Tuesday, July 26, 2022

ஊடக அசிங்கங்கள்.

பத்திரிக்கையுலகம் 1990 வரை அச்சு ஊடகம் என்ற ஒரே ஒரு வட்டத்திற்குள் மட்டுமே இருந்தது. நிருபர் என்ற பெயரில் தான் அழைத்தார்கள். மற்றபடி பத்திரிக்கை அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் குறித்து மக்கள் யாருக்கும் தெரியாது. நிருபருக்கும் பெரிய அளவு மரியாதை இருக்காது. அவர்களும் பெரிய அளவுக்கு எதிர்பார்ப்பதும் இல்லை. நான் பள்ளி கல்லூரி படித்த போது பலரைப் பார்த்துள்ளேன். 


பெரும்பாலும் காந்தியவாதிகளாக இருந்தார்கள். கட்டாயம் ஜோல்னாபை இருக்கும். விட்டுக் கொடுக்க மாட்டார்கள். கறாராக இருப்பார்கள். கண்டிப்புடன் பேசுவார்கள். நிரந்தர ஏழையாக வறுமையுடன் வாழ்ந்தார்கள்.

1900 முதல் 1990 வரை 90 ஆண்டுகள் மக்களுக்கு வானொலி தினசரி செய்தித் தாள்கள், இது தவிர வார மாத இதழ்கள்.

தாமரை மாநாடு ஒலிவடிவம்

மக்கள் அனைவரும் தெளிவான சிந்தனையுடன் இருந்தார்கள். வாரம் வாரம் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். காலையில் வெறித்தனமாக செய்தித்தாள்களை வாசித்தார்கள். ஒரு பக்க கட்டுரைகள் எல்லாம் சொக்கு போடுகின்ற நேரத்தில் வாசித்து முடித்து விவாதம் செய்தார்கள். ஊடகம் என்பது ஆரோக்கியமான சிந்தனைகளை விதைத்தது வளர்த்தது உருவாக்கியது.

புண்ணியவான் முரசொலி மாறன் தன் மகன்களுக்குத் தொழில் அமைத்துக் கொடுக்க நினைத்துக் கொண்டு வந்து சேர்த்த சன்டிவி தமிழகத்தில் மாற்றுப் பாதையை உருவாக்கியது. அடுத்த பத்தாண்டுகள் தமிழக கலாச்சாரம், பண்பாடு, தனி மனித சிந்தனைகளில் அதிர்வுகளை உருவாக்கியது. தமிழ் மொழியை அழிய வைத்ததில், மாற்றியதில், கேவலப்படுத்தி அசிங்கப்படுத்திய பெருமை அனைத்து கலாநிதி மாறனுக்கு மட்டுமே தமிழ் கூறும் நல்லுலகம் கொடுக்க வேண்டும். அவர் எல்லாவற்றையும் தொழிலாகப் பார்த்தார். எப்போதும் எதையும் தொழிலாகவே பார்க்கத் தொடங்கினார். இங்கு தான் தமிழகத்தில் அனைத்து விதமான அசிங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. கன்னட திரைப்பட நிகழ்ச்சியில் எந்த பெண்மணி கொஞ்சி கொஞ்சி எனக்கு கொஞ்சூண்டு கன்னடம் தான் தெரியும் என்று மொழியைக் கொத்துக் கறி ஆக்க முடியாது. கைமா செய்து விடுவார்கள். 

அத்துடன் நிகழ்ச்சியை நடத்தியவரைக் கொத்து புரோட்டா ஆக்கி விடுவார்கள். கலாநிதி அங்கும் தமிழ் ஒழிக என்று தெளிவாகத் தொழில் செய்கின்றார் என்பதனை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

அண்ணாமலை ஆணையிடுகிறார் | முதல்வர் ஊளை இடுகிறார் 365 Days Of அண்ணாமலை | சாதனை தொடரட்டும் | #annamalai

ஆனால் தொலைக்காட்சி வந்த பின்பு மக்களின் சிந்தனைகள் அனைத்தும் காட்சி ஊடகமாக மாறத் தொடங்கியது. திரைப்பட உலகம் முற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டது. நாய்களும், நரித்தனம் செய்பவர்களும் நாட்டாமையாக மாறினர்.

அடுத்து சமூக வலைதளங்கள் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்பு சமூக ஊடகம் என்பது அண்டார்டிகா வரை பரவியது.

இப்போது ஊடகத்தில் உள்ளவர்களை எவரும் நிருபர் என்று அழைப்பதில்லை.  ஊடகவியலாளர்கள் என்பது போன்ற பல பெயர்கள் வைத்து அழைக்கத் தொடங்கினர்.  ப்ரெஸ் என்ற பெயரைப் போட்டுக் கொண்டு வேறு வேலைகள் செய்யத் தொடங்கினர். என்ன வேலைகள் என்பதனை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகின்றேன்.

இந்தப் பேட்டியைப் பார்த்தவுடன் மண்டை சூடானது.  அண்ணாமலையைப் பேட்டி எடுக்க வருகின்ற ஒவ்வொருவனும் அவமானப்படுத்த வேண்டும், 

மாட்ட வைக்க வேண்டும், முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வருகின்றார்கள். 

ஆனால் அவர்கள் செய்யும் தவறு என்னவெனில் தங்களுக்கு வாசிப்பு திறமை இல்லை. வளர்த்துக் கொள்ளவும் விரும்பவும் இல்லை. தினமும் பல செய்தித்தாள்களைப் படிப்பதில்லை. சமூகவியல், அரசியல் இவை இரண்டு மகா பெரிய சமுத்திரம். வாழ்நாள் முழுக்க நீந்திக் கொண்டு தான் இருக்க முடியும். கரை காண முடியாது.

இந்த தம்பி ஒரு கேள்வி கேட்க அதற்கு அண்ணாமலை அக்கு வேறு ஆணி வேறு படம் வரைந்து பாகம் குறிக்க அப்படியே அதனைக் கிடப்பில் போட்டு விட்டு டமால் என்று அடுத்த கேள்விக்குப் போய் விட இப்படியே அடுத்தடுத்த கேள்விக்குச் சென்று தாவித் தாவி?  இதென்ன வேலை?

அண்ணாமலை பதில் சொன்னதிலிருந்து தாராளமாக மடக்க முடியும்? குறுக்கு கேள்வி கேட்க வாய்ப்புள்ளது? ஆனால் அதற்கு தினமும் படிக்கும் பழக்கம் வேண்டும். அது தான் இங்கே ஒருத்தருக்கும் இல்லையே?

இந்த நபர் மட்டுமல்ல? ஒவ்வொருவரும் இப்படித்தான் உள்ளனர்.  காரணம் உள்ளே ஒன்றுமில்லை.  இத்தனைக்கும் பிபிசி சார்பாக டெல்லியில் பணிபுரிகிறார் என்றால் தேர்ந்தெடுத்த பிரகஸ்பதி எப்படி இருப்பார் என்று யோசிக்கின்றேன்.

#சாவுங்கடா

( https://www.facebook.com/BBCnewsTamil/videos/784083062782815 )


No comments: