொண்டுருக்கும்.  அத்தனையும் மறைமுக பொருளாகத்தான்.  அதை உணர்ந்தவர் காந்திஜி.

ஆனால் அவரைக்கொல்ல வேண்டும் என்று கொள்கையாளர்களால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளையும் பார்த்து விடுவது அவஸ்யம்.

1. காந்திஜி இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை ஆதரித்தார் என்பது முதல் முக்கியமான குற்றச்சாட்டு

மொத்தமாக உள்வாங்கி பார்க்கும் போது அது உண்மை அல்ல.  பிரிவினை காரணமாக நீங்கள் கூறுகின்ற அத்தனை பாதகமும் நடந்து முடிந்த பிறகு எஞ்சி நிற்கும் இந்தியா அது எத்தனை விதங்களில் பலவீனமாக இருப்பினும் பரவாயில்லை.  ஆனால் அப்போது ஒற்றுமை கொண்ட பிரிவினை கோராத மக்களைக் கொண்ட இந்தியாவாகவே இருக்கும் என்று பல சந்தர்ப்பங்களில் சொல்லி வந்து இருக்கிறார்.

2. இந்தியா போன்ற நாடுகளில் அப்போது ஏற்பட கலவரத்தின் போது காந்திஜியின் கொள்கையான அஹிம்சை என்பது தவறானது.

காரணம் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் இந்துக்களே.  அத்தனை பேருமே காந்திஜியின் போதனைகளால் கெட்டுப்போனவர்கள்.  துன்பம் வரும் போது தன்னை தன் இனத்தை பாதுகாத்து தெரிந்து கொள்ளாதவனுக்கு காந்திஜியின் அஹிம்சை எதை உணர்த்தியது?
என்ன கற்று கொடுத்தது?

3.  ஜின்னா சாகிப்பின் நேரிடை நடவடிக்கையின் தளபதியான வங்காள அரசியல்வாதி சுஹ்ரவர்த்தி காந்திஜியின் ஆசிரமத்தில் வந்து அடைக்கலம் புகுந்தார்.  தன்னையும் காப்பாற்றிக்கொண்டு தன்னுடைய மக்களையும் காப்பாற்றி விட்டார்.  அது சரியாகவே இருக்கட்டும்.  அதே போல் பாகிஸ்தானில் உள்ள நகரகங்களில் வாழ்ந்த பெரும்பான்மையான மக்களையும் காந்திஜியின் கூற்றுப்படி அங்கிருந்த முஸ்லீம் தலைவர்கள் காப்பாற்றி இருக்க வேண்டும் அல்லவா?

காந்திஜி எப்போதும் முஸ்லீம்களின் நண்பன். அப்போது நடந்த இந்துக்கள் படுகொலையை தடுக்க என்ன முன்னேற்பாடுகள் செய்தார்?  எப்போதுமே முஸ்லீம்களுக்கே சலுகை காட்டும் மனிதர் தான் காந்தி.

இந்த மூன்று முக்கிய கொள்கைகள் போல வேறு சில விசயங்கள்.

ஜம்மு மற்றும் எல்லைப்பிரச்சனைகள் முடிவாக தீரும் வரையிலும், பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்க வேண்டிய 54 கோடி ரூபாயை கொடுக்கக்கூடாது.   காரணம் அந்த பணத்தை இப்போது இந்தியா கொடுத்தால் அவர்கள் நல்வாழ்வுக்கு என்று எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.  அத்தனையும் ஆயுதங்கள் வாங்கி இந்தியாவிற்கு எதிராகத்தான் பயன்படுத்துவார்கள் என்று நேரு முதல் படேல் வரையிலும் மறுத்துப்பார்த்தார்கள்.

ஆனால் காந்திஜி அவர்கள் என்னமோ செய்து விட்டு போகட்டும்.  அது நம்முடைய கடமை என்று தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தின் மூலம் கொடுக்க வைத்தார்.  ஆனால் உண்மையிலே மற்ற அத்தனை தலைவர்களும் சொன்னபடி தான் நடந்தது.  அப்போது பதவியில் இருந்த வெள்ளையர் ஜெனரல் மெஸர்வி ஆயுதங்கள் வாங்குவதற்காக இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.

