Sunday, October 18, 2009

பிரபலங்களும் பதிவர்களும் கலந்து கொண்ட கண்ணீர் அஞ்சலிக்கூட்டம்

இறுதி கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்ள வந்த உங்களுக்கு இந்த நீள் பதிவு, சாப்பிட்ட தீபாவளி பலகாரத்தை,சிறப்பு திரைப்படத்தை,சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களின் பேட்டியை, செரிக்க வைத்துவிடும். கொண்டுள்ள கண் வழியோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.  வேறு வழி இல்லை

ஹே ராம்.


மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள்
புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் முடிவு பதிவு (51)

டெல்லியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜெ.சஞ்சீவிக்கு பம்பாயில் இருந்து ஜிம்மி நகர்வாலா என்கிற துப்பறியும் பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெனரல் தொலைபேசியில் தெரிவித்த கருத்து இது.

" ஏன்? எப்படி? என்று கேட்காதீர்கள்?  என்னுடைய உள் உணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.  காந்திஜியை கொலை செய்ய மற்றொரு முயற்சி நடக்கப்போகிறது.  இப்போது இங்கு நடந்து கொண்டுருக்கும் சூழ்நிலையை வைத்து பார்க்கும் போது மேலும் உறுதிபடுத்துவதாக இருக்கிறது."

தொடக்கம் முதல் அக்கறையில்லாமலே காலத்தை கடத்திக் கொண்டுருந்த சஞ்சீவி என்ற உயர் அதிகாரி "என்னை என்ன செய்ய சொல்கீறீர்கள்? உடுப்புடன் எந்த காவர்களையும் உள்ளே பார்த்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார்.  நான் என்ன செய்ய முடியும்? "என்றார்.

ஆனால் இந்த இரண்டு உயர் அதிகாரிகளுக்கும் தேவையான உண்மையான குற்றவாளிகளின் பெயர், புகைப்படம் போன்ற சகல விபரங்களுடன் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த பூனா டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் யு. எச்.ராணாவின் மேஜையில் தயாராக இருந்தது.  யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், இத்தனை பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் நான்கு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அன்று தான் பணியில் சேர்ந்து இருந்தார்.

நுழைந்த நாளில் அத்தனை கோப்புகளையும் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு மற்ற விசயங்களில் கவனம் செலுத்திக்கொண்டுருந்தார்?

1948 ஜனவரி 30 காந்திஜியின் கடைசி தினம்.  அன்று அவர் பிரார்த்தனை கூட்டத்தில் பாடிய ஸ்லோகத்தின் பொருள் இது.

"பிறந்தவர்களுக்கு மரணம் உறுதி.  இறந்தவர்கள் மறுபடியும் பிறப்பது உறுதி.  ஆகையினாலே தவிர்கக இயலாதவற்றைப் பற்றி நீ துயரப்படலாகாது"

அன்று மாலை காந்திஜி சர்தார் வல்லபாய் பட்டேலுடன் பேசிக்கொண்டுருந்தார்.  ஐந்து மணிக்கு கூட்டத்தை ஆரம்பிக்க வேண்டியவர் அன்று பேசிக்கொண்டுருந்ததால் நேரம் போவதே தேரியவில்லை.  எதேச்சையாக கடிகாரத்தை பார்த்த போது மணி ஐந்து பத்து.

"நேரமாகி விட்டது.  பிறகு சந்திப்போம்" என்று அவசரமாக கிளம்பினார்.மறுபடியும் விதியின் விளையாட்டு?

எப்போதும் அருகில் இருக்கும் சுசிலா நய்யார் பாகிஸ்தான் பயண ஏற்பாட்டுக்கு சென்று இருந்தார்.  எப்போதும் அவர் மேல் அக்கறையாக சாதாரண உடையில் காந்திஜியின் பக்கத்தில் இருந்து கவனித்துக்கொண்டு இருந்த டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்குப் பதிலாக இப்போது மற்றொரு அதிகாரி.

