Thursday, July 21, 2022

தாமரை மாநாடு - Thamarai Maanadu (Tiruppur) - BJP

2024ல்  வரப் போகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக எத்தனை உறுப்பினர்களைப் பெறும்? என்பதனை பாஜக ஆதரவாளர்கள் நம்புவதைவிட எத்தனை சதவிகிதம் ஓட்டுக்களைப் பெறுவார்கள்? அதிலும் தங்களது ஓட்டுக்களை பாஜக பிரிக்குமா? என்பது தான் திமுக, அதிமுக முன்னால் இருக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது.  




காரணம் அண்ணாமலை வருவதற்கு முன்பு இருந்த பாஜக என்பது வேறு? இப்போது உள்ள பாஜக என்பது பாஜக 2.0. அதாவது 2கே கிட்ஸ்களுக்கு உருவான தலைவராக அண்ணாமலை உள்ளார்.  இன்னமும் உங்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்றால் அரசியல் என்றால் காத தூரம் ஓடிய கல்லூரி இளைஞர்களின், பெண்களின் ஆதர்ஷண தலைவராக அண்ணாமலை மாறியுள்ளார்.  அதனை நான் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக பல்லடம் அருகே நடத்தப்பட்ட தாமரை மாநாடு பந்தலில் நேரிடையாகவே பார்த்தேன்.

தமிழக பாஜக என்றாலே மேலும் கீழும் பார்த்து பெரியவர்கள் யாராவது இருந்தால் கூட்டிட்டி வாப்பா? என்று சொன்ன காலம் மலையேறி இன்று அண்ணாமலையைப் பார்க்க அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தர முடியுமா? என்கிற நிலைக்கு வந்துள்ளது.  அதுவும் ஒரு வருடத்திற்குள் ஒரு இளைஞர் இந்த அளவுக்குத் தமிழக அரசியலைப் புரட்டிப் போடுவார்? என்பதனை எவர் தான் எதிர்பார்த்திருப்பார்? இதனைத் தான் திருப்பூர் கூட்டத்தில் அண்ணாமலை அவர்கள் பட்டியலிட்டுச் சொன்னார்.  உள்ளூர் பிரச்சனைகளைக் குறிப்பாகத் திருப்பூரில் மூன்று மாநகரத்தந்தைகள் உள்ளனர் என்று சொன்னது முதல் உதயநிதிக்கு எப்படி ஒவ்வொரு அமைச்சர்களுக்கு வாழ்த்துப் பா பாடுகின்றார்கள் என்பதனையும் வரிசையாகச் சொன்னபோது அங்கே கூடியிருந்த இளைஞர் கூட்டத்தின் ஆர்ப்பரிப்பு என்பது உதயநிதியை விட அண்ணாமலையை எந்த அளவுக்கு இளையர் கூட்டம் நம்புகின்றார்கள்? விரும்புகின்றார்கள் என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.

 தமிழக பாஜகவிற்கு கூடும் கூட்டத்தைப் பார்த்த திமுக மற்றும் அதிமுக கட்சி அலறலுடன் பார்க்கும் சூழலைக் காலம் உருவாக்கியுள்ளது.  காரணம் அண்ணாமலை. தஞ்சாவூர் திமுகவின் கோட்டை என்றார்கள். அங்கு திரண்ட கூட்டம் என்பது 100 திருவிழா கூட்டம் போல இருந்தது.  திருவாரூர் எங்கள் தந்தை மண் என்றார்கள். கனவில் நினைத்தாலும் அலறி எழுந்து நிற்கக்கூடிய அளவுக்குத் திரண்டனர்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் அண்ணாமலை சூறாவளியை உருவாக்கினார்.  சென்னை வரைக்கும் நகர்ந்து வந்தார்.  வடக்கு, கிழக்கு, தெற்கு என்று மையம் கொண்ட அண்ணா புயலானது பொள்ளாச்சியில் மிகப் பெரிய ஆராவாரத்தையும் உருவாக்கியது என்று சொல்லியதை உடைத்து திருப்பூர் வடக்கு மாவட்டம் ஏற்பாடு செய்த தாமரை மாநாடு என்பது எதிரிக்கட்சிகள், எதிர்க்கட்சிகளுக்கு மட்டுமல்ல.  பாஜக வில் உள்ள மற்ற 59 மாவட்டங்களுக்கும்  பல செய்திகளைச் சொல்லியுள்ளதாகவே நான் பார்க்கின்றேன்.
















அண்ணாமலை அவர்கள் தமிழக பாஜக வில் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற நிகழ்வினை இங்கு மன்னர் பரம்பரை போலக் கோலோச்சிக் கொண்டிருந்தவர்கள் இவர் இங்கு எத்தனை நாளோ? என்று தான் நக்கலாகப் பார்த்தார்கள்.  எவரும் வாழ்த்துகூட சொல்ல விரும்பவில்லை. 

அண்ணாமலை எதையும் எவரையும் கண்டு கொள்ளவே இல்லை. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் ஸ்டெப் முதல் கடைசி கோடு வரைக்கும் மின்னல் வேகப் பாய்ச்சல் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும் என்பார்களே அதைப் போலவே அண்ணாமலையின் செயல்பாடுகள் இருக்க காட்சிகள் மாறத் தொடங்கின. ஊடகங்கள் அலறத் தொடங்கின.

தங்களுக்கு ஒருவரால் பிரச்சனை வரப்போகின்றது என்பதனை மோப்பம் பிடித்தாலே அவர்களை ஊடக மாமாக்களை வைத்து கோமாளியாக மாற்ற முயல்வர். வேண்டும் என்றே தொடர்பு இல்லாத கேள்விகளைக் கேட்டுக் கோபப்படுத்தி அவர்களின் இமேஜ் சரிய அத்தனை வேலைகளையும் செய்யத் தொடங்குவர். முக்கிய உதாரணம் விஜயகாந்த்.

ஆனால் அண்ணாமலை இவர்கள் எதிர்பார்க்காத நபராக இருந்தார். அரசியல் பின்புலம் இல்லை என்பதனை விட அந்த வாடையே இல்லாத குடும்பம் என்ற போதிலும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துக் கொண்டேயிருந்தார். தினமும் ஊடகத்தைச் சந்திப்பது என்பது பழைய அரசியல்வாதிகளின் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு இன்னமும் சிலாகித்துப் பேசுகின்றவர்கள் அண்ணாமலை அவர்களின் இன்றைய ஊடகப் பேட்டிகளைப் பார்த்து விதிர்த்துப் போய் நிற்கின்றனர்.

ஆதார தகவல்களை அள்ளி அள்ளி வீசத் திருட நினைப்பவனின் அடிப்பாகம் நனையத் தொடங்குகின்றது.  திருடன் திருடுவதற்காக வீட்டுக்குள் நுழைய அந்த சந்துக்குள் நுழைந்த சமயத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு திடீர் என்று எறிந்தால் எப்படி இருக்கும்? அப்படித் தான் திருட்டு மாடல் கோமாளிகளுக்கு உள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் படித்தவர்கள் பலரும் வந்து உள்ளனர். ஆனால் தங்கள் கற்ற கல்வியை வெளிப்படுத்தத் தெரியாதவர்களாக இருந்தனர். உயர் அதிகாரிகள் பலரும் கட்சி அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர்.  ஆனால் அண்ணாமலை போல அடித்தட்டு மக்கள் நம்பக்கூடியவராக தங்களை மாற்றிக் கொள்ளத் தெரியாமல் தோற்றனர். எதிர்பாராத திடீர் நிகழ்வாக ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக எவரும் மாறியதும் இல்லை. 

அரசியல் பின்புலம் இல்லாதவர், தமிழகத்தில் அதிக நாட்கள் வாழாதவர், குறைவான வயது. பக்குவம் இருக்காது. நிஜமான தமிழக அரசியல் வரலாற்றைப் புரிந்து கொள்ளாதவர் என்று சொல்ல ஏராளமான குறைகளை அடுக்கிக் கொண்டு வைத்திருந்தவர்கள் கண்களில் மட்டுமல்ல.  கன்னத்திலும் கரியைப் பூசி விட்டார்.

இப்படி பல ஆச்சரியங்களைத்  திருப்பூர் வடக்கு மாவட்ட தாமரை மாநாட்டில் அடுக்கிக் கொண்டே சென்றார் 

2022 ஜூன் மற்றும் ஜூலை என்பது திருட்டு மாதிரி கட்சிக்கும், வாய் மூடி மெளினியாக ஒத்துழைக்கும் அதிமுகவிற்குப் பல அதிர்ச்சிகளைத் தந்த மாதமாகும்.  தஞ்சாவூரில் அண்ணாமலைக்காகக் கூடிய கூட்டம் என்பது பாஜகவினர் எவரும் ஆச்சரியப்படவில்லை. ஆனால் தமிழக ஊடகங்கள் அலறத் தொடங்கின. முன்பு போட்டோ ஷாப் என்பார்கள். இப்போது அதற்கும் வழியில்லை. புகைப்படத்துடன் காணொளிக் காட்சிகளும் வரத் தொடங்கிய காரணத்தால் எதிரிகள் கலங்கிப் போய் உள்ளனர். இதிலும் திருப்பூர் தாமரை மாநாடு என்பது பல புதிய நவீன தொழில் நுட்ப யுக்திகளை புகுத்தியதோடு மட்டுமல்லாது, அண்ணாமலை என்ற மையப் புள்ளியை மட்டும் ஆதாரமாக வைத்து போகஸ் செய்த விதம் வியப்பாக இருந்தது. முற்றிலும் வெற்றி பெற்றதாகவும் அமைந்தது.  

