Friday, October 16, 2009

பினாமிக்கு பின்னால் பெரிய ஆணி



இந்திய பாகிஸ்தான் பிரிந்து போவதற்கு முன்னால் உள்ள இந்திய ஆடையின் அளவு இது.

மகாத்மா காந்தி வாழ்க்கை கொள்கை இறப்பு சில உண்மைகள் (6)

புதைக்கப்பட்ட தெரியாத ரகஸ்யங்களின் தொடர்ச்சி (49)

ஆன்மீகம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அவன் உள்வாங்கியதன் உச்சம் என்பதாக கருதப்படுகிறது.  காரணம் அந்த தனி மனிதனின் வாழ்க்கை நீ வெறும் எச்சம் தான் என்று உணரும் போது தான் அத்தனை பேர்களும் அந்த பயத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள்.  அறிந்தவன் மேன்மேலும் உச்சத்தை அடைகின்றான்.  அடையாதவன் அல்லது விரும்பாதவன் அவஸ்த்தைகளை இனம் பிரிக்கத் தெரியாமல் குழப்பம் அடைகின்றான்.

இல்லை இது தவறானது?

வளர்ந்த விஞ்ஞானமும், நாம் கொண்ட பகுத்தறிவும், அறிவு என்பது மட்டுமே உண்மை என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கு ஒரே ஒரு செய்தி?

இறப்பு என்பது உறுதிபடுத்தப்பட்டது?

இன்றளவும் எந்த நவீன விஞ்ஞானமும் அதை மாற்ற முடியவில்லை.  தள்ளிப்போட வேண்டுமானால் முடியலாம்.  ஆனால் அதைக் கிள்ளி அந்தப்பக்கம் ஒதுக்கிவிட முடியாது?  ஆனால் இந்த இறப்பு என்பது நம்மிடம் வந்து சேரும் போது இயற்கை முறையினாலா? அல்லது உருவாக்கப்பட்ட செயற்கை முறையிலா? என்ற கோட்பாடுகளில் தான் இன்று வரையிலும் அத்தனை நம்பிக்கையாளர்களும் தான் கொண்டுள்ள எண்ணம் சரிதான் என்று உறுதிபடுத்திக்கொண்டு வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள்.

இவன் இப்படித்தான் போவான் என்று அப்பொழுதே தெரியும்

செய்த பாவம் நிம்மதியா விட்டுடுமா?

அடப்பாவி இவனுக்கு இப்படி ஒரு சாவா?  தப்பித்து விட்டானே?

இவருக்கு இப்படி ஒரு சாவா?  சாமிங்றது சத்தியமா இல்லப்பா?

எத்தனை எத்தனை உரையாடல்கள் நம் வாழ்வில்?

காந்திஜியைப் பொறுத்தவரையில் சராசரி மனிதர்களை விட தன்னுடைய வாழ்க்கை முறைகளை மிகுந்த அக்கறையுடன் முடிந்தவரையிலும் ஒழுக்கமாய் உண்மையாய் வாழ்ந்தவர்.  அவருடைய வாழ்க்கை முறை என்பது மற்றவர்களுக்கு ஏற்புடையது அல்ல.  ஏன் தொடக்கத்தில் ஆண்ட தலைவர்கள் கூட எரிச்சல் படத்தான் செய்தனர்.  என்றபோதிலும் அவருடைய இறப்பு என்பதை விதி நோக்கில் பார்த்தால் சற்று வியப்பாகத் தான் இருக்கிறது?

அவருடைய சாவு என்பது குறிப்பிட்ட நாளில் உறுதிபடுத்தப்பட்டது என்றாலும் அவருடைய இறப்புக்கான வழிமுறைகள், முன்னால் நடந்த நிகழ்ச்சிகள், அதன் சார்பான கோர்வை நிகழ்ச்சிகள் அத்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு கனக்கச்சிதமாக அவரை அந்த இடத்திற்குத் தான் அழைத்துச் சென்று உள்ளது.