யார் காரணம்? காந்திஜியா? நேருவா? ஜின்னா சாகிப்பா? மவுண்ட் பேட்டன் பிரபுவா? கோடு கிழித்த ஆங்கிலேய கணவானா?  பாகிஸ்தானில் இருந்து இடம் பெயர்ந்து வந்த நேற்று கோடியில் புழங்கிய அடுத்த நாள் புழுங்கியவர்களின் அவஸ்த்தை பேரணி இது.  நாதுராம் கோட்ஸே தொடக்கத்தின் மூலம் இது.  காந்திஜியின் இறப்பு நிர்மூலத்தில் இதுவும் ஒரு காரணம்?

அந்த மாலை வேலையில் அவரும் அவசரமாக கலந்து கொள்ள வேண்டிய கூட்டத்திற்காக வெளியே சென்று விட்டார்.

மனுகாந்தி, ஆபாகாந்தி தோளில் கைப்போட்டுக்கொண்டு சென்ற போது பாதையில் இருந்தவர்கள் இரண்டு புறமும் விலகி வழிவிட்டனர்.  அதுவரையில் ஒரு ஓரமாக அத்தனையும் கவனித்துக்கொண்டுருந்த கோட்ஸே ஒரு முடிவுக்கு வந்தவனாக பின்னால் இருந்து சுடுவதை விட முன்னால் நேருக்கு நேர் நின்று சுடுவது எளிது என்று நினைத்து இரண்டே எட்டி முன்னே பாய்ந்து சென்றான்.வணங்குகிறேன் ஐயா.  வாழ்த்துகிறேன் தாத்தா.  உங்கள் பணியை நீங்கள் முடித்துக்கொள்வதாக தெரியவில்லை.  உங்களை வழி அனுப்ப எனக்கு வேறு வழியும் தெரியவில்லை.  உள்ளே என்னுள் எறியும் தீக்குஎத்தனை மக்களின் விழிநிரைக்கொண்டு ஊற்றி அணைக்க முடியும்? சொல்லாமாலே உணர்த்திய நாதுராம். 

பாதைக்கு நடுவில் நின்றவன் வந்து கொண்டு இருந்த காந்திஜியை பார்த்து "
நமஸ்தே காந்திஜி"  என்றான்

கொண்டு வந்து இருந்த பைபிளில் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து கூப்பிய கரங்களுக்குள் வைத்திருந்தான்.  அவன் காந்திஜியின் காலில் விழுந்து வணங்கப்போகிறான் என்ற பயந்த மனுகாந்தி அவசரமாக " சகோதரரே விலகுங்கள்.  பாபுஜிக்கு ஏற்கனவே பிரார்த்தனைக்கு தாமதமாகிவிட்டது  "என்றார்.

அதே வினாடி நாதுராம் வினாயக கோட்ஸேயின் இடது கரம் மின்னல் வேகத்தில் நீண்டு அவளை முரட்டுத் தனமாக விலக்கித் தள்ளியது.  வலது கரத்தில் இருந்து நீண்ட பெரட்டா துப்பாகியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குண்டுகள் கிளம்பி காந்திஜியின் மார்பில் புதைந்தன.
கோட்ஸேவுக்கு பதில் வணக்கம் தெரிவிகக குனிந்த கரங்கள் அப்படியே இருக்க "ஹே ராம்"  என்று திணறிய காந்திஜி இன்னும் முன்னால் செல்ல முயற்சிக்கின்றவரைப் போல மேலும் ஒரு அடி முன்னால் வைக்க முயற்சித்த உயிரற்ற உடலாகக் கீழே சரிந்தார்.

ஆம் காந்திஜி என்ற அந்த எளிய மனிதரோடு அஹிம்சை, சத்தியம், உண்மை அத்தனையும் சரிந்தது.

ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் என்கிற பத்திரிக்கை முதல் பக்கத்தை காலியாக கருப்புக் கட்டம் போட்டு நடுவில் ஒரே ஒரு பாரா அளவுக்கு செய்தி வெளியிட்டு இருந்தது.

" காந்திஜி எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ அவர்களில் ஒருவனால் கொல்லப்பட்டு விட்டார்.  இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்ட அதே வெள்ளிக்கிழமையன்று, 1915 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது சிலுவையேற்றம் நடந்துள்ளது.  ஆண்டவனே, எங்களை மன்னித்து விடு."

பின்குறிப்புகள் அல்லது எழுத்தில் வராத விசயங்கள்

1. காந்தியின் நோக்கங்கள், கொள்கைகள், தனிப்பட்ட வாழ்வில் கடைசி வரையிலும் கடைபிடித்தவைகள், மகனிடம், பேரனிடம் காட்டிய கண்டிப்பின் விளைவாக இழந்தவைகள், மற்ற நகைச்சுவை சமாச்சாரங்கள்.  ஆனால் மொத்தத்தில் அவர் சராசரி மனிதர்களின் வாழ்க்கையை உணர்த்தக்கூடிய உள்வாங்கக்கூடிய குறியீடு அல்ல.  தவமில்லா பெற்ற வரம்.  அதனால் தான் சாபக் கணக்கில் வரவு வைத்தோம்.

2. ஜின்னா சாகிப் அவர்கள் பாகிஸ்தான் என்ற தன்னுடைய கனவு கைக்கு வந்ததும், புதிய பாகிஸ்தானின் தொடக்க தேசிய கீதத்தை இவர் தான் இயற்ற வேண்டும் என்று அவரே விரும்பி அழைத்த ஒரு இந்துக் கவிஞர்.  முதல் 18 மாதங்கள் அந்த கீதம் தான் ஒலித்தது.

3. ஜின்னா சாகிப் தன்னுடைய கடைசி வாழ்நாள் வரைக்கும் வாழ்நாளில் நான் செய்த மகா மிகப் பெரிய தவறு என்பது இந்தியாவை பிளவு படுத்தியது என்று புலம்பிக்கொண்டுருந்தது.

4.  ஜின்னா சாகிப் அவர்களின் தனிப்பட்ட கொள்கைகள், குணாதிசியங்கள், உடம்பு முழுக்க நோய் என்பதைத்தவிர வேறேதும் இல்லா போதும் அவருடைய நோக்கத்திற்காக எடுத்துக்கொண்ட பாதைகள்.

5.  பாகிஸ்தான் என்ற நாட்டில் வாழக்கூடிய மக்கள் "  மதம் என்பதைக் கடந்து மனிதப்பண்புகளுடன் வாழ்ந்தால் தான் கடைசி வரை இந்த நாடு முன்னேற்றம் அடைவதற்குண்டான் வழியாக இருக்கும்.  எதிர்காலத்தில் இப்போது மதம் சார்ந்த பாகிஸ்தானாக இருக்கக்கூடாது? " என்ற நிதர்சன குறீயீட்டை அன்றே அவர் வெளியிட்ட மனசாட்சி குறித்து.

6.  நிஜாம் மற்றும் ஹரிசிங் மன்னர் குறித்து.  அளிக்கப்பட்ட தகவல்கள் நாலில் ஒரு பங்கு மட்டுமே.

7,  கலவரத்தின் போது முஸ்லீம் மற்றும் சீக்கியர்களின் முழுமையான கோரத்தாண்டவம், பின்புலம், தனிப்பட்ட நபர்கள் அடைந்த லாபங்கள், குணாதிசியங்கள், மொத்த மக்கள் அடைந்த துன்பங்கள்.

8, வெகுஜன ஊடகத்தால் இன்று வரையிலும் சரியான முறையில் வெளிவராத வீர் சாவர்க்கர் குறித்த குறிப்புகள்.  கடைசி வரையிலும் அவர் ஒரு அவதாரமாகவே வாழ்ந்தார்.  மதப்பற்று என்பது ஜின்னாவைப் போல அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்த போதிலும், தன்னுடைய கொள்கைகளுக்காக ஜின்னாவைப் போல சாமான்யன் வாழ்க்கையை பாதிக்கப்படச் செய்யவில்லை.  அவரது முக்கிய குறிகோள் முஸ்லீம்களாக இருந்தாலும் தவறு செய்பவர்கள் எவராக இருந்தாலும் அவரது அழிப்பில் இருந்து தப்பிக்க முடியவில்லை.  ஆங்கிலேயர்கள் உட்பட.


1. இடுகை என்பதும் பதிவு படைப்புகள் என்பதும் தேவைதானா?  என்ன சாதித்து விடப்போகின்றோம்?

தினந்தோறும் நாள்குறிப்பாக உங்கள் டைரியில் எழுதிக்கொள்ளும் போது அது உங்களின் அந்தரங்கம் குறித்ததாக உங்களுக்கு மட்டும் சொந்தமாகி விடுகின்றது.  அதுவே நீங்கள் உள்வாங்கிய விசயங்களை படைப்புகளாக எழுத முற்படும் போது உங்களின் உண்மையான திறமை, ஆளுமையினால் வளர்ந்துக்கொண்ட உங்களின் சிந்தனைகளில் உள்ளே இருப்பது வெறும் வக்கிர எண்ணங்களா? வடிகாலுக்கான விசயங்களா? படிப்பவர்களை சிரிக்க வைத்து அவர்களின் ஆயுளை கூட்டுவதற்காகவா? இல்லை சமூக அக்கறையினால் உருவாகும் சிந்திக்கக்கூடிய விசயமாக இருக்கிறதா? இல்லை புகழ் போதையினாலா என்பதை உணர்த்தி வாசிப்பாளர்களை உள்வாங்க வைத்து விடும்.

2. நன்றாக எழுத வேண்டும் என்று முற்படும் போது?

நீங்கள் வாசிக்கும் அல்லது பார்க்கும் எந்த ஊடகமும் உங்களின் உணர்ச்சிகளை தூண்டாது.  உண்மைகளை தேடி அலையத் தொடங்கும். வசதியான வாழ்க்கை அமையாவிட்டாலும் உண்மையான வாழ்க்கையை உணர்ந்து வாழ உங்களை அமைதிப்படுத்தும்.  வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையை குறை நிறைகளுடன் நேசிக்கத் தூண்டும். எழுதுகின்ற எழுத்து என்பது காசு வாங்காத மன நல மருத்துவர்.

3. விமர்சனம் என்பது? ஏன்?

எழுத வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கும், முயற்சித்துக்கொண்டுருப்பவர்களும், முடியவில்லை என்று அங்காலாய்ப்பில் சலித்துக்கொள்பவர்களும் உள்வாங்கியதை விமர்சித்துப்பாருங்கள்.  என்ன விமர்சனம் என்பதை விட உங்கள் உள்வாங்கிய, உள்வாங்கும் தகுதி என்ன என்பதை அப்பட்டமாக உணர்த்திவிடும்.

நீங்கள் அளிக்கும் ஓட்டு முறை என்பது நீங்கள் உள்வாங்கியது பிடித்தமானது என்பதை உலகறியச் செய்வதற்காக நீங்களும் படியுங்கள் என்று படிப்பவர்களை அதிகப்படுத்தும் முயற்சி. 