அன்று அடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை இந்து மக்களுக்கும் அரணாக நின்று மொத்த உதவிகளை எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் செய்தவர்கள் சுயம் சேவக் சங்கத்தை சேர்ந்தவர்கள்.  அன்று அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் கோரத்தின் சுவடு என்பது இன்னமும் அதிகமாக இருந்து இருக்கும்.  போராட்டம் என்பது நீண்டு கொண்டே இருந்து இருக்கும்.

ஆனால் எல்லாமே சரிதான்?  இன்று வரையிலும் எல்லோர் மனதிலும் கேட்டுக்கொண்டுருக்கும் கேள்விகள்?

எல்லாமே முடிந்து விட்டது.  எதையும் மாற்ற முடியாது.  மறுக்கவும் முடியாது.  ஆனால் இந்த காந்திஜி என்ற தனிப்பட்ட ஒரு மனிதரை தீர்த்துக்கட்டியதும் என்ன சாதிக்க முடிந்தது?  என்ன பழைய நிலைமைக்கு கொண்டு வர முடிந்ததுள்ளது?  இவர்களின் மொத்த நோக்கமும் நிறைவேறியதா?

இந்து என்று சொல். அது தான் நம்முடைய உந்து சக்தி.  ஆனால் உள்ளுக்குள்ளே ஆயிரம் ஜாதிப்பிரிவுகள்.  ஒற்றுமை வேண்டாம்.

இந்த தலைப்பு காந்தியை கொலை செய்யக்காரணம் என்ற நிலையில் இருந்தாலும் என்னுடைய கருத்துக்கள் கொலை களத்திற்குள் சென்றுவிடக்கூடாது என்பது காலத்தின் கட்டாயம் போல.  காரணம் எனக்குத் தெரியாமல் அல்லது புரியாமல் இருந்த தொடர்ந்து கொண்டுருப்பவர்களின் வரிசைப்பட்டியலைப் பார்த்த போது திகைத்துவிட்டேன். நேரிடையாக மறைமுகமாக என்று.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக மூன்று தலைப்புகள் மட்டும் மீண்டு வருகிறது.  உருவான கோளாறு என்னை உணரவைத்து விட்டது.  உரையாடலில் என்னை உணரவைத்தவருக்கு நன்றி.  இன்னமும் என்னால் மீண்டு வரமுடியவில்லை ஐயா.  கசப்பு தான் என்றாலும் கண்ணியம், கடமையின் தொடக்கப்புள்ளியாக கருதுகிறேன்.  இந்தப் புள்ளி அழைத்துச் செல்லும் பாதையை சமர்பித்து செயலில் காட்டுகிறேன்.13 comments:

நாகா said...

Excellent way of presentation..

ஈரோடு கதிர் said...

தெரியாத நிறையத் தகவல்கள்

நன்றி

ஜோதிஜி said...

சும்மாவா? ஆப்பரசன் அடிச்ச ஆப்பு வாங்கிட்ட பெறவு அவார்டாவது ரிவார்டாவது. குமுறி அழுகாம குனிஞ்சு யோசிக்க வச்சா சூப்பரு தானே?

ஜோதிஜி said...

ஆமாம் கதிர் நானும் ஈரோட்டுக்குள் ரோட்டரி பிரிண்டிங்க்காக நாயா பேயா தொடக்கத்தில் அலைந்து இருக்கேன். அப்பவெல்லாம் ஈரோடு என்றால் 407 ஓட்ட ஒரு வாய்ப்பு என்று மட்டும் கருதிக்கொண்டு ஆவலாய் வருவதுண்டு. ஆனா நீங்கள் சொன்ன பசுமாட்டை பின்னால தொட்டு கும்புடுற அந்த நிகழ்வு ரெண்டு மூணு நாளா கண்ணுக்குள் கருத்துக்குள் இருந்துக்கொண்டே இருந்தது. இதாவது இறந்த காலம். ஆனால் நிகழ்காலத்தை இந்த கலக்கு கலக்குறீங்கள். வாழ்த்துக்கள் கதிர்.

ரவி said...

அற்புதமாக படைக்கிறீர்கள் ஜோதிஜி...!!!

அது ஒரு கனாக் காலம் said...

Though I lived in Delhi for quite a long years,I never visited the place where Gandhiji was shot...you brought me the place, incident, everything infront of us. I had been to Rajghat few occassions, and it was always quite moving, .... what a man ?

keep writting sir, it is very apt it came in Oct - Gandhiji's birth date ( month)

ஜோதிஜி said...

நன்றி, உங்களைப் போன்றவர்களை பார்க்கும் போது சற்று பொறாமையாக இருக்கிறது. எத்தனை எளிதாக எல்லா பதிவுக்கும் ஒரே வார்த்தைகளில் விமர்சனமாய் தந்து விடும் ஆளுமையை சற்று எனக்கும் சொல்லித்தாருங்கள்.

ஜோதிஜி said...

நன்றி சுந்தர். இந்தியாவில் உள்ள நான்கு பெரிய நகரங்களில் இன்று வரையிலும் பாதம் பதிக்கும் வாய்ப்பு டெல்லியில் மட்டும் அமையவில்லை. இந்த டெல்லி விசயங்கள் மட்டும் 50 பக்கங்களில் வருகிறது. அது போக இவை தொடர்பாக சேகரித்த கோப்புகள் தனியாக என்று மொத்தமாக உள்வாங்கும் போது உண்டான உணர்வுகள் சற்று வித்யாசமானது. ஓரே ஒரு வார்த்தை மட்டும் தோன்றுகிறது. நன்றாக நாடு வாழத்தொடங்கும் போது இந்த காந்தி என்பவர் காலாவாதியானவர். நன்றாக நாடு வாழ முயற்சிக்க தலைவர்கள் முயற்சிக்கும் போது காந்தி ஒரு வழிகாட்டி. நல்ல விதம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வரையிலும் காந்திஜி தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆதர்சண கடவுள். வெறுப்பவர்கள் குறித்து எனக்கென்றும் கவலையில்லை. சார்பாக இங்கு பதிய வைக்கின்றேன் என்பது குறித்தும் அச்சம் இல்லை. ஒவ்வொரு நாளும் நாகா என்னுடன் பேசும் போது பத்தாயிரம் கோடிக்கு மேல் சம்பாரித்து கொடுக்கும் திருப்பூரின் உள்கட்டமைப்பு அவருக்கும் இப்போது புரிந்து இருக்கும்? இன்று நாடு போய்க்கொண்டுருக்கும் பாதையில் தேவியர்கள் குழந்தை பேறு அடையும் நேரத்தில் அவர்கள் வீட்டில் கூட இந்த காந்தி படத்தை தான் மாட்டும் சூழ்நிலையில் வாழ்வார்கள் என்று தோன்றுகிறது.

பின்னோக்கி said...

நான் டெல்லி போன போது அவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை பார்த்தேன். அவர் கடைசியாக நடந்துவந்த பாதையை சிமெண்ட் பாதங்களாக மாற்றி வைத்திருக்கிறார்கள். சிறிது நேரம் அங்கிருந்து, அவர் கொல்லப்பட்ட கணம் இந்த இடம் எப்படி இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

ஜோதிஜி said...
This comment has been removed by the author.
ஜோதிஜி said...

இதைத்தான் மூணு மாசமா எதிர்பார்த்தேன் நண்பரே? ஏதோ உங்களுக்குள் இருக்கும் ஒரு சிந்தனை அது நல்லதோ கெட்டதோ அதை தூண்டும் அளவிற்கு அல்லது நினைவு படுத்தும் அளவிற்கு எழுத்துக்கள் மூலம் நானும் வளர வேண்டும். வந்து வாசிப்பவர்களையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்ட ? இன்று தான் தொடக்கப்புள்ளியில் தொடங்குகிறது. பின்னோக்கி அல்ல. என்னை சற்று முன்னோக்கி அமர வைத்து ஆசுவாசபடுத்தி உள்ளீர்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கட்டுரை ஜோதிஜி. பல விசயங்களை அழகாகத் தொகுத்துள்ளீர்கள். உண்மையிலேயே 1947ல் என்ன நடந்தது என்று உங்கள் கட்டுரை அழகாகக் காட்டுகிறது. நன்றி

நம்மைப் பொருத்தவரை வரலாறு என்பது பாடஏடுகளில் படிப்போதோடு சரி. அதிலும் எத்தனை சிதைவுகள், திரிபுகள்?

தொடர்ந்து எழுதுங்கள்.

THANGAMANI said...

நன்று.வாழ்க வளமுடன்.