தமிழக அரசியல் களம் என்பது எங்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமானது. அவன் திருடும் போது எனக்கு பங்கு தருவான். நான் திருடும் போது அவனுக்கு பங்கு கொடுப்பேன். அதனால் நாங்கள் பங்காளிகளாக இருக்கின்றோம் என்பதாகக் கோலோச்சிக் கொண்டிருந்தவர்களுக்கு அண்ணாமலை என்ற காவல்துறை அதிகாரி வந்து மிகக் குறுகிய காலத்தில் நமக்கு லாடம் கட்டுவார் என்பதனை இவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை. திரைப்படங்களில் ட்விஸ்ட் என்பார்களே அதைப் போலத் தான் தற்போது ஒவ்வொரு நாளும் திமுகவிற்கு பயத்தை அண்ணாமலை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்.  பத்து வருடம் கூப்பிலிருந்த திமுக கஷ்டப்பட்டுக் கெஞ்சிக் கூத்தாடி பொய் வாக்குறுதிகளைச் சொல்லி  ஏமாற்றி ஆட்சிக்கு வந்த சமயத்தில் அண்ணாமலை வந்து இப்படி சவாலாக இருப்பார் என்று பழம் தின்று கொட்டையையும் ஏலத்தில் விட்டு கமிஷன் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் கதறும் ஒலி தமிழக மக்கள் காதில் விழுகின்றது.

கூட்டம் வாக்காக மாறாது என்பார்கள். தமிழக பாஜக தற்போது அதனை ஒவ்வொரு மாவட்டத்திலும் உடைத்துக் கொண்டே வருகின்றது. திமுக, அதிமுக வை பெரிய இரண்டு கட்சிகள் என்கிறார்கள்.ஆனால் அவர்களால் பணம் கொடுக்காமல் கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வர முடியவில்லை. காரணம் தொண்டர்கள் என்பவர்கள் யாருமே இல்லை. நம்பி நம்பி வெறுத்து பாஜக பக்கம் வரத் தொடங்கியுள்ளனர். ஆனால் திருப்பூர் வடக்கு மாவட்ட ஏற்பாட்டாளர்கள் செய்த ஆச்சரியமான அறிவிப்பு என்னவென்றால் ஒவ்வொருவரும் தத்தமது ஏற்பாட்டில்  அழைத்து வர வேண்டும். 

வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவர்களை மட்டும் அழைத்து வந்தால் போதுமானது . தெற்று மாவட்டத்திறகுள் கூட உள்ளே செல்லாதீர்கள் என்று சொல்லப்பட்ட அறிவுரையை மட்டும் ஏற்றுக் கொண்டவர்கள் அழைத்து வந்த கூட்டமே கேமரா விற்குள் அடங்காத அளவுக்கு இருந்தது. 

காசு கொடுத்தால் தான் மக்கள் கூட்டத்திற்கு வருவார்கள் என்பதனை அண்ணாமலை உடைத்துள்ளார். அண்ணாமலைக்காக, பாஜக என்ற கட்சிக்காக, தேசிய சிந்தனைக்காக, இந்தியா என்ற நாட்டை நேசிப்பவர்களுக்காக, எதனை எதிர்பார்க்காமல் வருண பகவான் வந்து ஆசீர்வாதம் செய்த போதும் ஆடாமல், அசையாமல் அண்ணாமலை பேச்சைக் கேட்க திருப்பூரில் வடக்கு மாவட்டம் ஏற்பாடு செய்து இருந்த தாமரை மாநாடு கூட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துத் திகைத்துப் போனேன்.

தமிழகத்தில் கடந்த 75 வருடத்தில் இங்கு அனைத்து கட்சிகளும் விதம் விதமாக மாநாடுகளை நடத்தியுள்ளது.  ஆனால் கடந்த ஞாயிறு (ஜூலை 17 2022) அன்று பல்லடம் அருகே திருப்பூர் பாஜக வடக்கு மாவட்டம் சார்பாகப் போடப்பட்ட  தாமரை மாநாடு என்பது இனி வரும் மீதியுள்ள 59 மாவட்ட பாஜக விற்கும் மறைமுகமாகப் பல செய்திகளை உணர்த்தியுள்ளது. தாமரை மாநாடு என்பதே அழகாக இருந்தது. நவீன தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது? அரங்க அமைப்பு முதல் அட்டகாசமான களப்பணியாளர்கள் வரைக்கும் ஒவ்வொருவரும் தத்தமது பணியை எப்படிச் செய்ய வேண்டும் என்பதனை மாவட்டம் நிர்வாகம் அற்புதமாக கற்றுத் தந்துள்ளது. 

கூடவே எப்போதும் போல திமுக, அதிமுகவிற்கு அஸ்தியில் ஜுரத்தை வரவழைத்துள்ளது என்றால் அது மிகையில்லை.   (தலைவர் திருப்பூர் தாமரை மாநாடு குறித்து எழுதிய கடிதத்தின் ஒலி வடிவத்தை கீழே இணைத்துள்ளேன்)

கடிதம்-184/18/07/22/ பின்னலாடை நகரத்தில் பின்னி எடுத்தது கூட்டம் அவர்களுக்கு பாரத பிரதமரின் மேல் நாட்டம்.


1 comment:

ஸ்ரீராம். said...

மாற்றங்கள் வேண்டும்.