இவர்கள் என்னை வளர்த்தவர்கள், வாழ்ந்து கொண்டுருக்கின்ற வாழ்க்கையை எழுத்துலக வாழ்க்கையை வளப்படுத்தியவர்கள்.   விமர்சனம் தந்த காரணத்தால் முக்கியமானவர்கள் அல்ல.  இவர்களின் அத்தனை பேர்களின் இடுகையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் படித்து என்னுடைய படபடப்பை குறைத்துக்கொள்கிறேன். காரணம் சிரிக்க வைக்கின்றார்கள், சிந்திக்க வைக்கின்றார்கள், குறைகளை சுட்டிக்காட்டுகிறார்கள், போக வேண்டிய பாதையை தங்களுடைய எழுத்தால் குறிப்பால் உணர்த்துகிறார்கள்.  இவர்களைப் போல் நண்பர்களாக இணைந்தவர்கள்,  ரீடரில் ஒற்றை இலக்கத்தில் இருந்த எண் இன்று இரண்டு இலக்கமாக மாறியதற்கு காரணம் அத்தனையும் இவர்கள் தான் முக்கிய காரணம். கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்வதற்கு முன் நீங்கள் இவர்களை  உள்வாங்கிப்பாருங்கள்.  இல்லத்தை பிடிக்காதவர்கள் கூட உங்கள் உள்ளத்தில் இவர்களுக்கு இடம் கிடைக்கக்கூடும்.

1. அதிகபிரசங்கி தனமான தொடக்க எழுத்துக்களை தன்னுடைய காந்திய தன்மையால் கரை சேர்த்தவர். உறவான வழிகாட்டி.

2. எல்லாமே விஞ்ஞானப்பார்வை என்றாலும் என்னுடைய திசைகாட்டி.

3. உறங்கிய சுதந்திர உண்மைகளை நீங்களும் உள்வாங்கலாம் என்று உலகிற்கு உரைத்த உத்தமர் குழு.

4. அப்பொழுதே நன்றாகத்தான் இருக்கும் என்று வழிமொழிந்தவர்

5. விமர்சனங்கள் தேவையில்லை.  அப்பாற்பட்டது என்று அக்கறையின்பால் சொன்ன பெரிய வார்த்தைகள் தந்த ஆசிரியை.

6. அருகில் இருந்தாலும் அமைதியாய் ரசித்துக்கொண்டுருந்தவர்? சத்திய வார்த்தைகளை எப்படி விமர்சிப்பது என்ற தோழி.

7. இலங்கை குறித்து எழுதியே ஆகவேண்டும் என்று சிந்திக்க சொல்லி தந்தவர்கள் 1, வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்கையை மாணவர்களுக்கு வழிகாட்டிக்கொண்டுருப்பவர்.   2. பக்கத்து ஊரை பரவசமாக சொன்னவர். அவலத்தை உணர்த்தியதால் பல நாட்கள் தூக்கம் கெடுத்தவர்.
8. அலட்டிக்கொள்ளாமல் ஆச்சரியப்படுத்தியவர் இவர்.

9. கந்தா போற்றி,

10.  முன்னோக்கி உங்களை அழைத்துச் செல்பவர்

11.  பதிவும் சரி இயக்கும் படமும் சரி அளிக்கும் விமர்சனமும் சரி நமக்கு பாடம்.

12. வாழும் நிகழ்காலத்தை உணர்த்தியவர்.

13. சீக்கிரம் உரிக்க மாட்டார்.  உரித்தால் சிரிக்க வேண்டும் அல்லது அழ வேண்டும்.

14. அடுத்த ப்ளைட் பிடித்து வந்து ஆட்டோகிராப் கேட்பாரோ?


16.  வாழும் வாழ்க்கையும் செய்யும் தொழிலும் பகுத்தறிவு பாதை.

17. வலைதள சூட்சமத்தை சொல்லித்தந்த குரு.


19. தமிழ் சொல்லித்தாருங்கள் என்றவர்.

20. நான் எழுதக் காரணமாக இருந்த பிரபல்யம்.

21. என் தகுதியை உணர்த்திய பிரபல்யம்.

22. பேசிய பிரபல்யம்.

23. எழுத வேண்டும் என்ற சக்தியை அளிப்பது.