ஒரு வகையில் அவருடைய சாவுக்கு அவரே தான் காரணம்.  அதிகமாக உள்ள நல்ல எண்ணங்கள் தான் முதன்மையாக இருக்கிறது.  தேடி வந்த அதிகாரிகளின் அக்கறையை வெறுத்ததும், வெறுக்கப்பட்ட மக்களை விழிப்புடன் பார்க்கத் தவறியதும் என்று தொடரும் அத்தனை விசயங்களும் அவருக்கு அவரே போட்டுக்கொண்டு கயிறு.  ஆனால் அதை பாசக்கயிற்றாக பார்த்த விதத்தை விதி என்பதில் கொண்டு வந்து முடிப்பதா?  அவரின் விவேகமற்ற செயல் என்று ஆத்திரப்படுவதா?

கருப்பருக்காகவே உண்மையாய் போராடிய அமெரிக்க அதிபர் ஏன் குண்டு மூலம் உயிர் போனது?

இன்று ராஜபாட்டை போட்டுக்கொண்டுருக்கும் புதிய பொருளாதார தத்துவத்தை தொடக்கப்புள்ளியில் கொண்டு வந்த ராஜிவ் காந்தியின் மரணம் ஏன்?

ஆளுமை என்றால் என்ன என்று தெரியாத தலைவர்கள் மத்தியில் அன்னை இந்திரா காந்தியின் மரணம்?

அரசியல் காலாவதியான கணக்குகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாதீர்கள்?

அழுது புலம்புவதால் ஒன்றுமில்லை என்ற கீதையை பின்பற்றுவதா?

கற்பித்தவன் அயோக்கியன் முட்டாள் என்ற பெரியாரை பின்பற்றுவதா?

இல்லை இது ஒரு விமோசனம்  என்பவர்களை நம்புவதா?

இது ஒரு சராசரி நிகழ்வு.  அடுத்த கடமையில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்க்கையை உண்மையாக வாழ வேண்டும் என்பவர்களை பின்பற்றுவதா?

மொத்தத்தில் மரணம் என்பது ஒரு பெரு விடுதலையாகத் தான் தெரிகிறது.

நம்பிக்கொண்டுருக்கும் பாசம், உயிராகக் கருதும் உறவுகள், உன்மத்தம் முழுக்க நிரம்பி வழியும் ஆக்ரோசம், அலைந்து அத்தனை பேர்களையும் தன்னுடைய அகங்காரத்தால் அழிக்க நினைக்கும் நபர்கள், தேடித்தேடி அலைந்து சேர்த்த சொத்துக்கள், தன் பெயர் இல்லாத போதும் கூட பினாமி என்ற கோட்டையை உருவாக்கும் உன்னத தலைவர்கள் என்று எவருமே இந்த விமோசனத்தை பார்த்து இன்று வரை பயப்படாமல் வாழ்ந்து கொண்டுருப்பது மகா பெரிய ஆச்சரியமாய் அதிசமாய் இருக்கிறது.



ரொம்ப குசும்பு தான்.  சின்னதா படத்தை போட்டா எங்களுக்குத் தெரியாதா?  இருட்டுக்குள் ஓளிரும் இந்தியா?

பிண ஊர்வலம் போய்க்கொண்டுருக்கும் ஊர்வலத்தில் கூட அடுத்த அதிகார போட்டிகளுக்கு தன்னை தயார் படுத்திக்கொள்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வரும் அழகையை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.

இதில் மகள், மகன், மனைவி, அம்மா, அப்பா, நட்பு, உறவு என்ற எந்தவித பாகுபாடும் இல்லை.

அன்றாடம் ஊடக செய்திகளை உள்வாங்கிப் பாருங்கள்.  உன்னத உறவுகள் என்ற போர்வையில் உள்ளவர்களின் யோக்கியதை தெரிந்து விடும்?

கடமைகள் என்ற வார்த்தைகள் என்றுமே நமக்கு கலக்கம் என்ற வார்த்தைகளை அறிமுகம் செய்யாது.  கண்ணீரில் கூட கிளிசரின் கண்ணீர் என்று பல வகை கண்ணீர்  இருக்கிறது.  ஆனால் விமோசனம் பெற்றவர் உருவாக்கிய வழி அல்லது வலி என்பது காலம் காலமாக நம்மை கழுவேற்றிக்கொண்டுதானிருக்கிறது.




அண்ணே நீங்க கவலைப்படாதீங்க?  கீழே உள்ள படத்தைப் பாருங்க.  அந்த திட்டம் முடிந்தவுடன் உங்க நலவாழ்வு திட்டம் தான் கையில எடுத்துக்கப் போறோம்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் தான் மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி.

கொள்கையாளர்களின் பார்வை என்பதில் எந்த தவறும் இல்லை.

காரணம் அத்தனை வலி நிறைந்த வாழ்க்கை அனுபவம் அது.  அதிகமான வலி என்பது இறுதியில் வன்மத்தை தரும்.  இல்லாவிட்டால் புத்தியை பேதலிக்கச் செய்து விடும்.  வன்மத்திற்கு அறிவாளி, படிப்பாளி, பாமரன் என்ற பாகுபாடு என்பதெல்லாம் இல்லை.  அதனால் ஒரு வகையில் அவர்களின் புத்தி பேதலித்த காரணத்தால் உணர்ந்தவைகளை தரம் பிரிக்கத் தெரியாமல் தராதரம் இல்லாத இந்த செயல்களை செய்து விட்டார்கள் போல?

ஆனால் இன்று காந்தி இல்லை.

இன்றைய நிலைமையில் காந்தியின் கொள்கைகள் என்பது கூண்டுக்கு அருகே சென்று நிற்பவனுக்கு மட்டும் தான்?  காரணம் நீதி வழங்குபவர் கூட பார்க்க முடியாது.  அவருக்குப் பின்னால் இருப்பதால் அவருக்கும் கவலையில்லை.

காந்தி காலத்தில் வாழ்ந்த இயங்கிய இயக்கங்கள் இன்று வரையிலும் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது.

அன்று அவர்கள் கண்களுக்குத் தெரிந்து அத்தனை அயோக்கியத்தனமும் இன்றும் நடந்து கொண்டு தானே இருக்கிறது?

சொல்லப்போனால் இப்போது தான் அதிகமாக நடந்து கொண்டுருக்கிறது.  ஆனால் இந்த இயக்கங்களின் பங்களிப்பு என்பது என்ன?  எவரின் நல்வாழ்வு இவர்களால் முன் நிறுத்தப்படுகிறது?  அடிப்படையில் எந்த வசதியும் இல்லாமல் வாடிக்கொண்டுருக்கும் பாமரன் பரம ஏழையாகத் தானே இன்று வரையிலும் உழன்று கொண்டு இருக்கிறான்?

இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் எந்த மதமாக இருக்கட்டும்.  நாங்கள் உங்களுக்காகத்தான் என்று சொல்லிக்கொண்டு வாழ்பவர்கள் என் சாதித்தார்கள்?  என்ன சாதிக்கப் போகிறார்கள்?

அப்படி என்றால் அன்றைய தினம் காந்தியை சுட்டுக்கொன்று விட்டால் எல்லாமே பழைய நிலைமைக்கு வந்து விடுமா?  நோக்கம் தான் என்ன?

ஒவ்வொரு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வைத்துருக்கும் கணக்கில் வராத சொத்துக்கள் என்பதும், புழங்கிக்கொண்டுருக்கும் பணம் என்பதும் எத்தனை எத்தனை கோடிகள்.  உழைத்து சம்பாரித்து கள்ளப்பணமாக வரிக்கு பயந்து கொண்டு வைத்திருக்கும் தொழில் அதிபர்கள் தவறானவர்களாக தெரியவில்லை?  ஆனால் நல்வாழ்வு தொண்டு நிறுவனங்களின்  நோக்கம் என்பது மக்களின் நல்வாழ்க்கை என்றால் நல்ல வாழ்க்கை வாழாமல்  தெருக்கோடிக்கு வந்தவர்களை எப்போது சேர்த்த பணத்தை இவர்களுக்காக செலவழிக்கப் போகிறார்கள்?