24.  திருந்தாமல் திசை தெரியாமல் வாழ்ந்த வாழ்க்கையை அக்கறைபடுத்தியவர்கள். ஆளுமை செய்து கொண்டுருப்பவர்கள்.

ஆனால் படைப்பு என்பதை ஒரு நாள் அத்தனை பேர்களும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்று படைத்துக்கொண்டுருப்பவர்.ஜோதிகணேசன். தேவியர் இல்லம்.  திருப்பூர்.

வணங்குகிறேன்.  வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.  வளர்க நலமுடன்.

14 comments:

ரோஸ்விக் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் "திசைகாட்டி" நான் தானா என்று தெரியவில்லை. நானாக இருந்தால் சரியான பதிவின் முகவரி "http://thisaiakaati.blogspot.com" என உங்கள் இடுகையில் திருத்தி விடவும்.

இராகவன் நைஜிரியா said...

மிக அழகாக எழுதப் பட்ட தொடர். விரும்பிப் படித்து கொண்டு இருந்தேன்.

இறுதி பாகத்தில் கண்ணீருடன் முடிக்கப் பட்டுவிட்டது.

அருமையான நடை. மேன் மேலும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்ப்பார்க்கின்றேன்.

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள் , உங்களின் கடின முயற்சி நன்றாக வந்து, எல்லாரையும் ஓரளவுக்கு சிந்திக்க வைத்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

எந்த பக்கமும் சாயாமல், இந்து மன்னர்களும் இப்படி தான் வாழ்ந்தார்கள், முஸ்லிம் மன்னர்களும் அப்படி தான் வாழ்ந்தார்கள் ..இதில் மட்டும் அவர்கள் வித்தியாசம் காண்பிக்க வில்லை.

வரலாற்றை படித்த பொழுது / பார்த்த பொழுது சில சமயங்களில் காந்தி என்கின்ற மகான் மீது கோபம் வந்தாலும், .... இப்படி ஆகி விட்டதே என்று எல்லோரும் நெகிழும் ஒரு தருணம் தான் அவர் வாழ்கையின் முடிவு. அது மிக சரியாக வந்திருக்கிறது உங்கள் பதிவில் , அது தான் உங்கள் வெற்றி.

பிரபாகர் said...

அய்யா, நாங்களெல்லாம் பேறு பெற்றவர்கள் உங்களின் அன்பிற்கு பாத்திரமாய் இருக்கறோம் என்பதால்.

அருமையாய் தொடங்கி, மனத்தினை உருக்கும் வண்ணம் முடித்திருக்கிறீர்கள்... அதற்கு என் இதயப்பூர்வமான நன்றிகள்.

வரலாற்று நிகழ்வுகள் பெரும்பாலும் புனையப்பட்ட வடிவிலேயே பார்த்திருந்தாலும், உண்மையை தெரிந்து கொள்ளவேண்டும் எனும் ஆர்வம் மிக உண்டு... அதற்கான தேடுதல்களில் என் அன்பு நண்பர் நாகா மூலம் நீங்கள் கிடைக்க, பெரிது மகிழ்ந்து உங்களை தொடர்ந்து ரசிகனானேன், உங்களைப் பற்றி நிறைய நண்பர்களிடமும் எடுத்துச் சொன்னேன்.

நீங்கள் உங்களின் அனுபவங்களை எல்லாம் எங்களோடு இன்னும் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும்.

உங்களின் நட்பால், உங்களின் அனுபவப்பகிர்வால் சந்தோசம் அய்யா..

பிரபாகர்.

ஷண்முகப்ரியன் said...

நிறுத்தி,நிதானமாகப் படிக்க வேண்டிய பதிவு.

ஆழ்ந்து படித்து விட்டு அசைபோட உங்களை அணுகுகிறேன்.
உங்கள் பதிவர் பட்டியலில் எனது பெயரும் இருப்பதை,எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமையாகக் கருதுகிறேன்,ஜோதி கணேசன்.

வாழ்க,வளர்க.