மக்கள் வாழும் வாழ்க்கை என்பது வேறு?  தலைவர்கள் கொண்டு வாழும் கொள்கை என்பதும் வேறு?



அன்றும் இன்றும் என்றும்?

நோக்கம் ஒன்று மட்டும் தான்.

நல்வாழ்வு.

தலைவர்களின் குடும்பம் என்பதற்கு மட்டுமா?  மக்களின் குடும்பம் என்பதற்கு மட்டுமா?

அதனால் தான் இதையெல்லாம் மனதிற்குள் உணர்ந்த காந்திஜி ஒரு அளவிற்கு மேல் யோசித்து மண்டை உடைத்துக்கொள்ளக்கூடாது என்பது போல் அவருடைய அடுத்த நிறைவேற்ற வேண்டிய கனவுக்கு காத்துக்கொண்டுருந்தார். ஆனால் கனவில் இருந்தாரே தவிர அவரை நோக்கி வந்து கொண்டுருந்த காலனை கண்டு கொள்ளாமல் தான் வாழ்ந்தார்.

இந்தியா வளர்ந்து கொண்டுருக்கும் நாடு.  வெளியே இருந்து பார்க்கும் போது.  சுதந்திர காலத்தை விட இன்று இந்தியா வளர்ந்த நாடு.  உள்ளே இருந்து பார்க்கும் போது?


உண்மை தான் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அலைபாயும் மொத்தக்கூட்டம் 50 கோடி.  காலில் செருப்பு கூட போட வக்கில்லாமல் வாழும் கூட்டம் 40 கோடி.  அப்படி என்றால் மீதி கணக்கு.  அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்த வாழும் மகாத்மாக்கள்

14 comments:

துளசி கோபால் said...

சென்னையில்தான் இப்போ சுத்திக்கிட்டு இருக்கேன்.

செல்பேசிக் கணக்குலே (மட்டும்) சின்னத் திருத்தம் இருக்கோ!

ஒரு பத்து கோடிதவிர அனைவரிடமும் செல்பேசி.

செல் இல்லாதவன் புல்!

பிரபாகர் said...

அய்யா..

அரசியல் தலைவர்களின் இன்றைய நோக்கம், அவர் வாழ்வு, அவர்தம் குடும்ப வாழ்வு என்றிருக்கிறது. எதிர்கால இந்தியாவை நினைத்தால் கொஞ்சமல்ல, நிறையவே பயமாயிருக்கிறது.

நடந்த ஒரு நிகழ்வையும் கூட மிக சுவராஸ்யமாய் சொல்ல இயலும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். எழுதுங்கள், வாசிக்க ஆவலாய்.

பிரபாகர்.

ஜோதிஜி said...

அது மட்டும் தானா? வாழ்க்கை கணக்கும்? வருக வாழ்த்துகள். தருக துளசி தீர்த்தத்தை மற்றும் நலத்தை. மொத்தத்தில் வாழ்க்கை எல்லாமே மின் அஞ்சல் கணக்கு?

ஜோதிஜி said...

எல்லாமே சுவாரசியமாய் போய்விட்டது. சுற்றுலா உட்பட. நாகாவின் இடுகையை படித்தீர்களா பிரபாகர்?

ஜோதிஜி said...

உங்கள் மின் அஞ்சல் கணக்கை பரிசோதிக்க. திரும்பி வந்து என்னை அடித்து தாக்குகிறது ஆசிரியையே? சோதனை முயற்சியை தொடங்கவும்.

texlords@gmail.com

தீப்பெட்டி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

பின்னோக்கி said...

//சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் உயிர் ஏன் வாகன விபத்தில் போனது?

அவர் சிறுநீரக கோளாறால் மரணமடைந்ததாக நியாபகம்.

ஜோதிஜி said...

நன்றி நண்பரே. உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அணைவருக்கும் தேவியர் இல்லத்தின் தீப ஓளி நல் வாழ்த்துக்கள். தீபாவளி படம், ஊடகம், செய்திகள்,பலகாராம், வெடி எல்லாவற்றையும் முடித்து விட்டு ஞாயிறு இரவு 9 மணிக்கு மேல் வந்து அவஸ்யம் காந்தியின் கண்ணீர் அஞ்சலியில் கலந்து கொள்ளுங்கள் என்று உங்களை அனைவரையும் அழைக்கின்றேன். மற்றொரு காரணம் அந்த இடுகையில் வேறு ஒரு அதிர்ச்சி உங்கள் அணைவருக்கும் காத்து இருக்கிறது.

ஜோதிஜி said...

சீர்காழி கோவிந்தராஜன் சென்னையில் இருந்து திரும்பும் போது அல்லது சென்னையை நோக்கி போய்க்கொண்டு இருக்கும் போது தேசிய (விழுப்புரம். திண்டிவணம் அருகே ) நெடுஞ்சாலையில் நடந்த விபத்து என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. இரண்டு நாட்கள் தவித்த தவிப்பு. தவறு இருந்தால் திருத்துங்கள். கோப்பு துலாவ நிணைத்தால் இங்க ஆப்பு அடிக்க ஒருவர் தீபாவளி சுத்தத்தில் என்னை சூறாவளியாய் ஆக்கி விடுவார்?

பின்னோக்கி said...

ஜோதிஜி. அது மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் என நினைவு. பரவாயில்லை. நிதானமாக பார்த்துவிட்டு தவறானால் திருத்துங்கள்.

ஜோதிஜி said...

நீங்கள் சரிதான் பின்னோக்கி. நான் புரிதலில் உருவான இந்த தவறு எனக்கு நிறைய பாடங்களை மூன்று மணி நேரத்தில் கற்றுத்தந்துள்ளது. பணம் என்பது பிணமாக மனிதர்கள் மாற்றி உள்ளது. ஏற்கனவே உங்களை இடுகை குறித்து நண்பரிடம் சொன்னது இப்போது ஞாபகத்தில் வருகிறது. கற்றுத்தரும் இடத்தில் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். சிரமத்திற்கு மன்னிக்வும்.

Jerry Eshananda said...

ஐயா தீப ஒளி நல் வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

ஆசிரியர் தலைமையில் இருக்கும் மாணவர்களும் வரும் மாணவர்களுக்கும் வாழ்க்கை முழுவதும் தீபம் போல் இருளைப் போக்கி இனிய வாழ்க்கையை உருவாக்கும் உங்களை இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன். ஞாயிறு இரவு வந்து கலந்து கொள்ளவும்.

Anonymous said...

பின்னோக்கி / ஜோதிஜி
தவறான தகவல்களையும், பின்னர் திருத்தங்களையும் தெரிவித்துள்ள்ளீர்கள். சீர்காழி கோவிந்தராஜன் தனது இறுதி மூச்சினை ‘முருகா, உலகம் வாழ்க!” என்ற தனது பிரார்த்தனையுடன் விட்டவர். மாரடைப்பால் மறைந்தார். விபத்தோ,சிறுநீரக நோயோ அல்ல. சிறுநீரக மருத்துவரான் அவரது மகன் சிவசிதம்பரமும், அவரும்,பல கொடிய விபத்துக்களிலிருந்து உயிர் பிழைத்தவர்கள். மகாத்மா காந்தி கூட ”ஹே ராம்’ என்று தான் உயிர் விட்டார். சீர்காழி போன்ற நல்லவர்கள் தான் உலகம் வாழ இறுதி வரை சிந்தித்தார்கள்.