ஈரோடு கதிர் said...

மற்றவர் உள்ளத்தில் இடம் பெற என்னைச் சுட்டியமைக்கு நன்றி ஜோதி கணேசன்

நிகழ்காலத்தில்... said...

\\இவர்களின் அத்தனை பேர்களின் இடுகையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் படித்து என்னுடைய படபடப்பை குறைத்துக்கொள்கிறேன். காரணம் சிரிக்க வைக்கின்றார்கள், சிந்திக்க வைக்கின்றார்கள்,\\

தங்களைப் போல் நாட்டைப் பற்றி, சுதந்திரத்தைப் பற்றி எழுத என் சம வயது நண்பர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்..

ஜோதிஜி, எங்களைப் போல் எழுத பல நண்பர்கள் உள்ளனர்,

ஆனால் தங்களுக்கு நிகர் தாங்களே.. இது வெறும் உபசார வார்த்தைகள் அல்ல..

வாழ்த்துக்கள்

பின்னோக்கி said...

காந்தியின் கை பிடித்து நடந்து எங்களையும் கூட்டிச் சென்று, அவர் விடை பெற்றதையும், நெஞ்சம் பதை பதைக்க கூறி, ஒரு அருமையான, மீண்டும் படித்து, வரலாற்றை புதுப்பிக்க இந்த தொடர். நீங்கள் எடுத்துக் கொண்ட உழைப்பு உங்களின் இத் தொடரில் தெரிந்தது. வரலாற்றை எழுதும் போது, தன் கருத்தை புகுத்தாமல் நடந்ததை, நடந்ததாக, எழுத வேண்டும். அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள். மீண்டும் திரும்பி பாருங்கள், இந்த கட்டுரை எத்தனை பேருக்கு நம் நாட்டு வரலாற்றை படிக்க தூண்டுகோலாக இருக்கும் என்று. எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
வாழ்த்துக்கள் மீண்டும் !!

☼ வெயிலான் said...

_/\_ பதில் வணக்கம் :)

தீப்பெட்டி said...

வரலாற்றை உங்கள் வாக்கியங்களில் படம்பிடித்து காட்டியது அருமை..

என்னையும் நினைவில் வைத்திருந்தமைக்கு நன்றிகள்..

அடுத்த வரலாற்றுத்தொடரை எதிர்பார்த்து..

Unknown said...

மிக அருமையான தொடர்....

நன்றி

ஜோதிஜி said...

எழுதுகின்ற படைப்புகள் இளைப்பாறல் தந்தது. உருவான, உருவாகப் போகும் தொடர்புகள் உள்ளத்துக்கு மகிழ்ச்சியை தந்தது. தரும். வலிமையான எண்ணங்கள் வெறும் வானவில் அல்ல. வாழ்க்கையில் நம்முடைய வழித்தோன்றலுக்கு தேவைப்படும் வழிகாட்டியும் கூட. வந்தவர்களுக்கு, படித்தவர்களுக்கு, ரசித்தவர்களுக்கு, சிரித்தவர்களுக்கு,விமர்சனம் தந்தவர்களுக்கு, தொடரப் போகின்றவர்கள் அத்தனை பேர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். வணக்கம்.

geethappriyan said...

ரொம்ப நல்ல எழுத்துக்கள்,
தொடர்ந்து படித்தேன்,பின்னூட்டமிட்டதில்லை,ஓட்டு மட்டும் போட்டிருக்கிறேன்.
தொடர்ந்து படையுங்கள் சார்.

ஜோதிஜி said...

அறிவுத்தேடல். நீங்கள் பின் ஊட்டம் கொடுக்காததை விட உங்கள் உள்ளத்தில் உள்ளதை இல்லத்தில் தெரிவித்த விதம் என்னை மேலும் உழைக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி உள்ளது. தேடல் உள்ள உயிர்களுக்குத் தானே தினமும் பசியிருக்கும்?